Subscribe

BREAKING NEWS

27 October 2019

தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!


தீபாவளி ஸ்பெஷல் !

தீபாவளி அன்று #கங்கா_ஸ்நானம்
#மிக_முக்கியம். சந்தேகம் இல்லை. ஆனால் அன்று கங்கா ஸ்நானம் மட்டும் கிடையாது. அன்று இரண்டு ஸ்நானங்கள் சொல்லியுள்ளது.

சனாதன ஹிந்து மதத்தில் பல பண்டிகைகள் உள்ளன. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு புராண வரலாறு உண்டு. தனித்தன்மை உண்டு.அனைத்து பண்டிகைகளை ஆழ்ந்து பார்த்தால் ஏதாவது ஒரு ஆன்மிகம் கலந்த சமுதாய சிந்தனையும் ஒன்று அடிப்படை ஆதாரமாக இருப்பதை நம்மால் அதில் பார்க்க இயலும்.

எல்லா பண்டிகைகளும் ஒவ்வொரு தேவதா மூர்த்தியை அடிப்படையாக கொண்டிருக்கும் என்பதை நாம் அறிந்ததே. அந்த குறிப்பிட்ட தேவதா மூர்த்திக்கு அன்று விசேஷ பூஜை புனஸ்காரங்கள், நைவேத்யங்கள் சொல்லப்பட்டிருக்கும்..

உதாரணத்திற்கு சிவராத்ரி சிவனை மையமாகவும், வைகுண்ட ஏகாதசி திருமாலை ப்ரதானமாகவும், விநாயக சதுர்த்தி பிள்ளையாரை அடிப்படையாகவும், கிருஷ்ண ஜயந்தியில் கண்ண பிராணும், இராம நவமியில் ஸ்ரீ ராமசந்திரமூர்த்தியும், நவராத்திரி பண்டிகையில் அம்பாள் ஸ்வரூபவத்தை ஆராதிப்பதாகவும், சங்கராந்தியில் சூர்யநாராயண ஸ்வாமியை பூஜிப்பதாகவும் அமைந்துள்ளதை நாம் நன்கு அறிவோம். அவ்வாறே ஒவ்வொரு பண்டிகைக்கும் வெவ்வேரு விதமான பக்ஷணங்கள் நைவேத்யமாக சொல்லப்பட்டுள்ளதும் நமக்குத் தெரியும்.

தீபாவளியை பொறுத்தவரையில் எந்த குறிப்பிட்ட கடவுளுக்கும் பூஜை புனஸ்காரங்கள் சொல்லப்படவில்லை. தீபாவளிக்கு முக்கிய அம்சம் என்னைவெனில் ஸ்நானம் செய்வதே. குளியலை மையயமாக வைத்துதான் தீபாவளி இல்லம்தோறும் கொண்டாடப்படுகின்றது. தீபாவளி அன்று காலையில் நாம் அன்பர்களையும் நண்பர்களையும் சுற்றார்களையும் சந்திக்கும்போது ‘கங்கா ஸ்நானம் ஆச்சா.?” என்றுதான் கேட்கிறோம்.

தீபாவளி அன்று அதிகாலையில் எண்ணை தேய்த்துக்கொண்டு் வெந்நீரில் ஸ்நானம் செய்யவேண்டும். அன்று வெந்நீரில் அந்த முகூர்த்தத்தில் கங்கை வசிப்பதாக சாஸ்திரம் சொல்லுகின்றது. அதற்காகத்தாத்தான் இதற்கு ”கங்கா ஸ்நானம்” என்று பெயர் வந்துள்ளது.

இந்த ஒரு ஸ்நானத்துடன் நிற்கவில்லை. அன்று மற்றுமொரு குளியலும் சொல்லியுள்ளது. அன்று காலை சூரியோதயத்திற்கு பிறகு 6 நாழிகைக்குள் (அதாவது சுமார் காலை 9 மணிக்குள்) காவேரி போன்ற நதிகளிலோ அல்லது குளத்திலோ அல்லது கிணற்றிலோ அல்லது குழாயடியிலோ குளிர்ந்த நீரில் ஸ்நானம் செய்ய வேண்டும். இந்த ஸ்நானத்திற்கு பெயர் ”துலா ஸ்நானம்”.

முதலாவதாக செய்யும் கங்கா ஸ்நானத்தின்போது விஷ்ணு பகவானை ஸ்மரிக்கவேண்டும். இரண்டாவது குளியலின்போது பரமேஸ்வரனை நினைக்கவேண்டும் என பெரியோர்கள் வழிகாட்டியுள்ளார்கள்.

தீபாவளி சொல்லும் செய்தி:
கிருஷ்ணனால் நரகாசுரன் வதம் செய்யப்பட்டபோது, மரணத்தருவாயில் அவன் ஞானத்தைப் பெற்றான். ‘எனது தவறுகளுக்காக நான் துன்பம் அனுபவிக்கவே வேண்டும். ஆனால், எனது மரண தினத்தை மக்கள் எல்லோரும் சந்தோஷமாகவும் செழிப்புடனும் கொண்டாடவேண்டும்....” என்று கோரி இறப்பெய்தினான்.

நமக்கு தனிப்பட்ட வகையில் எத்தனையோ துன்பங்கள் இருப்பினும் கவலைகளோ குறைபாடுகளோ இருந்தாலும் சுற்றியிருக்கும் மனிதர்களையும் உயிர்களையும் சந்தோஷமாக வைத்திருக்க வேண்டிய அவசியத்தை ஒரு அசுரன் தனது மரணத் தருவாயில் உணர்ந்தான்.
ஒரு அசுரன் அத்தனை ஞான நிலையை எட்ட முடியுமானால் நாகரிகமடைந்த மனிதர்களால் இன்னும் மேலான ஆனந்தத்தைப் பிறருக்கு அளிக்க முடியும் என்பதை நினவுப்படுத்தும் பண்டிகையே தீபாவளி.
நம்மை சுற்றி ஒளியேற்றுவோம்.

தீபாவளி நல்வாழ்த்துகள் !

24 October 2019

இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய வேண்டுமா?...




வேதாத்திரி மஹரிஷி பேசுகிறார். மனவளக்கலைப் பேராசிரியர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இல்லற வாழ்க்கைச் சிறப்பாக அமைய வேண்டும் என்றால்,
அதற்கு என்ன வழி?.

மூன்று பண்புகள்:

1.  விட்டுக் கொடுப்பது,
2.  அனுசரித்துப் போவது,
3.  பொறுத்துப் போவது.

இவை மூன்றும் இல்லை என்றால் இல்லறம் இன்பமாக இருக்காது.
இந்த இடத்தில் ஒரு சந்தேகம். ஒரு பேராசிரியை எழுந்து அதைக் கேட்டார்.

“விட்டுக்கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறீர்கள்...
யார் விட்டுக் கொடுப்பது? கணவனா? மனைவியா?
பிரச்சினையே அங்குதானே ஆரம்பம்!” எல்லோரும் ஆவலோடு
மகரிஷியின் முகத்தைப் பார்கிறார்கள்.

இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?

கணவனுக்குச் சாதகமாகப் பேசுவாரா?அல்லது
மனைவிக்குச் சாதகமாகப் பேசுவாரா?

மகரிஷி சிரிக்கிறார். அப்புறம் சொல்கிறார்.

“யாரிடம் அன்பு அதிகமாக இருக்கிறதோ, அறிவாளியோ
அவர்கள் தான் விட்டுக் கொடுப்பார்கள். அவர்கள்தான்
அனுசரித்துப் போவார்கள். அவர்கள்தான் பொறுத்துப் போவாகள்.”
அரங்கம் கைதட்டலால் அதிர்கிறது.

ஆரவாரம் அடங்கியவுடன் அருட்தந்தை தொடந்து பேசுகிறார்:

“அன்புள்ளவர்களிடம்தான் பிடிவாதம் இருக்காது. பெருந்தன்மை இருக்கும். குடும்பத்தில் ஆற்றலை உற்பத்தி பண்ணுகிறவர்கள் அவர்கள்தாம்,

அவர்கள்தாம் Power Producers, Charged Batteries, நம்பிக்கை நட்சத்திரங்கள், இறை ஆற்றலோடு நெருக்கம் உள்ளவர்கள். அவர்களுக்குத்தான் தவம் எளிதாகக் கைகூடும். அவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.

