Subscribe

BREAKING NEWS
Showing posts with label சென்னை கோயில்கள். Show all posts
Showing posts with label சென்னை கோயில்கள். Show all posts

22 March 2019

சித்தர்கள் அறிவோம் : அருள்மிகு வீரராகவ சுவாமிகள்

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள். 

சித்தர்கள் அறிவோம் என்ற தொடரில் பல சித்தர்களை நாம் தொட்டு காட்டியுள்ளோம். இது சிறு துளியே. பெரு வெள்ளம் போன்றவர்கள் சித்தர்கள். சித்தர்கள் - தம் சித்தத்தை சிவன்பால் வைத்தவர்கள். மனம், மொழி,மெய் கடந்தவர்கள், நம்மை வாழ்விக்க வந்த மகான்கள். நமக்கு குருமார்களும் கூட. ஒரு குடும்பத்திற்கு குடும்பத்தலைவன் தேவை, ஊருக்கும் தலைவன் தேவை, நாட்டிற்கும் தலைவன் தேவை, அதே போல் நம்மிடம் உள்ள ஆன்மா உய்வு பெற தலைவன் தேவை. இங்கே தலைவன் குருவாக வருகின்றார். அதே போல் அனைத்து ஆன்மாக்களுக்கும் ஒரே தலைவன் என்ற நிலை அல்ல. ஒவ்வொரு ஆன்மாவின் பரிபக்குவதிற்கு ஏற்ப ஒவ்வொருக்கும் ஒவ்வொரு குருமார்கள் வாய்க்கின்றார்கள். எப்படி ஒவ்வொருவரின் உடை மற்றவருக்கு பொருந்தாதோ, குருமார்களும் அப்படித் தான், சிலருக்கு அகத்தியர். சிலருக்கு மகா பெரியவா. என சொல்லலாம். அந்த வரிசையில் நவகோடி சித்தர்கள் கால் பதித்த பூமி இது. இன்றைய பதிவில்  அருள்மிகு வீரராகவ  சுவாமிகள்  தரிசனம் பெற இருக்கின்றோம்.

சென்னை ஒரு ஆன்மிக பூமி. பற்பல அற்புதங்கள் நிகழ்ந்து வரும் அருள் நிறைந்த ஊர்.திருஒற்றியூர் என்றாலே வடிவுடையம்மன் ஆலயமும்,பட்டினத்தாரும்,வள்ளலாரும் நினைவிற்கு வருவார்கள்.இந்த புனித தலத்தில் நம் பாதம் பட இறை அருள் வேண்டும். ஒட்டுமொத்த ஆன்மிக சங்கம் இங்கே கிடைக்கின்றது.ஒன்றா..இரண்டா ? என அடுக்கும் அளவிற்கு சித்தர்களின் அருள்மழையில் நனைய முடிகின்றது.

வடிவுடையம்மன் கோவில் தரிசனம் பெற நமக்கு ஒரு நாள் தேவை. அந்த அளவிற்கு நாம் தரிசனம் செய்ய வேண்டும்.இங்கே 2 ன் சிறப்பு உள்ளது. இறைவன்,இறைவி,தல மரம்,தீர்த்தம் என இரண்டு இரண்டாய் உண்டு. எல்லாம் இரண்டு: திருவொற்றியூர் தலத்தில் மூலவர் ஆதிபுரீஸ்வரர், ஒற்றீஸ்வரர் என இரண்டு மூர்த்திகள் பிரதானம் பெற்றிருக்கின்றனர். தவிர, வடிவுடையாம்பிகை, வட்டப்பாறையம்மன், அத்தி, மகிழம் என இரண்டு தலவிருட்சம், பிரம்ம தீர்த்தம், அத்தி தீர்த்தம் என இரண்டு தீர்த்தங்கள், காரணம், காமீகம் என இரண்டு ஆகம பூஜை என்று இத்தலத்தில் இரண்டு என்ற எண்ணிக்கை பிரதானம் பெற்றிருக்கிறது. இந்த தலத்தில் தியாகராஜர் என்ற பெயரில் நடராஜர் அமர்ந்த நிலையில் நடனமாடுவது சிறப்பம்சமாகும். இங்குள்ள ஈசன் மாணிக்க தியாகர் என்று அழைக்கப்படுகின்றார். 27 நட்சத்திர லிங்கங்கள் இங்கே காணலாம். திரிபுர சுந்தரியான அம்பாளைப் போற்றி ஸ்ரீவடிவுடை மாணிக்கமாலை என்ற போற்றிப்பாடல்களை இயற்றிய பிறகு வடிவுடை அம்மன் என்று அழைக்கப்படுகிறார்.

தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி, திருவொற்றியூர் டோல் கேட் ரோட்டில் உள்ள பரஞ்சோதி மகான் தர்கா,சங்கர மடத்துறவி மகா தேவேந்திரர் அதிஷ்டானம்,அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட குபேரனால் வழிபடப்பட்ட கோவில்,தக்ஷிணாமூர்த்தி கோவில்,எண்ணூரில் பன்னண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுயம்பு முத்தாரம்மன், சுயம்பு சித்தர்,பாடகச்சேரி பைரவ சுவாமிகள் அப்புடு சுவாமிகள்,ரோமச மகரிஷி சுயம்பு உருவம்,காக புஜண்டர் ஜீவசமாதி,பட்டினத்தார் சுவாமிகள் ஜீவசமாதி,வீரராகவ சித்தர் ஜீவசமாதி, குணங்குடி மஸ்தான் தர்கா என அருள் நிறைந்த ஊரே திருஒற்றியூர். காண கிடைக்க வேண்டுகின்றேன் திருஒற்றியூர் தரிசனம் !!!

