Subscribe

BREAKING NEWS
Showing posts with label விநாயகர் சதுர்த்தி. Show all posts
Showing posts with label விநாயகர் சதுர்த்தி. Show all posts

02 September 2019

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! பல சுவாரஸ்யமான அரிய தகவல்கள்


நமக்கெல்லாம் தெரிந்த விநாயகரும் (வலம்புரி விநாயகர், இடம்புரி விநாயகர்) பற்றி  அரிய பதிவு:


நமது மூளை வலப்பகுதி,இடப்பகுதி என இரண்டு பிரிவுகளாக உள்ளது.  மூளையின் இடது, வலது பாகங்கள்தான் நம் உடலின் அத்தனை செய்கைகளுக்கும் காரணம். இடப்பக்க மூளை, உடலின் வலது பாகத்தையும், வலப்பக்க மூளை, உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்துகிறது என்கிறது விஞ்ஞானம். இதையே நம் சாஸ்திரம் பிங்கலை, இடங்கலை,நாடிகள் என வரையறுக்கிறது.

உடலின் செயல் வலது ,இடது என பிரிக்கப்பட்டு செயல்படுகிறது. உங்கள் வலது பக்க மூளை செயல்படும் பொழுது உங்கள் இடது நாசி துவாரத்தில் சுவாசம் வரும்.  அதே போல இடது பக்க மூளை இயங்கும் பொழுது வலது நாசியில் சுவாசம் வரும்.  இந்த நாடி சிந்தாந்தத்தை குறிக்கும் வகையில் தான் விநாயகரின் துதிக்கையை வலம்புரியாகவும் இடம்புரியாகவும் நமது முன்னோர்கள் அமைந்திருக்கின்றார்கள்.

தொன்மையான கோவிலில் விநாயகரை வணங்கும் பொழுது உங்களின் நாசியில் வரும் சுவாசத்தை கவனியுங்கள்.  விநாயகரின் துதிக்கை எந்த பக்கத்தில் இருக்கிறதோ அந்த பக்கம் உங்களின் நாசியில் சுவாசம் வரும்.  வலம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் வலது நாசியிலும், இடம்புரி விநாயகராக இருந்தால் உங்கள் இடது நாசியிலும் சுவாசம் வருவதை காணலாம்.  வெளியே இருக்கும் நான் தான் உன் உள்ளேயும் இருக்கிறேன் என பிள்ளையார் கூறும் விஷயம் இது.

என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? விநாயகர் உருவத்தின் இந்த அரிய இரகசியத்தை முயற்சி செய்து பார்த்து உணர்ந்து கொள்ளவும்.
வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சூரிய கலை என்றும்; இடது நாசியின் வழியாக உள்ளே செல்லும் காற்றிற்கு சந்திர கலை என்றும் நமது முன்னோர்கள் பெயர் சூட்டியுள்ளனர். இந்த இரண்டு சுவாசங்களுக்கும் தனித்தனிப் பண்புகளும் வெவ்வேறு வகையான செயல்பாடுகளும் உள்ளன. 

வலது நாசியில் செல்லும் மூச்சுக்கும், இடது நாசியில் செல்லும் மூச்சுக்கும் வித்தியாசம் இருக்க முடியுமா என் றால் , ஆம் - இரண்டு நாசிகளிலும் செல்லும் மூச்சுக் காற்றுக்கு தனித்தனித் தன்மைகளும், செயல்பாடுகளும் உள்ளன.  நாம் நமது இரண்டு நாசித் துவாரங்களின் வழியாகவும் ஒரே நேரத்தில் சுவாசிப்பதாக ஒரு தவறான கருத்து நம்மிடையே உள்ளது. உங்களது சுவாசத்தை உற்றுக் கவனித்துப் பாருங்கள். இதிலுள்ள உண்மை புரியும்.
ஒரு நேரத்தில் ஒரு நாசியின் வழியாகவே அதிகப்படியான காற்று உள்ளே செல்லும். (அடுத்த நாசியில் மிகச் சிறய அளவிலான காற்று உட்புகும்.) சற்று நேரத்திற்குப்பின் (இரண்டு மணி நேரத்திற்குப் பின்) அடுத்த நாசி வழியாக காற்று செல்லத் துவங்கும். இவ்வாறு ஒரு நாளில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை என மொத்தம் 12 முறை இந்த இடம் மாறுதல் நடைபெறும். எந்த நேரத்தில் எந்த நாசியில் காற்று செல்லும் என்பதையும் நம் முன்னோர்கள் கணித்து வைத்துள்ளனர்.
Image result for vinayagar gif

வலது நாசிக் காற்று (சூரிய கலை)
**************************************
·         உடலுக்குத் தேவையான வெப்ப சக்தியைத் தருகின்ற பிராணன் இதுவே.
·         வலது நாசியின் வழியாக சுவாசம் நடைபெறும் காலகட்டத்தில் உடலின் வெப்ப நிலை சற்றே உயரும்.
·         உடல் சுறுசுறுப்படையும்; சோர்வு அகலும்.
·         உடலின் வலிமை அதிகரிக்கும்.
·         மூளையும் உடலும் பரபரப்பாக இயங்கும்.
·         இந்த இரண்டு மணி நேரத்தில் நிதானம் குறைவாகவும், வேகம் அதிகமாகவும் இருக்கும்.

இடது நாசிக் காற்று (சந்திர கலை)

·         உடலைக் குளிர்விக்கும் தன்மை கொண்டது.
·         சந்திரனைப் போன்றே இந்த மூச்சுக் காற்றும் குளுமையானதாகும்.
·         இடது நாசி வழியே சுவாசம் நடைபெறும் வேளையில் உடலின் வெப்ப நிலை சற்றே குறைந்து, உடல் குளிர்ச்சியடையும்.
·         பரபரப்புத் தன்மை குறைந்து, மனதிலும் உடலிலும் ஒரு சாந்தத் தன்மை உருவாகும்.
·         மூளை அமைதியாக சிந்திக்கத் துவங்கும்.
·         அவசரத் தன்மை மறைந்து, நிதானமான மனநிலை நிலவும்.

வலம்புரி - இடம்புரி விநாயகர்களுக்கு உள்ள சிறப்பு

விநாயகர் தனது தும்பிக்கையை வலது, இடது என்ற இரு பக்கமாக வளைத்தவாறு அருள் புரிகின்றார். இதனால், வலபக்கம் தும்பிக்கை சுழித்துள்ள விநாயகர் ‘வலம்புரி விநாயகர்’ என்றும், இடப்பக்கம் தும்பிக்கை சுழித்துள்ள விநாயகர் ‘இடம்புரி விநாயகர்’ என்றும் அழைக்கின்றனர். இரு விநாயகரும் கேட்கும் வரம் தந்து வினைகளை தீர்ப்பவர் என்றாலும் இவ்விரு விநாயகர்களுக்கும் உள்ள சிறப்புகளை அறிவதும் அவசியமாகிறது.

‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தை குறிக்கும் வலம்புரி விநாயகர்
வலம்புரி விநாயகர் ஒரு சில குறிப்பிட்ட ஆலயங்களில் மட்டுமே வழிபட முடியும். வலம்புரி விநாயகருக்கு என்று ஓர் சிறப்பம்சம் உண்டு. இதில், தும்பிக்கையின் வளைவு ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் அமைப்பை ஒத்துள்ளது. வாய் பகுதியின் வலது ஓரம் ஆரம்பித்து கன்னம், மத்தாம் தொந்தி வழியாக சுழன்று தும்பிக்கை வளைந்து இருக்கும். 