அத்தனைச் சிக்கல்களுக்கும் தீர்வாக அவர்கள் திகழ்வார்கள்.
அருட்பேராற்றலால் ஆசிர்வதிக்கப் பெற்றவர்கள்!”

அருட்தந்தையின் விளக்கம் நமக்குள் ஓர் உந்துதலை
ஏற்படுத்துவதை உணர முடிகிறது.

விட்டுக்கொடுப்பதில் முந்திக் கொள்ள வேண்டும் என்கிற வெளிச்சத்தை நமக்குள்ளே உண்டு பண்ணுகிறது.

அமைதியான குடும்பமே நல்ல குடும்பம். குடும்ப அமைதியே
உலக அமைதிக்கு வித்தாகும் என்கிறார் மகரிஷி..

அமைதியான குடும்ப வாழ்விற்கு மேலும் அவர் சொல்கின்ற
கீழ்க்கண்ட பத்து அறிவுரைகளை கவனத்தில் கொள்வோம்.

பத்து வழிகள்:

1.  நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.

2.  கணவன்-மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.

3.  குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.

4.  வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியைக் குலைக்கும்.

5.  ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது பெரும்பாலோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.
சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம்; சிலர் குறைவாகச் சம்பாதிக்கலாம்.
அப்படி இருந்தாலும் அதைக் காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது
ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.

6.  கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிணக்கிற்க்கு இடம்  தரும்.

மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் தெய்வீக உறவு இருக்காது.  பொறுப்பற்று வீண் செலவு செய்பவராக இருந்தால் இது பொருந்தாது.

7.  குடும்ப அமைதி நிலவ, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல்,
தியாகம் என்ற மூன்றையும் கடைபிடித்து வரவேண்டும்

8.  பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழி வகுக்கும்.

9.  தனக்குக் கிடைத்த வாழ்க்கைத்துணையைப் பற்றி
யாரும் குறை கொள்ளத் தேவை இல்லை. அவரவர் அடிமனமே
இதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.

10.  நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும்.

வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!!

தத்துவஞானி வேதாத்திரி மகரிசி

நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்! வாழ்க வளமுடன்!!

21 October 2019

எமதீபம் ஏற்றுவதனால் கிடைக்கும் நன்மைகள்....


எம தீப த்ரயோதசி


'ஞ்ஞான இருள் அகற்றி, நம்முள் ஞான தீபம் ஏற்றும் தீபாவளித் திருநாள்... நமக்கு மட்டுமல்ல, எமதர்மனுக்கும் பிடித்த பண்டிகை!' எனப் போற்று கின்றன ஞான நூல்கள். காரணம் என்ன... விரிவாகத் தெரிந்து கொள்வோமா?!

ஐப்பசி மாதம் தீபாவளிக்கு முன்பு வரும் திரயோதசி நாளுக்கு எம தீப த்ரயோதசி எனப் பெயர். 26.10.2019 எம தீப திரயோதசி தினமாகும். அன்று (சனிக்கிழமை) மாலை எமதர்ம ராஜாவைக் குறித்து, வீட்டுக்கு வெளியில், மண் அகலில் நெய் / நல்லெண்ணைவிட்டு விளக்குகள் ஏற்றிவைத்தால், அறியாமல் செய்த பாபங்களை - எம பயத்தை போக்கடிக்கும்.  தீபாவளிக்கு முந்தைய தினத்தன்று யம தீபம் ஏற்றுவது நம் மரபு. மரணபயம் நம்மைவிட்டு அகலவும் துர்மரணமின்றி அமைதியான மரணம் ஏற்படவும் யமதர்மராஜனை தவறாமல் வழிபட வேண்டும்.

மஹாளய பட்ச நாட்களில் குறிப்பாக மகாளய பட்ச அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு. இந்த நாட்களில், பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்கள் பூமிக்கு வருவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

அப்படி வருபவர்கள், தீபாவளி நாட்களில்தான் பித்ருலோகத்துக்கு திரும்புகின்றனர். அவர்களை வழியனுப்பும் பொருட்டு தீபமேற்றுதல் வேண்டுமாம். சாஸ்திரங்களும், 'தீபாவளிக்கு முதல் நாளான திரயோதசி திதி அன்று மாலை நேரத்தில் எம தீபம் ஏற்ற வேண்டும்!' என்கின்றன.

பித்ருலோகத்துக்கு மீண்டும் திரும்பிச் செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது "யம தீபம்" மட்டுமே.
 இந்த வெளிச்சத்தில் அவர்கள் சுகமான பயணம் மேற்கொள்ளும்போது, அவர்களுக்கு வெளிச்சம் காட்டிய நம்மை ஆசீர்வதித்துச் செல்கின்றனர். அந்த ஆசீர்வாதம் நமக்கு பல நன்மைகளை வாரி வழங்கக்கூடியது. அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை நாம் பெற ‘இந்த யமதீபத்தை’ ஏற்றி வழிபட வேண்டும்.

யம தீபமானது முக்கியமாக துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. அவர்கள் பிரச்சினைகள் ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு, உங்களுக்கு நலன்களைச் செய்வார்கள். என்றாலும் எவரேனும் இறந்தால் மட்டுமே யம தீபம் ஏற்ற வேண்டும் என்று எண்ணக் கூடாது.

யம தீப வழிபாடாக, ஒரு பெரிய அகல்விளக்கில் நெய் / நல்லெண்ணெய் கொண்டு ஆலயத்தில் / இல்லத்தில், திரிகளை வைத்து ஏற்றி, ஒவ்வொரு திக்காகப் பார்த்து, எட்டுத் திக்குகளில் நின்று, அந்தந்த திக்குகளை தேவமூர்த்தி, தேவதைகளை வணங்கிப் பிரார்த்திக்க வேண்டும். இவ்வாறு எட்டுத் திக்குகளிலும் நின்று பூஜித்து, யம தீப தேவ மூர்த்திகளை உலக ஜீவன்களுக்கு உள்ள எமபயம், மரண பயம், மிருத்யு தோஷங்கள் அகலத் துணைபுரிவீர்களாக என்று வேண்டிட வேண்டும்.

யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும். சொத்துகள் சேரும். அனைத்து விதத் தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே அமையும்.  அத் தீபத்தை நீங்கள் தீபாவளி காலத்தில் வருகிற திரயோதசி திதியில் ஏற்ற வேண்டும். இது எப்போதும் தீபாவளிக்கு முதல் நாள் அன்று வரும். யம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கு வழிகாட்டி உதவுவது அந்த வருடம் முழுவதும் நல்ல பலன்களைத் தரும்.

ஜோதிடத்தில் யமனுக்கு உள்ள தொடர்பு:
சூரிய பகவான் த்விஷ்டா என்பவரின் மகள் சுவர்ச்சலாதேவியை திருமணம் செய்தார். அவர்களுக்கு வைவஸ்தமனு, எமன் என்ற 2 மகன்களும் யமுனை என்ற மகளும் பிறந்தனர். சூரியனின் வெப்பத்தை தாங்க முடியாத சுவர்ச்சலாதேவி தன் நிழலை ஒரு பெண்ணாக மாற்றினாள். அந்த பெண்ணுக்கு சாயாதேவி என்ற பெயரிட்டாள். பிறகு அவள் இனி நீ சூரியனுடன் குடும்பம் நடத்து என்று கூறி விட்டுத் தன் தந்தை வீட்டுக்கு சென்று விட்டாள்.

இதையடுத்து சாயாதேவிக்கு சூரியன் மூலம் தபதீ என்ற மகளும் ச்ருதச்ரவசி, ச்ருதசர்மா என்ற 2 மகன்களும் பிறந்தனர். இவர்களில் ச்ருதசர்மா உன்னத பலன்கள் பெற்று சனிபகவான் என்ற அந்தஸ்தை பெற்றார். சிவனை வழிபட்டு ஈஸ்வர பட்டமும் பெற்றார்.

ஓரு ஆத்மாவை உருவாக்குவதில் ஆத்மகாரகனான சூரியனும் அந்த ஆத்மாவீன் ஆயுளை தீர்மானிப்பதில் சூரியனின் புத்திரர்கள் மற்றும்ஆயுள் காரகனான சனைஸ்வர பகவானும், அவருடைய அதிதேவதையான யமன்தான் என பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது.

