Subscribe

BREAKING NEWS

17 August 2019

மனமின்றி விடை தருகிறோம்... இனி 2059 வரை காத்திருப்போம்.. உன்னை காண..!





மனமின்றி விடை தருகிறோம்... இனி 2059 வரை காத்திருப்போம்.. உன்னை காண..!இன்றுடன் விடைபெறும் அத்திவரதர்...!!
காஞ்சிபுரம் மாவட்டம் கடந்த 48 நாட்களாக விழா கோலம் பூண்டது. எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதற்கு ஒரே ஒரு காரணம் அத்திவரதர்.








டிவி, மீடியா, வாட்ஸ்அப், டிவிட்டர் என உலக மக்களால் தினமும் பேசப்பட்டுவந்த ஒரு விஷயம் தான் அத்திவரத பெருமாள்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் நூற்றுக்கால் மண்டபத்தின் வடக்கே உள்ள குளத்தில் இரண்டு நீராழி மண்டபங்கள் உள்ளன. தென்திசையில் உள்ள மண்டபத்தின் கீழே நீருக்கு அடியில் ஒரு மண்டபம் உள்ளது. அதில் அனந்தசரஸ் என்ற திருக்குளத்திற்குள் அத்திவரதர் இருப்பார்.

அத்திவரதர் சிலையை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியே எடுத்து, பூஜைகள் செய்து, ஒரு மண்டல காலம் பக்தர்களின் தரிசனத்திற்காக வைப்பது வழக்கம்.

கடந்த 1979ஆம் ஆண்டு அத்திவரதர் சிலை பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டது. அதன்பின் இவ்வாண்டு (2019) கடந்த ஜூன் 30ஆம் தேதி வெளியே வந்தார்.


பூஜைகளுக்கு பின் ஜூலை 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை சயன கோலத்திலும், நின்ற கோலத்திலும் பக்தர்களுக்கு இருவேறு நிலைகளில் காட்சி தந்து அருளினார் அத்திவரதர்.

கடந்த 47 நாட்களாக அருள்பாலித்து வந்த அத்திவரதர் தரிசனம் நேற்று இரவுடன் நிறைவடைந்தது. இன்றுமுதல் அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் சயன கோலத்தில் ஓய்வெடுக்கப் போகிறார்.

அத்திவரதரை காண தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் தினசரி பல லட்சக்கணக்கான பக்தர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்தனர். இதனால் காஞ்சிபுரம் நகரமே திருவிழா போல் காட்சியளித்தது.

48 நாட்கள் அருள்பாலித்த அத்திவரதர் திருவிழா இன்றுடன் நிறைவடைகிறது. இன்று இரவு 10 மணியில் இருந்து 12 மணிக்குள் அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்படுகிறது. குளத்தில் உள்ள அத்திவரதர் மண்டபத்தின் கீழ் உள்ள அறையில் அத்திவரதர் சிலை வைக்கப்படும். அதன்பிறகு குளத்தில் வழக்கம்போல் நீர் நிரப்பப்படும். அனந்தசரஸ் குளத்தில் ஜலவாசம் செய்யும் அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு பிறகு 2059-ம் ஆண்டு மீண்டும் அருள்பாலிக்க வருவார்.

இதில் உள்ள அதிசயம், அத்திவரதர் வீற்றிருக்கும் அனந்தசரஸ் திருக்குளம் இதுவரை வற்றினதே இல்லையாம்.

2019

இன்றுடன் விடைபெறும் அத்திவரதர்...

அத்திவரதா...🙏 மனமின்றி விடை தருகிறோம்...

மீண்டும் உன்னை காண...

2059ஆம் ஆண்டு வரை காத்திருக்கிறோம்....!!

உமக்கு...!!

🙏ஆயிரம் கோடி நமஸ்காரங்கள்...🙏

No comments:

Post a Comment