Subscribe

BREAKING NEWS

04 April 2020

காலத்தினால் செய்த நன்றி...

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

ஒரு குவளை தண்ணீர் என்ன பெறும் . ஒருவருக்கு ஒரு குவளை தண்ணீர் தருவது பெரிய உதவியா ?

சாதரணமான நேரத்தில் அது ஒன்றும் பெரிய உதவி இல்லை தான்.

அதுவே, ஒரு பாலை வனத்தில், நாக்கு வறண்டு உயிர் போகும் தருவாயில் உள்ள ஒருவனுக்கு அந்த ஒரு குவளை தண்ணீர் எவ்வளவு பெரிய உதவி ?

உதவி என்பது என்ன செய்கிறோம் என்பது அல்ல.
உதவி என்பது எவ்வளவு செய்கிறோம் என்பது அல்ல.
உதவி என்பது யாருக்குச் செய்கிறோம் எனபது அல்ல

உதவி என்பது எப்போது செய்கிறோம் என்பதைப் பொருத்தது.


கொரோனா... கொரோனா... என உலகெங்கும் பேசி பேசி அதன் தகவல்களை மற்றவர்களுக்கு அனுப்பி அனுப்பி அனைவரும் கைகள் ஓய்ந்திருப்பீர்கள் (மீடியாக்கள் உட்பட)ஆனால் இந்த சூழ்நிலைகளிலும் தம்மால் முடிந்த உதவிகளை மற்றவர்வகளுக்கு செய்வதில் கருணை உள்ளம் கொண்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அதனையும் நாம் சமூக வலைதளங்களில் பார்க்கின்றோம்.இந்த சூழ்நிலையில் நமது குழுவின் சார்பாக ஏதாவது செய்யவேண்டும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். அனைத்து கடைகள் மற்றும் உணவகங்கள் பெட்டிக்கடைகள் மூடியிருக்கும் நிலையில் என்ன செய்வது ?இந்த நிலையில் நமது குழுவின் உறுப்பினர் திருமதி,அருணா அவர்கள் அன்னதானத்திற்காக ரூ,500.பணம் அனுப்பி இருப்பதாக சொன்னார்கள் நானும் அதனை உறுதி செய்து அவர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் நன்றி தெறிவித்தேன்.


பொதுவாக நாம் யாரிடமும் உதவி செய்யுங்கள் என்று யாரிடமும் கேட்பதில்லை, தாமாக முன்வந்து கொடுக்கும் கருணை உள்ளம் கொண்ட நண்பர்களை   நமது குழு எப்போதும் மறப்பதில்லை. இதுவரை நமது குழு நண்பர்கள் கொடுத்த அத்துணை உதவித்தொகைகளையும் தேதி, நேரம், கொடுத்த தொகையின் அளவு, உட்பட அனைத்தையும் தனியாக ஒரு வரவு செலவு புத்தகத்தில் எழுதி வைத்துள்ளேன். அது அன்னதானம் ஆலய திருப்பணி செலவுகள் என  அவ்வப்போது நமது குழுவின் அட்மின்களுக்கு தெரியப்படுத்தி வருகின்றேன். அந்த தொகையில் நிச்சயமாக ஒரு ரூபாய் கூட வீண் செலவிற்காக பயன்படாது என்பதை என்னால் இங்கு உறுதியாக சொல்ல முடியும்.



 நமக்கு எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும் நிம்மதி என்பது எல்லோருக்கும் அமைவதில்லை ஏதாவது ஒரு துன்பங்கள் நிச்சயமாக ஒவ்வொரு மனிதருக்கும் வந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் மன நிம்மதி என்பது அனைவருக்கும் இருக்குமா? என்பது சந்தேகம்தான்.அதிலும் இந்த உலகத்தில் மனிதர்களால் தீர்க்கமுடியாத பிரச்சனைகள் என்று ஒன்று வரும்போது புரியும் அப்போதுதான் கடவுளின் அருமையும் ஒவ்வொருவருக்கும் புரியவரும். அப்படி இல்லாதபோது தன்னால் எல்லாவற்றையும் இந்த உலகத்தில் பணத்தை வைத்து சாதித்துக்கொள்ள முடியும் என்று ஒரு மனிதன் நினைக்கும் போது அவனுக்கு புரிவதில்லை நமக்கு மேலே ஒரு மகா சக்தி  இருக்கிறதென்று. 