யம தீபம் எங்கு ஏற்றலாம்?
1. மயிலாடுதுறை அருகில் ஸ்ரீ வாஞ்சியத்தில் தனி சன்னதிபெற்ற யமதர்மராஜன் சன்னதி
2. தனது பக்தனான மார்கண்டேயனுக்கு அருள யமனை அழித்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சன்னதி
3. திருச்சி மண்ணச்சநல்லூர் அருகில் திருபைஞ்சிலி எனும் ஞீலிவனநாதர் ஆலயத்தில் உலகில் அழிக்கும் தொழில் தடையின்றி நடைபெற சாம்பலில் இருந்து யமனை மீண்டும் குழந்தையாக உருவாக்கிய யமன் சன்னதியில்.
4. அனைத்து சனி பரிகார ஸ்தலங்களில்.
5. அனைத்து சிவாலய சனைஸ்வரர் சன்னதிகளில்
6. யமனின் சகோதரியான யமுனை நதிக்கரையில்
7. அனைத்து காலபைரவர் சன்னதிகளில்.
8. அவரவர் வீட்டின் உயரமான பகுதியிலும் தெற்கு திசை நோக்கி யம தீபம் ஏற்றலாம்

யம தீபம் ஏற்றும் நாள் மற்றும் நேரம்
26.10.2019 – சனிக்கிழமை மாலை 5.45 மணிக்கு மேல் 6.58 மணிக்குள் எம தீபம் ஏற்ற வேண்டும்.

யம தீபம் ஏற்றும் வழி முறைகள்
·         பெரிய அகல்விளக்கு ஒன்றில் மஞ்சள் திலகமிட்டு, முழுதுமாக நெய் / நல்லெண்ணெய் ஊற்றி , பெரிய திரியிட்டு சிறிதளவு கோதுமை தானியத்தை அகலில் போட்டு யம தீபம் தயார் செய்து கொள்ள வேண்டும்
·         வீட்டில் விளக்கு ஏற்றி வைத்து விட்டு, வீட்டின் வெளிப்புறம் உயரமான பகுதியில் வாழை இலையின் மேல் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். அப்படி விளக்கேற்ற வீட்டில் வசதி இல்லா விட்டால்  வீட்டிற்குள்ளும் யம தீபம் ஏற்றலாம்.
·         யம தீபம் தெற்கு திசை நோக்கி எரிய வேண்டும். விளக்கேற்றிய பின் யம தீப ஸ்லோகம் சொல்லி பிரார்த்தனை செயய் வேண்டும்.
·         விளக்கேற்றிய பின்னர், முன்னோர்களை மனதில் நினத்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.
·         நெய் / நல்லெண்ணெய் முழுவதுமாக எரிந்து தானாக அணைந்த பிறகு, அகல்விளக்கை நீர் நிலைகளில் விட்டு விடலாம் அல்லது மண்ணுக்குள் புதைத்து விடலாம். வீட்டிலேயே வைத்துக் கொண்டால் வேறு பூஜைகளுக்கு பயன் படுத்த கூடாது. மறு வருடம் எம தீபம் ஏற்ற பயன்படுத்தலாம்.

யமதீபம் ஏற்றும்போது கூறவேண்டிய ஸ்லோகம்:
ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச|
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச||
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே|
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:||

அனைத்தையும் அடக்கி ஆள்பவராகவும், தர்ம மூர்த்தியாகவும் தீவினையை அழிப்பவராகவும், விவஸ்வானுடைய புத்திரனாகவும் காலத்தின் வடிவாகவும், அனைத்து ஜீவன்கட்கும் நல்லதோர் முடிவை அளிப்பவராகவும், பலவித பிறப்பு, இறப்பு ரகசியங்களைத் தன்னுள் கொண்டவருமான அனைவராலும் பூஜிக்கப்படுபவருமான ஸ்ரீயமதர்மராஜமூர்த்தியை வணங்குகிறேன். பெரும் வயிறு படைத்தவனும் சித்திரத்திலிருந்து தோன்றியவனுமான சித்ரகுப்தனுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரங்கள்’ என்று பொருள்.
மற்றும் 
ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸூகந்திம் புஷ்டிவர்த்தனம்
உருவாருஹமிவ பந்தனாத் ம்ருத்யோர் முச்சீய மாம்ருதாத்
எனும் ம்ருத்யுஞ்சய மந்திரத்தையும் உச்சரித்தபடி விளக்கேற்றி 
அகால ம்ருத்யூ ஹரணம் ஸர்வ வ்யாதி நிவாரணம் சர்வ பாப க்ஷயகரம் தம் நமாமி மகேஸ்வரம் 
எனக் கூறி பிரார்த்தனை செய்ய வேண்டும்!

எளிய தமிழ் பிரார்த்தனை
பாசம் தண்டம் இவைகளைக் கைகளில் ஏந்திக் கொண்டு, யாமாதேவி மற்றும் காலதேவனுடன் பிரகாசிக்கும் சூரியனின் புத்ரரான மய தர்மராஜாவானவர், நான் செய்யும் இந்த த்ரயோதசி தீப தானத்தால் சந்தோஷமடையட்டும் என்று சொல்லி வழிபட வேண்டும். இந்த வழிபாடு அபம்ருத்யு என்னும் தோஷத்தைப் போக்கும். இதன் காரணமாக வியாதியற்ற நீண்ட ஆயுளைத் தரும் என்கிறது ஸ்காந்த புராணம்.

எனவே மறக்காமல் 26.10.2019 மாலை எம தீபம் ஏற்றுங்கள்.  முன்னோர் ஆசிகள் பெற அனைவருடைய இல்லங்களில் யம தீபம் ஏற்றுவோம்.


16 October 2019

கர்மாவின் தண்டனையை அனுபவிப்பது நல்லதா?, தப்பிப்பது நல்லதா?"

ழுத்துச் சித்தர், பாலகுமாரன் அவர்களால் எழுதப்பெற்ற "அரச மரம்” என்ற அற்புதமான நாவலில் இருந்து.

"கர்மா என்று ஒன்று இருக்கிறது. போன ஜென்மத்து பாவங்கள் என்பவை தனியாக இருக்கின்றன. அவற்றுக்கான தண்டனையாகத்தான் இந்த பிறப்பு இருக்கிறது.

இந்த பிறப்பு தண்டனையாக இருக்கிறபோது தண்டனையிலிருந்து காப்பாற்றுவது என்பது எங்கனம்? தண்டனையை அனுபவிப்பது நல்லதா, தண்டனையிலிருந்து தப்பிப்பது நல்லதா?"

"நல்ல கேள்வி. ஐயா, காயத்ரீ ஜபம் செய்பவரே உமக்கு பதில் சொல்கிறேன் கேளும். ஒருமுறை ஒரு தவறு செய்துவிட்டீர், ஒருவனை கொலை செய்து விட்டீர்.

கோபத்தாலோ அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையினாலோ அது நிகழ்ந்துவிட்டது. கொலை பாவமான காரியம். அதற்கு நிச்சயம் தண்டனை உண்டு. ஆனால், நீர் அது குறித்து வருத்தப்படுகிறீர்.எப்படி நடந்துவிட்டது என்று வேதனைப்படுகிறீர்,

செய்திருக்க வேண்டாமே என்று மனம் மருகுகிறீர் எனில், உம்மைக் கவனித்து உமக்கு தண்டனை அளித்த அரசனே அந்த தண்டனையை ரத்து செய்வதில்லையா?

சிறை தண்டனை என்று சொன்னவன், 'இதுநாள் வரை நீர் சிறையிலிருந்தது போதும். விடுதலையாகி விடுங்கள்' என்று சொல்வதில்லையா? இரண்டு சவுக்கடி கொடுத்துவிட்டு வெளியே அனுப்பி விடுவதில்லையா?

'உமக்கு சிறை தண்டனை வேண்டாம். நாடு கடத்துங்கள்' என்று உயிரோடு உம்மை சுதந்திரமாக வெளியேற்றி விடுவதில்லையா?

எனது எல்லைக்குள் நீ  வர வேண்டாம்  என்று உத்தரவிட்டு உம்மை அப்புறப்படுத்துவது போல தண்டனை இருந்தாலும், தண்டனை குறையவும் அரசனுக்கு அதிகாரம் இருப்பதைப் போல கடவுளும் செய்வதுண்டு.

