Subscribe

BREAKING NEWS

29 August 2019

ஊழ்வினைப்போக்கும் உழவாரப்பணி


அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.

இந்தப்பதிவில் வருகின்ற 02/09/2019,அன்று நடைபெறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு பேருந்துநிலையம் பின்புறம்  சின்மயா நகரிலுள்ள ஸ்ரீ வரசித்தி வினாயகர் ஆலயத்தில் நமது உழவாரப்பணி  மிகச் சிறப்பாக நடைபெற்றது, அதனைப்பற்றி இந்த பதிவில் காண்போம் ,



நமது குழுவில் முக்கிய உறுப்பினராக உள்ள திருமதி, செல்வி அவர்கள் இந்த ஏற்பாட்டினை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து தந்தார்கள்,அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக முதலில் நன்றிகளை சமர்ப்பிக்கின்றோம்.



பொதுவாக நமது கண்ணுக்கு எட்டாத கர்மவினைகள் பிடியில் சிக்கி உழலும்  கோடான கோடி மக்களின் விமோசனத்திற்காக இக்கலியுக நிகழ்வில் உழவாரப்  பணி  அருமருந்தாக அமைந்துள்ளது .

​உழவாரப்பணி நிறுவிய அப்பர் திருநாவுக்கரசர் கிபி 7-ம்  நூற்றாண்டு  வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது

உழவாரப்பணி மூலம் மனித மனது செம்மை நிலைக்கு வரும். கல் மண் அப்புறப்படுத்தி ஆலயத்தை நாம் செம்மைப் படுத்துவது போல் நம் கர்ம வினை போன்றவற்றை நீக்கி இறைவன் நம் மனத்தை செம்மைப் படுத்துகிறான்.

இறைவன் நாம் பிரபஞ்சத்தில் வாழ நமக்கு வழி செய்து கொடுப்பது போல, ஆலயங்களை சுத்தப்படுத்தி நாம் இறை தொண்டு ஆற்ற வேண்டும்.

ஆன்மீகப்  பார்வையில் பார்க்கும் போது உழவாரப்பணி இறைவனுக்கு நாம் செய்யும் தொண்டு ஆகும். கர்மவினைகள் நீக்கி நம்மை செம்மை படுத்துகிறது.

அறிவபூர்வமாக சிந்தித்தால், கோவில் ஆனது பல ஆயிரம் மக்கள் வந்து போகும் ஒரு புண்ணிய வழிபாடு ஸ்தலம் ஆகும். இங்கு வரும் பக்தர்களுக்காக கோவிலை சுத்தப்படுத்தி மக்கள் தொண்டு ஆற்றுகின்றோம்.

எவ்வாறு பார்த்தாலும் உழவாரப்பணி இக்கலியுகத்தில் இறை அருள் பெற சிறந்த ஒரு மார்க்கம் ஆகும்.



உழவாரப்பனிக்கு நிர்வாகத்திடமிருந்து நமக்கு அளிக்கப்பட நேரம் காலை 7.௦௦ மணி முதல் நண்பகல் ஒருமணி வரை மட்டுமே.


அதற்குள் நாம் அனைத்துப் பணிகளையும் முடித்தாக வேண்டும். அன்று நடந்தது மிகவும் அசாதாரணமான ஒன்று அன்று. அதிகாலை முதலே பலத்த மழை! வேறு என்ன செய்வது என்றே நமக்குப் புரியவில்லை.  எங்கே யாரும் வராமல் போய்விடுவார்களோ என்ற கவலை ஒருபுறமிருக்க அனைத்திற்கும் நீதான் பொறுப்பு கணேசா என்று அவன் மீது பாரத்தை போட்டுவிட்டு கையில் ஒரு குடையும் எடுத்துக்கொண்டு விரைவாகப்புறப்பட்டோம் ,




நான் அங்கு  ஒருமணி நேரம் தாமதமாகச் சென்றேன். ஆனால்  அங்கே நடந்ததை  பார்த்தபோது அதிர்ந்துதான் போனேன், அதுதான் நீங்கள் மேலே பார்க்கும் காட்சிகள்.  அனைவரும் தங்களது பணியில் மிகவும் மும்முரமாக..... 