இதுவே வலம்புரி விநாயகர் சிறப்பு. வலம்புரி விநாயகரின் சிறப்பிற்கு மேலும் ஓர் காரணமாய், இரு முறை விஷ்ணுவின் வலம்புரி சங்கை சிவபெருமான் எடுத்து சென்று விட்டார். பின் அவர் வந்து கேட்க என்னிடம் இல்லை. என் மகன் விநாயகன் வைத்திருக்கிறான் என்றார். பின் பல முறை அலைந்து திரிந்து விநாயகரிடம் தனது வலம்புரி சங்கை திரும்ப பெற்றார் விஷ்ணு.
 

இப்படி பல நாள் வலம்புரி சங்கை தனது தும்பிக்கையில் வலது பக்கம் வைத்திருந்ததாலும் விநாயகரை வலம்புரி விநாயகர் என்று அழைக்கின்றனர். விஷ்ணுவின் சங்கை வைத்திருந்த காரணத்தால் வலம்புரி விநாயகரை வணங்கிட சகல காரியங்களும் சித்தியாகும் என்பதாம். வளமை, வல்லமை, செல்வம் வழங்கும் விநாயகராக வலம்புரி விநாயகர் திகழ்கிறார்.

வலம்புரி விநாயகர் கோவில்களில் சில மிகவும் பழமையான வரலாற்று சிறப்பு மிக்கவையாக உள்ளன.
தமிழகத்தின் பழமையான பிள்ளையார் கோவிலான பிள்ளையார்பட்டி விநாயகர் வலம்புரி விநாயகர் தான். செவல்பட்டியிலும், செட்டிநாட்டு பகுதிகள் பலவற்றிலும் வலஞ்சுழி விநாயகர் ஆலயம் உள்ளன.

பிரான்மலை என்ற ஊரில் உள்ள சிறப்பு மிக்க குடைவரை கோட்டை கோயிலில், வலம்புரி விநாயகர் சங்க நிதி, பதும நிதி ஆகியோருடன் இணைந்து உள்ளார். மதுரை மீனாட்சியம்மன் கோவில் மற்றும் திருவலஞ்சுழியிலும் வலம்புரி விநாயகர்களை வழிபடலாம். வலம்புரி விநாயகரை வழிபட வேண்டிய வரங்களை பெறலாம்.

வினைகளை தீர்க்கும் இடம்புரி விநாயகர்

விநாயகரின் தும்பிக்கை இடது பக்கமாக சுழித்தபடி இருப்பின் இடம்புரி விநாயகர் எனப்படுவார். பொதுவாக சிற்ப சாஸ்திரத்தில் வினை தீர்க்க கூடியவர் என கூறப்படுகிறது. மேலும், இடர்களை தீர்ப்பவர் இடம்புரி விநாயகர் என பேச்சு வழக்கில் கூறுவர். அனைத்து ஆலயங்களிலும் இடம்புரி விநாயகரே அருள் புரிவார்.

மணக்குள விநாயகர் போன்ற சிறப்பு மிகு பல கோயில்களில் விநாயகர் இடம்புரி விநாயகராகவே காட்சி தருகிறார். இன்னல்களை தீர்க்கும் வகையில் எங்கும் நிறைந்துள்ளார். இது தவிர்த்து இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர் இருவரும் இணைந்து அருள்புரியும் கோயில்களும் உள்ளன. பேளூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் கல்யாண விநாயகர்கள் என்றவாறு இடம்புரி மற்றும் வலம்புரி விநாயகர் இருவரும் அருள் புரிகின்றனர்.

திருவலாங்காடு கோயிலில் வலம்புரி, இடம்புரி விநாயகர்கள் காட்சி தருகின்றனர். எந்த வடிவ விநாயகராயினும் நம்கை காத்து அருள் புரிவதில் எவ்வித பாகுபாடும் இன்றி அருள்மழை பொழிவர்.
 
 
விநாயகப்பெருமானின் கல் விக்ரஹத்திற்கு உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் இத்தகைய ஆற்றல் இருப்பதால் தான் அவரை முதலில் வணங்க வேண்டும் என்கிறார்கள்.
பிராணன் (சுவாசம்)இல்லாமல் நாம் ஏது? அத்தகைய பிராணனை சுத்தப்படுத்தவே அவரை அரசமரத்தடியில் அமரச்செய்து அவரை வழிபடுவதன் மூலம் அரசமரம் நாளொன்றுக்கு 1808 கிலோ கரியமில வாயுவை உள்வாங்கி 2400 கிலோ பிராண வாயுவை சுவாசித்தும், கருப்பை கோளாறுகளை போக்கியும் அரசமரக் காற்றினால் மூளையின் செயல்பாடுகளை தூண்டி, மன அமைதியை பெறுகின்றோம்.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் பிள்ளையாருக்கு பிறப்பில்லை.  அதனால் தான் நாம் விநாயகர் ஜெயந்தி என கொண்டாடுவதில்லை.  விநாயகர் சதுர்த்தி என கொண்டாடுகிறோம். ஆவணி மாத சுக்லபக்‌ஷ சதுர்த்தி திதி பிரணவ மந்திரத்தின் நாளாக , பிரணவ ரூபனின் நாளாக கொண்டாடுகிறோம்.

எனவே வாருங்கள்! விநாயகப்பெருமானின் கல் உருவத்திற்கும்  உங்கள் சுவாசம் சம்பந்தப்பட்ட சூரிய கலை மற்றும் சந்திர கலைகளை மேம்படுத்தும் ஆற்றல் இருப்பதால் அவரை வணங்கி ஞானத்தின் வழியில் சென்று ஞான சித்தி பெறுவோம்..

இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.



தமிழ்நாடு ஆன்மீக யாத்திரைக் குழு நண்பர்கள்,மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற்று விநாயகரின் அருளால் நீடூழி வாழ நம் குழுவின் சார்பாக வாழ்த்துகிறோம்... ஆதரவு தெரிவித்த மற்றும் இந்த மாதத்தில் குழுவின் வளர்ச்சிற்கு பொருளுதவி செய்த திருமதி,தாமைரை மற்றும் திருமதி,மாலதி அவர்களுக்கும் நம் குழுவின் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டு இன்நாளில் அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம் என உறுதிமேற்கொண்டு ..நம்மை வழிநடத்தும் பிரபஞ்சத்திற்க்கு நன்றிகூறி விநாயகரின் அருள் நம் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்க நாம் அனைவரும் நலமுடன் வாழ்வோமாக... நன்றி நன்றி நன்றி......

25 August 2017

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி,சித்தத்தின் உள்ளே சிவ லிங்கம் காட்டும் எங்கள் வினை தீர்க்கும் நாயகனை இந்த நன்னாளில் வணங்குகின்றோம்.அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.ஆனைமுகன் அருளால் ஏற்கனவே ஒரு பதிவு வெளியாகிவிட்டது.அந்த பதிவை நம் தளத்தின் - இன்றைய நாளின் சிறப்பு செய்தியாக சொல்ல விழைகின்றோம்.தவற விட்ட அன்பர்கள்,பதிவை படிக்கவும்.பதிவின் கடைசியில் மீண்டும் ஒருமுறை பதிவின் முகவரியைக் கொடுத்துளோம்.மேலும் நம் நண்பர்களின் வீட்டில் எழுந்தருளிய விநாயகரை இணைத்துள்ளோம்.








