Subscribe

BREAKING NEWS
Showing posts with label அன்னதானம். Show all posts
Showing posts with label அன்னதானம். Show all posts

29 September 2019

முன்னோர்களின் பசிதீர்க்கும் திருவிழா!!!

முன்னோர்களின் பசிதீர்க்கும் திருவிழா நேற்றுடன்  முடிவடைந்தது  ,கடந்த 14/09/2019 முதல் இன்று 28/09/2019.வரை  நாம் நம் குழுவின் சார்பாக தொடர்ந்து அன்னதானங்கள் செய்துவந்தோம். என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்.ஒவ்வொரு நாளும் ஒருவர் அன்னதானத்திற்காக  பொருப்பேற்றுகொண்டார்கள்.நமது தமிழ்நாடு ஆன்மீக யாத்திக்குழு என்பது வெறும் யாத்திரைக்கானது மட்டுமல்ல நம்மால் முடிந்த பற்பல நற்காரியங்கள் செய்துவருகிறோம்.மேலும் செய்ய எத்தனிக்கின்றோம் .

இந்த மஹாளயபட்ச தினங்களாகிய பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் எம தர்மனிடம் விடைபெற்றுக்கொண்டு தங்கள்  குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர்.எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ தர்ப்பணம் அளிக்க வேண்டும் என்கிறார்கள். அவர்களும் அதன் மூலம் திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தாய், தந்தையர் இறந்த தினத்தில் சிரார்த்தம் செய்யாதவர்கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும்.

மஹாளய தினத்தில் நம் முன்னோர்களுக்கு பிடித்தமான சைவ உணவுகளை ஆக்கிப்படைத்து அவர்களை மகிழ்வித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவதாக அமைகின்றது. படைத்த உணவின் சிறு பகுதியை மிருகங்களுக்கும், பறவைகளுக்கும் உணவாக கொடுப்பதும், மிகுதியை, உற்றார், உறவினர்களுடன் பகிர்ந்து உண்பதும் மஹாளய அமாவாசையின் சிறப்பாகும். இந்த நாளில் நம் முன்னோர்களுக்கு கொடுக்கும் தர்ப்பணம் மூலம் நமது மூன்று தலைமுறைக்கும் ஆசியை பெற்றுத்தரும்.

நாம் செய்த பித்ரு கடன்களில் சிறு துளிகள் :-

அதிகாலையில் சுமார் 5.00 மணிக்கு  மறைமலை நகரிலிந்து சிங்கபெருமாள் கோவில் நோக்கி சென்றோம். அதிகாலைமுதலே சற்று கூட்டம் அதிகமாகவே இருந்தது.வரிசையில் நிற்கும்போது சுமார் 50 பேர் நமக்கு முன்னர் வரிசையில் நின்றிருந்தனர்.


சிங்கபெருமாள் கோவில் குளத்தில் பித்ருகடன் செய்ய நீண்ட வரிசையில் மக்கள் 

பித்ருகடன் செய்ய கூடியிருந்த மக்கள் அதிகாலை 5.00 மணி.


பின்பு நமது வாய்ப்பு வந்தவுடன் நமது முன்னோர்களின் பெயர்கள் உட்பட நமக்கு தெரிந்தவரையில் அனைவரின் பெயர்களை  சொல்லிமுடித்தவுடன்  சிரார்த்த கடன் செய்துவிட்ட திருப்தில், அங்கிருந்து புறப்பட்டோம். வழியில் கன்றுடன் கூடிய பசுவிற்கு அகத்திகீரை அளித்தோம்.


கன்றுடன் கூடிய பசுவிற்கு அகத்திகீரை கொடுக்கும்போது 


நேராக வீட்டிற்கு வந்தவுடன் வீட்டில் அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் இருக்க பூஜைக்கு தயாரானோம்.முன்னோர்கலின் பெயர்களை மனதில் நினைத்து ஆத்மார்த்தமாக பிராரத்தனை செய்யப்பட்டது.

