Subscribe

BREAKING NEWS

23 February 2020

ஊழ்வினை போக்குமா உழவாரப்பணி ?


இந்த பதிவில் சென்ற  16/02/2020,அன்று நடைபெற்ற நமது உழவாரப்பனியின் நிகழ்வுகளாகும்... சிவராத்ரியை முன்னிட்டு இந்த உழவாரப்பணி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .நேரம் காலை ஒன்பது மணி முதல் நண்பகல் ஒருமணி வரை,   அதனைப்பற்றி இந்த பதிவில் காண்போம் ,


பொதுவாக நமது கண்ணுக்கு எட்டாத கர்மவினைகள் பிடியில் சிக்கி உழலும்  கோடான கோடி மக்களின் விமோசனத்திற்காக இக்கலியுக நிகழ்வில் உழவாரப்  பணி  அருமருந்தாக அமைந்துள்ளது .மற்றும் ஜாதகத்தில் ஒருவருக்கு ஏற்ப்படுகின்ற கிரக தோஷங்களையும் முன்ஜென்ம கர்மவினைகளையும் நீக்கவல்லது இந்த உழவாரப்பனியாகும்.

​உழவாரப்பணி நிறுவிய அப்பர் திருநாவுக்கரசர் கிபி 7-ம்  நூற்றாண்டு  வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது

உழவாரப்பணி மூலம் மனித மனது செம்மை நிலைக்கு வரும். கல் மண் அப்புறப்படுத்தி ஆலயத்தை நாம் செம்மைப் படுத்துவது போல் நம் கர்ம வினை போன்றவற்றை நீக்கி இறைவன் நம் மனத்தை செம்மைப் படுத்துகிறான்.

இறைவன் நாம் பிரபஞ்சத்தில் வாழ நமக்கு வழி செய்து கொடுப்பது போல, ஆலயங்களை சுத்தப்படுத்தி நாம் இறை தொண்டு ஆற்ற வேண்டும்.

ஆன்மீகப்  பார்வையில் பார்க்கும் போது உழவாரப்பணி இறைவனுக்கு நாம் செய்யும் தொண்டு ஆகும். கர்மவினைகள் நீக்கி நம்மை செம்மை படுத்துகிறது.

அறிவபூர்வமாக சிந்தித்தால், கோவில் ஆனது பல ஆயிரம் மக்கள் வந்து போகும் ஒரு புண்ணிய வழிபாடு ஸ்தலம் ஆகும். இங்கு வரும் பக்தர்களுக்காக கோவிலை சுத்தப்படுத்தி மக்கள் தொண்டு ஆற்றுகின்றோம்.அதனால் நமது உடலும் மனதும் செம்மையாகிறது.

எவ்வாறு பார்த்தாலும் உழவாரப்பணி இக்கலியுகத்தில் இறை அருள் பெற சிறந்த ஒரு மார்க்கம் ஆகும்.






செங்கல்பட்டு மேட்டு தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் நமக்கு உழவாரப்பணி செய்ய வாய்ப்பு கிடைத்தது இந்த கோவிலில் தர்மகர்த்தாவாக உள்ள திரு கார்த்திக் என்பவர் இந்த வாய்ப்பினை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்கள் அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். 

நமது குழுவில் உழவாரப் பணியும் ஆலய தரிசனமும் அன்னதானமும் அடிக்கடி நடக்கக்கூடிய ஒரு நிகழ்வாகும். இந்த உழவாரப்பணி குறித்து நமது வாட்ஸ்அப் குரூப்பில் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டிருந்தது பெரும்பாலும் நமது உழவாரப்பணியில் மகளிர் அணியினர் தான் அதிகம் கலந்து கொள்வார்கள், ஆண்கள் மிக குறைவாகவே இருப்பார்கள் ஆனால் இந்த முறை நிலைமை தலைகீழாக மாறிப்போனது ஆண்கள் அதிகமாகவும், பெண்கள் மிகக் குறைவாகவும், கலந்துகொண்டார்கள். அவர்களுடைய சூழ்நிலை அவ்வாறு அமைந்துவிட்டது எதற்கும் காரணமின்றி காரியமில்லை... 