ஒரு மதியூக மந்திரி அரசனிடம் பேசி தண்டனையைக் குறைப்பது போல, குருவானவர் இறைவனிடம் பேசி உமக்கு தண்டனையை மாற்றிவிடுகிறார். இன்னும் இலகுவான ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்.

இன்றைக்கு அதோ, அந்த வீட்டுத் திண்ணையில் தூங்குகிறானே அவனுக்கு, விடிந்து மூன்று நாழிகைக்குள் செருப்படி விழ வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது.

அது போன ஜென்மத்தில் அவன் ஒரு நாயை எட்டி உதைத்ததன் விளைவு. ஒரு நாயை எட்டி உதைத்ததற்காகவே அவன் செருப்படி வாங்கப் போகிறான்.

ஆனால், அவன் இறை பக்தி உடையவன். குரு பக்தி உடையவன். தன் கனவுகளினூடே, தான் செய்த பாவங்களை கண்டுபிடித்து விடுகிறான். அதிகம் பாவம் செய்யாமலிருக்க முயற்சிக்கிறான்.

இடைவிடாது இறைவன் நாமம் சொல்லிக் கொண்டிருக்கிறான். உரத்துப் பேசாதிருக்கிறான். எனவே, அவனுடைய தண்டனை வேறுவிதமாக மாற்றப்படும்.

அவன் பேரக் குழந்தை இன்று முதல் நாழிகையில் ஓடி வந்து அவன் மீது உட்கார்ந்து கொள்ளும். அவனைச் சுற்றி ஆடும்,பாடும், தலை முடியைப் பிடித்து இழுக்கும்.

முகத்தில் குத்தும், கடிக்கும். பிறகு அருகே இருக்கின்ற செருப்பைத் தூக்கிக் கொண்டு ஓடிவந்து அவன் தலையில் போடும். இவன் என்ன செய்வான். ஒரு வயதுப் பேரக் குழந்தையை செருப்புத் தூக்கிப் போட்ட அந்த செல்வக்  குழந்தையை வாரி முத்தமிட்டு மிக்க நன்றி என்று சொல்வான்.

செருப்படியும் விழும். அது இதமாகவும் இருக்கும். குருவின் திருவருளால் தண்டனையானது இப்படித் திருப்பி விடப்படும்."

12 October 2019

ஸ்ரீ பாடலத்ரி நருஷிம்ஹப் பெருமாள் சிங்கபெருமால் கோவில்!!!


பாடலாத்ரி நரசிம்ம பெருமாள்  பெயரால் சென்னை அருகே செங்கல்பட்டு செல்லும் வழியில் “சிங்க பெருமாள் கோவில்” அமைந்துள்ளது. இந்த கோவிலின் பெயராலேயே இந்த ஊர் பெயரும் சிங்க முகத்தோடு காட்சி தரும் பெருமாள் ஆதலால் சிங்கபெருமால் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

இக்கோவில் ஒரு குடவரைக் கோவிலாகும் பெருமாளின் திருமேனியே மலையாக விளங்குவதால் நாம் தனியாக மூலவரை வலம் வர முடியாது மலையைச்சுற்றித்தான்  வலம் வர வேண்டும். பெருமாள் சங்கு சக்கரம் தாங்கி நான்கு கரங்களுடன் வலது காலை மடக்கி அமர்ந்த கோலத்தில் நெற்றிக்கண்ணுடன் பிரம்மாண்டமாக சேவை சாதிக்கின்றார். ஆரத்தி காட்டும் போது திருமண்ணை விலக்கி, நெற்றிக்கண்ணை சேவை செய்து வைக்கும் போது அந்த காட்சி மெய் சிலிர்க்க வைப்பதாக இருக்கும்.வைகுண்ட ஏகாதாசி புரட்டாசி சனிக்கிழமைகளில் மூன்றாவது கண் எப்போதும் திறந்த நிலையிலேயே இருக்கும்.

திருவாதிரை, சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், சனிதசை, ராகுதசை நடப்பவர்களுக்கும் இத்தலம் பரிகாரத்தலமாக விளங்குகிறது

இத்தலம் பாடலாத்ரி என்றும் அழைக்கப்படுகின்றது. பாடலம் என்றால் சிவப்பு அத்ரி என்றால் மலை எனவே இந்தக் குன்று பாடலாத்ரி என்றும் இம்மலையில் எழுந்தருளியிருக்கும் பெருமாள் பாடலாத்ரி நரசிம்மர் என்றும் அழைக்கப்படுகின்றார்.

ஜாபாலி என்னும் முனிவர் பெருமாளை நரசிம்ம மூர்த்தியாக சேவிக்க வேண்டும் என்று இம்மலையில் தவம் செய்தார். அவரது தவத்திற்கிணங்கி பெருமாள் பிரதோஷ வேளையில் உக்ர நரசிம்மராக சிவந்த கண்களோடு பாடலாத்ரி மீது தரிசனம் தந்தார். முனிவர் வேண்ட பின் அதே கோலத்தில் நாம் எல்லோரும் வழிபடுவதற்காக இத்தலத்தில் கோவில் கொண்டார்.

பிரணவகோடி விமானத்தின் கீழ் நரசிம்மர் சங்கு சக்கரம் ஏந்தி வலக்கரம் அபய ஹஸ்தமாகவும், இடக்கரத்தை தொடை மீது வைத்தும் பிரம்மாண்ட திருவுருவில் அருள்கிறார். வலது காலை தொங்கவிட்டு இடக்காலை மடித்த நிலையில் நெற்றிக்கண் ஒளிரும் அபூர்வ திருமேனி கொண்டவர் இவர். இவருக்கு பிரதோஷ தினத்தன்று திருமஞ்சனம் நடைபெறுகின்றது.



ஆண்டாள், பெருமாளுக்கு இடப்பாகத்திலும் அஹோபிலவல்லி தாயார் பெருமாளுக்கு வலப்பக்கத்திலும் அருள்பாலிக்கின்றனர்  ,லட்சுமி நரசிம்மர், ஆழ்வார்கள், இராமானுஜர் ஆகியோர்களுக்கு இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. கிரிவலம் வரும் போது அரிய வகை அழிஞ்சல் மரத்தை பார்க்க முடியும். 



அதையும் தவறாமல் வழிபட வேண்டும். அம்மரத்திற்கு மஞ்சள், குங்குமம் இட்டு நெய் விளக்கேற்றி வழிபட திருமண வரம், மழலை வரம் இருக்கிறது. பலர் இம்மரத்தில் தொட்டில் கட்டியிருப்பதைக் காணலாம்.

பெருமாள் திருமேனியே மலையாக விளங்குவதால் பவுர்ணமி கிரிவலம் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது. மார்கழி, தை மாதங்களில் நரசிம்மரது பாதங்களிலும், ரத சப்தமி தினத்தன்று நரசிம்மரின் உடலிலும் சூரிய ஒளி படருகிறது.




கடன் தொல்லை, வழக்குகளிலிருந்து விடுதலை, செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை விலக, இந்த நரசிம்மர் அருள்கிறார். திருவாதிரை, சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், சனிதசை, ராகுதசை நடப்பவர்களுக்கும் இத்தலம் பரிகாரத்தலமாக விளங்குகிறது.





நரசிம்ம ஜெயந்தி, ராமானுஜ ஜயந்தி, சித்ரா பவுர்ணமி, வைகாசி சுவாதி நட்சத்திர தினத்திற்கு முன்வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். ஆடிப்பூரம், ஆவணி பவித்ரோற்சவம், கிருஷ்ணஜயந்தி, புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசியில் மணவாளமாமுனிகள் உற்சவம், கார்த்திகையில் திருக்கார்த்திகை, தை மாதசங்கராந்தியன்று ஆண்டாள் நீராட்டு உற்சவம், மார்கழியில் 5 நாட்கள் தெப்போற்சவம், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் என ஆண்டு முழுவதும் விழாக்கோலம் காண்கின்றது இத்திருத்தலம் .




இவரிடம் தன் கோரிக்கை நிறைவேறினால் பானகம் கரைத்து ஆலய வலம் வரும் பக்தர்களுக்கு அளிப்பதாக வேண்டிக்கொண்டால், கட்டாயம் அந்த கோரிக்கை நிறைவேறிவிடும் என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை.
துலாபாரம் போன்ற பிரார்த்தனைகளும் இங்கு நடைபெறுகிறது.புரட்டாசி நான்காம் வாரம் சனிக்கிழமை இன்று என் குடும்பத்துடன் இத்திருத்தலத்திற்கு சென்று வழிபட்டதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன் .!!!.