நமது குழுவின் சார்பாக வழங்கப்பட்ட அன்னதான நிகழ்வின் துளிகள் :-









மஹாலய பட்சம் ஆரம்பித்த நாள் முதல் 28/09/2019 வரையில் நமது குழுனர் ஒவ்வொரு நாளும் ஒருவர்  அன்னதானம் பொருப்பேற்றுகொண்டார்கள். அவர்கள் இல்லாமல் இந்த மஹாலய பட்சம் எனும் முன்னோர்களின் பசிதீர்க்கும் திருவிழா  இவ்வளவு சிறப்பாக நடந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான் ...பங்கேற்ற அனைத்து நண்பர்கள்,குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகளை இத்தருனத்தில் தெரிவித்துகொள்கிறோம். நன்றி ..நன்றி . 

15 September 2019

மகாளய பட்சம் 2019 எளிய முறையில் தர்ப்பணம்!!

மாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். 
Image result for எளிய முறை தர்ப்பணம்


அறிவியல் ரீதியாக பூமி மற்றும் கிரகங்கள் சூரியனை சுற்றி வருகின்றன.
பூமி, சூரியனின் வட கிழக்கில் பங்குனி மாதமும், தென்மேற்கில் புரட்டாசி மாதமும் வருகிறது. இந்த வேளையில் இறைவழிபாடுகள் போற்றப்படுகின்றன. மாதந்தோறும் வரும் அமாவாசை அன்று காலமான மூதாதையர்களுக்குத் திதி கொடுத்தால் யாரை நினைத்துத் திதி கொடுக்கிறோமோ அவர்கள் மட்டும் வந்து திதியை பெற்றுக் கொள்வர். ஆனால், மகாளய அமாவாசை அன்று திதி கொடுத்தால் நம் மூதாதையர்கள் அனைவரும் ஒன்றாக வந்து திதியைப் பெற்றுக் கொண்டு வாழ்த்துவதாக ஐதீகம். இதனால் அன்றைய தினம் பித்ருக்களுக்கு திதி கொடுப்பது சிறப்பாகப் போற்றப்படுகிறது. பித்ருக்கள் இறந்த திதி தெரியாதவர்கள் கூட அன்று தர்ப்பணம் செய்யலாம். அன்று ஒரு வேளை உணவு உண்டு விரதம் கடைபிடிப்பது சிறப்பாகும்.

பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட கால அளவை குறிப்பதாகும். மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பெளர்ணமிக்கு பின்னர் வரும் 15 நாட்களை குறிப்பதாகும்.

இன்றைய தினம் (14.09.2019) மகாளய பட்சம் ஆரம்பமாகிறது. இதனைத் தொடர்ந்து வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படும். இந்தக் காலத்தில் முன்னோரை ஆராதிக்க வேண்டும். அவர்கள் நினைவாக தானம் அளிப்பது சிறந்த பலனைத் தரும்.

மகாளய பட்சம் இன்று 14 செப்டம்பர் 2019 முதல் 28 செப்டம்பர் 2019 வரை நடக்க உள்ளது. மகாளய பட்சம் காலத்தில் முன்னோர்களை வழிபடுவதன் மூலம் பல பலன்களை பெற முடியும். மகாளய பட்சம் 15 நாட்கள் செய்ய வேண்டியது, செய்யக் கூடாததைத் தெரிந்து கொள்வது அவசியம். இந்த பதினைந்து நாட்களும் முன்னோர்களின் நினைவாக சுபநிகழ்வுகளைத் தவிர்த்து அவர்களுக்குரிய சிரார்த்தம், தர்ப்பணம் ஆகியவற்றை செய்வதால் அவர்களது ஆன்மாக்கள் சாந்தி பெறும்.