இந்த திருஒற்றியூர் தரிசனத்தில் உள்ளம்..உணர்வாய்..இறை உணர்வை நாம் அருள்மிகு வீரராக சுவாமிகள் சித்தர் பீடத்தில் உணரலாம். பட்டினத்தார் சுவாமிகள் கோயிலை ஒட்டி சற்று தூரம் நடந்து சென்றால் ஐயாவின் கோயிலை அடையலாம்.


அங்கே ஐயாவின் உயிர்ப்பின் மேலே லிங்க பிரதிஷ்டை. ஈர்த்தெம்மை ஆட்கொண்ட எந்தை பெருமானாக இங்கே இருக்கின்றார்.










இங்கே உணர்வின் நெகிழ்ச்சி அன்பாக வெளிப்படுகின்றது. நாம் சென்ற நேரம் யாரிடமும் சுவாமிகள் பற்றி கேட்க முடியவில்லை. அடுத்த . முறை சந்திப்பில் இன்னும் விபரங்கள் தர விரும்புகின்றோம். சித்தர்கள்,மகான்கள் தமது பெயர்,புகழ் சொல்வதை விரும்பமாட்டார்கள்.இவை அனைத்தும் நமக்காக தான்.நாம் அழைக்கின்ற நேரத்தில் அவர்கள் வரமாட்டார்கள். அவர்கள் அழைக்கும் நேரத்தில் தான் நாம் அங்கே செல்ல முடியும். அது போன்ற ஒரு சக்தி களமாக அருள்மிகு வீரராக சுவாமிகள் சித்தர் பீடம் விளங்குகின்றது.

- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 சித்தர்கள் அறிவோம் : சத்குரு ஸ்ரீ ராம பரதேசி சுவாமிகள் - https://tut-temple.blogspot.com/2019/01/blog-post_31.html

 சத்குரு ஸ்ரீ ராமபரதேசி சுவாமிகள் தரிசனம் பெறுவோம்  - https://tut-temple.blogspot.com/2018/02/blog-post_15.html

 சித்தர்கள் அறிவோம்: கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் - https://tut-temple.blogspot.com/2018/12/blog-post_14.html  



தெய்வத் திருமகன் ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகளின் 86 ஆவது ஆராதனை அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/09/86.html
பட்டதாரிச் சித்தரே சரணம் - ஸ்ரீலஸ்ரீ சுப்பைய சுவாமிகள் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_8.html
பாண்டமங்கலம் காசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_21.html
ஶ்ரீஶ்ரீஶ்ரீ சொரக்காய சுவாமி! 116−வது மஹா குருபூஜை மற்றும் கலச பூஜை மஹோத்சவம் - http://tut-temple.blogspot.com/2018/08/116.html
ஸ்ரீ பைரவச் சித்தரின் அருள் மழையில் நனைவோம்.- http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_34.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி...- http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_22.html

இச்சையில் தீ வைத்தால் தீட்சை பெறலாம் - ஸ்ரீ மச்சமுனி சித்தர் ஜெயந்தி விழா - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_5.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 161 ஆம் ஆண்டு அவதார திருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/07/161.html


பாரத்தைக் குறைத்து பரத்தை உணர்த்தும் பரஞ்சோதி பாபா - 7- ஆம் ஆண்டு மகா குருபூஜைப் பேரானந்த வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/06/7_27.html

 உன்னுள் உத்தமனைக் காணும் வழி - மஹான் சங்கு சித்தர் அவர்களின் 119 ஆவது குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_13.html

அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் 50 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/06/50.html

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_5.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_1.html

ஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_79.html

மண் உண்ட மகான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லையா சுவாமிகள் - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_89.html

மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_21.html

சித்திரை பூசத்தில் குழந்தைவேல் சுவாமிகளிடம் சரண் அடைவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_21.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

 ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

 என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_4.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே !  - http://tut-temple.blogspot.com/2018/03/blog-post_76.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html



13 March 2019

திருமண தடை நீக்கும் தைலாவரம் ஸ்ரீகல்யாண ஆஞ்சநேயர் திருக்கோயில்

அனைவருக்கும் வணக்கம்.

இன்று மிக சிறப்பு வாய்ந்த ஒரு கோயிலைப் பற்றி அறிய உள்ளோம். இது அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய திருக்கோயிலாகும்.கட்டை பிரம்மசாரியான ஆஞ்சநேயர் கல்யாண ஆஞ்சநேயர் ஆன கதை தெரிந்து கொள்வோமா?

வானிலே பறந்துசெல்லும் வல்லமை படைத்த அனுமன், அளப்பரிய ஆற்றல்கொண்ட சூரியதேவனிடம் கல்வி கற்க விரும்பினான். சூரிய பகவானும், அனுமன் வருங்காலத்தில் மக்களின் துன்பங்களைப் போக்கும் சக்தி கொண்டவன் என்பதையறிந்து, அனுமனை சீடனாக ஏற்றுக்கொண்டு ஒரு நிபந்தனையையும் விதித்தார்.

தனது தேரின் ஓட்டத்தை எக்காரணத்தைக் கொண்டும் ஒரு கணம்கூட நிறுத்த இயலாது என்றும், அனுமனது முகத்தைப் பார்த்துதான் தன்னால் உபதேசிக்க இயலும் என்றும் சொன்னார்.

அந்த நிபந்தனைக்கு உடன்பட்டு, சூரிய பகவானைப் பார்த்தபடி தேரின் ஓட்டத்திற்கேற்ப பின்புறமாக ஓடிக்கொண்டே கல்வி பயின்றான் அனுமன்.

தன் மாணவன் பின்னோக்கி ஓடி சிரமப்படுகிறானே என்று பரிதாபப்பட்டாலும், தன் தேரோட்டத்தை நிறுத்தினால் உலகமே ஸ்தம்பித்து கோடிக்கணக்கான உயிர்கள் துன்பப்படுமே என்ற கவலையும் சூரியன் மனதில் எழுந்தது.

