ஒரு நாள் ஒரு நண்பர் என்னைப் பார்த்து ஒரு கேள்வி
கேட்டார் நீங்க எப்ப பார்த்தாலும் கோவில் கோவிலா
சுத்திக்கிட்டே இருக்கிறீர்ளே அதனால நீங்க என்ன சாதிச்சிங்க? அப்படின்னு ஒரு கேள்வி கேட்டார் .
அந்தக் கேள்வி சாதாரணமா எல்லாரும் கேட்கக்கூடிய ஒரு கேள்விதான்
இந்த மாதிரியான கேள்விகள் எல்லாம் நாத்திகர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு
சிறிய விவாதம் ஆகும், அவர்களைப் பொறுத்தவரைக்கும் கடவுள் இல்லை, எல்லாமே
தன்னுடைய முயற்சியால் மட்டுமே நடக்கும் என்பது அவர்களுடைய விவாதமாகும்.ஆனால் மரணத்தை ஏன் தடுக்க முடியவில்லை என்பதற்கு அவர்களால் பதில் தர
முடியாது. ஆத்திகர்களைப் பொறுத்தவரை கடவுள் இருக்கிறார் எல்லாமே அவரால் தான் நடக்குது
அவனின்றி ஓரணுவும் அசையாது இப்படி அவங்க ரொம்ப ஆழமா நினைச்சிட்டு இருக்காங்க
நாத்திகர்கள் இதுக்கு ஆப்போசிட் எல்லாமே நம்ம நெனச்சா நடக்குது நாம நினைச்சா
எதையும் செய்யலாம் அப்படிங்கிற ஒரு எதிர் விவாதத்தை அவங்க வைக்கிறாங்க.
ஆத்திகரை பொறுத்தவரைக்கும்
கடவுள் இருக்காருன்னு அதிகார பூர்வமாக நிரூபிக்க முடியாது அதேசமயம் நாத்திகர்கள்
கடவுள் இல்லை அப்படின்னு அதிகாரப்பூர்வமாக நிரூபிக்கவும் முடியாது.இது எப்படின்னா ஒரு ரூபாய் நாணயத்துல ஒருபக்கம்
பூ, மறுபக்கம் தலை இருப்பது போன்று இந்தபக்கம் இவர்கள் பார்ப்பது மட்டும்தான் உண்மை
மற்றது உண்மையல்ல என அவர்களது மனது நம்ப மறுக்கும். மறுபக்கம் ஆன்மீகவாதிகள்
இந்தபக்கம் இருப்பது மட்டுமே உண்மை என இவர்கள் வாதாடுவார்கள் இது காலகாலமாக
நடந்துவருகிற ஒரு உண்மை யாராலும் மறுக்க முடியாது. அது ஏனோ தெரியவில்லை ஒருவர்
மற்றொரு பக்கம் திரும்பிப் பார்க்க தவறிவிடுகிறார்கள்,
இந்த உலகத்துல இந்த பிரபஞ்சம் நம்ம எல்லாரையும் இயக்கி கிட்டு இருக்கு
(சாரி கடவுள் இயக்கிகிட்டு இருக்காரு)ஆனா அது எப்படி நடக்குது அது எப்படி
சாத்தியம் இப்படிப்பட்ட விஷயங்களுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது யாராலும் விளக்கவும் முடியாது.அப்படி விளக்கினாலும் முழுத்தெளிவை யாராலும்
அடைய முடியாது.
ஒரு அறிஞர் தன்னுடைய மரணப்படுக்கையில் இருக்கும் போது அவர் சிரித்துக்
கொண்டே இருந்தார் அதை பார்த்த மற்ற நண்பர்கள் என்னய்யா நீங்க இப்ப மரண வேதனையில்
இருக்கீங்க இன்னும் கொஞ்ச நேரத்துல மரணம் கூட நிகழலாம் இந்த சமயத்தில் போய் எப்படி
உங்களால சிரிக்க முடியுது அப்படின்னு அவர்கிட்ட கேட்டாங்க அதற்கு அவர் சொன்ன பதில்
என்ன தெரியுமா? மறுஜென்மம் இருக்கிறது அப்படின்னு ஆத்திகர்கள் சொல்றாங்க ஒருவேளை அது
உண்மையாக இருந்துச்சுன்னா இந்தப் பிறவியில் நான் பட்ட கஷ்டங்கள் எனக்கு அமையப்
பெற்ற இந்த அவலட்சணமான உடல்கள் எல்லாமே அழிஞ்சி அடுத்த ஜென்மத்துல ஒரு நல்ல உடல்
ஒரு நல்ல வாழ்வு எனக்கு கிடைக்கும் அத நெனைச்சி சந்தோசத்துல சிரிக்கிறேன்.