வினை தீர்க்கும் விநாயகப் பெருமானின் அருளைப் பெரும் நாள் இன்று.


விநாயகரைப் பற்றிய சில செய்திகளை இங்கே அறிவோம்.பக்தி மார்க்கத்தில் மட்டுமே நாம் பார்த்துப் பழகிவிட்டோம்.விநாயகர் ! வெற்றியின் நாயகன்.பெருமையைத் தர வல்லவர்.அவர் பக்தியை மட்டும் காட்டுபவர் அல்லர்.மாறாக யோகம்,ஞானம் என்றும் காட்ட வல்லவர்.இதை உணர நாம் ஒளவையார் அருளிய விநாயகர் அகவல் படித்து உணர வேண்டும்.



இறைவன் தூணிலும் இருப்பார்.துரும்பிலும் இருப்பார் அதைப் போன்று தான் விநாயகர்.ஆற்றோரத்திலும் இருப்பார், வீட்டின் சந்துக்குள் இருப்பார்.பிள்ளையார் கோவில்கள் எங்கும் இருக்கும்.மற்ற கோவில்கள் கட்டுவதற்கு உரிய இடம்,ஆகம விதி என்று பல இருக்கும்.இவர் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர். தோஷமற்ற ஒரே தெய்வம் பிள்ளையார் தான். எந்த தோஷத்தையும் போக்குபவர் இவர். அதாவது ஆகம விதிகளுக்குள் இவர் அடங்கமாட்டார்.

அதாவது குளக்கரையிலும், மரத்தடிகளிலும், முட்டுச் சந்திலும், எங்கு வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பிள்ளையாருக்கு கோவில் எழுப்பலாம். (சட்டத்தை மீறாமல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல்!)

அறுபடை வீடு என்றால் அது முருகனுக்கு தான் என்று நாம் நினைக்கின்றோம்.ஆனால் இவருக்கும் அறுபடை வீடு உண்டு.சரியான தகவல் திரட்டி இது பற்றி மேலும் காணலாம்.இப்போது விநாயகருக்கு அறுபடை வீடு உண்டு என்று தெரிந்து கொள்வதில் எந்த தவறும் இல்லையே.

முதல் படைவீடு – திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில்
இரண்டாம் படைவீடு – கடலூர் விருத்தாச்சலம் விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில்
மூன்றாம் படை வீடு – நாகப்பட்டினம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்
நான்காம் படைவீடு – மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்
ஐந்தாம் படைவீடு – காசி துண்டிவிநாயகர் திருக்கோயில்
ஆறாம் படைவீடு – கடலூர் திருநாரையூர் சித்தநாதேஸ்வரர் திருக்கோயில்

முதல்படை வீடு திருவண்ணாமலை

இங்குள்ள விநாயகரின் பெயர்  ”அல்லல் போம் விநாயகர்” இவரைக் குறித்துப் போற்றிப் பாடப்படும் பாடலே ”அல்லல் போம் வல்வினை போம் அன்னை வயிற்றில் பிறந்த தொல்லை போம்” என்பதாகும்.

இரண்டாம் படைவீடு விருத்தாச்சலம்

இங்குள்ள  அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு ”ஆழத்துப் பிள்ளையார்” என்று பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னிதி கொண்டுள்ளார்.

இறங்கிச் சென்று வழிபடப் படிக்கட்டுகள் உள்ளன. இவரைத் துதித்தால் செல்வம் கல்வி சீரான வாழ்வு அமையும்.

மூன்றாம் படைவீடு   திருக்கடவூர்/திருக்கடையூர்

அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாக இத்தலம் விளங்குகிறது. இங்குள்ள விநாயகருக்கு ” கள்ள வாரணப் பிள்ளையார்” என்று பெயர். நமக்கு நீண்ட ஆயுளை அள்ளி வழங்குபவராக விளங்குகிறார்.

அபிராமி பட்டர்  அபிராமி அந்தாதியின் காப்புச் செய்யுளில் குறிப்பிடும் விநாயகர் இந்தக் கள்ள வாரணப் பிள்ளையார்தான். ” தாமரைக் கொன்றையும் செண்பக மாலையும்” என்று தொடங்குகிறது அப்பாடல்.

நான்காவது படைவீடு  மதுரை

மீனாட்சி அம்மன் கோவிலில் மீனாட்சி அம்மையைத் தரிசிக்கச் செல்லும் வழியில் ” சித்தி விநாயகர்” என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது.

மாணிக்கவாசகர் பாண்டிய மன்னருக்காகக் குதிரை வாங்கப் புறப்படுகையில் இந்த சித்தி விநாயகரை தரிசித்து சென்றதாகத் திருவிளையாடல் புராணம் தெரிவிக்கிறது.

ஐந்தாவது படைவீடு  காசி மற்றும் பிள்ளையார்பட்டி

காசியில் ”துண்டி ராஜ கணபதி” யாகவும், பிள்ளையார்பட்டியில் ”கற்பக விநாயகர்” ஆகவும் இருந்து அருள்பாலிக்கிறார்.

காசியில் இருக்கும் துண்டி ராஜ கணபதி, தீட்சா கணபதியாக இருந்து, ஞானத்தை வாரி வாரி வழங்குகிறார்  காசிக்கு போகமுடியாதவர்களுக்கு அதே பலனைப் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் அருளுகிறார்.

இவர் கையில் சிவலிங்கத்தைத் தாங்கியிருப்பது விசேஷமான அமைப்பு.

ஆறாம்படைவீடு திருநாரையூர்

இங்கு ”பொண்ணாப் பிள்ளையார்” என்ற பெயரில் அருள் பாலிக்கிறார். சிற்பியின் உளியால் போள்ளப்படாமல் சுயம்புவாகத் தோன்றியவர் என்பதால் இத்திரு நாமம்.

இத்திருத்தலத்தில்தான் தேவாரத் திருமுறைகள் கிடைக்கக் காரணமாக இருந்த நம்புயாண்டார் நம்பிகளும் அவதரித்தார். கணபதியை அவரது படை வீடுகளுக்கே சென்று தரிசித்து சிறப்பான பயன்களைப் பெறுவோமாக.

விநாயகரை நாம் முதலில் ஆசிரியராக எடுத்துக் கொள்ள வேண்டும்.நல்லாசிரியராக அவர் தரும் பாடத்தை,நாம் சொல்வதை விட,நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.



விநாயகர் பற்றி சொல்ல இந்த ஒரு பதிவு போதாது.அவரது அருள்காட்சிகளும் காண இந்த பதிவு பத்தாது.விநாயகர் பற்றிய அறிய வேண்டிய 100 அரிய தகவல்களும், அவர் எளிமை பேசும் ஒரு கதையையும் இனி கண்டு உணர்வோம்.

 விநாயகர் பற்றிய 100 அரிய தகவல்கள்

எந்த காரியத்தை தொடங்குவதற்கு முன்னும் விநாயகர் வழிபாடு சிறந்த பலனை தரும. விநாயகர் பற்றிய 100 அரிய குறிப்புகளை தெரிந்து கொள்ளலாம்.

விநாயகர் பற்றிய 100 அரிய தகவல்கள்
1. விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர்.

2. விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.

3. யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குச மும், விநாயகர் தன் கையில் பாசாங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார்.