ஒருசமயம்…

கற்புக்கரசியான நளாயினியின் கணவன், ஒரு முனிவர் சொன்ன அறிவுரைகளைக் கேட்காமல் தாசி வீடு சென்று உல்லாசமாக இருந்தார். கோபம்கொண்ட முனிவர், “நாளை சூரியன் உதிக்கும்போது நீ காலமாகக் கடவாய்” என்று சபித்துவிட்டார்.

இதையறிந்த நளாயினி, சூரியன் உதித்தால்தானே என் கணவர் மரணமடைவார் என்று, “சூரிய பகவானே, நாளை நீ உதிக்காதே” என்று ஆகாயத்தைப் பார்த்துக் கட்டளையிட்டாள். பதிவிரதையின் கட்டளைக்குக் கட்டுப்பட்டார் சூரியன்.

ஓயாது ஓடிக்கொண்டிருந்த சூரிய ரதம் ஒரே ஒருநாள் நின்றது. பூலோகம் செயலற்றுப் போனது.

ஜீவன்கள் துன்பப்பட்டன. உடனே தேவர்கள், நளாயினியை சமாதானப்படுத்தினர். சாபம் கொடுத்த முனிவரும் தன் சாபத்தை மாற்றிக்கொண்டு கானகம் சென்றார்.

இவ்வாறு சூரியனின் ரதம் நின்றதும் பல நிகழ்வுகள் நடந்தன.

சூரியனின் தேரோட்டியான அருணன், வெகுநாட்களாக தேவலோகம் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளைக் காண விருப்பம் கொண்டிருந்தான். இந்த ஒருநாள் விடுமுறையை அதற்குப் பயன்படுத்திக்கொள்ள எண்ணினான்.

அதே உருவத்தில் இந்திர லோகத்திற்கு சென்றால் அனுமதி கிடைக்காது என்பதை அறிந்திருந்த அருணன், அழகான அப்சரக்கன்னி வடிவெடுத்து இந்திரலோகம் சென்றான். அங்கே காவலர்கள் அவனைத் தடுத்தார்கள்.

“நான் மேனகையின் தோழியான அருணாதேவி. மேனகைக்கு ஒப்பனை செய்பவள். இன்று அவசரத்தில் சரியாக ஒப்பனை செய்யவில்லை. அதனால் முகம் களையிழந்துவிடும்” என்று காவலர்களைப் பார்த்து புன்னகைத்தாள் அருணாதேவி.

அவளது புன்னகையில் மயங்கிய காவலர்கள், “இவள் மேனகையைவிட மிக அழகாக இருக்கிறாளே’ என்று அவளது அழகை ரசித்தபடி உள்ளே செல்ல அனுமதித்தனர்.

அங்கே மேனகையின் நடனத்தை ரசித்துக்கொண்டிருந்த இந்திரன், சபையினுள்ளே வந்தமர்ந்த அருணாதேவியைக் கண்டு, அவள் அழகில் நிலை குலைந்தான்.

நடனம் முடிந்ததும் எல்லாரும் சென்றுவிட, அருணாதேவியைப் போக விடாமல் அவள் முன்வந்து நின்றான். பெண்களை வசப்படுத்தும் கலையில் நிபுணனான இந்திரன், அவளைக் கட்டியணைத்தான். அதன் விளைவாக அழகான குழந்தை ஒன்று பிறந்தது.

(தேவலோகத்தில் இனக்கவர்ச்சிக்குக் கட்டுப்பட்டால் பத்து மாத கர்ப்பம் இல்லை.)

“மேனகையின் நடனத்தைக் காணும் ஆவலில் இங்கே வந்தேன். உண்மையில் நான் பெண்ணல்ல. சூரிய தேவனின் தேரோட்டியான அருணன். அழகிய பெண் வடிவில் வந்தது இப்போது வினையாகிவிட்டது. நாளை மீண்டும் நான் ஆணாகி தேரோட்டும் பணியைத் தொடரவேண்டும். அப்போது இது தாயில்லாத குழந்தையாகிவிடுமே. என் செய்வேன்?” என்று வருந்தினான் பெண்ணாக இருந்த அருணன்.

அதற்கு இந்திரன், “கவலைப்படாதே அருணாதேவி. இந்தக் குழந்தையை அகல்யாதேவியிடம் ஒப்படைத்துவிடு. அவள் வளர்த்துக்கொள்வாள்” என்று ஆலோசனை கூறினான்.

அதன்படியே அகல்யாதேவியிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு அருணாதேவி மீண்டும் அருணனாக மாறி சூரியலோகம் வந்தடைந்தான்.

மறுநாள் தேர் ஓட்டுவதற்கு வந்தான் அருணன். அவன் முகத்தில் ஏதோ கவலை சூழ்ந்திருப்பதைக் கண்ட சூரிய பகவான், “எங்கே நேற்று முழுவதும் உன்னைக் காணவில்லை?” என்று கனிவுடன் கேட்டார்.

அருணன், வெட்கத்துடன் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் சொன்னான்.

“அப்படியா?” என்று வியந்த சூரியன், “நீ எடுத்த பெண் உருவத்தை நான் காணவேண்டுமே” என்று சொல்ல, வேறு வழியின்றி அருணன் மீண்டும் அருணாதேவியாக மாறினான்.

அவளது அழகில் மயங்கிய சூரியன் அருணாதேவியை நெருங்கி ஆலிங்கனம் செய்தார்.

இப்போது இன்னொரு குழந்தை அங்கே அழ ஆரம்பித்தது.

மீண்டும் ஆணாக மாறிய அருணன் சூரியனிடம், “தேவனே, இந்திரனும் நீங்களும் உணர்ச்சிவசப்பட்டதால், இப்பொழுது இரண்டு தாயில்லாத குழந்தைகள் அவதரித்துவிட்டன. இந்தக் குழந்தையையும் அகல்யா தேவியிடம் ஒப்படைத்துவிடுகிறேன்” என்று சொல்லி, அப்படியே ஒப்படைத்தான்.