திருமதி.மாலதி , திருமதி.ரமாசங்கர், திருமதி,தாமரை அவர்கள் மூவரும் சுவாமியின் கருவறை பூஜை பொருட்களை மிகச்சிறப்பாக சுத்தம் செய்துகொண்டிருந்தனர் 




சற்று கோவிலின் பின்புறம் சென்று பார்த்தபோது அங்கு தம்பி குட்டி சந்திரன், திருமதி. பரிமளம், திருமதி.  செல்வி ,மூவரும் சேர்ந்து நவகிரஹ சன்னதியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். யார்யாருக்கு என்னென்ன பணிகள் என்று யாருமே நமது குழு  நண்பர்களுக்குச்  சொல்லவேண்டியதில்லை.  அனைத்துமே நம் பணியென செய்வதுதான் நமது குழுவின் பாக்கியம்(பொறுப்பும் கூட).












சுத்தம்செய்தபின்னர் 


சிந்தாதிரிப்பேட்டை சிஸ்டர்ஸ் என செல்லமாக அழைக்கப்படும்  சகோதரிகள் திருமதி .சரஸ்வதி மற்றும் புவனேஸ்வரி அவர்கள்  ஆலயத்தின் உள் மற்றும் வெளிப்பிரஹாரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர் .




தீபமேற்றும் மேடையை சுத்தம் செய்யும் திருமதி பரிமளம் அவர்கள் .
.

அனைத்து பிரஹாரங்களையும்  தண்ணீர்விட்டு அலம்பி சுத்தம் செய்யும் காட்சி .


நாம் எவ்வளவோ கோவில்களுக்கு சென்றிருப்போம்.  விக்ரகங்களை  கண்ணால் பார்த்து தரிசித்திருப்போம். ஆனால் இந்த உழவாரப்பணியில் மட்டுமே நம் கையினால் விக்ரஹங்களை தொட்டுப்பார்க்க முடியும் அப்படியொரு ஆனந்தத்தில் திருமதி பரிமளம் அவர்கள் .

இவை அனைத்தும் முடிக்கவும் மணி மதியம் ஒன்று ஆகிவிட்டது பசிக்கு நம் குழுவினர் தயாரித்து வைத்திருந்த உணவுகள் தயிர் சாதம் மற்றும் புளியோதரை உருளை சிப்ஸ் கேட்கவும் வேண்டுமா!நல்ல பசியின்போது அனைத்துமே அமிர்தமாகும். திருமதி மாலதி அவர்கள் அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து புளியோதரை சாதம் தயார் செய்துவிட்டார்கள் ,திருமதி பரிமளம் அவர்கள் அதேநேரத்தில் எழுந்து தயிர்சாதத்தை  தயார் செய்து இங்கே கொண்டுவந்துவிட்டார்கள்  நாம் யாரும் இதனை செய்துவாருங்கள் என்று யாருக்கும் சொல்லவில்லை ,இதுதான் கடமை என்பது இப்படிப்பட்ட நல்லுள்ளம் கொண்ட நண்பர்கள் நமது குழுவில் வாய்த்தது நமது பாக்கியம் எனலாம்..


இந்த உழவாரப்பணியை  மிகச்சிறப்பாக முடித்துக் கொடுத்த ஸ்ரீ வரசித்தி விநாயகருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டு நம் குழுவினரோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு உழவாரப்பனியில் பங்குபெற்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டோம் .


என்ன வாசகர்களே!  இதுபோன்ற உழவாரப்பணிகளில் நீங்களும் பங்கேற்கவேண்டுமா? நமது வலைப்பதிவினை தவறாமல் பார்த்துவாருங்கள்.  அடுத்துவரும் உழவாரப்பணிகள் தெரிவிக்கப்படும். கலந்துகொண்டு ஊழ்வினை பாவத்தை போக்குங்கள் இறை அருள் பெற்று மன நிம்மதியோடு வாழுங்கள்.

நன்றி.



No comments:

Post a Comment