 இதுபோன்ற நல்லதொரு தர்ம காரியங்களில் நமது உழைப்பின் ஒரு சிறு துளி செலவிடும் போது அது உண்மையில் நம் மனதிற்கு ஏதோ ஒரு மூலையில் நாமும் ஒரு நல்லதை செய்து கொண்டிருக்கின்றோம் என்ற அந்த எண்ணமே நம்மை நல்வழிப்படுத்தி நமது மனதை அமைதிப்படுத்தி நிம்மதியை கொண்டு வந்து சேர்க்கும் என்பது உண்மையிலும் உண்மையே .


நாம் எவ்வளவுதான் திட்டமிட்டு நம்முடைய பொருட்களை தானம் செய்தால் அது நூற்றுக்கு நூறு உரியவர்களுக்கு பயன்படும் என்பது சொல்ல முடியாது. 
அதில் சில துளிகள் தேவைப்படாத
 நபர்களுக்கும் சென்றடையும். அதனைப் பற்றி நாம் பெரிதாக வருத்தப்பட தேவையில்லை.

 வயலுக்கு இரைக்கப்படும் நீர் அங்குள்ள புற்களுக்களுக்கும் சேர்ந்து பாய்ச்சப்படுகிறது. பயன்பெறுவது என்பது இரண்டும் தான். ஆனால் நமது நோக்கம் புற்களுக்கு நீர் பாய்ச்சி அது வினாகி போனது என்று என்னாமல் அதில் ஒரு பகுதியாவது பயிர்களுக்கு சென்றடைந்தது என்று நிம்மதி கொள்ள வேண்டும்.


 அதாவது நாம் செய்கின்ற அன்னதானம் உண்மையில் பசியால் வாடும் மனிதர்களுக்கு மட்டுமே அது சென்றடைய வேண்டும் என்று அனைவரும் நினைப்பது உண்டு. அப்போது பசியில்லாமல் உள்ள நண்பர்களும் இந்த உணவுகளை வாங்கி எடுத்துச் செல்வார்கள் அப்போது நாம் அதனை தவறாக கொள்ளுதல் கூடாது என்பதனை நான் இங்கு சொல்ல வருகின்றேன். 


உலகெங்கும் அடங்கிக் கிடக்கும் இந்த நேரத்தில் உண்மையில் பசித்தவர்கள் உணவு  தேடி வருகின்றார்கள் அவர்களுக்கு தற்போது அம்மா உணவகங்களில் உணவு வழங்கப்படுகின்றது. முன்பைவிட இப்போது இரண்டு மடங்கு கூட்டம் வருகின்றார்கள் காரணம் அனைத்து உணவகங்களும் அடைக்கப்பட்ட நிலையில் வேறுவழியின்றி உண்மையில் பசித்து அவர்களே இங்கு வந்து உணவுகள் அருந்தி செல்கின்றார்கள், தயவுசெய்து இந்த இடத்தில் அரசியலை சம்பந்தப்படுத்தி பேசுகிறேன் என யாரும் நினைக்க வேண்டாம் பசியைப் போக்கும் அனைத்து திட்டங்களும் நல்ல  திட்டங்களே !!!



அந்த வகையில் அன்னதானம் கொடுக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த இந்த வேலையில் நல்லதொரு யோசனையாக வந்ததுதான் இந்த அம்மா உணவகம், இந்த நேரத்தில் அன்னதானம் செய்தால் நிச்சயமாக உண்மையில் பசியோடு வரும் நண்பர்களுக்கு இது பயனுள்ளவையாக இத்தருணத்தில் இருக்கும் என்று யோசித்து நேராக அம்மா உணவகத்திற்கு சென்று அங்கு காலை உணவு  மற்றும் மதிய உணவு உட்பட சுமார் 100 பேருக்கு உண்டான அனைத்து டோக்கன் களையும் வாங்கிவிட்டேன்.


