Subscribe

BREAKING NEWS

26 December 2017

சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம்

அன்பர்களே,

நாம் ஏற்கனவே பெருங்களத்தூரில் உள்ள சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் நமது TUT குழுவும், இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளையும் இணைந்து தமிழ் கூறும் நல்லுலகம் என்ற தலைப்பில் நற்சிந்தனைகளை தரும் நிகழ்ச்சி பற்றி பதிவிட்டிருந்தோம். அன்றைய தினம் நடைபெற்ற நிகழ்வின்
துளிகளை மகம் பூசையோடு இங்கே காண்போம். நன்றாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள்,  தமிழ் மாதம் தோறும்  மகம் நட்சத்திரத்தில் சதானந்த சுவாமிகளுக்கு பூசை நடைபெறும், இந்த விழாவில் முற்றோதல், அபிஷேகம், அலங்காரம், அன்னம்பாலிப்பு என்று சதானந்த சுவாமிகள் ஆசிரமம் திருவிழாக் கோலம் பூணும்.



நமது தளத்தின் மூலம் இந்தாண்டு தொடங்கிய முதல் உழவாரப் பணி இங்கே தான் சிறப்பாக நடைபெற்றது. இதோ ! சதானந்த ஸ்வாமிகள் ஆசியுடன் சென்ற குன்றத்தூர் திருஊரகப் பெருமாள் கோவிலில் ஏழாவது உழவாரப் பணி சீரும் சிறப்புமாக நடைபெற்றது. இவை அனைத்தும் குருவின் அருளாலே அன்றி வேறொன்றும் இல்லை. ஏற்கனவே நாம் இங்கே சதானந்த சுவாமிகள் பற்றியும், நாம் செய்த உழவாரப் பணி அனுபவம் பற்றியும் பதிவிட்டிருந்தோம். மீள்பதிவாய் பதிவின் இறுதியாக அந்த சுட்டிகளை தருகின்றோம். மீண்டும் படித்து, சதானந்த சுவாமிகள் அருள் பெறுங்கள். கரும்பை எப்போது சாப்பிட்டாலும் இனிப்பு தானே. அது போல் சித்தர்களின்/மகான்களின் பெயரை சொல்லுவதும், கேட்பதும்,படிப்பதும் இனிப்பை போன்ற இன்பத்தைத் தரும்.






ஆசிரமம் முழுதும் இது போன்றவண்ண ஓவியத்தை காணலாம், கண்களில் ஒற்றிக் கொள்ளலாம். நேரம் கிடைக்கும் போது சென்று பாருங்கள், நாம் சொல்ல வரும் செய்தி புரியும், பரந்து விரிந்த இடத்தில், பசுமை சூழலில், மகானின் அருளில் திளைக்க இதை விட வேறெங்கும் செல்ல இயலாது. இங்கே நீங்களாகவே அமைதி நிலைக்கு செல்வீர்கள், அமைதியோடு ஆனந்தம் நீங்கள் இங்கே பெறுவது உறுதி.










ஆசிரமம் முழுதும் ஒரு சுற்று முடித்து விட்டு, வெளியே வந்தோம். அங்கே உபயதாரர் பெயர் பலகை கண்டோம். 


ஆசிரமத்தில் நுழைந்தது முதல் பல பதிகங்களை கேட்டுக் கொண்டே இருந்தோம். முற்றோதல் நடைபெற்றுக் கொண்டிருந்தது.கூடுவாஞ்சேரியைச் சார்ந்த திரு.ராஜ்குமார் ஐயா மற்றும் அவரது குழுவினர் முற்றோதலை செவ்வனே செய்து கொண்டிருந்தார்கள். அபிஷேக ஆராதனைகள் நடந்து கொண்டிருந்தது. நாம் அங்கே சென்று, சற்று அமர்ந்தோம்.









அபிஷேகம் முடிந்து தீப ஆராதனை காட்டப் பட்டது. ஒவ்வொருவராக வந்து, சதானந்த சுவாமிகளை தரிசித்து சென்றார்கள். முற்றோதல் தொடர்ந்து கொண்டே சென்றது. இது போன்ற மகான்களின் பெயரை உச்சரிக்கவே நாம் எத்தனை பிறவி எடுத்து வர வேண்டும் என்று தெரியவில்லை. பெயரை உச்சரிக்க மட்டுமின்றி, அவர் அருள்பாலித்து கொண்டிருக்கும் இடத்தில், அவரின் பூசையில் நின்று கொண்டிருக்கின்றோம் என்று நினைத்த போது, இந்த அருள் பெறவே இத்தனைக் காலம் காத்திருக்கின்றோம் என்று மெய் உருகினோம். சித்தர் பாரதி சொன்னது போல், இன்பத்தை கோடிகளில் அலைந்தோம். எத்தனை கோடி இனபம் வைத்தாய் இறைவா ! என்று துள்ளிக் குதித்தோம்.அப்படியே அங்கு உள்ள பெரிய அறையில் அன்னம்பாலிப்பு நடைபெற்றது, பற்பல பதிகங்கள் ஓதி, உபாயதாரரை வரவழைத்து, நன்றி சொல்லி, அன்னம்பாலிப்பு நடந்தேறியது.














அன்னம்பாலிப்பு முடிந்தவுடன் மாலை சுமார் 3 மணி முதல் 5 மணி வரை நமது TUT குழுவும், இயற்கை நல்வாழ்வியல் அறக்கட்டளையும் இணைந்து தமிழ் கூறும் நல்லுலகம் என்ற தலைப்பில் நற்சிந்தனைகளை தரும் நிகழ்ச்சி பற்றியும், அனைவரையும் இருந்து கேட்டுவிட்டு செல்லும் படியும் அறிவிப்பு செய்தோம். ஆனால்  வயிற்றுக்கான உணவு உண்டவுடன் சென்று கொண்டே இருந்தார்கள். சேவைக்கான உணவு தர நாம் காத்துக் கொண்டிருந்தோம். நாம் உடனே திரு.செல்வக்குமார் ஐயாவினை தொடர்பு கொண்டோம். அவரும் சரியாக வந்து சேர்ந்தார். இந்த நிகழ்வின் பொருட்டு, சின்னமனூரில் இருந்து இங்கே வந்தார்கள். நேரே அவர் சதானந்த சுவாமிகள் தரிசனம் பெற்றார். சும்மா இருந்தாலே இங்கு நாம் பல விஷயங்களை குரு உணர்த்துவதாக கூறினார், மேலும் அற்புதமான காந்தக் களம் இங்கே உள்ளது என்றார். அனைத்தும் உண்மையே. உணர்ந்தால் தான் தெரியும். கூட்டம் களை கட்டியது. பின்பு ஆசிரம நிர்வாகி ஆனந்த் ஐயா விடம் பரஸ்பரம் அறிமுகம் செய்து வைத்து விட்டு, நாமும் மதிய உணவு உண்டோம்.





உணவு உண்டு முடித்தவுடன், நற்சிந்தனை உரையை தரலாம் என்று முடிவு செய்தோம். ஆனால் கடைசி பந்தி முடிந்ததும், ஒரு பத்து பேராவது இருந்தால் நலம் பயக்கும் என்று எண்ணினோம். குருவிடம் விண்ணப்பித்தோம். தமிழ் கூறும் நல்லுலகம் என்ன நடந்தது? எப்படி நடந்தது? அடுத்த பதிவில் தொடரும்...

தமிழ் கூறும் நல்லுலகம் - தொடங்கி ..அடுத்த பதிவில் தொடர்வோம்....



No comments:

Post a Comment