4. அகில உலகங்களும் விநாயகருடைய மணி வயிற்றில் அடங்கிக் கிடப்ப என்ற குறிப்பை அவருடைய மத்தள வயிறு புலப்படுத்துகின்றது.

5. விநாயகர் இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி என்ற மும்மதங்களைப் பொழிகின்றார்.

6. கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்தியகை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, திதி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார்.

7. விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்றுப் பிள்ளையார் என்று பேர் பெற்றார்.

8. முருகர், அம்பிகை, ராமர், கிருஷ்ணர் முதலிய உருவங்கள் சிற்ப முறைப்படி செய்து வழிபட வேண்டி யவை. அவை சிற்ப லட்சணத்திற்கு மாறுபட்டிருந்தால் வழிபாடு செய்பவருக்கு நன்மை கிடைக்காது. ஆனால் பிள்ளையார் உருவம் அப்படி அல்ல. மஞ்சளை அரைத்து ஒரு சிறு குழந்தை கூட பிடித்து வைத்தால் போதும் பிள்ளையார் தயார். பிள்ளையார் அவ் வடிவில் எழுந் தருளி அருள்புரிவார்.

9. சந்தனம், களி மண், மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்க கூடிய பொருளில் விநாய கரை செய்து வழிபடுவார்கள்.

10. விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.



11. விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

12. விநாயக சதுர்த்தி அன்று நாம் பூஜை செய்யும் விநாயகர் சிலை மண்ணினால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். நம் கட்டை விரல் அளவைப் போல பன்னிரண்டு மடங்கு அளவில் இருக்க வேண்டும்.

13. புரட்டாசி மாத சதுர்த்தி வரை நம் இல்லத்துப் பூஜையில் இருக்க வேண்டும். இந்த 30 நாட்கள் தினந்தோறும் பூஜைகளை முறையாகச் செய்து வருவதுடன் நைவேத்தியங்களும் செய்ய வேண்டும். புரட்டாசி சதுர்த்திக்கு மறுநாள் பூஜை முடிந்து சிலையை நதியிலோ, குளத்திலோ, கடலிலோ அல்லது ஏதாவது நீர்நிலைகளிலோ சேர்த்து விட வேண்டும்.

14. பார்வதி தேவியே கடைப்பிடித்து வழிகாட்டிய விரதம் இது. இந்த சதுர்த்தி பூஜையைச் செய்து தான் பார்வதி தேவி ஈசுவரனைக் கணவராக அடைந்தார்.

15. ராஜா கர்த்தமன், நளன், சந்திராங்கதன், முருகன், மன்மதன் (உருவம்பெற்றான்), ஆதிசேஷன், தட்சன் மற்றும் பலர் விநாயக சதுர்த்தி விரதத்தைக் கடைப்பித்து உயர்ந்த நிலை அடைந்தனர்.

16. விநாயகர் பக்தர்களில் தலைசிறந்தவர் புருசுண்டி முனிவர். விநாயகரை நோக்கித் தவமிருந்து விநாயகரை நேரே தரிசனம் செய்தவர்.

17. தேவேந்திரனுடைய விமானம் சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனா லேயே மீண்டும் விண் ணில் பறக்க ஆரம்பித்தது.

18. கிருத வீர்யன் இந்த விரதத்தின் பலனால் உத்தமமான குழந்தைச் செல்வமடைந்தான்.

19. சூரசேனன் என்னும் மன்னன் விநாயகர் விரதத்தைத் தான் கடைப்பிடித்ததோடு தன் நாட்டு மக்கள் அனை வரும் இதைக் கடைப்பிடிக்கும்படி செய்து சகல செல்வங்களையும் பெற்றான்.

20. திண்டிவனம்-திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் 12 கி.மீ. மேற்கே அமைந்துள்ள கிராமம் தீவனூர். அந்த கிராமத்தில் உள்ள பொய்யாமொழிப் பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு முதல் குழந்தை ஆண் குழந்தையாகப் பிறக்கும் என்பது அங்குள்ளவர்களின் நம்பிக்கை.

21. சாணம், புற்றுமண், மஞ்சள், வெல்லம், எருக்கம் வேர், சந்தனம் ஆகியவற்றில் பிள்ளையார் உருவம் செய்து வழிபட்டால் அனைத்துவிதமான நலன்களும் பெற்று மோட்சம் அடைவர் என்று விநாயக புராணம் கூறுகின்றது.

22. தும்பைப்பூ, செம்பருத்தி மலர், சங்கு புஷ்பம், எருக்கம்பூ, மா விலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.

23. கிருதயுகத்தில் தேஜஸ்வி என்ற பெயரில் சிம்மவாகனத்திலும் த்ரேதா யுகத்தில் மயில் வாகனத்திலும், துவாபர யுகத்தில் மூஞ்சூறு  வாகனத்திலும் கலியுகத்தில் எலி வாகனத்திலும் விநாயகர் தோன்றியுள்ளார்.

24. வாஞ்ச கல்ப கணபதி தியானம் மூலமந்திரத்தை சிரமப்பட்டு மனதில் ஏற்றிக் கொண்டு முறைப்படி ஜபித்து வந்தால் உங்கள் வாழ்வில் பொருள் சேர்க்கை, பெரியோர் நட்பு, செல்வ நிலை உயர்வு கிட்டுவது உறுதி. குரு உபதேசம் பெற்று படித்தால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

25. ஈஸ்வரனுக்கும் உமையம்மைக்கும் இடையே ஸ்கந்த வடிவம் இருப்பின் அந்த வடிவத்தை ‘’சோமாஸ்கந்த வடிவம்‘’ என்றும் இடையில் விநாயகர் வடிவம் இருந்தால் இது கஜமுக அனுக்ரஹ வடிவம் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

26. வட இந்தியாவில் விநாயகர் தன்னுடைய திருக்கரங்களில் முள்ளங்கியை வைத்து உண்கிறார். தென் இந்தியாவில் தன் கரங்களில் மோதகத்தை வைத்துக் கொண்டு ருசி பார்க்கிறார்.

27. திருஷ்டிகளை விரட்டுகிற விநாயகர் யந்திரத்தை செப்புத் தகட்டில் வரைந்து விநாயாக சதுர்த்தி அன்று பூஜை செய்து, பிரதி சதுர்த்தி அன்றும் வழிபட்டு வர கண் திருஷ்டி நெருங்காது, வீட்டு வாசலில் சட்டமிட்டு மாட்டலாம்.

28. கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை என்ப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00-க்குள் உச்சரிப்பது மிகவும் நல்லது என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.

29. விநாயகரை தேய்பிறை சதுர்த்திதோறும் வழிபடுவது சங்கடகர சதுர்த்தி என்று வழங்கப்படும். அதுவும் அந்நாளில் வன்னிமரத்தடியில் வழிபடுவது மிக நன்று.

30. பிள்ளையார் 15 பெண்களை திருமணம் செய்து கொண்டதாக புராணம் சொல்கிறது. வடக்கு இந்திய புராணங்களில் இக்குறிப்பு காணப்படுகிறது. அந்த 15 தர்மபத்தினிகள் சித்தி, புத்தி, வல்லமை, மோதை, பிரமோதை, சுமகை, சுந்தரி, மனோரனம், மங்கலை, கேசினி, சாந்தை, சாருகாசை, சுமத்திரை, நந்தினி, காமதை.