விதியின்படிதான் எல்லாம் நடக்குமா???



விதியின்படிதான் எல்லாம் நடக்கும் என்று கூறப்படுகிறது. விதியை மாற்ற முடியாது என்றும் சொல்கிறார்கள். இப்படி மாற்ற முடியாத விதியின்படிதான் எதுவும் நிகழும் என்றால், மனித முயற்சியே தேவை இல்லையே? தேவை இல்லை என்பது மட்டுமல்ல – முயற்சியினால் எந்தப் பயனும் கிட்டாது – என்றுதானே ஆகிறது? அதாவது, சோம்பேறியாக இருந்து கொண்டு வாழ்க்கை நடத்தினாலும், விதி நன்றாக இருந்தால், எல்லாம் நல்லதாகவே நடக்கும் அல்லவா? ஆக, இந்த ‘விதி’ என்பது சோம்பேறித்தனத்தைத்தான் ஊக்குவிக்கும். இல்லையா?...

பதில் ..

பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா, எல்லா மனிதர்களும் முழுமையாக இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று கூறுகிறார். தானே கூட, எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவும் அவர் சொல்கிறார். அப்படியிருக்க, ‘நீ ஒன்றும் செய்யாமல் சோம்பேறியாக இரு; விதி நன்றாக இருந்தால், உனக்கு நல்லதெல்லாம் நடக்கும்’ என்று சாத்திரங்கள் சொல்லுமா?

விதி, நல்ல நேரம் எல்லாமே, முயற்சி உள்ளவர்களுக்குத்தான் உதவும். நல்ல முயற்சி இருந்தும், ஒருவன் தோற்பது விதியால்தான்.

மஹாபாரதத்தில் ஒரு நிகழ்ச்சி வருகிறது. யாதவர்கள் ஒருவரை ஒருவர் தாக்க, பேரழிவு ஏற்படுகிறது. முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர்தான் மிஞ்சியிருக்கிறார்கள். கிருஷ்ணர், அர்ஜுனனை அழைத்து, ‘நீ இவர்களை எல்லாம் பாதுகாப்பாக அழைத்து சென்று விடு’ என்று கூறுகிறார். அர்ஜுனனும் அதை ஏற்று, அவர்களை எல்லாம் அழைத்துச் செல்கிறான்.
போகிற வழியில், ஒரு கொள்ளைக் கூட்டம் இவர்களை வழிமறித்துத் தாக்குகிறது. முதியவர்களும், பெண்களும், குழந்தைகளும் கதறுகிறார்கள். அர்ஜுனன் மிகப் பெரிய வீரன் அல்லவா? அவன் அந்தக் கொள்ளைக் கூட்டத்தை விரட்டி அடிக்க முற்படுகிறான். அவர்களோ கடுமையாகத் தாக்குகிறார்கள். கடைசியில் அர்ஜுனன் தனது சிறந்த ஆயுதமான காண்டீவத்தையே பயன்படுத்துகிறான். அதுவும் பலனளிக்காமல், அந்தக் கொள்ளைக் கூட்டத்தினர் பெரும் சேதம் விளைவித்துச் செல்கிறார்கள்.அர்ஜுனனுக்கு ஒன்றும் புரியவில்லை. மீதி இருந்தவர்களோடு அவன் போய்க் கொண்டிருந்தபோது வியாஸரைச் சந்திக்கிறான். அவரிடம் நடந்ததைச் சொல்லி – ‘ஏன் இவ்வாறு நடந்தது? பாரதப் போரில் துரோணர், பீஷ்மர், கர்ணன், துரியோதனன், அச்வத்தாமன்… போன்ற பெரும் வீரர்களை எதிர்த்து வென்றேன். ஆனால், இப்போது சாதாரண தீவட்டிக் கொள்ளைக்காரர்களை ஒடுக்க என்னால் முடியாமல் போய்விட்டதே! என் காண்டீவம் கூட பயன் தரவில்லையே? ஏன்?’ என்று கேட்கிறான்.

வியாஸர் சொல்கிறார்: ‘உன்னுடைய வீரத்திற்குக் கிட்டிய நேரம் முடிந்து விட்டது. அதுதான் காலத்தின் வன்மை. காலம் ஒத்துழைக்கவில்லை என்றால், மனித முயற்சி பயன் அளிக்காது’.

அர்ஜுனனுக்கே அப்படி என்றால், சாதாரண மனிதர்களைப் பற்றிக் கேட்பானேன்! விதியும், முயற்சியும் சேர்ந்து நன்றாக அமைந்தால்தான், காரியம் கைகூடும். அதற்காக முயற்சியே இல்லாமல் சோம்பேறியாக இருந்தால், விதியின் கருணை கூட வீண் ஆகிப் போகும்.
அதாவது, மனித முயற்சி நிச்சயமாக வேண்டும்; அது அவசியம். ஆனால் அது மட்டும் போதாது. விதியும் நமக்கு நன்றாக இருக்க வேண்டும். ஆக, சோம்பேறித்தனத்தை வளர்ப்பது அல்ல – விதி என்ற தத்துவம். முயற்சி செய்தும், பலன் இல்லாமல் போகும்போது – அதற்காகச் சோர்ந்து போய் விடாமல், நாம் தெளிவு பெறுவதற்கு, விதியைப் பற்றிய விளக்கம் உதவும்.

நன்றி...


07 October 2019

கடவுளே! எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை? எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம்?

மிகவும் பொறுமையாக படிக்கவும்.

கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு.

1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்?

2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன்
வாழ்கின்றார்கள்?

3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம் ஏற்படுகின்றது?

4. கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க வேண்டுமா?

போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே இப்பதிவு.

பதிவிற்குள் செல்வதற்குமுன் ஒரு கதையை பார்த்துவிடுவோம்.

சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக
இருந்தபோதிலும் அவனுக்கு வாய்ந்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.

வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை தியானத்திலும் பிராத்தனையிலும் செலவிட்டான். எந்த அளவிற்கு அவன்
பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த
அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டன.

அதே ஊரில் அவனுக்கு வித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான்.தனது இன்பத்திற்காக எந்த ஒரு
கொடுமையான செயலையும் குணமுடையவனாக அவனிருந்தான்.

அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில் சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள்.இருப்பினும் அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட இல்லை. அவனுக்கு சித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது என்பது வாடிக்கையான வேலை.இதன் காரணமாக ஒரு கட்டத்தில்
இருவரிடையே சண்டையே வந்துவிட்டது.

கோபத்தில் வெகுண்டெழுந்த சித்தன் இறைவன்மீது தனது பக்தி உண்மையாயிருந்தால் இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த
தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய் என்று சாபமிட தொடங்கினான். சிரித்துக் கொண்ட வித்தன் அப்படி நடக்கவில்லை என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும் என்ற சவாலுக்கு இழுத்தான்.

இதற்கு ஒப்புக்கொண்ட சித்தன் தீவிரமான பிராத்தனையில் ஈடுபட்டான்.
போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில்வித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்கு. அதிகமான பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடி கொன்று விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தான். வரும்வழியில் களைப்பு தாங்காமல் ஒரு மரதினடியில் ஓய்வெடுக்க உட்கார்ந்தான். உட்கார்ந்த இடத்தில் எதோ
உருத்துவதுபோல் இருந்ததனால் என்ன? என்று விலக்கி பார்த்தான். கணக்கிட முடியாத செல்வம் அங்கு புதைக்க பட்டிருந்ததை பார்த்து, அதையும் மூட்டையாக கட்டிக்கொண்டு இரட்டை சந்தேஷத்துடன்
வீடு திரும்பினான். இதற்கிடையே வயலில் வேலை செய்துகொண்டிருந்த சித்தனை மாடு முட்டி கடுமையான காயங்களுடன்
படுத்தபடுக்கை ஆக்கிவிட்டது விதி.

இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது அசிங்கம் என்று சித்தனின் மனைவிஅவனைவிட்டு நீங்கினாள். தனது நிலையை நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு நொடியும் அழுதே தீர்த்தான். தான் பட்ட அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை என்ற முடிவுக்கு வந்தான் சித்தன். உடல் ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்து
கொள்ள முடியவில்லை.எப்படியோ எழுந்து தன் விட்டிற்கு பின்னடியுள்ள கிணற்றில் குதித்தான். திடீரென்று தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்தான். ஆம் எந்த தெய்வத்தை அவன் பக்தியுடன்
வணங்கினானோ அதே தெய்வம் அவனை காப்பாற்றி காட்சியும் கொடுத்தது. உடலாலும் மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு வணங்க
தோனவில்லை, மாறாக சண்டை போட தொடங்கினான். தனது ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான்.

அனைத்தையும் பொருமையுடன் கேட்டுகொண்டிருந்த கடவுளோ அவனை தன்னோடு அனைத்து கொண்டார். அவனின்
அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான் சித்தன். இப்பொழுது கடவுள் பேச தொடங்கினார், சித்தா நீ இப்பிறவியில் நல்லவனாக பிறந்திருந்தாலும் முன்பிறவியில் வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய்.

நீ உன் மனைவியை மதித்தது கூட கிடையாது. மாறாக வித்தனோ முன்பிறவியில் நல்ல காரியங்களையே செய்து வந்தான்,அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல நன்மைகளும் கிடைத்தது. மாறாக உனக்கோ நீ செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது.
என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ அனுபவிக்க வேண்டிய கர்மத்தின்
பெருபாலனவையை நானே ஏற்றுகொண்டேன்,.மாறாக நீயோ அதில் சிறு பகுதியையே அனுபவிக்கின்றாய். ஆன்மீகத்தை தொடங்கும் ஒருவன் முதலில் அவனது பாவபதிவையே அனுபவிக்க தொடங்கின்றான், மாறாக அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன் செய்த புண்ணியங்களை அனுபவித்தபின் அவன் பாவபதிவுகள் செயல்பட தொடங்கும்.

வித்தனுக்கு கிடைத்த புதையலே அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும்.

அவன் செய்த அனைத்து புண்ணியங்களும் ஒட்டுமொத்தமாக செயல்பட்டு அவனுக்கு புதையலாக கிடைத்தது. இதுவரை நீ அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து பாவங்களும் கரைந்துவிட்டன. இனி நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து தெரிந்து கொள் என்று சில
அறிவுரைகளையும் கூறி மறைந்தார் கடவுள்.நாட்கள் செல்ல செல்ல சித்தனின் உடல்நிலை நலம் பெற தொடங்கியது. அவனது நெருங்கிய
உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது சொத்துக்கள் அனைத்தும் சித்தனுக்கு கிடைத்தது. நல்ல குணமுடைய மனைவியும்
சித்தனுக்கு அமைந்தாள். அதே சமயத்தில் வித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி படுத்தபடுக்கையாகி விட்டான். அவனது மனைவியும் திடீரென்று இறந்துவிட, அவன் கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன்
சொத்துக்கள் அனைத்தையும் பரித்துக்கொண்டு வெளியே துரத்திவிட்டனர்.

தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய சித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே தங்க செய்து உதவினான்.

ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை எனப்படுவது. அது நல்லதாக இருந்தால்
நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை.

ஆனால் இந்த வினைகளிலிருந்து தப்பிக்க.விதிவிலக்குகளும் உண்டு. அதுதான் "பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை
ஏற்படுத்தி விடுவது". இதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு உதாரணத்தை பார்த்துவிடுவோம்.

நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் மீது கல்லை எறிந்தீர்கள் என வைத்துக்கொள்வோம்.இது நீங்கள் செய்த செயல். அது அவர் காலில் பட்டு இரத்தம் வந்துவிடுகின்றது. இதை
வினை என்று எடுத்துக்கொள்வோம். அந்த
இடத்திலிருந்து நீங்கள் தப்பித்து ஓடிவிட்டீர்களானால் அந்த நிகழ்வுக்கான
எதிர்வினை செயல்படும்.எப்படியென்றால் நீங்கள் ஒரு தெரு வழியே செல்லும்போது உங்கள் கால் ஒரு கல்லில் மோதி இரத்தம் வர வேண்டும் என்ற ஒரு விதி செயல்படும்.

நீங்கள் அந்த வழியே செல்லும்போது இந்த
கர்மவினையிலிருந்து தப்பிக்க நினைத்தால்  அந்த கல்லில் உங்கள் கால் படாமல் செல்ல
வேண்டும். ஆனால் கர்மங்களிருந்து ஒருவன்
தப்பிக்க நினைக்கும்போது அதாவது அந்த கல்லை தாண்டி செல்ல முற்படும்போது ஒரு மாடோ அல்லது வண்டியோ உங்களை குறுக்கே வந்து தள்ளிவிடும். முடிவாக கால் பட வேண்டிய இடத்தில் தப்பிக்க
நினைத்ததனால் தடுக்கி விழுந்து அதே கல்லால் உங்கள் தலையில் அடிபட்டுவிடும்.ஆனால் அவருக்கு அடிப்பட்ட உடனே அதற்காக
வருந்தி அவரிடம் மன்னிப்போ அல்லது மருத்துவ உதவி செய்து விடுகின்றீர்கள் என வைத்து கொள்வோம். இங்கேயும் அதே கர்மவினைதான் செயல்படும்.

அதாவது நீங்கள் அந்த தெரு வழியே செல்லும்போது உங்கள்
கால் அந்த கல்லில் மோதி இரத்தம் வர வேண்டும் என்ற அதே விதிதான் செயல்படும்.ஆனால் அது செயல்படும் விதம்தான் வேறு.

எப்படியென்றால் நீங்கள் அதே தெருவழியாகதான் செல்வீர்கள், ஆனால் உங்களை அறியாமல் மாட்டு சாணியிலோ அல்லது சேற்றிலோ காலை வைத்துவிடுவீர்கள்.

இதனால் எந்த கல்லால் உங்கள் காலில் அடிபட வேண்டுமோ, அந்த கல்லில் உங்கள் காலில் உள்ள சேற்றை துடைப்பதற்காக
தேய்த்துவிட்டு சென்றுவிடுவீர்கள். அதாவது பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்திவிட்டு சென்றுவிடுவீர்கள். இதில் அந்த பொருளுக்கும் உங்களுக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

நீங்கள் செய்த செயலுக்கான விதிப்படி அந்த கல்லிற்கும் உங்கள் காலிற்கும் ஒரு தொடர்பு ஏற்பட வேண்டும். அதை நீங்கள் செய்வதால் அந்த கர்மவினை அங்கேயே முடிவுபெறுகின்றது. இதைதான் " தலைக்கு வந்தது
தலைப்பாகையோடு போனது " என்பர் பெரியோர்கள். அந்த பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டால் உங்கள் செயலுக்குரிய எதிர்வினையும் நடந்துமுடிந்து விடுகின்றது. உங்கள் செயலை கொண்டே வினையும், வினையை கொண்டே எதிர்வினையும், அந்தஎதிர்வினையை செயல்படுத்த அந்த பொருளும் நிர்ணயிக்க படுகின்றதே தவிர மற்றபடி
ஒன்றுமில்லை. இதைத்தான் " தீதும் நன்றும் பிறர் தர வாரா " என்றனர். எந்த செயலுக்கும் வினை ஏற்பட கூடாது என்றால் "நான்"
என்பதை விட்டுவிட வேண்டும்.ஆன்மீகத்தில் இதற்கு பெயர் பூரண சரணாகதி.

அந்த விதிவிலக்கு என்பது கூட இவர்களுக்குதான். தன்னை அறிய
முற்படுவதால் அவர்களுக்கு தரப்படும்சலுகைகள்தான் இது. ஏன் அவர்களுக்கு மட்டும்??

எந்த ஒரு வினைக்கும் நீங்கள் தான் காரணம் என்ற புரிதல் ஏற்படும்போது உங்களை சுற்றி நடக்கும் அனைத்தையும் ஏற்று கொள்வீர்கள்.

கடவுளே! எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை?

எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம்?