கௌதம ரிஷியின் மனைவியான அகல்யா, இரு குழந்தைகளையும் வளர்த்துவந்தாள். இந்த நிலையில், அகல்யாதேவி தவம் மேற்கொள்ள விரும்பினாள்.

இந்திரனுக்கும் சூரியனுக்கும் மகனாக அவதரித்த பிள்ளைகளால் தன் மனைவியின் தவம் கெட்டுவிடக்கூடாது என்றெண்ணிய கௌதம ரிஷி, அதற்கு என்ன செய்வதென்று யோசித்தார்.

வனத்தில், குரங்கு முகமுடைய வனராஜன் ஒருவன் மகப்பேறுக்காக ஒற்றைக்காலில் நின்று நெடுங்காலம் தவம் செய்வதை அறிந்த கௌதம ரிஷி, அந்த இரு குழந்தைகளின் முகங்களையும் வானரவடிவத்தில் மாற்றி அவன்முன் சமர்ப்பித்தார். குழந்தைகள் அழும் குரலைக் கேட்டு தவம் கலைந்த வனராஜன், தன்னைப்போல முகம் கொண்ட இரு குழந்தைகளைக் கண்டு, இறைவன் கொடுத்த வரம் என்று அன்புடன் அரவணைத்து எடுத்துச் சென்றான்.

அந்த இரு குழந்தைகளும் கிஷ்கிந்தை என்ற கானகத்தில் வளர்ந்தன.

இந்திரனின் புதல்வன்தான் வாலி. சூரியனின் மகன்தான் சுக்ரீவன்.

ராமகாவியத்தில் இந்த இருவரும் சிறப்பான இடத்தைப் பெறுகிறார்கள்.

“அனுமனே! நீ என் மகன் சுக்ரீவனுக்கு என்றென்றும் துணையாக இருக்கவேண்டும். உன் ஞானம், பராக்கிரமம் அனைத்தும் அவனுக்கே பயன்படவேண்டும். இதுவே நான் எதிர்பார்க்கும் குருதட்சணை” என்று சூரியன் சொல்ல, அதை மனமார ஏற்றுக்கொண்டான் அனுமன்.

கல்வி, இசை, கலை, வேதங்கள் என அனைத்தையும் அனுமனுக்குக் கற்றுத்தந்தார் சூரியன்.

அனைத்தையும் கற்றுணர்ந்த அனுமன் “நவவியாகரண பண்டிதன்‘ என்ற பட்டமும் பெற விரும்பினான். ஆனால், ஒரு குறிப்பிட்ட வியாகரணத்தைக் கற்கவேண்டுமானால் குடும்பஸ்தனாக இருக்கவேண்டும் என்பது நியதி. ஆகவே, அனுமன் மணம் புரியவேண்டும்.

சூரியதேவன், நவவியாகரணத்தை முழுவதும் கற்றுக் கொடுக்க விரும்பினார். அதற்காக தன் மகள் சுவர்ச்சலாதேவியை தன் மாணவனுக்குத் திருமணம் முடித்துவைத்தார் என்கிறது சூரியபுராணம்.

பிரம்மச்சாரி என்று பெரும்பாலோர் போற்றும் அனுமனின் திருமணக்கோலத்தை, சென்னை- செங்கல்பட்டு சாலையில், தைலாவரம் என்னும் திருத்தலத்திலுள்ள ஸ்ரீகல்யாண ஆஞ்சனேயர் கோவிலில் தரிசிக்கலாம். இங்கு மூலவராக சுமார் எட்டடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீஜெயவீர ஆஞ்சனேயர் எழுந்தருளியுள்ளார். இதே கோவிலில் தனிச்சந்நிதியில் உற்சவராக சுவர்ச்சலாதேவியுடன் பத்மபீடத்தில் தரிசனம் தருகிறார் ஸ்ரீகல்யாண ஆஞ்சனேயர். நான்கு கரங்களுடன் சங்கு, சக்கரம் ஏந்திய திருக்கோலத்தில், சுவர்ச்சலா சமேத சதுர்புஜ சுபமங்களவரத ஆஞ்சனேயர் என்ற திருநாமத்தில் பக்தர்கள் வேண்டுவதை அளித்து மகிழ்விக்கிறார்.

ஆக, அனுமனுக்கு குருவான சூரியனே மாமனாராகவும் ஆனார் என்கிறது சூரியபுராணம்.



சென்னை தாம்பரத்தை அடுத்து, செங்கல்பட்டு செல்லும் சாலையில் உள்ளது கூடுவாஞ்சேரி. இங்கிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், எஸ்.ஆர்.எம். கல்லூரி அருகில் உள்ளது ஸ்ரீகல்யாண ஆஞ்சநேயர் திருக்கோயில். கடந்த 99-ஆம் வருடம், சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலின் ஸ்தாபகரான ரமணி அண்ணாவால், மூலவரான ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேயரின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, ஆலயம் அமைக்கப்பட்டதாம்!


 பிறகு, 2004-இல், ஸ்ரீகல்யாண ஆஞ்சநேயரின் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, தசகோடி ஸ்ரீராமநாம மணித்தூண், ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேய ஸ்வாமி ராமநாம ஜப மண்டபம் ஆகியவை அமைக்கப்பட்டு, ஸத்குரு ஸ்ரீநாமானந்தகிரி சுவாமி முன்னிலையில் ஸம்ப்ரோக்ஷணம் நடந்தது.

 பத்மபீடத்தில் நின்ற திருக்கோலம்; இடது கையை இடுப்பில் வைத்திருக்க, வலது கையில் கதை வைத்த நிலையில் காட்சி தருகிறார் ஸ்ரீஜெயவீர ஆஞ்சநேயர். மூலவரான இவர் இந்தக் கோலத்தில் தரிசனம் தர... உற்ஸவர் சதுர்புஜங்களுடன் சங்கு, சக்கரம், கதையுடனும், அருகில் தன் தேவியும் சூரிய புத்திரியுமான ஸ்ரீஸூவர்ச்சலாதேவியுடனும் அற்புதமாகக் காட்சி தருகிறார்! இவரின் திருநாமம்... கல்யாண ஆஞ்சநேயர்!