நாத்திகர்கள் சொல்றமாதிரி மறுஜென்மம் அப்படின்னு ஒன்னும் கிடையாது என்பது உண்மையா இருந்தா இனிமே நம்ம பிறவி எடுக்கப் போறதில்லை இந்த கஷ்டங்களை
அனுபவிக்க போவதில்லை எந்தவிதமான துன்பமும் நம்மள வந்து தாக்க போறதில்லை அதை
நினைச்சு சந்தோஷத்துல சிரிச்சேன் அப்படின்னு சொன்னாராம் கொஞ்சம் யோசிச்சு பாருங்க
எதுவா இருந்தாலும் பாசிட்டிவா திங்க் பண்ற அந்த மன நிலைமை எல்லாருக்கும் வருமா?
இதுதான் கேள்வி என்னோட நண்பர் என்னை பார்த்து கேட்ட விஷயம் கடவுள்
இருக்கிறாரா இல்லையா அவர் இருக்காருன்னு ஏன் மக்களுக்கு இவ்வளவு துன்பம் வருது
குறிப்பா கடவுளை வணங்க அவர்களுக்கு அதிக கஷ்டங்கள் துன்பங்கள் துரத்திக்கொண்டே
இருக்கு?
சிறந்த ஆன்மீகவாதிகள் இதற்கான பதில்களை எப்படி சொல்வாங்க அவர்கள் போன
ஜென்மத்துல செஞ்ச கர்மா அதனுடைய விளைவுகள் இந்த ஜென்மத்துல இவங்க அனுபவிச்சிட்டு
இருக்காங்க அப்படின்னு சொல்லுவாங்க சரி அப்படியே நம்ம நம்புவோம். ஆனால் அந்த கர்மா எவ்வளவு? நான் படும் துன்பம் எனக்கு மிக அதிகமாக தெரியுது ஆனா இந்த
ஜென்மத்துல நானோ எந்த ஒரு பாவமும் செய்யல அப்படி இருக்க ஏன் நான் இவ்வளவு கஷ்டப்
படுறேன். இந்த கர்மாவை அளக்கும் அளவுகோல் யாருக்கிட்ட இருக்கு, யாருக்கும்
தெரியாது.ஆனா நம்முடைய தர்ம சாஸ்திரம் நமக்கு என்ன சொல்லுதுன்னா, யாரையும்
பழிக்காதே, நயவஞ்சகம் செய்யாதே, யாரையும் துன்புறுத்தாதே, பொய் சொல்லாதே, திருடாதே, அடுத்தவர்
பொருளை அபகரிக்காதே இன்னும் நெறைய...
சரிங்க இதெல்லாம் கடைபிடிச்சா நம்முடைய கர்ம பாவங்கள் குறையுமா?
கர்ம பாவங்கள் குறையுதோ இல்லையோ நிச்சயமா நிம்மதியா வாழமுடியும் அப்படி
நிம்மதியா வாழ்ந்தாலே கர்ம பாவங்கள் குறைஞ்சுதுன்னு வச்சுக்கோங்க. சிம்பிள்.
அவ்வளவு ஏங்க என்னுடைய லைஃப்ல நான் பார்த்த ஒரு சில நிகழ்வுகளை இங்கே
நான் சொல்ல விரும்புறேன் நான் ஒருமுறை டூவீலரில் போயிட்டு இருக்கும்போது ஒரு 50
வயது
மதிக்கத்தக்க ஒருவர் என்கிட்ட லிப்ட் கேட்டார் சரி நானும் அவரை ஏத்திக்கிட்டு போய்கிட்டே
இருந்தேன் அப்போ அவர் என்கிட்ட பேசத் தொடங்கினார் தம்பி நீங்க எதுவரைக்கும் போறீங்க
நானும் அந்த போற தூரத்தை சொன்னேன் அதுக்கு முன்னாடி தான் நான் இறங்க வேண்டிய இடம்
வருது, தம்பி அங்க கொஞ்சம் நிறுத்திக்குங்க அப்படின்னு சொல்லிட்டு அவருடைய கதையை
எனக்கு சொன்னார்.