நமது மூதாதையர்களான பித்ருக்கள் அவர்கள் நினைக்கிற போதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. பித்ருக்கள் பக்ஷமான ஆடி மாதத்தில் பித்ருக்கள் தங்களின் சந்ததிகளை ஆசீர்வதிக்க பூலோகத்திற்கு வருவதாகவும் பின் உத்திராயண புண்ய காலத்தில் தை அமாவாசையில் பித்ரு லோகம் செல்வதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. எனவே அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மகாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

மகாளய பட்சத்து அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிதமான பித்ருக்களின் ஆசி இருக்கிறது. நாம் அளிக்கும் நீரையும், எள்ளையும் தேடிக் கோடானுகோடி பித்ருக்கள் பூமிக்கு வருவார்கள். இதனால், வாழும் காலத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளான இவர்கள் ஆன்மா சாந்தியடைய அனைவரும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
மகாளய அமாவாசை நாளில் தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, கோ தானம், தானியங்கள், எள், எள் எண்ணெய், வெல்லம், பணம், வஸ்திரம், போர்வை, சால்வை, விளக்கு, கைத்தடி, குடை, விசிறி, செருப்பு ஆகியவற்றில் எது முடியுமோ அதனைத் தானம் அளிக்கலாம்.  தானம் பெறுபவர்களுக்குத் தாம்பூலமும், தட்சிணையும் கண்டிப்பாகத் தருதல் வேண்டும். தானம் பெறுபவர்களை மரியாதையாக நடத்துதல் மிகவும் முக்கியம்.

அதேபோல், வாய்ப்புள்ளவர்கள் இந்தியாவின் கயா, தனுஷ்கோடி போன்ற பிதுர் காரியத்துக்காகவே பிரசித்தி பெற்ற தலங்களில் அல்லது கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலுக்கருகில் உள்ள கரைகளில் திதியும், தானமும் தருவது சிறப்பு.

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் சேர்கின்றன. 
Image result for எளிய முறை தர்ப்பணம்
1ம் நாள் – 14.09.2019 - பிரதமை - செல்வம் சேரும் 
2ம் நாள் – 15.09.2019 - துவிதியை - பெயர் சொல்லும் குழந்தைகளைப் பெறலாம். 
3ம் நாள் – 16.09.2019 - திரிதியை - நினைத்த காரியங்கள் நிறைவேறும் 
4ம் நாள் – 17.09.2019 - சதுர்த்தி - பகையிலிருந்து எளிதில் விடுபடலாம். 
5ம் நாள் – 18.09.2019 - பஞ்சமி - அசையா சொத்துக்கள் மற்றும் செல்வம் பெருகும். 
6ம் நாள் – 19.09.2019 - சஷ்டி - பேரும், புகழும் தேடி வரும். 
7ம்நாள் – 20.09.2019 - சப்தமி - தகுதியான மற்றும் சிறந்த பதவிகள் கிடைக்கும்.
8ம் நாள் – 21.09.2019 - அஷ்டமி -அறிவு கூர்மை பெறும். 
9ம் நாள் – 22.09.2019 - நவமி - நல்ல வாழ்க்கைத்துணை மற்றும் நல்ல குடும்ப சூழல் அமையும். 
10ம் நாள் – 23.09.2019 -  தசமி - நீண்ட நாள் ஆசை உடனடியாக நிறைவேறும். 
11ம் நாள் – 24.09.2019  - ஏகாதசி - கல்வி, விளையாட்டு, கலைகளில் அசுர வளர்ச்சி கிடைக்கும். 
12ம் நாள் – 25.09.2019 -  துவாதசி - ஆபரணங்கள் சேரும். 
13ம் நாள் – 26.09.2019 - திரயோதசி - விவசாயம் மற்றும் தொழில் செழிக்கும். தீர்க்காயுள் கிடைக்கும். 
14ம் நாள் –  27.09.2019 - சதுர்த்தசி - பாவம் கழியும். வாரிசுகளுக்கும் நன்மையே நடக்கும். 
15ம் நாள் – 28.09.2019 - மகாளய அமாவாசை - அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும். 

இவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மகாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அனைத்து முன்னோர்களுக்கு மட்டுமல்லாமல், நண்பர்களுக்கும், முகம் தெரியாதவர்களுக்கும் கூட அன்று தர்ப்பணம் செய்யலாம் என்பது மகாளயத்தின் சிறப்பு.