 அந்த நூறு பேருக்கும் எனது கைப்படவே டோக்கன்களை வழங்க வேண்டும் என்று எனக்கும் ஆசை தான் ஆனால் அதற்கான நேரம் என்பது அதிகமாக பிடிக்கும் சுமார் நூறு பேர்கள் வந்து சாப்பிடும் வரை காத்திருந்தால் சுமார் இரண்டு மணி நேரமாவது ஆகும்.அதனால் மொத்த டோக்கங்களையும்
 உணவு வழங்கும் இடத்தில் உள்ள ஒருவரிடம் கொடுத்துவிட்டு இங்கு வரும் அனைவருக்கும் யாரிடமும் காசு வாங்காமல் இந்த டோக்கன்கள் தீரும்வரை உணவுகளை வழங்கவேண்டும் என்று அவர்களிடம் கேட்டுக்கொண்டேன். அவர்களும் இதனை சிறப்பாக செய்கின்றேன் என்று உறுதி அளித்தார்கள்.
 இந்த அம்மா உணவகங்களில் நாம் அடிக்கடி அன்னதானம் செய்வதுண்டு நாம் எங்கும் தேடி தெரிந்து அலையாமல் ஒருவரிடம் பொறுப்பைக் கொடுத்து அதற்கான டோக்கன்களை  வாங்கி அவர்களிடம் கொடுத்துவிட்டு வந்துவிடுவோம் அவர்கள் அந்த டோக்கன்கலுக்கு உறிய உணவுகளை அங்கு வரும் நபர்களுக்கு இலவசமாக கொடுத்து விடுவார்கள். இந்த சேவைகள் என்பது மிகப்பெரிய சேவைகள் என்று சொல்லமுடியாது ஏதோ நம்மால் முடிந்த சிறிய தொகை தான் ஆனால் அந்த சிறிய தொகை கூட சில பேருக்கு மிகப் பெரிய ஆறுதலாக இருக்கும் என்பதனை இந்த இடத்தில் யாரும் மறந்துவிடக்கூடாது. 


அது மட்டும் அல்லாது நமது குழுவின் அட்மின்கள் அனைவருக்கும் நாம் சொல்லியிருக்கும் தகவல் என்னவென்றால், தாங்கள் எங்கு செல்கின்றீர்கள் அதாவது கோவில் மற்றும் பொது இடங்களில் தாங்கள் தர்மம் செய்ய வேண்டும் என்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அப்போது தங்கள் கைகளில் இருக்கும் சிறு தொகையினை நீங்கள் அந்த தர்ம காரியங்களுக்காக பயன்படுத்திக்கொள்ளுங்கள் அது நீர்மோர் வழங்குவது அன்னதானம் செய்வது நலிந்தோருக்கு ஆடைகள் தானம் வழங்குவது,போன்ற ஏதாகிலும் இருக்கலாம் அதற்கான தொகையை நமது குழுவில் இருந்து உங்களது வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்படும் என்பதனை தெரிவித்துள்ளேன். அவர்களும் இதுபோன்ற காரியங்களும் நாங்கள் செய்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்கள்.அவர்களுக்கும் இத்தருணத்தில் நாம் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.


 ஒரு கை தட்டினால் ஓசை வராது இரு கை தட்டினால் ஓசை வரும். என்பதைப்போல அனைவரும் தங்களால் முடிந்த நற்காரியங்களை செய்ய வேண்டும் என்பதற்கான நோக்கமே அன்றி வேறொன்றுமில்லை .


இணைந்திருப்போம்!!! இயன்றவற்றை செய்வோம்!!! நன்றி... 

No comments:

Post a Comment