 சனிக்கிழமைகளில் சென்னை, தாம்பரம் முதலான பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து அனுமனை தரிசித்து வாழ்வில் வளம் பல பெறுகின்றனர் என்கிறார் அர்ச்சகர் முரளி

 இந்த ஆலயத்துக்கு வந்து ஸ்ரீஸூவர்ச்சலா தேவியுடன் காட்சி தரும் ஸ்ரீகல்யாண ஆஞ்சநேயருக்கு வடைமாலை சார்த்தி வழிபட்டால், தடைப்பட்ட திருமணம் கூட விரைவில் நடந்தேறி விடும் என்கிறார்கள் பக்தர்கள்!


இத்தனை நாட்களாக நாம் இந்த கோயிலை தேடிக்கொண்டிருந்தோம். ஆனால் நம் நண்பரின் மூலமாக தற்போது அங்கே நடைபெற்ற கும்பாபிஷேகம் கண்டு அருள் பெற்று வந்தோம்.சில காட்சிகள் இங்கே இணைத்துள்ளோம்.

















கோயிலின்  திருப்பணி பத்திரிக்கை தங்களின் கவனத்திற்கு இணைத்துள்ளோம். மேலதிக விபரங்களுக்கு நம்மை தொடர்பு கொள்ளவும்.


                                             


இதே போல் சென்ற வாரம் மருதேரி சென்ற போது ஸ்ரீராமபிரான் அருளால் மீண்டும் ஒரு ஆஞ்சநேயர் கோயில் கண்டு தரிசித்தோம்.விரைவில் தனிப்பதிவில் தருகின்றோம்.



முந்தைய பதிவுகளுக்கு:


 காரி நாயனார்ஆசியுடன் சிவ ராத்திரி - https://tut-temple.blogspot.com/2019/03/blog-post_10.html

 மகா சிவராத்திரி அழைப்பிதழ் (04/03/2019) - https://tut-temple.blogspot.com/2019/03/04032019.html
 சிவராத்திரி விரதம் அறிந்து கொள்வோம் - https://tut-temple.blogspot.com/2019/02/blog-post_27.html
 மகா சிவராத்திரி அழைப்பிதழ் - https://tut-temple.blogspot.com/2018/02/blog-post_87.html

 சிவராத்திரி விரதம் - செய்ய வேண்டியது - http://tut-temple.blogspot.in/2018/02/blog-post_12.html

அறிய வேண்டிய அரிய மனிதர்கள் - 10 ஆவது இந்து சமய சேவை கண்காட்சி - 2019 - https://tut-temple.blogspot.com/2019/02/10-2019.html
9 ஆவது இந்து சமய சேவை கண்காட்சி - 2018 - https://tut-temple.blogspot.com/2018/02/9-2018.html
"ஜீவ அமிர்தம்" பருகலாமே! - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_30.html

03 March 2019

மகா சிவராத்திரி அழைப்பிதழ் (04/03/2019)


அன்பார்ந்த மெய்யன்பர்களே.

அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் சிவ ராத்திரி  அனைவரும் கொண்டாட உள்ளோம். நமக்கு கிடைத்த அழைப்பிதழ்களை இங்கே ஒரு சேர பகிர்கின்றோம். அனைவரும் அருகில் உள்ள தொன்மை வாய்ந்த சிவாலயம் சென்று, ஈசனை வழிபட்டு, வினைத் தூய்மை பெறவும். மேலும் தற்போது மிக மிக அதிக அளவில் எதிர்பார்க்காத சம்பவங்கள்  அதிகளவில் கேட்டு மனம் அவதியுற்றோம். இந்த நிகழ்வுகளுக்கு முன்பாக சித்தன் அருளில் மாமகரிஷி அகத்தியர் பெருமான் அஷ்ட திக்குகளிலும் விளக்கு போடுங்கள்  சென்ற ஆண்டு என்று வாக்கு உரைத்தார்.  முடிந்தவர்கள் வாரம் ஒருமுறையாவது விளக்கேற்றுங்கள். முடியாதவர்கள் மாதம் ஒருமுறையாவது விளக்கேற்றி வழிபடவும்.

இந்த அஷ்ட திக்கு விளக்கு வழிபாட்டை  மேற்கொள்ள உள்ள சிவ ராத்திரி வழிபாட்டில் தயவு செய்து இணைக்கவும். நமக்கு முதன் முதலாக சிவராத்திரி அழைப்பு அருள்மிகு கந்தழீஸ்வரர் வழங்கி உள்ளார். இணைப்பைப் பார்த்து அருள் பெறவும்.



நமக்கும் கந்தழீஸ்வரருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஊர் ஊராக சுற்றாதே குன்றத்தூரை சுற்று என்று நமக்கு உணர்த்தியவர். இங்கு சென்றால் மனம்,மொழி,மெய் ஒடுங்குவதை உணரலாம். சேக்கிழார் தினமும் தொழுத சிவனார் இங்கு தானே உள்ளார். இங்கு சென்றால் ஒரே தரிசனத்தில் திருஊரகப் பெருமாள்,குன்றத்தூர் முருகன் தரிசனம் ஒருங்கே பெறலாம். சென்ற ஆண்டு உழவார செய்து மனதிற்கினிய தரிசனம் தந்தார் நம் ஈசன்.



 அடுத்த படியாக நமக்கு ஸ்ரீ துளஸீஸ்வரர் கோயிலில் இருந்து அழைப்பு வந்துள்ளது. நான்கு கால பூஜை பற்றி அழைப்பிதழில் காணவும்.

