Subscribe

BREAKING NEWS

23 December 2019

அற்புதங்களை நிகழ்த்தும் ஆழ்மனதின் சக்தி(ரகசியம் 7)...


ஆழ்மனம் இன்றியமையாத செயல்முறைகளை கட்டுப்படுத்துகிறது .
அது உங்களுடைய அனைத்து பிரச்சனைகளுக்கான விடைகளையும் கொடுக்கின்றது. என்பதை மறக்கவேண்டாம் .

 தினமும் உறங்கச் செல்வதற்கு முன் உங்கள் ஆழ் மனதில் ஏதோ ஒரு குறிப்பிட்ட வேண்டுகோளை வெளிப்படுத்துங்கள் . அது உங்களுடைய இலட்சியமாகஇருக்கலாம்,அல்லதுஆசை,வேண்டுகோள்,ஆரோக்கியம்,
நியாமனா கனவு போன்ற எதுவாகவும் இருக்கலாம் ,  அதன் வியத்தகு செயல்பாட்டின் சக்தியை உங்களுக்கு நீங்களே சோதித்துகொள்ளுங்கள்.
 நீங்கள் உங்கள்  ஆழ்மனதில் எவற்றையெல்லாம் பதிவு செய்கின்றீர்களோ அவையெல்லாம் புறவுலகில் சூழ்நிலைகள் ஆகவும் அனுபவங்களாகவும்  வெளிப்படும் என்பதை நீங்கள் மறக்கவேண்டாம் .எனவே உங்கள் வெளி மனத்தில் கொண்டாடப்படும் அனைத்து எண்ணங்கள் குறித்தும்கருத்துக்கள் குறித்தும் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
 காரணமும் விளைவும் என்னும் கோட்பாடு உலக கோட்பாடு ஆகும் காரணம் உங்களது எண்ணம் விளைவு உங்களது எண்ணத்திற்கு உங்கள் ஆழ்மனம் கொடுக்கும் இயல்பான செயல் விடை ஆகும். அதனால் உங்கள் எண்ணங்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
 நிறைவேறாத ஆசைகள் தான்  எல்லாவிதமான விதிகளுக்கும் காரணம். நீங்கள் தடைகள்தாமதங்கள்மற்றும் சிரமங்கள்ஆகியவற்றில் சிக்கி உழன்று கொண்டிருந்தால் உங்கள் ஆழ் மனம் அவற்றுக்கேற்றார்போல் செயல் விடை அளிக்கும். இதன் மூலம் உங்களை நோக்கி வரும் நல்லவற்றை நீங்களே தடுத்து விடுகிறீர்கள்.
 எனக்கு இந்த விருப்பத்தை கொடுத்த ஆழ்மனமே அதை இப்போது நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்று விழிப்புணர்வோடு தொடர்ந்து உறுதியாக கூறி வந்தால் வாழ்க்கைக் கோட்பாடு உங்கள் ஊடாக சீராகவும் இணக்கமாகவும் பாயும். இது அனைத்து முரண்பாடுகளையும் கரைத்துவிடும்.   கவலை,  மனக்கலக்கம் மற்றும் பயம் ஆகியவை உங்களது இதயம் நுரையீரல்கள் மற்றும் பிற உறுப்புகளின் இயல்பான செயல் பாட்டிற்கு இடையூறு விளைவிக்கும்.என்பதை மறக்கவேண்டாம்.
 உங்கள் ஆரோக்கியம் மற்றும் சமாதானம் குறித்த எண்ணங்களை உங்கள் மனதிற்குள் திரும்ப திரும்ப கொண்டுவாருங்கள் அது உங்களது உடலின் அனைத்து செயல்பாடுகளும் மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவரும்.
 உங்கள் மனத்தை சிறந்தவற்றில் எதிர்பார்ப்பதில் சுறுசுறுப்பாக இருக்கச் செய்யுங்கள் உங்கள் ஆழ்மனம் உங்கள் வழக்கமான சிந்தனைக்கு ஏற்றவாறு விசுவாசத்துடன் அவற்றை மீண்டும் உருவாக்கித்தரும்.
 உங்கள் பிரச்சினைக்கு சுமூகமான முடிவு மகிழ்வான தீர்வும் ஏற்படுவது போல் கற்பனை செய்யுங்கள் உங்கள் விருப்பம் நிறைவேறி விட்டால் கிடைக்கும் மகிழ்ச்சியை சதா நினைத்துகொடே இருங்கள் அந்த  கற்பனையும் உணர்வும் உங்கள் ஆழ் மனதால் ஏற்றுக் கொள்ளப்பட்டு உங்கள் அனுபவமாக மாறும். 