உழவாரப்பணி 9 மணிக்கு ஆரம்பிக்கும் நிலையில் நம் குழுவில் முக்கிய உறுப்பினராக இருக்கும் திருமதி,பரிமளம் அவர்கள் காலை 8 மணிக்கே கோவில் வளாகத்திற்குள் வந்து தன் பணியை ஆரம்பித்துவிட்டார்கள்.. அதன்பிறகு ஒவ்வொருவராக ஒன்பது மணிக்கு வந்து சேர்ந்தார்கள்.

இந்த முறை கர்ப்பகிரகத்தில் இருக்கும் பித்தளை பாத்திரங்கள் விளக்கு பிரபை செம்பு  பாத்திரங்களை சுத்தம் செய்ய கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக இருந்தது அதற்கு காரணம் இந்த ஆலயத்தில் தற்போது கட்டிடப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன அதனால் மூலவராக விளங்கும் அம்மனை ஆவாஹனம் செய்து தனியாக எடுத்து வைத்துள்ளார்கள் தற்போது உற்சவராக விளங்கக்கூடிய அம்மன்கள் மட்டுமே இருக்கின்றது.


 இக்கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று இந்த கோவிலை நிர்வகிக்கும் திரு கார்த்திக் அவர்கள் நம்மிடம் தெரிவித்தார்கள் அதன்படியே இக்கோவிலை பார்த்தால் கட்டிடங்கள் மிக பழமையான தாகவே தென்படுகின்றது கோவிலை சுற்றி அதிக மரங்கள் இருப்பதால் மிக அதிகப்படியான குப்பைகள் சேர்ந்துள்ளது இவற்றை நம் மகளிர் அணியினர் திருமதி பரிமலம் மற்றும் திருமதி, மாளதி அவர்கள் அனைத்தையும் பெருக்கி சுத்தம் செய்து கொடுத்தார்கள்.



 ஆண்கள் செடிகளை வெட்டுவது புற்களை களைவது சேர்த்துவைத்த குப்பைகளை ஒன்று கூட்டி தீ வைப்பது போன்ற வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள் இந்த முறை நமது குழுவில் புதியதாக இனைந்த சோழிங்கநல்லூரை சேர்ந்த திரு,செந்தில்நாதன் நம்முடன் இணைந்து  கடுமையான உடலுழைப்பை கொடுத்து உள்ளார்கள் அவர்களுக்கு நமது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம் .









நண்பர் வினோத் அவர்கள் புற்று கோவில் முழுவதும் ஒட்டடை அடித்து சுத்தம் செய்து கொடுத்தார்கள். திரு மனோகர் மற்றும் திரு ராஜ்குமார் அவர்கள் மண்வெட்டியால் புற்களை செதுக்கி அவற்றை ஒன்று கூட்டி ஒரு ஒதுக்குப்புறமான இடங்களில் எடுத்துக்கொண்டுபோய் சேர்த்து வைத்தார்கள்.. ஆட்கள்  இந்த முறைமிகக் குறைவு என்றாலும்  அனைத்து பணிகளும் சிறப்பாகவே  நடைபெற்றது. சரியாக ஒரு மணிக்கு கோவில் நிர்வாகத்திடம் இருந்து நமக்காக மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது அவற்றை முடித்துக் கொண்டு கைகால்களை சுத்தம் செய்துகொண்டு கடைசியாக கோவிலிலுள்ள உற்சவர் மூர்த்திகளாக இருக்கும் அம்மன் சிலைகளை நமக்கு தரிசனத்திற்காக திரு கார்த்திக் என்பவர் அழைத்துக்கொண்டு உள்ளே சென்றார்கள் அனைவருக்கும் மிகச்சிறப்பாக ஆரத்தி மற்றும் பிரசாத பொருட்கள் வழங்கப்பட்டன.  அதனை அனைவரும் பெற்றுக்கொண்டு  மிகச்சிறப்பாக உழவாரப்பணி  முடிந்ததை நினைத்து புறப்பட்டுச் சென்றோம்.பணியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.

பின்பு தனியாக எனது செல்போனில் அழைத்த திரு,கார்த்திக் அவர்கள் நமது பணி மிகசிறப்பாக இருந்ததாக தெரிவித்தார்கள்,ஏதும் நம்மிடம் இல்லை 
ஆள்வது ஆட்டுவிப்பதும் அவன் ஒருவனே.அடுத்தடுத்த உழவாரபனிக்கு கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் நமது whats app குழுவில்  இணையலாம்.லிங்க் வலது பக்கத்தில் உள்ளது. 

               


No comments:

Post a Comment