சிங்கப்பெருமாள் கோயில் அருகில் உள்ள குளத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் ஆலய அழைப்பிதழ் 




இவருக்கும் நமக்கும் அன்பின் பிணைப்பு உண்டு. ஆம்.இங்கு உழவாரப் பணியும் செய்தோம். சில மரங்கள் நட்டோம். அன்று நாம் செய்த உழவாரப் பணிக்காக நம் தல அன்பர்கள் அனைவருக்கும் அன்பு பாராட்டி மரியாதை செய்தது இன்னும் தித்திப்பே. இவர் அகத்தியர் வழிபட்ட எம் பெருமான் ஆவார்.




 அடுத்து நாம் காண இருப்பது திருநிலை பெரியாண்டவர் அழைப்பு

04.03.2019 அன்று மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு திருநிலை பெரியாண்டவர் ஆலயத்தில் மாலை 3.00மணி முதல் தேவார இசை ,சிறப்பு வேள்வி பரதநாட்டியம் பெரியாண்டவர் அங்காலபரமேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தல் சிறப்பு நான்குகால அபிஷேகமும் ஆராதனைகள் அன்னதானம் நடை பெற உள்ளது வருகின்ற பக்தர்கள் அனைவரும் வில்வம் மற்றும் மலர்களால் தங்கள் கைகளால் இறைவனுக்கு அர்ச்சனைகள் செய்யலாம் இரவு சிவபுராணம் நாடகம் நடைபெறும் முன்றாம் கால பூசையில் ருத்திராட்சம் இலவசமாக வழங்கப்படும்
இறைவன் அருளை பெறுமாறு அழைக்கின்றோம்




  திருநீரும் மருந்தாகும் உந்தன் அருளாலே
திசை எட்டும் வளமாகும் உந்தன் பேராலே
திருநிலையில் சுடரானை துன்பமிலா வாழ்வானை
ஒருநிலையாய் நின்றவனே பெருநிலையாய் அருள்பவனே
பிணிசூழா காத்திடுவாய் பேரின்பம் நல்கிடுவாய்
வளமான வாழ்வும் தந்திடுவாய் உன் இன்னருளாலே
மனமறிய செய்த பாவங்கள் நீக்கிடுவாய்
நாடிவந்தொர்க்கு நல் அருள் புரியும் நாயகனே
குலம்தழைக்க வருவோனே குன்றா வளம் தருவோனே
உனையே கதியென்று பணிந்திட்டோம் அருள்வாய்
பெரியாண்டவபெருமானே.

Periyandavar Temple Thirunilai ஸ்ரீபெரியாண்டவர் ஆலயம்
திருநிலைகிராமம், ஒரகடம் அஞ்சல், திருக்கழுக்குன்றம் வழி செங்கல்பட்டு
வட்டம் ,காஞ்சிபுரம் மாவட்டம்- 603109 cell 9842740957



சக்தியின் சூலாயுதம் திருநிலையில் வீழ்ந்த போது 21 மண் உருண்டைகள் சிதறி வீழ்ந்து அவை சிவகணங்களாக மாறிய தலம்.திருநிலையில் சிவகணங்கள் மண்ணில் இருந்து தோன்றி ஈசனை மண் உருகொண்டு வணங்கி அருள் பெற்றது போல் நாமும் சிவகணங்கள் மற்றும் ஈசனின் அருள் பெற 21 மண் உருண்டைகள் பிடித்து சிலையின் முன்புறம் செவ்வக வடிவில் அடுக்கி வைத்து ஒவ்வொன்றுக்கும் அபிஷேகம் செய்து கற்பூர ஆராதனை காட்டி அருள் பெருவதால் எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு பெறலாம்.

அடுத்து நமக்கு உழவாரப் பணி செய்ய இந்த சிவராத்திரிக்கு அழைப்பு விடுத்து, நமக்கு சிவராத்திரி அழைப்பிதழ் தந்துள்ளார் பெருங்களத்தூர் ஆதிகாரணீஸ்வரர்.





அடுத்து அன்னம்புத்தூர் ஆலய அழைப்பிதழ் பகிர்கின்றோம் 








 மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவ அபிசேகங்களை காண்பதால் உடல் ஆரோக்யம் பன் மடங்கு பெருகும், நோய் எதிர்ப்பு சக்தி பெருகும் ..உடலில் அன்று இரவில் சுரக்கும் விச அமிலங்கள் உடலில் கூடாமல் தடுக்கப்படும்.தமிழக சிவாலயங்களில் இரவு நான்கு கால அபிசேகங்கள் நடக்கும்...ஆற்றோரம் இருக்கும் சிவாலயங்கள் வழிபாடு மிக சிறப்பு பழமையான சிவாலயங்களில் உங்கள் மனதையும் உடலையும் காக்கக்கூடிய சக்திகள் அதிகம்.
சிமெண்டால் பெரிய பெரிய பொம்மைகள் செய்து ஆர்க்கெஸ்ட்ரா வைத்து கட்டணம் வசூலிக்கும் இடங்களுக்கு சென்று சிவத்தை தேடாதீர்கள்.மகா சிவராத்திரி சிவபெருமான் கோடிக்கணக்கில் செலவு செய்து உங்களை என் இடத்துக்கு வா என அழைக்க மாட்டார்..வருபவனை முடிந்தவரை பல இடைஞ்சல் கொடுத்து தடுக்கத்தான்  செய்வார். ஜாலியா சுற்றுலா போகிறவர்கள் அங்கு போங்க...தனிமையில் அமானுஷ்ய அமைதியில் இருக்கும் சிவனை வழிபட்டு சிவனருள் பெற விரும்புவோர் உண்மையான மன வலிமை இருப்போர் பழமையான சிவ ஸ்தலத்துக்கு போங்க..பேராசக்காரர்கள் மட்டும் அலங்காரம் நிறைந்த விளம்பரம் நிறைந்த இடத்துக்கு போவார்கள்.