கெட்டவனெல்லாம் நல்லா இருக்கானே! என்ற எண்ணங்கள் மாறி உங்கள் தவறுக்கான வினைகள்தான் தற்போது நீங்கள்
அனுபவித்துவரும் கஷ்டங்கள் என்ற ஆழமான புரிதல் ஏற்படும். புரிதல் ஏற்படும்போது எதையும் ஏற்றுகொள்ளும் பக்குவம் வந்துவிடும். அப்படிப்பட்ட பக்குவத்தை நீங்கள் அடையும்போது, உங்களின் 95% கர்மங்களை உங்களுக்காக வேறு ஒருவர் அனுபவித்து விடுவார். காரணம்!!

நீங்கள் அவர்மீது கொண்டுள்ள அதிகப்படியான அசைக்கமுடியாத நம்பிக்கையே ஆகும். அந்த அவர் ஏற்கனவே பிறவிகடலை கடந்தவராக
இருப்பார்.
ஞானி ஒருவர் கூட்டம் நிறைந்த ஒரு தெரு வழியே சென்று கொண்டு இருந்தார்.திடீர் என்று அங்கே உள்ள சாக்கடையில் குதித்துவிட்டு பக்கத்தில் உள்ள தண்ணீர் குழாயில் காலை கழுவிவிட்டு
சென்றுவிட்டார். இதை பார்த்தவர்களுக்கு அவர்பைத்தியகாரன் என்று தோனலாம்.

ஆனால் அவரை பொறுத்தவரை பொருளுக்கும்
அவருக்கும் தொடர்பை ஏற்படுத்தி கொள்வது ஆகும். ஆனால் அவர் ஏற்படுத்திய தொடர்பு அவருடையது அல்ல!! அவரை நம்பி இருப்பவர்களின் கர்மவினைகளை தான் அவர் அச்செயலின் மூலம் தீர்த்து வைக்கின்றார்.

இது எப்படி சாத்தியம்?? என்ற கேள்வி வரலாம்!! அந்த ஞானியை பொறுத்தவரை அவர் செய்யும் எந்த செயலுக்கும் வினை என்ற ஒன்று ஏற்படுவது கிடையாது.காரணம்? அவர் உள்ளே வெறும் வெற்றிடம் தான் உள்ளது. அதாவது அவருக்கு மனம் என்ற
ஒன்று கிடையாது!! உள்ளே சூன்யமாக தான்
இருக்கும்!! அவரிடம் எந்த எண்ணங்களும் உதிப்பதும் கிடையாது!! மறைவதும் கிடையாது!! இதுவே " சும்மா இருப்பது "
என்று சொல்லப்படுகின்றது.

ஒருவன் அவர்மீது கொண்டுள்ள தீவிர பக்தியால் அந்த
வெற்றிடத்தில் இவனது எண்ணங்கள் சுற்றிகொண்டிருக்கும். இவனுக்கு அன்று சாக்கடையில் விழுந்து அடிபட வேண்டும்
என்ற விதி இருக்கும், ஆனால் இவன்  உண்மையாக இருப்பதால் இவனுக்கு பதிலாக அந்த ஞானி அந்த விதியை முடித்து
வைக்கின்றார். மேலும் அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவரின் எண்ண அலைகளும் அங்கே உள்ள வெற்றிடத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும். இவர்கள் தன் தவறை உணர்ந்து தனக்கு உண்மையாக நடக்க
தொடங்கும்போது அந்த ஞானி எதோ ஒரு செயலின் மூலம் இவர்களின் பாவபுண்ணிய கணக்குகளை அழித்துவிடுவார்.

முடிவில் இவர்களும் அந்த ஞானியின் நிலைக்கே வந்துவிடுகின்றனர்.
அதனால் தான் ஞானிகள் அருகில் இருக்கும்போது எதையும்
கேட்காதீர்கள் என்று கூறுவது. காரணம்!!

நீங்கள் கேட்டுதான் பெறவேண்டும் என்ற
அவசியமே அங்கு கிடையாது. மாறாக நீங்கள்
கேட்க நினைப்பது கூட சிறியதாக தான் இருக்கும். அவர் கொடுக்க நினைப்பதோ கணக்கில் அடங்காதவையாக இருக்கும். இதற்கு அவரிடம் பூரண சரணாகதி அடைந்தலே சிறந்தது ஆகும்.

இதில் பூரண சரணாகதி என்பது இனி அனைத்தும் உன் செயல் என பற்றுகளை துறப்பதுவே ஆகும்.

 "நான்" என்ற எண்ணத்திற்கு பதிலாக இனி எல்லாம் "நீ" என்ற
எண்ணத்தை கொண்டு வருவதே சரணாகதி.

அதற்குபிறகு உங்களுக்கென்று தனிப்பட்ட எந்தவொரு செயலும் இருக்காது, இருக்கவும்கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவன் செய்வதாகவே இருக்க வேண்டும்.

இறைவனை நோக்கிய உங்களது பிராத்தனை அல்லது வேண்டுதல் எந்த முறையில் இருக்க வேண்டும் என்பதை விளக்குவதே இப்பதிவு.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும்சூழ்நிலைக்கு தகுந்தவாறு தேவைகள் என்பது மாறிக்கொண்டே இருக்கும். அந்த
தேவைகளுக்கு தகுந்தவாறு வேண்டுதல்களும் மாறிக்கொண்டே இருக்கும்.

ஆனால் ஆன்மீகத்தில் ஓரளவு புரிதல் உள்ளவர்களை பொருத்தவரை, அவர்களுடைய வேண்டுதல் என்பது அவர்கள் வாழ்நாளில் "ஒரே ஒருமுறை" தான் இருக்குமே தவிர ஒவ்வொரு முறையும் இருக்காது.

ஏனென்றால் அவர்கள் முடிவான ஒன்றை முதலிலேயே வேண்டியும் விடுவர். அந்த வேண்டுதலில் அத்தனையும் அடங்கியும் விடும். இதை புரிந்துகொள்ள ஒரு சிறு கதையை பார்ப்போம்.

ஒரு ஏழை தாயின் மகனுக்கு படிப்பு அவ்வளவாக வரவில்லை. அவளுக்கு.தெரிந்ததெல்லாம் அவள் வழிபடும் தெய்வம்
மட்டும்தான். தன் மகன் பரிட்சையில் தேர்ச்சி பெற்று நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்பது அவள் கனவு.

 கடவுளிடமும் இதை குறித்து வேண்டுதல் வைக்கவே, மகனும் பரிட்சையில் தேர்ச்சி பெற்றான். ஆனால் இவனது வினை வேலை கிடைக்கவே இல்லை.

மறுபடியும் கவலை கொண்ட தாய் வேண்டவே மகனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது.சிறிது காலம்தான் சென்றது மகனுக்கு விபத்து
ஏற்பட்டு படுக்கையில் இருந்தான். அத்தாய்க்கு தெரிந்ததெல்லாம் அவனே என்பதால் மறுபடியும் ஒரு வேண்டுதல்!!

இதுவே அத்தாய் கடவுளே "எனக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் கொடு" என்று ஒரே ஒருமுறை மட்டும்
வேண்டியிருந்தால், அவள் வாழ்க்கை வசந்தமாகி இருக்கும்.

புரியும்படி கூற வேண்டுமென்றால் ஒருவனுடைய வேண்டுதல் என்பது நிரந்தரமான முடிவான ஒன்றாக இருக்கவேண்டும். அத்தாய் வேண்டியது எல்லாமே தற்காலிகமான தீர்வை தரக்கூடியது என்பதால்
ஒவ்வொரு முறையும் வேண்ட வேண்டிய அவசியம் இருந்தது. மேலும் எதிர்வரும் கர்மவினை இதுதான் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கூடவே எனக்கு இந்த தேவை நிறைவேறினால் நான்
நிம்மதியாக இருப்பேன் என்ற தவறான கணக்கை போட்டுக் கொண்டு தற்காலிக தீர்வை நாடுகின்றோம்.

உண்மையில் எந்த ஒன்றில் எல்லாம் அடங்குமோ!! அடக்கமோ!! அந்த ஒன்றை வேண்டுதலாக வைக்க வேண்டும். அப்படி.அந்த வேண்டுதல் நிறைவேறும் பொழுது
அவனுக்கு அனைத்தும் வசமாகி விடுகின்றது.