குணமாக்கும் சக்தி உங்கள் ஆழ்மனதில் உள்ளது என்பதை உங்களுக்கு நீங்களே பலமுறை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் விசுவாசம் என்பது நிலத்தின் ஊன்றப்பட்ட விதையை போன்றது ஒரு கருத்து என்னும் விதையை உங்கள் மனதில் விதையுங்கள் எதிர்பார்ப்புடன் அதற்கு நீரூற்றி உரம் இடுங்கள் அது செழித்து வளர்ந்து வெளிப்படும்.
 ஒரு புது கண்டுபிடிப்பு அல்லது சுகம் லட்சிய கணவு குறித்த உங்களது எண்ணம் உங்கள் மனதில் உண்மையான உருவமாக உள்ளது அதனால் அது உங்களிடம் இப்போதே இருக்கின்றது என்பதை நீங்கள் நம்ப தடைபடலாம் உங்கள் எண்ணம் திட்டம் அல்லது கண்டுபிடிப்பின் வெளிப்பாட்டில் நம்பிக்கை கொள்ளுங்கள் நீங்கள் அப்படி செய்தால் அது நிச்சயமாக புறவுலகில் வெளிப்படும்.
 மற்றவர்களுக்காக பிரார்த்திக்கும் போது முழு நம்பிக்கையுடன் நடக்கும் என்பதை குறித்த உங்களது அமைதியான உள்ளார்ந்த அறிவு அடுத்தவருடைய ஆழ்மனதில் உள்ள எதிர்மறையான எண்ண அமைப்புகளை மாற்றி அற்புதமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
 பல்வேறு புனித தலங்களில் ஏற்பட்டதாக நாம் கேள்விப்படும் அதிசய குணங்கள் அனைத்தும் ஆழ்மனத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தி அதன் குணமாக்கும் சக்தியை விடுவிக்கும் கற்பனைகளும் கண்மூடித்தனமான நம்பிக்கையாலும் தான் விளைகின்றது.பேயோட்டுதல் ,குறி சொல்லுதல் மற்றும்,பிரார்த்தனை போன்று.
 எல்லா வியாதிகளும் நம் மனதில் தான் உருவாகின்றன நம் மனதில் அதற்கான ஓர் எண்ண ஓட்டம் இல்லாமல் நம் உடலில் எதுவுமே ஏற்படுவதில்லை.
 தூண்டுதல் மூலம் எந்த ஒரு வியாதிக்கான அறிகுறியையும் உங்களிடத்தில் ஏற்படுத்த முடியும் அதாவது கர்ப்பனைகேற்ப நிகழ்வுகளை புறவுலகில் கொண்டுவருவது. ஒருவரை ஆழ்மனதை நம்பவைத்து அவரின் உடல் இயக்கங்களை கட்டுபடுத்துவது,இதைத்தான் மெஸ்மரிசம் என்று சொல்லுவார்கள்.இது உங்கள் எண்ணத்திற்கு இருக்கும் சக்தியை தெளிவாக காட்டுகின்றது ஒரே ஒரு குணமாக்கும் செயல்முறை தான் உள்ளது அதுதான் விசுவாசம் நன்றி உணர்தல் ஒரே ஒரு குணமாக்கும் சக்தி தான் உள்ளது அது தான் உங்களது ஆழ்மனம்.

 நீங்கள் விசுவாசம் அதாவது நன்றி உணர்தல் கொண்டிருக்கும் பொருள் உண்மையானதோ இல்லையோ நீங்கள் விளைவுகளை பெறுவது உறுதி உங்கள் எண்ணத்திற்கு ஏற்ப உங்களது ஆழ்மனம் செயல் விடை அளிக்கும் விசுவாசத்தை உங்கள் மனதின் ஓர் இனமாக பாருங்கள் அது மட்டுமே போதும்.

ரகசியம் தொடரும்...

No comments:

Post a Comment