31. ஜப்பான் நாட்டில் வயது முதிர்ந்த ஆணும் பெண்ணும் ஆரத்தழுவிக் கொண்டிருப்பதை போல உருவம் கொண்ட விநாயகர் சிலைகள் ஆங்காங்கே காணப்படுகின்றன. இந்த இரு விநாயகர்களையும் வழிபட்டால் நீண்ட காலங்கள் வாழலாம் என்று நம்புகின்றனர்.

32. ஒவ்வொரு சதுர்த்தியன்றும் விநாயகர் கோவிலுக்கு சென்று எட்டுக் கொழுக்கட்டை செய்து தானமளித்தால் வறுமைகள் நீங்கி வளம் பெருகும்.

33. சாத்தூர் அருகே உள்ள போத்திரெட்டிபட்டி கிராமத்தில் உள்ள கட்ட விநாயகர் கோவி லில் தீப்பெட்டி செய்வோர் ஒவ் வொருவரும் தினம் ஒரு தீக்குச்சி வீதம் கொளுத்தி வழிபாடு செய் வார்கள். எரித்த குச்சியை வீட்டில் சேமித்து வைப்பார்கள். விபத்து நேராமல் இவ்விநாயகர் துணை செய்வார் என்பது நம்பிக்கை. நன்னிலத்திற்கு அருகேயுள்ள திருப்பனையூர் என்ற சிவதலத்தில் எழுந்தருளியுள்ள இந்தக் கணபதியை வழிபட்டால் நீங்கள் இறங்கும் பெருஞ் செயலில் உங்களுக்குத் துணையாக இந்தக் கணபதி விளங்குவார்.

34. முதன் முதலாக விநாயகருக்கு கொழுக் கட்டை படைத்து வழிபட்டவர் யார் என்று தெரியுமா? வசிஷ்டரின் மனைவியான அருந்ததி.

35. சுவாமிமலையில் கொங்கு நாட்டு பிறவிக் குருடனுக்கு கண்பார்வை வழங்கி அருள்புரிந்த கண் கொடுத்த விநாயகர் உள்ளார். கண்களில் ஏற்படும் நோய்கள் நீங்க இவரை வழிபடலாம்.

36. வன்னி மரத்தடியில் இருக்கும் விநாயகரை மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபாடு செய்து அன்றைய தினம் ஒன்பது கன்னிப் பெண்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் அளித்து வந்தால் மாங்கல்ய தோஷம் அகலும், திருமணத்தடையும் நீங்கும்.

37. நடனமிடும் தோற்றத்தில் உள்ள நர்த்தன விநாயகருக்கு அபிஷேகம் செய்வித்து இனிப்பு நைவேத்யம் வைத்து வழிபட்டு வந்தால் இழந்தவற்றைப் பெறலாம்.

38. அஸ்வினி அல்லது மூலம் நட்சத்திரத்தில் சிவசக்தி விநாயகர் உள்ள ஆலயத்துக்குச் சென்று அலங்காரம் செய்விப்பதுடன் வெள்ளை, நீலம், சிவப்பு மூன்று நிறங்களும் கலந்த வஸ்திரத்தை விநாயகருக்கு அணிவித்து மூன்று வித நைவேத்யங்களாக இனிப்பு, உறைப்பு மற்றும் மோதகத்தை அர்ப்பணித்து வழிபட்டு வந்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் வந்து சேரும்.

39. கேது திசை நடக்கையில் அதற்குரிய ஏழு ஆண்டுகளிலும் ஆன்மீக நாட்டம் அதிகரிக்குமாம். அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் துன்பங்களில் துவளாமல் இன்பமாக அதைக் கடக்கலாம். கேது ஒருவருடைய சுய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

40. குழந்தைப் பேறுக்குத் தயாராக இருப்பவர்கள் வல்லபை கணபதிக்கு நைவேத்தியங்கள் படைத்து நல்ல குழந்தையைத் தர வேண்டும் என்று வழிபட்டால் அதன்படி நடக்குமாம். சுவாமி மலையில் முருகன் சந்நிதானத்தில் வல்லபை கணபதியைக் காணலாம்.

41. திருவள்ளூர் மாவட்டம் திருப்பாச்சூரில் உள்ள சிவன் கோவிலில் ‘விநாயகர் சபை’ உள்ளது. இத்தகைய சபை தமிழ்நாட்டில் எந்த ஒரு ஆலயத்திலும் இல்லை.

42. நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கன்னடியன் கால்வாய் ஓரத்தில் மிளகு பிள்ளையார் உள்ளார். இவர் மீது மிளகை அரைத்து பூசி வழிபட்டால் மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுமாம்.

43. ஒன்றுக்கும் மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்றவர்கள் அவர்களுக்குள் சண்டைகள் வராமல் இருக்க விநாயகரை வேண்டிக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.

44. இலையினால் விநாயகரை அர்ச்சனை செய்தாலோ, அல்லது வன்னி விநாயகரை சுற்றி வந்து வழிபட்டாலோ தீவினைகள் விலகும் என்பது ஐதீகம்.

45. வில்வம், வேம்பு, அரசு, மந்தாரை, அத்தி, அரை நெல்லி, நாவல், வாகை ஆகிய ஒன்பது விருட்சகங்களுடன் விநாயகர் காட்சி தருவது அபூர்வம், பொதுவாக மேற்குரிய மரங்கள் எல்லாம் மருத்துவக்குணம் வாய்ந்தவை. புத்திரப் பேறுக்காக இம்மரங்களை சுற்றி வந்து வணங்குவது நல்லது.

46. பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஐம்பெரும் தெய்வங்களையும் ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வதற்கு கணபதி பஞ்சாயதனம் என்பர். இதில் விநாயகப்பெருமானை ஐந்து மூர்த்திகளில் நடுவில் வைத்து வழிபட வேண்டும்.

47. தேரெழுந்தூரில் உள்ள விநாயகர் திருஞான சம்பந்தருக்கு சிவாலயத்தின் வழி காட்டியதால் இப்பெயரோடு விளக்குகின்றார்.

48. வெள்ளை எருக்கம் வேரால் விநாயகரை பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் செய்து அவருடைய மூல மந்திரத்தால் வழிபட்டு வந்தால் சகல பலனும் கிடைக்கும் என்று ஸ்ரீ பவிஷ்ய புராணம் கூறுகிறது.

49. அடியார்களின் தரித்திரத்தை நீக்கி ஆயுளையும், செல்வத்தையும், உடற்சுகத்தையும் அருள்பவர் ரண மோட்சக்கணபதி ஆவார்.



50. ‘வி’ என்றால் இதற்கு மேல் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது.

51. கணபதி எனும் சொல்லில் ‘க’ என்பது ஞானத்தை குறிக்கிறது. ‘ண’ என்பது ஜீவர்களின் மோட்சத்தை குறிக்கிறது. ‘பதி’ என்னும் பதம் தலைவன் எனப்பொருள்படுகிறது.

52. விநாயகருக்கு விநாயகி, வைநாயகி, வின்கேஸ்வரி, கணேசினி, கணேஸ்வரி ஐங்கினி எனும் பெண்பால் சிறப்பு பெயர்களும் உண்டு. இந்து மதத்தில் மட்டுமல்ல, பௌத்த, சமண சமயத்தவர்களாலும் சிறப்பாக வழிபடும் சிறப்பும் இவருக்குண்டு.