தவற விடக்கூடாத திதிகள்
மகாளய பட்சத்தில் பரணி நட்சத்திரம் தோன்றும் நாள் மகா பரணி என்றழைக்கப்படுகிறது .இந்த பரணி நட்சத்திரம் யம தர்மராஜன் ஆட்சி செய்யும் நட்சத்திரம்.எனவே இந்த நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது.

புரட்டாசி 1 (18.09.2019) செவ்வாய்   - மகாபரணி  - அனைவருக்கும் பொதுவானது

புரட்டாசி 05 (22.09.2019) ஞாயிறு  - மகாவியதீபாதம்  - அனைவருக்கும் பொதுவானது

புரட்டாசி 05 (22.09.2019) ஞாயிறு  - மத்யாஷ்டமி  - அனைவருக்கும் பொதுவானது

புரட்டாசி 06 (23.09.2019) திங்கள்  - அவிதவாநவமி  - அனைவருக்கும் பொதுவானது

புரட்டாசி 09 (26.09.2019) வியாழன் -  சன்னியஸ்தமாளயம்  - சன்னியாசிகளுக்கு

புரட்டாசி 10 (27.09.2019)  வெள்ளி - சதுர்த்தசி  - கஜச்சட்சமயமாளயம்  - விதவைகள் அனுஷ்டிப்பதற்கு

இறந்துபோன நம் பெற்றோர்கள் மட்டுமல்லாது, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமன், மாமி, சகோதரன், சகோதரி, ஆசிரியர், சிஷ்யன், நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், நாம் அறிந்தவர்களில் இறந்துபோன எல்லோரையும் திரும்ப நினைவிற்குக்கொண்டுவந்து அவர்களுக்கும் எள்ளுடன் கலந்த தண்ணீரை வார்த்து தர்ப்பணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது அனைத்து ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான்.

எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான். ஒட்டுமொத்த முன்னோரையும் அப்போது நினைவு கூர வேண்டும். தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும்.  அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும்.

இந்த காலங்களில் இராமேஸ்வரம், திருவெண்காடு, கோடியக்கரை, வேதாரண்யம், திருப்பூவனம் காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானஷரோவர், சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம். திருக்கோவரணம் போன்ற இடங்களிலும் பவானி கூடுதுரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், தென்காசி அருகில் உள்ள பாபநாசம் சிவாலய தீர்த்தக்கரை, கும்பகோணம் அருகில் உள்ள செதலபதி ஆதி விநாயகர் ஆலயம், பூம்புகார் சங்கமுகேஸ்வரர் ஆலயம், உடுமலைதிருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் ஆலயம், மற்றும் ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் மற்றும் சிரார்தங்கள் செய்வது சிறப்பு.

எளிய முறை தர்ப்பணம்:
தலை வாழை இலையில், கறுப்பு எள், பொரி, கற்கண்டு போன்றவற்றை வைத்து கொள்ள வேண்டும். முன்னோர் சாபம் நீங்க, தமது முன்னோரின் பெயரை, 21 முறை வெள்ளை தாளில் எழுதி, மஞ்சள் தடவி சுருட்டி, நுாலால் கட்டி எடுத்து கொள்ள வேண்டும். இலையில் அனைத்தையும் வைத்து, கையில் பிடித்து, ஆற்றில், கிழக்கு திசையில் சூரியனை நோக்கி நிற்க வேண்டும். தலைக்கு மேல் துாக்கி, ஆகாயத்தை காட்டி பிரார்த்தனை செய்து, பின் நீரில் மூழ்கி, தண்ணீரை மூன்று முறை தலைக்கு பின்னால் தெளித்து, முழுவதுமாய் மூன்று முறை மூழ்கி வெளியில் வர வேண்டும். இந்த எளிய பரிகாரம், எப்பேர்பட்ட முன்னோரின் சாபத்தையும் நீக்கிவிடும்.






25 February 2019

பகரு ஞானி பகல் ஊண் பலத்துக்கு - மகேசுவர பூசை

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

நம் தளத்தின் மாத துவக்கம் அன்னசேவை போன்ற பதிவுகளால் தான் ஆரம்பம் ஆகும். யாராவது கவனித்தீர்களா? என்று தெரியவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக வேறு சில பதிவுகள் தரப்பட்டிருக்கும். இவை நாம் தீர்மானம் செய்யவில்லை. குருவருளால் தான் இவை தீர்மானம் செய்யப்படுகின்றன.கடந்த டிசம்பர் மாத பதிவாக அகத்தியர் ஜெயந்தி பற்றி அளிக்க நேரிட்டது. ஜனவரி மாதத்தை வாழ்த்து பதிவாக அளித்தோம். இனிமேல் மகேசுவர பூசை பதிவு வழக்கம் போல் தொடரும்.



சாதுக்களை அமர வைத்து, வாழை இலை போட்டு உணவு பதார்த்தங்கள் பரிமாறி, அவர்களுக்கு சந்தனம் இட்டு, தலையில் பூக்கள் சூடி, கையில் வாழைப்பழம்,வெற்றிலை,பாக்கோடு தட்சினை கொடுத்து, அவர்களின் கால் தொட்டு வணங்கி விட்டோம். அடுத்து இதோ சரவன்பவா சுவாமிகள் ஒவ்வொரு அடியாரையும் சிவனாக்கி தீபம் காட்டி வருகின்றார்.





அடுத்து சாதுக்கள் உண்ண ஆரம்பித்து விட்டார்கள். என்னப்பா சிவனடியார், சாதுக்கள் என்று நாம் புளகாங்கிதம் கொள்வதாக நினையாதீர். சிவனடியார் ஒவ்வொருவரும் நம் ஊழ்வினை கழிக்க வந்தவர்கள். அடியார் வேறு.சிவன் வேறு அல்லர். நம் தேகமே கர்ம வினைகளின் தொகுப்பு, வினைப்பதிவு தான் நமக்கு தேகத்தை தருகின்றது, இந்த சதைப் பிண்டத்தில் எத்துணை ஜென்ம கர்ம வாசனைகள்.


இவை அனைத்தும் ஒரு நொடியில் போய் விடுமா என்ன? கொஞ்சம் கொஞ்சமாக இது போன்ற தர்ம காரியங்களை செய்து செய்து, மனதை அறிந்து இனி எண்ணத்தால் கூட தீங்கிழைக்க மாட்டேன் என்ற நிலை வர வேண்டும்.



பார்க்க பரதேசி போன்று நீங்கள் சாதுக்களை எண்ணலாம். அந்த பரத்தை அல்லவா இவர்கள் தேடுகிறார்கள். பட்டினத்தாரை எடுத்துக் கொள்ளுங்கள். எத்துணையோ பொன்னை,பொருளை உதறி விட்டு அல்லவா ஒரே ஒரு துணி உடுத்தி வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது கணக்குப்பிள்ளை நம்மிடம் உள்ள பொன்னையும்,பொருளையும் என்ன செய்வது என்று கேட்டதற்கு போய் ..குப்பையில் தூக்கிப் போடு என்றார். அதே போல் இங்கே எத்துனை சாதுக்கள் தம் வீட்டை விட்டு,பொருள் பற்றை விட்டு வந்திருக்கின்றார்களோ?

அதனால் தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். சாதுக்களை கண்டால் மனத்தளவிலாவது வணங்குங்கள். அருகே சென்று அவர்களுக்கு என்ன தேவை என்று கேட்டு வாங்கிக்கொடுங்கள். குறைந்த பட்சம் நூறு  ரூபாய் செலவழிப்பதில் தவறொன்றும் இல்லை. கை, கால் நன்றாகத் தானே உள்ளது.ஏன் இப்படி என்று நினைக்காதீர்கள். இதோ.திருமந்திரம் சொல்கின்றது.


அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில் என்
பகரு ஞானி பகல் ஊண் பலத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயம் தானே

அந்தணர்க்கு ஆயிரமாயிரம் (கிராமங்கள்) செய்தாலும், ஆயிரமாயிரம் கோட்டை, கோயில்கள் கட்டி முடித்தாலும், ஞானிக்கு அளிக்கப்படும் ஊண் பலம் என்று சொல்லப்படும் அன்னதான தர்மத்திற்கு ஈடாக எந்த செய்கையும் நிச்சயமாக நிகரில்லை என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார் திருமூலர்.


அன்று மகேசுவர பூசை முடித்த பின்னர் மேலும் சிலர் வந்தார்கள்.அவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.


பின்னர் சுவாமிகளிடம் சொல்லிவிட்டு, கிரிவலம் தொடங்கினோம்.






ஒவ்வொருமுறை கிரிவலம் வரும் போது இங்கே நம் மனம் செல்லாமல் இருக்காது. புதிது புதிதாக கிரிவலப்பாதையில் கோயில்கள் முளைக்கின்றன. ஆனால் நம் நால்வர் பதித்த மண்ணில் உள்ள கோயில்களை கண்டும் காணாததும் போல் நாம் இருக்கின்றோம்.





வாயலிங்கம் தரிசனம் முடித்து கிரிவலம் தொடர்ந்தோம்.







அடுத்து குபேர லிங்கம்.




இதோ இடுக்கு பிள்ளையார் தரிசனம்.


அடுத்து பஞ்சமுக தரிசனம்.




                                                   ஈசான்ய லிங்கம் தரிசனம் பெற்றோம்.




அடுத்து மனம் அண்ணாமலையானே..அண்ணாமலையானே என்று குதூகலித்தது.



இதோ நெருங்கி விட்டோம்.




இதற்குத் தானே ஆசைப்பட்டோம் எம் சிவமே..என்று தொழுதோம்.






அடுத்து இந்திர லிங்கம்.


அடுத்து அக்னி லிங்கம்.




                                                              எம லிங்கத்தை நோக்கி.




                                      அடுத்து நிருதி லிங்கம் அடைந்து விட்டோம்.







நம் TUT தல அன்பு பரிசை தயவு ஆசிரமத்தில் கொடுத்தோம்.



அன்றைய தினம் சனி பிரதோஷம் என்பதால் நந்தி தரிசனம் பெற்றோம். மகேசுவர பூசையோடு கிரிவலம், பிரதோஷ தரிசனம் என்று சிவனருள் முழுதும் உணர்ந்தோம். ஆனால் நாம் இந்த மகேசுவர பூசை மட்டும் செய்ய நினைத்தோம். நம்மை நம் குருமார்கள் பிரதோஷ தரிசனமும், கிரிவலமும் செய்ய பணித்தார்கள் என்பதே உண்மை. இந்த ஆண்டு மீண்டும் ஒரு முறை நம் தளம் சார்பில் மகேசுவர பூசையுடன் , வஸ்திர தானம் செய்ய உள்ளோம். குருவிடம் விண்ணப்பம் வைக்கின்றோம்.

மீண்டும் ஒரு முறை 

பகரு ஞானி பகல் ஊண் பலத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயம் தானே

மேலும் விபரங்களுக்கு:

ஸ்ரீ சரவணபவா சுவாமிகள்,
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம், கிரிவல பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகில், திருவண்ணாமலை, செல்: (0)9944800220 (இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மகேஸ்வர பூஜை செய்ய பதிவு செய்து கொள்ளலாம்)


மீள்பதிவாக:-


அன்பே அகத்தியம் - மகேஸ்வர பூசை பதிவு - https://tut-temple.blogspot.com/2018/11/blog-post.html


உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_61.html

தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post.html

பல கோடி நன்மைகள் வழங்கும் அன்னதானம் & மகேஸ்வர பூசை - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_8.html

அன்னதானம் கொடுப்பது அனைத்தையுமே கொடுப்பதாம் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - ம(மா)கேஸ்வர பூசை - http://tut-temple.blogspot.in/2018/01/blog-post_24.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_18.html