அனைவரும் மறவாது அருகில் உள்ள சிவாலயம் சென்று, ஆன்ம ஆலயத்தில் ஜோதி தரிசனம் பெற்று வாழ்வில் வளம் பெறுங்கள்.

முந்தைய பதிவுகளுக்கு:

 சிவராத்திரி விரதம் அறிந்து கொள்வோம் - https://tut-temple.blogspot.com/2019/02/blog-post_27.html

 மகா சிவராத்திரி அழைப்பிதழ் - https://tut-temple.blogspot.com/2018/02/blog-post_87.html


 சிவராத்திரி விரதம் - செய்ய வேண்டியது - http://tut-temple.blogspot.in/2018/02/blog-post_12.html

28 October 2018

திருவெண்காடர் உணர்த்தும் வாழ்வியல் நீதி

அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.

 வாவி எல்லாம் தீர்த்தம் மணலெல்லாம் வெண்நீறு
காவனங்களெல்லாம் கணநாதர் - பூ உலகில்
ஈது சிவலோகமென் றன்றே மெய்த்தவத்தோர்
ஓதுந் திருவொற்றியூர்

என்று புகழப்பட்ட வரும் திருஒற்றியூரில் உள்ள மகான் ஒருவரை பற்றி இன்றைய பதிவில் சிந்திக்க இருக்கின்றோம். ஏற்கனவே இவரைப் பற்றி பேசியுள்ளோம். அருளாளர்களைப் பற்றி தினம் தினம் பேசுவதும் படிப்பதும் நமக்கு ஒரு வரமே. திருவெண்காடர் என்று பதிவின் தலைப்பைப் பார்த்தாலே பல பேருக்கு யார் என்று புரிந்திருக்கும். பதிவின் ஆரம்ப பாடலைப் படிக்கும் போதாவது சிலருக்கு யார் என்று தோன்றி இருக்கும். திருஒற்றியூர் என்று சொன்னாலே இவர் தான் நமக்கு உணர்த்தப்படுகின்றார்.

ஆம்..அவர் தான் பட்டினத்தார். பட்டினத்தார் என்னும் பெயருடன் 10, 14, 17 ஆம் நூற்றாண்டுகளில் மூன்று அருளாளர்கள்  வாழ்ந்து வந்தனர். அவர்கள் பாடியுள்ள பாடல்களின் பாங்குகள் இதனைப் புலப்படுத்துகின்றன. திருமுறைப் பட்டினத்தார் 10 ம் நூற்ற்றாண்டிலும், சித்தர் பட்டினத்தார் 14 ஆம் நூற்றாண்டிலும், பிற்காலப் பட்டினத்தார் என்று ஒருவர் 17 ஆம் நூற்றாண்டிலும் வாழ்ந்துள்ளார்கள். இதில் நாம் திருவெண்காடர் என்றும் சுவேதாரண்யன் என்றும் அழைக்கப்படும் பட்டினத்தார் பற்றி சிறிது காண இருக்கின்றோம்.





பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்று கூறப்படுபவர்,சோழர்கள் காலத்தில், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர். கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர். தம் தாயார் இறந்த பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர்.



சிவநேசர் - ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிடப்பட்டது. திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார். பெருந்தன வணிகக் குடும்பம் என்பதால் திரைகடலோடியும் பெருஞ்செல்வம் திரட்டி மன்னரும் மதிக்கத்தக்க வளத்துடன் இருந்தார். அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார் என்றே அழைக்கப்படலானார். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார். அங்கே சிவசருமர் என்கிற சிவபக்தர், கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர் ஆண்மகவை பட்டினத்தாருக்குக் கொடுத்தார். அவனுக்கு மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.


அவன் வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் செய்து வர அனுப்பினார். அவனோ திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டு வந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். அவன் தன் தாயாரிடம் ஓர் ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி  ஒன்றும் அடக்கிய பேழை ஒன்றினைத் தந்து விட்டு எங்கோ சென்று விட்டான். அந்த ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம்.



அப்படியே தன் சகல சொத்துக்களையும் செல்வத்தையும் துறந்து கட்டிய கோவணத்துடன் துறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார். அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய தமக்கை. அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்' என்று கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகள் என்று மதிக்கத் தொடங்கினார்கள்.



பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.

        ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
        பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
        கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
        எப்பிறப்பில் காண்பேன் இனி

        முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
        அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
        சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
        எரியத் தழல் மூட்டுவேன்

        வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
        கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
        சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
        விறகிலிட்டுத் தீமூட்டு வேன்

        நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
        தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
        கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
        மெய்யிலே தீமூட்டு வேன்

        அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
        வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
        தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
        மானே எனஅழைத்த வாய்க்கு

        அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
        கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
        முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன்
        மகனே எனஅழைத்த வாய்க்கு

        முன்னை இட்ட தீ முப்புறத்திலே
        பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
        அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
        யானும் இட்ட தீ மூள்கமூள்கவே

        வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
        ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
        குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
        கருதி வளர்த்தெடுத்த கை

        வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
        வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
        உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
        தன்னையே ஈன்றெடுத்த தாய்

        வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
        நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
        எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
        எல்லாம் சிவமயமே யாம்


சீடர் பத்திரகிரியார் விரைவில் முக்தி அடைந்து விட அதன் பிறகு பட்டினத்தடிகள், திருவெண்காடு, சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங்களுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. அவையாவன:

  •     கோயில் நான்மணிமாலை
  •     திருக்கழுமல மும்மணிக்கோவை
  •     திருஏகம்பமுடையார் திருவந்தாதி
  •     திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
  •     திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது




பட்டினத்தடிகளின் பாடல்கள் எளிய வார்த்தைகளும் அரிய பொருளும் கொண்ட அற்புதக் கலவை ஆகும்.