53. விநாயகர் வழிபாடு இந்தியாவில் மட்டுமல்லாது இலங்கை, பர்மா, கயா, ஜாவா, பாலி, இந்தோனேசியா, சீனா, நேபாளம், திபெத், துருக்கி, மெக்சிகோ, பெரு, எகிப்து, கிரேக்கம், இத்தாலி என பல நாடுகளிலும் பல நூற்றாண்டுகளாக பரவி உள்ளது.

54. சென்னை அடையாறில் உள்ள மத்திய கைலாசம் என்னும் கோவிலில் ஆதியந்த பிரபு விநாயகர் அமர்ந்திருக்கிறார். இவருடைய சிறப்பு ஒரு பாதி கணபதியும், மறுபாதி மாருதியும் இணைந்த ஒரு புதுமையான அமைப்பாகும். இவருக்கு நாமே ஆரத்தி எடுக்கலாம். நம் கையாலேயே இந்த கடவுளுக்கு பூஜை செய்யலாம் என்பதும் சிறப்பு.

55. மும்பையில் கடந்த ஆண்டு சுமார் 2 லட்சம் ஆயிரம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த ஆண்டு சுமார் 20 லட்சம் விநாயகர் சிலைகள் வரை வைக்கப்பட்டுள்ளது.

56. தெருவுக்கு தெரு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதால் மும்பையில் பூசாரிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல இடங்களில் பெண்கள் பூசாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

57. விநாயகர் சதுர்த்தி விழா கண்காணிப்புக்காக மும்பையில் 4 ஆயிரம் இடங்களில் ரகசிய கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

58. விநாயகப் பெருமான் பெண் வடிவத்தில் சுசீந்திரத்தில் உள்ள தாணுமாலயப் பெருமாள் கோவிலில் காட்சி தருகிறார். இவருக்கு புடவைதான் அணிவிக்கப்படுகிறது. கணேசாயினி என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.

59. திருநாரையூரில் பொல்லாப் பிள்ளையார் உள்ளார். இவருக்கு பருத்த தொந்தியில்லை. இவர் ஒரு வலம்புரி விநாயகர். கல்லில் தோன்றிய சுயம்பு விநாயகர் ஆவார். சிற்பியின் உளியால் பொள்ளாத (செதுக்காத) பிள்ளையார் இவர். பொள்ளாத பிள்ளையார் பிற்காலத்தில் பொல்லாப் பிள்ளையார் என மாறி விட்டார்.

60. தும்பிக்கை இல்லாத பிள்ளையாரை நன்னிலம் பூந்தோட்டம் அருகே உள்ள இதலைப் பதியில் காணலாம். இங்கு இவர் வலது காலைத் தொங்க விட்டு இடது காலை மடித்து இடது கையை இடது கால் மீது வைத்து வலது கையைச் சற்றுச் சாய்த்து அபய கரமாக விளங்குகிறார்.

61. விநாயகப் பெருமான் வீணை வாசிக்கும் காட்சியை நாம் பவானியில் காணலாம்.

62. மும்பையில் உள்ள மோர்காம் மயூரேசுவரர் கோவிலில் நந்தி தேவரே விநாயகருக்கு வாகனமாக இருக்கிறார்.

63. விநாயகர் புல்லாங்குழல் வாசிக்கும் காட்சியை ஸ்ரீசைலத்தில் காணலாம்.

64. தேவகோட்டையில் உள்ள விநாயகர் காலில் சிலம்புடன் காட்சி தருகிறார். இவருக்கு சிலம்பணி விநாயகர் என்ற பெயர்.

65. கையில் பாம்பைப் பிடித்தபடி விநாயகப் பெருமான் சங்கரன் கோவிலில் காட்சி தருகிறார்.



66. ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயமுத்தூரில் புலியகுளம் பகுதியில் இருக்கிறார். முந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார்.
190 டன் எடையுள்ள இவர் ஒரே கல்லால் உருவானவர். உயரம் 19.10 அடி, நீளம் 11 அடி அகலம் 10 அடி, ஏணிப்படி மூலம்தான் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

67. வேலூரில் சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் எழுந்தருளியுள்ளார்கள். இவர்கள் தோன்றிய வடிவம் ஓம்கார வடிவத்தில் உள்ளது.

68. புதுவை அண்ணாசாலையில் புற்று மண்ணில் சுயம்புவாக தோன்றிய இந்த பிள்ளையார் பெயர் அக்கா சுவாமிகள் பிள்ளையார்.

69. திருப்பரங்குன்றம் குடவரைக் கோவிலில் விநாயகர் கையில் கரும்புடன் காட்சி தருகிறார்.

70. நரமுக விநாயகருக்கு திருக்கோவில் தமிழ்நாட்டில் இரண்டு இடங்களில் மட்டும்தான் இருக்கிறது. அவை சிதம்பரம் (தெற்கு வீதியிலும்) திருசெங்காட்டுக்குடியும் ஆகும். நரமுகம் என்பது மனித முகத்தைக் குறிக்கும்.

71. ஊத்துக்குளி அருகே உள்ள அமணேசுவரர் கோவிலில் உள்ள பிள்ளையார் தன்னுடைய வாகனமான பெருச்சாளி மீது நான்கு கைகளுடன் நடனமாடுகிறார்.

72. ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் ஒரே பீடத்தில் ஐந்து விநாயகர் சேர்ந்து காட்சி தருகிறார்கள்.

73. மயில் மீது விநாயகர் அமர்ந்திருக்கும் காட்சியை நாம் மகாராஷ்டிராவில் உள்ள மோர்காம் என்னும் ஊரில் காணலாம். இங்கு இவருடைய திருநாமம் மயூரேசர்.

74. யானை முகமும் புலிக்கால்களும் பெண்ணின் மார்பும் உடைய விநாயகர் வியாக்ரபாத விநாயகர் என அழைக்கப்படுவார். இவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத் தூணிலும், நாகர்கோவில் அழகம்மன் கோவிலில் உள்ள தூணிலும் காட்சி தருகிறார்.

75. தஞ்சாவூர் சக்கரபாணி கோவிலில் விநாயகர் சங்கு சக்கரத்துடன் காட்சி தருகிறார்.

76. கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரசுவாமி கோவிலில் ஜீரஹர விநாயகர் என்ற திருநாமத்துடன் கணபதி கையில் குடையுடனும் தும்பிக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி தருகிறார்.

77. விநாயகர் தும்பிக்கை ஆழ்வார் என்ற திருநாமத் துடன் பெருமாள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்.

78. கண் பார்வை கோளாறு உடையவர்கள், சுவாமி மலை முருகன் கோயிலில் உள்ள ‘நேத்ர கணபதி’ எனப்படும் கண்கொடுக்கும் கணபதியை வணங்குகிறார்கள்.

79. அரை அடி உயர விநாயகரை மருதமலை முருகன் கோயில் அடிவாரத்தில் தரிசிக்கலாம். இவர் சுயம்புவாகத் தோன்றியதால் ‘தான்தோன்றி விநாயகர்’ எனப்படுகிறார்.

80. சீனா, ஜப்பான், தாய்லாந்து, கம்போடியா, மியான்மர், மங்கோலியா, திபெத் ஆகிய நாடுகளிலுள்ள பௌத்த மக்களும் தங்கள் வணக்கத்தில் பிள்ளையாரையும் சேர்த்துக் கொண்டுள்ளனர். சீனாவில் காணப்படும் பல விநாயகர் சிலைகள் 1400 வருடங்கள் பழமை வாய்ந்தவை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.