எனவே அவனது வேண்டுதல் என்பது ஒரே ஒருமுறையோடு முடிவடைந்து விடுகின்றது.இதில் உங்களை சுற்றி உள்ளவர்களும் பயன்
பெறுவர். எப்படியென்றால் உங்கள் அமைதியும் சந்தோஷமும் உங்களை சுற்றி உள்ளவர்களையும் சார்ந்தே உள்ளது.

உங்கள் தாய்க்கு உடம்பு சரியில்லை என்றாலோ,
உங்கள் மனைவி கோபபட்டலோ, உங்கள்முன்.ஒரு நாய் குட்டி கஷ்டப்பட்டாலோ, உங்களுக்கு பணக்கஷ்டம் ஏற்பட்டாலோ உங்களால் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க
முடியுமா?? முடியாதல்லவா!!

எனவே உங்கள்
அமைதி என்ற வேண்டுதல் நிறைவேற.உங்களை சார்ந்த மற்றும் உங்களை
சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை தரமும் நல்லவைகளாக மாற்றம் பெறகின்றன.

இப்பதிவு உங்களுக்கு தெளிவாக புரிந்தால்  இறைவனை நோக்கிய உங்களது
பிராத்தனையும் மாறுபடும் என்பது உண்மை ...


04 October 2019

அகோர வீரபத்திரர் அனுமந்தபுரம் கோவில் தரிசனம்...

தாம்பரம் TO செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள் கோவிலில் இருந்து அனுமந்தபுரம் ரோடு வழியாக சரியாக  10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அனுமந்தபுரம்.  இங்கே அகோர வீரபத்திர சுவாமிகள் எழுந்தருளி சேவை சாதிக்கிறார் .அகோர என்றால் கோபம் கோபமான தோற்றத்தில் மூலவர் வீற்றிருக்கிறார் .கோவில் நடை திறக்கும் நேரம் காலை எட்டு மணி முதல் நண்பகல் ஒரு மணி வரையிலும்,பின்பு நாலு மணி முதல் இரவு எட்டுமணி வரையிலும் நடை திறந்திருக்கும், அரசாங்கத்தால் நடத்தப்படும் அன்னதானம் இங்கு தினமும் வழங்கப்படுகிறது .இது இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கோவிலாகும்.
சிங்கபெருமாள் கோவில் to அனுமந்தபுரம் ரோடு 

 சிங்கபெருமாள் கோவில் to அனுமந்தபுரம் ரோடு ,   இந்த பசுமை நிறைந்த வழியை கடந்து போகும்போது வழியில் தென்மேல்பாக்கம் ,கொண்டமங்களம் மற்றும் தர்காஸ் ஆகிய சிற்றூர்களை கடந்து சென்றால் கடைசியாக நாம் அனுமந்தபுரம் சென்றடையலாம் .

அஷ்ட  வீரட்டங்களில் குறிப்பிடத் தக்கது தட்சனைத் தண்டித்தது. தட்சனின் மகளாகத் தோன்றி, தாட்சாயினி எனும் பெயரில் வளர்ந்துவந்த உமையவளின் வழிபாட்டை ஏற்று, அவளை மணம் முடித்தார் சிவனார்.



வழியில் நாம் காணும் வழிகாட்டி பலகை 
அதன் பொருட்டு அவர் மேல் கோபம் கொண்டிருந்த தட்சன், ஒருமுறை மாபெரும் யாகத்தை நடத்தினான். அதற்கு சிவனாரை விடுத்து மற்ற அனை வருக்கும் அழைப்புவிடுத்தான். சிவ பெருமானுக்குரிய அவிர்பாகத்தை கொடுக்க மறுத்து பெரும் தவறிழைத்தான்.

வீரபத்திர சுவாமிக்கு முன்பு நாம் காணும் ஐயனார் கிராமத்து கோவில்

கோவிலின் வெளிப்புற தோற்றம்


                                                  (குளக்கரை அரசமர விநாயகர் )


 தட்சனின் ஆணவத்தை அழிக்க எண்ணிய சிவப்பரம்பொருள், தன் அம்சமாக வீரபத்திரைத் தோற்றுவித்தார்.  பின்னர் சிவக்கட்டளையை ஏற்று தட்சனையும் அவனது யாகத்தையும் அழித்தார் வீரபத்திரர் என்கின்றன புராணங்கள். ஈசனிடமிருந்து தோன்றிய வீரபத்திரர், குலதெய்வமாக  மக்களால் வழிபடப்படுகிறார்.  பராசக்தியால் தோற்றுவிக்கப்பட்ட பத்ரகாளி வீரபத்திரருக்குத் தேவியாக இருந்து அருள்கிறாள். வீரபத்திரரும், பத்ரகாளி யும் தட்ச யாகத்தை சம்ஹாரம் செய்த நிகழ்ச்சி, புராணங்களிலும் இலக்கியங்களிலும் பெரிதும் போற்றப் படுகிறது. மகா ஸ்கந்தம், சிவமகா புராணம், பாகவதம், காசிகண்டம்  போன்ற நூல்களில் `தட்ச சம்ஹாரம்' பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.கோவிலின் வலதுபுறம் சற்று தொலைவில் அமைந்துள்ளது இந்த பத்ரகாளியம்மன் கோவில் அதனை கீழே உள்ள புகைப்படத்தில் நீங்கள் காணலாம்.


அருள்மிகு பிடாரி பத்ரகாளியம்மன் கோவில்









பிடாரி காளியம்மன் கோவிலின் முழுத்தோற்றம் 






பிடாரி காளி கோவிலின் அருகில் புதியதாக கட்டப்படும் திருக்குளம்


இக்கோவிலின் பின்புறத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மொண்டிமாரியம்மன் ஆலயம் .
மொண்டி மாரியம்மன் ஆலயம் 
மொண்டி மாரியம்மன் கோவிலின் முழு தோற்றம் 
































மூலவர் சன்னதி

கந்தபுராணம், தட்ச யாகப் பரணி, திருக்குற்றால புராணம், காஞ்சி புராணம், பறியலூர் புராணம் ஆகிய நூல்களில் வீரபத்திரரின் பெருமைகள் காணப்படுகின்றன. அங்காள பரமேஸ்வரி பெருமைகளைக் கூறும் கதைப்பாடல்களிலும் வீரபத்திரர் பற்றிய பெருமைகள் கூறப்படுகின்றன.


 வெற்றிலை இல்லாத சுபகாரியங்கள் இல்லை. பலவகை உள்நோய்களை அடியோடு தீர்க்கும் குணமுடையது வெற்றிலை. அதுபோல் வெற்றிலைத் தோட்டத்தில் தோன்றியவர், "அனுமந்தபுரம் ஸ்ரீ அகோர வீரபத்திரர்!" தீய சக்திகள்,  மனதை பாதிக்கும் பில்லி சூனியம் ஏவல் ஆகியவற்றை விரட்டும் சக்தி மிக்கவராக விளங்குகிறார். மனநலம் பாதிக்கப்பட்டோர், தீராத மனோ வியாதியால் பீடிக்கப்பட்டோர், மனக்குழப்பம், தெளிவின்மை,  மனசஞ்சலம், வேலை வாய்ப்பு, பதவி உயர்வு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுவேண்டி சில நாட்கள் இங்கு தங்கி குணம்பெற்று செல்கின்றனர்.சென்னையை சுற்றி உள்ள மக்களுக்கு இது ஒரு குல தெய்வமாகவும் விளங்குகிறது,பிரார்த்தனை நிறைவேறியவுடன் பொங்கல் வைத்து இத்தல வீரபத்திரரை வணங்கி வழிபடுகின்றனர்.
கோவிலின் பின்புற தோற்றம் 

கோவிலின் விசேஷ நாட்களின் விவரம் 

கோவிலின் எதிரே உள்ள திருக்குளம்

திருக்குளத்தின் முழுத்தோற்றம்






கோவிலின் அருகில் தனியாக அமைக்கப்பட்ட சிவன் கோவில் 




இங்கு மூலவருக்கு வெற்றிலை மாலை  காப்பு விசேடமான ஒன்று. ஆதலால் அர்சனையுடன் சேர்த்து  வெற்றிலை மாலையும் பக்தர்கள் வாங்கிச்செல்வது வழக்கம்.அமாவாசை .பௌர்ணமி ,சிவராத்திரி போன்ற நாட்களில் திருவிழாகோலம் பூண்டிருக்கும் அப்போது சிங்கபெருமாள்கோவிலில்  இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்,மற்ற நாட்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகிறது.