Subscribe

BREAKING NEWS

22 April 2018

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு

அடியார் பெருமக்களே..

விளம்பி வருட தமிழ் புத்தாண்டில் முதல் ஆயில்ய பூசை செய்ய உள்ளோம். சித்திரை மாத ஆயில்ய பூசைக்கான பதிவே இது. மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா என்று நாம் கேட்டிருப்போம். இந்த ஞானப்பாடல் அருளியவர் யார் என்று தேடிய போது, ஞான வள்ளல் சித்தருக்கெல்லாம் தலைமை சித்தராய் விளங்கும் அகத்தியர் பெருமான் அருளிய பாடல் இது.இந்த பாடலின் விளக்கத்தை நாம் வாட்ஸ்ஆப் செயலியில் கண்டோம். இணையத்திலும் பதிவாக கிடைத்தது. அதனை அப்படியே இங்கே தருகின்றோம்.


மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - அகஸ்திய மகரிஷியின் ஞானப்பாடலின் விளக்கம்

அகஸ்திய மகரிஷியின் ஞானப்பாடல் கீழ்வருமாறு,

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே

பொதுவாக இந்தப் பாடலை வைத்துக்கொண்டு அகஸ்திய மகரிஷியே சொல்லிவிட்டார், மனம் செம்மையாக இருந்தால் மந்திரமும் ஜெபிக்கத்தேவையில்லை, பிரணாயாமம் செய்யத் தேவையில்லை என வாதிடுவோரும், பொருள் கொள்வோரும் உள்ளனர், ஏன் சில காலங்களுக்கு முன் நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன். அப்படியானால் எல்லா நூல்களிலும் ஏன் மந்திரங்களும் யோக சாதனைகளும் கூறி உள்ளார்கள்?

இந்தப்பாடலை அகஸ்திய மகரிஷியின்ஆசியுடன் அதனை வாசிக்கும் போது மனதில் கீழ்வருமாறு பொருள் தோன்றியது.

மனது செம்மையாக முதலில் மந்திரம் ஜெபி!அப்படி மனது செம்மையான பின்பு பின்பு மந்திரம் செபிக்க வேண்டாம்,அந்த நிலையில் அசபையான மந்திரம் தானாகவே ஜெபிக்கப்படும்.

அடுத்து மனது செம்மையாக அதன்பின் வாயுவை உயர்த்தும் பிராணாயாமத்தினை செய், இதன் மூலம் மனமது செம்மையானால் வாயுவை உயர்த்தும் பயிற்சியை நீ தொடர்ந்து செய்யத் தேவை இல்லை, தானாகவே மூச்சு கட்டுப்படும்.

அடுத்து மனது செம்மையாக்க வாசியாகிய பிராணனை ஆறாதாரங்களில் நிறுத்தப்பழகு, அதன்பின் நீ மனமது செம்மையாக‌ வாசியை உன் முயற்சியால் நிறுத்த வேண்டா, ஆதாரங்களில் தானாகவே வாசியாகிய பிராணன் நிலைப்படும்.

இவ்வளவற்றையும் நீ செய்து உனது மனம் செம்மையானால் உன்னிடமுள்ள மந்திரங்கள் எல்லாம் செம்மைதான். அதாவது சித்தி பெற்ற நீ சொல்லும் சொற்கள் எல்லாம் மந்திரமாக மாறும்.

ஆக இந்தப்பாடலிலேயே சித்த சாதனையின் படிமுறைகளையும், செய்முறைகளையும் பரிபாஷையாக சொல்லியுள்ளார் குருதேவர்!

எப்படியெனில் ஒரு தந்தை மகனிற்கு லௌகீக ஒழுக்கத்தினை, வாழ்க்கையில் முன்னேற போதிக்கும் போது கூறும் பாணி எப்படி இருக்கும்?

"மகனே உனது படிப்பை முடித்தபின்பு நீ படிப்பைப் பற்றி சிந்திக்க வேண்டியதில்லை, நீ கற்ற கல்வி உனக்கு நல்ல தொழிலைத் தேடித்தரும், தொழில் கிடைத்த பின்பு அதனை ஒழுங்காக செய்தால் பதவியுயர்வு தேடி வரும்,அப்போது நீ தொழிலைப்பற்றி சிந்திக்கத்தேவையில்லை,பதவி வந்தால் செல்வாக்கும், பணமும் தானாக வரும், அவை வந்தால் உலக‌இன்பம் தானாக வரும், அந்த நிலையில்

உலகவின்பம் உண்டெனில் கற்க வேண்டா
உலகவின்பம் உண்டெனில் தொழிலும் வேண்டா
உலகவின்பம் உண்டெனில் பதவியும் வேண்டா
உலகவின்பம் உண்டெனில் அனைத்தும் உண்டே"

ஏனெனில் நீ ஒழுங்காக கற்றாலே இவை அனைத்தும் உனக்கு ஒழுங்காக முறையாக கிடைக்கும்"
எனக்கூறுவது போல் சித்த வித்தை கற்கும் மாணவனிற்கு ஞானத்தந்தை அகஸ்தியர் கூறுகிறார்;

"மகனே ஞானம் பெற உன் மனம் செம்மையாக வேண்டும், அதற்கு நீ முதலில் மந்திரம் செபிக்கவேண்டும், பின் உனது மூச்சினால் பிராணனை கட்டுப்படுத்தும் சாதனையினை ஒழுங்காக செய்யவேண்டும், பிராணபலம் நன்கு பெற்றபின்பு வாசியினை சூஷ்ம உடலிலுள்ள ஆதாரங்களில் நிறுத்துவதற்கு பழகவேண்டும், இவற்றை எல்லாம் ஒழுங்காக செய்த நிலையில் உனது மனம் செம்மையான நிலையின் பின் ,

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாமே

ஏனெனில் அனைத்தும் உன் முயற்சியில்லாமலே தானாக நடக்கும் என்பதால்! என கூறியிருக்கிறார்.

இறுதியாக இந்த புரிதல் இலக்கணரீதியில் சரியா பிழையா எனத்தெரியவில்லை, ஆனால் அனுபவரீதியில் சரியானதே,

அகஸ்திய குருவைப்பணிந்து அவர் பாதத்தில் சமர்ப்பித்து இதனை பதிகிறோம். இந்த புரிதலால் பலன் இருப்பின் பயன் பெற்றுக்கொள்ளுங்கள்!

இதோ.விளம்பி வருடத்தின் முதல் ஆயில்ய பூசை. சித்திரை மாத ஆயில்ய பூசை.நாம் கனவிலும் சற்று எதிர்பார்க்கவில்லை. முதல் ஆயில்ய பூசையில் நம் தேடல் உள்ள தேனீக்களாய் தளத்திற்கு மிகப் பெரும் ஆசி கிடைக்க உள்ளது. நேரில் வந்து அருள் பெற்றுச் செல்லுங்கள்.

நாம் ஏற்கனவே பல முறை சொல்லி இருக்கின்றோம். தீப வழிபாடு என்பது பஞ்ச பூத வழிபாடு, தீபம் ஏற்றி வழிபட, வழிபட நம் பிரார்த்தனைகள் நிறைவேறும். தீப ஒளி என்பது ஆன்மாவின் ஒளி வடிவம். பஞ்ச பூதத்தில் நெருப்பின் சொரூபம். தீபம் ஏற்றுதல் என்பது தனக்குள் ஒளிரும் ஆத்ம ஜோதியை வெளியில் இறைவன் முன்னிலையில் ஏற்றி வைக்கும் வைபவம். அஞ்ஞான இருளைப் போக்கி ஞான ஜோதியை பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்கிற பிரார்த்தனையின் வெளிப்பாடு. இப்படி எல்லா கோணங்களிலும் ஒளி வழிபாடு என்பது கிட்டத்தட்ட தனி மனித ஆத்ம சாதனையாக இருந்து வருகிறது. வள்ளலார் இறைவனுடைய வடிவாகவே அருட்பெருஞ்ஜோதியை குறிப்பிடுகிறார். முதலில் ஜோதியை வழிபடுங்கள். பின்னர் உங்களுக்குள் இருக்கும் ஜோதி, அருளோடு தானாக ஒளிரும் அதுவே அருட்பெருஞ்ஜோதி என்கிறார்.

வேதாரண்யம் தலத்தில் அணைந்து போக இருந்த திரியை நிமிண்டி எரிய வைத்த எலிதான் பிற்காலத்தில் மகாபலி சக்ரவர்த்தியானது. ஈசனுக்கு ஏற்றிய விளக்குக்கு, நாராயணன் ஜீவன் முக்தியை எலிக்கு அளித்தார். காரி நாயனார், கணம்புல்ல நாயனார் போன்றோர்கள் விளக்கு எரித்து வீடுபேறு உற்றார்கள். ஆனால், இன்று பல கோயில்கள், விளக்குகூட ஏற்ற முடியாத வசதிக் குறைவுடன் விளங்குகின்றன.என்னப்பா? அகத்தியர் பற்றி பேசிக்கொண்டு இருந்து தீடிரென்று தீப வழிபாடு பற்றி பேசுகிறீர் ? என யோசிக்க வேண்டாம். இரண்டிற்கும் காரணம் உண்டு. நேரிடையான ஆயில்ய பூசையில் இது பற்றி உணர்த்தப்படும்.






இதற்கு முன்னால் நடைபெற்ற ஆயில்ய பூசையின் நிகழ்வின் காட்சிகளை இங்கே இணைத்துள்ளோம். வரும் சித்திரை மாத ஆயில்ய பூசை நமக்கு ஒரு வகையில் மிக மிக விசேஷமானது.



















































































இந்த காட்சிப்படத்தை இந்த பதிவில் நாம் இணைக்க இருக்கின்றோம் என்று நாம் நினைக்கவில்லை. இந்த ஆயில்ய பூசையில்  ஊரப்பாகத்தை சேர்ந்த அகத்திய அடியார் திரு.சரவணன் ஐயா அவர்களின் புதல்வர்கள் கலந்து கொண்டார்கள். சரவணன் ஐயா அவர்கள் பணி நிமித்தமாக எகிப்தில் இருந்தார்கள். அவருக்கு பூசையின் நேரலையாக அலைபேசி மூலம் கண்டார்கள். நாமும் அவரை சுமார் ஓராண்டுக்கும் முன்னர் பஞ்சேஷ்டியில் சந்தித்தோம். இதோ ஓராண்டுக்கு பின்னர், அவரது சந்திப்பை வருகின்ற அகத்தியர் ஆயில்ய பூசையில் காண உள்ளோம். இதனை உணர்த்தும் விதமாக அவர்களின் தவப்புதல்வர்கள் இங்கே காட்சியில் இணைத்தது, அகத்தியரின் அருளே ஆகும். எல்லாம் அவன் செயல் என்பது இங்கே உணர்த்தப்படுகின்றது.







சித்த அடியார்களே..கட்டாயம் வருகின்ற சித்திரை மாத ஆயில்ய பூசை - செவ்வாய்க்கிழமை - 24/4/2018 காலை 8 மணிக்கு கலந்து கொள்ளுங்கள். விளம்பி வருட முதல் பூசை இது. சென்ற ஆண்டு புரட்டாசி மாதத்தில் முதல் பூசை துவங்கினோம். அகத்தியரின் அருளாலே மாதந்தோறும் இந்த ஆயில்ய ஆராதனை மூலம் அருள் பெற்றுவருகின்றோம். இன்னும் பல நிகழ்வுகள் அகத்தியரின் அருளால் நடைபெற உள்ளது. அவரின் உத்தரவுக்காக காத்திருக்கின்றோம்.

பதிவின் ஆக்கத்தில் உதவி :- https://goo.gl/PV7QJN

முந்தைய பதிவுகளுக்கு :-

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html


அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html



No comments:

Post a Comment