81. திண்டிவனம் நெடுஞ்சாலையில் படாளம் கூட் ரோட்டில் அம்ருதயுரி என்ற ஊரில் 8 அடி உயரத்தில் பிரமாண்ட நவக்கிரக விநாயகர் உள்ளார். இவரை வழிபட்டால் அனைத்து கிரக தோஷங்களும் விலகும்.

82. ஈச்சனரி விநாயகருக்கு தினமும் நட்சத்திர அடிப்படையில் அலங்காரம் செய்யப்படுகிறது.

83. திருவாரூரில் ஆயிரம் ஆண்டு கள் பழமை வாய்ந்த சர்க்கரை பிள்ளையார் உள்ளார். திருமண தடை உள்ளவர்கள் இங்கு 108 தீபம் ஏற்றி வழிபடுவது பரிகாரமாக உள்ளது.

84. தஞ்சை மாவட்டம் திருப்பனந்தூரில் இருந்து சீர்காழி செல்லும் வழியில் பந்தநல்லூரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ள மரத்துறை கிராமத்தில் இரட்டை விநாயகர் உள்ளார். இந்த இரட்டை விநாயகரை வணங்கினால் விவசாயம் செழிக்கும் என்று விவசாயிகள் நம்புகிறார்கள்.

85. நமது மூலா தாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியை விழிப்படைய செய்யும் ஆற்றல் விநாயகர் வழிபாட்டுக்கு உண்டு.

86. பிள்ளையார் பட்டியில் உள்ள விநாயகர் தன் ஒரு கரத்தில் சிவ லிங்கத்தை ஏந்தி இருப்பதை சிறப்பானதாக சொல்கிறார்கள்.

87. திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில் மலையை தூரத்தில் கிழக்கு திசையில் இருந்து பார்த்தால் விநாயகர் சிலை போலவே தெரியும்.

88. விருத்தாசலம் பழமலைநாதர் கோவிலில் பூமிக்கு அடியில் உள்ள விநாயகர் சிலை 18 அடி ஆழத்தில் அமைந்துள்ளார்.

89. சேலம் மாவட்டம் ஆத்தூரில் தலையாட்டி விநாயகர் உள்ளார்.

90. ஆம்பூர் வேம்புலி அம்மன் ஆலயத்தில் உள்ள விநாயகருக்கு ஆண்டுதோறும் விநாயகர்சதுர்த்தி தினத்தன்று பிரமாண்ட லட்டு தயாரித்து படைப்பதை பக்தர்கள் வழக்கத்தில் வைத்துள்ளனர்.



91. நாகை மாவட்டம் நரிமணத்தில் உள்ள விநாயகரை தலையில் ஒரு குட்டு வைத்து விட்டே வழிபாடு செய்கிறார்கள்.

92. நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள இரட்டை விநாயகர்கள் இருவரும் எப்போதும் மாப்பிள்ளை கோலத்திலேயே அருள்பாலிக்கிறார்கள்.

93. திருவாரூர் ஆலயத்தூண் ஒன்றில் மூலதார கணபதி உள்ளார். இவரை வழிபட்டால் நமக்குள் இருக்கும் அரிய சக்திகள் வெளிப்படும் என்பது ஐதீகம்.

94. ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி தினத்தன்று 16 கன்னிப்பெண்களுக்கு ரவிக்கை துணி, வளையல், மஞ்சள், குங்குமம் கொடுத்து வன்னி மரத்தடி விநாயகரை வழிபட்டால் திருமண தடைகள் அகலும்.

95. நெல்லி மரத்தடியில் உள்ள விநாயகரை வழிபட்டால் பெண் குழந்தைகளிடம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

96. மற்ற கடவுள்களை விட விநாயகர் பலன்களை முந்தி வந்து தருபவர் ஆவார். எனவேதான் அவரை முந்தி முந்தி விநாயகர் என்கிறார்கள்.

97. திண்டுக்கல் கோபால சமுத்திரகுளக்கரையில் உள்ள 108 விநாயகர் கோவிலில் ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட 32 அடி உயர விநாயகர் சிலை நிறுவப்பட்டது.

98. ஓம் வக்ரதுண்டாய ஹீம் என்பது தான் சட்டாட்சர மந்திரம் இந்த மந்திரத்தை உச்சரித்து விநாயகரை வணங்கினால் பகை வரை எளிதாக வென்று விடலாம்.

99. ராஜராஜ சோழன் சிறந்த சிவ பக்தர். இருப்பினும் அவர் விநாயகரை வணங்கத் தவறியதில்லை. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலில் மேற்கு மூலையில் திருச்சுற்று மாளிகையில் உள்ள சின்ன ச்சின்ன கோவிலுக்குள் இருக்கும் விநாயகர் களை தான் அவர் வணங்கி வந்தார்.

100. புண்ணியத் தைத்தேடி காசி மாநக ருக்கு செல் பவர்கள் அங்குள்ள அனைத்து விதமாக ஆலய வழிபாட்டுச் சம்பிரதாயங்கள் சடங்குகளை முடித்துக்கொண்டு வரும் போது முடிவில் ஒரு சிறிய ஆலயத்தில் உள்ள டுண்டி ராஜகணபதியை வணங்கினால் தான் யாத்திரை முற்றுப் பெறுவதாக நம்புகின்றனர்.




வாசியே மூலம் வாரண ஞானம்....அங்குசம்  தன்னை அடக்கும் உபாயம்.  நெடும் நிதானமாக  மூச்சு.பூரண வாசி. ஒற்றை கொம்பு செறுக்கற்ற ஏக ஞானம். பெருங்காது கலை பல கற்றல். பெறுவயிறு எதையும் சீரணித்தல்.சிறுகண்கள் பார்வை மயக்கம் தீர்த்தல் என தினமொரு செய்தி சொல்லும் கணபதியை நாளும் போற்றுவோம்.



புராணக் கதைகள் தெய்வங்களை மையமாகக் கொண்டு நன்னெறிப் பண்புகளையும், ஆன்மிக தத்துவங்களையும் மக்களிடம் எளிதான முறையில் எடுத்துரைப்பதற்காக இயற்றப்பட்டவை ஆகும். அந்த வகையில் தடைகளை நீக்கும் தெய்வமான கணபதியைக் கொண்டு ஓர் அருமையான பண்பை நமக்கு எடுத்துக் கூறும் நன்னெறி கதை இது.

செல்வங்கள் அனைத்தும் அளவில்லாமல் பெற்றிருந்த குபேரனுக்குத் தன்னிடம் இருந்த செல்வங்களைப் பற்றி ஒரே பெருமை. இந்தப் பிரபஞ்சத்தில் தன்னைப் போல் செல்வச் செழிப்புள்ளவர்கள் யாரும் இல்லை என்ற கர்வம் தலை தூக்கியது. தன்னிடம் இருக்கும் செல்வங்கள் அனைத்தையும் இறைவன் சிவபெருமானை அழைத்து வந்து காட்டி, அதில் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும் என எண்ணினான் குபேரன்.