எடுத்துக்காட்டாக சில பாடல்களைச் சொல்லலாம்:

        இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
        ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே; பருத்த தொந்தி
        நம்மதென்று நாமிருக்க, நாய்நரிகள் பேய்கழுகு
        தம்மதென்று தாமிருக்கும் தாம்
        மாலைப் பொழுதில் நறுமஞ்சள் அரைத்தே குளித்து
        வேலை மெனக்கெட்டு விழித்திருந்து சூலாகிப்
        பெற்றாள் வளர்த்தாள் பெயரிட்டாள் பெற்றபிள்ளை
        பித்தானால் என்செய்வாள் பின்
        ஓன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு உயர்செல்வமெல்லாம்
        அன்றென்றிரு பசித்தோர் முகம்பார் நல்லறமும் நட்பும்
        நன்றென்றிரு நடுநீங்காமலே நமக்கு இட்டபடி
        என்றென்றிரு மனமே உனக்கு உபதேசம் இதே

        நாட்டமென்றே இரு சற்குரு பாதத்தை நம்பு
        பொம்மலாட்டமென்றே இரு பொல்லா உடலை
        அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை
        அடர்ந்த சந்தைக் கூட்டமென்றே இரு சுற்றத்தை
        வாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு
        வாழ்வை குடங்கவிழ் நீர் ஓட்டமென்றே இரு
        நெஞ்சே உனக்குபதேசம் இதே...
        நாப்பிளக்கப் பொய்யுரைத்து நவநிதியம் தேடி
        நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடிப்
        பூப்பிளக்க வருகின்ற புற்றீசல்போலப்
        புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்
        காப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்
        கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக் கொண்டே
        ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கதனைப் போல
        அகப்பட்டீர் கிடந்துழல அகப்பட்டீரே




தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார் என்கிறார்கள். அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இங்கே கோயில் கட்டி வழிபாடு செய்து வருகின்றார்கள். நாம் இந்தப் பதிவின் இடையில் இணைத்துள்ள காட்சிகள் அனைத்தும் திருவொற்றியூர் பட்டினத்தார் திருக்கோயிலில் இருந்து எடுக்கப்பட்டது ஆகும்.












பட்டினத்தார் நமக்கு முதன் முதலாக திரைப்படம் மூலமாகவே பரிச்சயமானவர். என்ன ஒரு ஆச்சர்யம். பதிவின் துவக்கத்தில் கூறியது போலவே இந்த திரைப்படமும் மூன்று முறை 1935,1936 மற்றும் 1962 ஆம் ஆண்டில் வெளி வந்துள்ளது. இதில் நமக்கு 1962 ஆம் ஆண்டின் படமே கிடைக்கின்றது. இந்த திரைப்படத்தில் முருகன் அடியார் டி. எம். சௌந்தரராஜன் பட்டினத்தாராகவே வாழ்ந்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூற்றாண்டில் மீண்டும் ஒரு முறை பட்டினத்தார் திரைப்படத்தை தற்கால தொழில்நுட்பத்தோடு எடுக்க வேண்டும் என்பது நமது விருப்பம் ஆகும். வணிக ரீதியில் படம் ஓடாவிட்டாலும் இவர்களைப் போன்ற அருளாளர்களின் வாழ்வியலை நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவாவது இது நிச்சயம் வேண்டும்.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம் 

மீள்பதிவாக:-

தெய்வத் திருமகன் ஸ்ரீ குழந்தையானந்த சுவாமிகளின் 86 ஆவது ஆராதனை அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/09/86.html

பட்டதாரிச் சித்தரே சரணம் - ஸ்ரீலஸ்ரீ சுப்பைய சுவாமிகள் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_8.html

பாண்டமங்கலம் காசி விசாலாட்சி உடனுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோவில் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_21.html

ஶ்ரீஶ்ரீஶ்ரீ சொரக்காய சுவாமி! 116−வது மஹா குருபூஜை மற்றும் கலச பூஜை மஹோத்சவம் - http://tut-temple.blogspot.com/2018/08/116.html

ஸ்ரீ பைரவச் சித்தரின் அருள் மழையில் நனைவோம்.- http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_34.html

கசவை கண்ட கயிலைமூர்த்தியே போற்றி...- http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_22.html

இச்சையில் தீ வைத்தால் தீட்சை பெறலாம் - ஸ்ரீ மச்சமுனி சித்தர் ஜெயந்தி விழா - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_5.html

கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் 161 ஆம் ஆண்டு அவதார திருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/07/161.html


பாரத்தைக் குறைத்து பரத்தை உணர்த்தும் பரஞ்சோதி பாபா - 7- ஆம் ஆண்டு மகா குருபூஜைப் பேரானந்த வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/06/7_27.html

 உன்னுள் உத்தமனைக் காணும் வழி - மஹான் சங்கு சித்தர் அவர்களின் 119 ஆவது குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_13.html

அருள்மிகு சோமப்பா சுவாமிகளின் 50 ஆம் ஆண்டு குருபூசை விழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/06/50.html

என்னை நீ ஆள்வாய் சிவப்பிரகாச இறைவநல் தேசிக மணியே! - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_5.html

திருச்சி வரகனேரி பிர்மரிஷி ஸ்ரீ குழுமியானந்த சுவாமிகள் குருபூஜை - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_1.html

ஸ்ரீ கண்ணையா யோகி குரு பூஜை - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_79.html

மண் உண்ட மகான் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மல்லையா சுவாமிகள் - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_89.html

மீண்டும் மீண்டும் நம்மை அழைக்கும் குழந்தைவேல் சுவாமிகள் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_21.html

சித்திரை பூசத்தில் குழந்தைவேல் சுவாமிகளிடம் சரண் அடைவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_21.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

 ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

 என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

உன்னுள் உத்தமனைக் காணும் வழி சாகாக் கல்வி - http://tut-temple.blogspot.com/2017/07/blog-post_4.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே !  - http://tut-temple.blogspot.com/2018/03/blog-post_76.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html