ஒருநாள் தன் எண்ணத்தைச் செயல்படுத்திட கைலாயத்துக்குச் சென்று சிவபெருமான், பார்வதி தேவி ஆகியோரை வணங்கினான். அவர்களைத் தன் இல்லத்திற்கு ஒரு முறை வந்து விருந்து சாப்பிட்டுச் செல்லும்படி அழைத்தான். குபேரனது உள் நோக்கத்தைப் புரிந்துகொண்ட சிவபெருமான், "என்னால் உடனடியாக அங்கு வர முடியாது; நீ வேண்டுமானால் என் மகன் கணபதியைத் தற்போது அழைத்துச் செல். அவனுக்கு விருந்தளித்துத் திருப்திபடுத்தி அனுப்பி வை. பின்னொரு நாளில் நானும் பார்வதியும் உன் இல்லத்திற்கு வந்து விருந்து சாப்பிடுகிறோம்" என்றார்.
குபேரனும் அதற்குச் சம்மதித்து சிவபெருமானிடம், “விநாயகருக்குத் தேவையான உணவளித்து அவரை மகிழ்ச்சிப்படுத்தி அனுப்புகிறேன்” என்று வாக்களித்து விநாயகரைத் தன் இல்லத்திற்கு அழைத்து வந்தான். விநாயகரைத் திருப்திப்படுத்தும்படியாகவும், குபேரனின் செல்வச் செழிப்பை அவர் அறிந்து கொள்ளும்படியாகவும் பல்வேறு வகையான உணவு வகைகள் ஆடம்பரமாகச் செய்யப்பட்டன.

விநாயகர் விருந்துண்ணுவதற்காக வந்து அமர்ந்தார். உணவு வகைகள் ஒவ்வொன்றாகப் பரிமாறப்பட்டன. விநாயகரும் பரிமாறப்பட்ட உணவு ஒவ்வொன்றையும் விரும்பிச் சாப்பிட்டுக் கொண்டே இருந்தார். குபேரன் அவர் சாப்பிடுவதை ஆச்சரியத்துடனும், அச்சத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தான்.



குபேரன் அச்சத்தின்படியே, அவன் வீட்டில் தயார் செய்யப்பட்ட உணவு அனைத்தும் காலியாகி விட்டது. குபேரன் தன் வீட்டிற்கு அருகில் இருந்த அனைத்துக் கிராமங்களிலுமிருந்து உணவை வரவழைத்துக் கொடுத்தான். இருப்பினும் விநாயகரின் பசி அடங்கவில்லை. பசி அடங்காத விநாயகர் குபேரன் வீட்டிலிருந்த விலை மதிப்புமிக்க பொருட்களையெல்லாம் விழுங்க தொடங்கினார். இப்படியே போனால் வீட்டில் ஒன்றுமே மிஞ்சாது என்ற நிலை குபேரனுக்கு உண்டாயிற்று. குபேரன் எவ்வளவு முயன்றும் விநாயகரைத் தடுக்க முடியவில்லை.




பதற்றமடைந்த குபேரன், "ஈஸ்வரா அபயம்! அபயம்!" என கைலாயத்திற்கு ஓடினான். சிவபெருமானிடம் தன்னைக் காப்பாற்றும்படி வேண்டினான். அப்போது சிவபெருமான் அவனிடம்,"குபேரா, உம்மிடமிருக்கும் தான் ஒருவனே மிகப்பெரும் செல்வந்தன் என்கிற கர்வத்தை விட்டுவிட்டு விநாயகனுக்கு ஒரு கைப்பிடி சாதம் கொடு, அவன் பசி அடங்கிவிடும்" என்றார். தன் தவற்றை உணர்ந்த குபேரன் தன் கர்வத்தை விட்டுவிட்டு ஒரு பிடி சாதத்தை விநாயகருக்கு அளித்தான். அதைச் சாப்பிட்ட விநாயகரின் பசி அடங்கியது. குபேரனின் கர்வமும் காணாமல் போனது.






இந்த கதையில் ஏராளமான தத்துவங்கள் அடங்கியுள்ளன.

1) நாம் எப்போதும் நம்மிடம் இருக்கும் பொருள் மற்றும் அறிவு ஆகிய இரண்டையும் கொண்டு கர்வம் கொள்ளக் கூடாது. அவற்றைக் கொண்டு மற்றவர்களுக்கு நன்மை விளைவிக்க வேண்டும்.

2) அதேபோல நம் செல்வ வளத்தை ஊரறிய செய்வதற்காக தெய்வங்களுக்கு பலவகை பதார்த்தங்களை படைத்தலை விட, உள்ளன்போடும் தூயபக்தியோடும் ஒருபிடி சாதம் படைத்தாலும் அதுவே நிறைவானது.


இத்தகைய புராண கதைகளின் பால் பற்றுதல் கொள்ளாமல், அதன் தத்துவங்களை உள்வாங்கி கொண்டு செயல்படுதலே சாலச் சிறப்பாகும். மலரின் எழில்கண்டு வண்டு மயங்கினாலும் அது மலரிலுள்ள தேனைத் தான் பருகும். அதுபோல புராண கதைகளின் சுவாரசியத்தில் மயங்கினாலும் அதன் ஆழ்ந்த தத்துவங்களை உணர்வதே மிக முக்கியம்.


திரு.அரவிந்த் ஜனார்த்தனன் வீட்டில் எழுந்தருளும் விநாயகர்


திருமதி.பரிமளம் அவர்களின் இல்லத்திலிருந்து 



திருமதி.பரிமளம் அவர்களின்  தெருவில் வைத்து இருக்கும் விநாயகர்.





                                                              இது..என் வீட்டில் இருந்து....

               
                       திரு.சந்திரசேகரன் வீட்டின் விநாயகர் அருள்.நன்றி திரு.சந்திரசேகரன்

இதோ.மும்பையில் இருந்து விநாயகர் தரிசனம்,பட்சணம் வகைகள்.





இதோ நம் நண்பர் திரு.கணபதி சுப்ரமணியன்  அனுப்பி வைத்த விநாயகர்.செம மாடர்ன் இல்லையா ?



நம் நண்பர் திரு.பாலாஜி கணேசன் வீட்டு நாயகன்




பெரம்பலூர் விநாயகர்.திரு.சதீஷ் குமார் வீட்டிலிருந்து 




பெரம்பலூர் விநாயகர் தரிசனம். நன்றி திரு.சதீஷ் குமார்


மதுரை ரயில்வே ஸ்டேஷன் வெளியே 


மதுரை விநாயகர் தரிசனம் 




மதுரை அருள்மிகு ஆலால சுந்தர விநாயகர் திருக்கோவில் தரிசனம்.




மேலே நீங்கள் காண்பது கூடுவாஞ்சேரியில் இருந்து விநாயகர் அருள்.


அருமையான முயற்சி.வீட்டிலிருந்த படியே அன்பர்களின் வீட்டு விநாயகரை அனைவரும் தரிசித்தோம். விநாயக தரிசனம் பெற உதவிய திரு.அரவிந்த் ஜனார்தனன் திரு.சந்திரசேகரன், திரு.கணபதி சுப்ரமணியன், திரு.பாலாஜி கணேசன்,திரு.சதீஷ்குமார் மற்றும் திருமதி.ரமா சங்கர், திருமதி.பரிமளம் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

சித்தர்கள் போற்றும் கணபதியை,வினை தீர்க்கும் நாயகனை கீழே உள்ள நிலையில் சில கோவில்களில் கண்டோம்.இதன் பொருள் உணர வேண்டுகின்றோம்.யாருக்காவது தெரிந்தால் பகிருங்கள்.



இனிவரும் பதிவுகளில் விநாயகர் அகவல் பாடுவோம்.

முந்தைய பதிவுகளுக்கு:-

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம்http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர்http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html