ஒரே பையன் தம்பி, பார்த்து பார்த்து வளர்த்த அவன் கேட்டதெல்லாம் வாங்கிக் கொடுத்தேன் 25 வயசு ஆச்சு கல்யாணம் பண்ணேன் நல்லா சந்தோஷமா தான் இருந்தோம் நான் ஒரு கோவிலுக்கு இருபது வருஷமா மாலை போட்டுக்கிட்டு நடந்தே போவேன் அந்த கோவிலை இங்க நான் சொல்ல விரும்பல அது பக்தர்களுடைய அவநம்பிக்கை உருவாக்குவதாக இருக்கும் அப்புறம் அவர் மேலும் சொன்னார் இவ்ளோ பிரார்த்தனை விரதம் எல்லாம் செஞ்சி வந்தேன் .ஒருநாள் என்னுடைய ஒரே மகன் எங்களை விட்டுட்டு போய்ட்டான் தம்பி அதுல இருந்து எந்த கோவிலுக்கும் நான்போறது இல்ல சாமி கீமி எல்லாம் தூக்கிபோட்டாச்சி
ஒரு நாள் ஹார்ட் அட்டாக் 30 வயசுல எங்க எல்லாரையும் விட்டுட்டு போயிட்டான் அப்படின்னு சொல்லிட்டு கண்ணுல
தண்ணி வர்ற அளவுக்கு பேச ஆரம்பிச்சிட்டார் அது சம்பந்தமாக தான் இங்க வந்த இந்த
ஊர்ல இருக்கிற என் சொந்த காரங்களோடு பேசிட்டு வரேன்
அப்படின்னு சொன்னார். இந்த இடத்துல நம்ம கொஞ்சம் யோசிக்க வேண்டியது இருக்கு.
இந்த கர்மா அப்படிங்கறது யார் செஞ்சது அது யாருக்கு போய் சேரும்
அப்படிங்கிற நம்ம கொஞ்சம் கவனமா பார்க்கணும் அந்தப் பெரியவரை பொறுத்தவரைக்கும் இந்த
பூமியில இந்தப் பிறவியில் அவர் அவருடைய கர்மாவை மட்டும்தான் பெருக்கி
கொண்டிருக்கிறார் இங்கு தன்னுடைய மகள் மகன் மனைவி இவர்களுக்காக பிரார்த்திப்பது
அவர்களுக்கு அந்த கர்மா உடைய பயன் சென்று சேருமா? இது நம்ம நல்லா புரிஞ்சுக்கணும் அப்படின்னா அந்த பையனோட கர்மா என்ன? நிச்சயமா நமக்கு
தெரியாது. அதை ஏதோ ஒன்னு கடவுள் அல்லது பிரபஞ்சத்தால நிர்ணயிக்கப்பட்டு
இருக்கு அதுதான் இப்ப நடந்திருக்கு ஆனால் அந்தக் கர்மா உள்ள ஏதோ ஒரு பகுதியில்
இவருக்கும் சம்பந்தமிருக்கு அதனுடைய தாக்கம் இவருடைய மனதையும் கண்டிப்பா
காயப்படுத்தும் இல்லன்னு சொல்ல முடியாது. அப்போ இதெல்லாம் வந்து தவிர்க்க முடியாதா? அப்படின்னா கண்டிப்பா முடியாது அப்படித்தான் நான் சொல்லுவேன் அப்ப இதுக்கு வேற
வழியே இல்லையா அப்படினா கண்டிப்பா இருக்குங்க அது எப்படின்னா யார்
பாதிக்கப்படுகிறார்களோ அவர்களே நேரடியாக தங்களுடைய கர்மாவை புனிதப் படுத்த
வேண்டும் அதற்கான வழிகளை அவர்களின் பெற்றோர்கள் காட்ட வேண்டும் அப்படின்னா என்ன?குழந்தைகள்
சிறுவயதிலேயே தவறான பாதையில் செல்லாமல் தவறான எண்ணங்களை நினைக்காமல்
நல்வழிப்படுத்தும் கடமை பெற்றோர்களுக்கு உண்டு
இந்த கதையில் அந்தப் பையனுக்கு பெரிய கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லை ஆனால் ஒரே பிள்ளை என்று அதிகமாக செல்லம் கொடுத்து அதிக உணவுகளை அவர்களுக்கு வழங்கியது குறிப்பாக அசைவ உணவுகள் அவன் பார்ப்பதற்கு மிகவும் குண்டாக இருப்பாராம் இதை அவரே சொன்னார் இந்த அதிக குண்டான உடல் உடற்பயிற்சி இன்றி அதிக கொலஸ்ட்ரால் உற்பத்தியாகி அது இருதய அடைப்பை உண்டாக்கி இருக்கிறது பாருங்கள் சிறிய விஷயம்தான் பாசமாக செய்தது இது கூட எவ்வளவு பெரிய ஆபத்தை உண்டாக்கி இருக்கிறது.
இந்த கதையில் அந்தப் பையனுக்கு பெரிய கெட்ட பழக்கங்கள் எதுவும் இல்லை ஆனால் ஒரே பிள்ளை என்று அதிகமாக செல்லம் கொடுத்து அதிக உணவுகளை அவர்களுக்கு வழங்கியது குறிப்பாக அசைவ உணவுகள் அவன் பார்ப்பதற்கு மிகவும் குண்டாக இருப்பாராம் இதை அவரே சொன்னார் இந்த அதிக குண்டான உடல் உடற்பயிற்சி இன்றி அதிக கொலஸ்ட்ரால் உற்பத்தியாகி அது இருதய அடைப்பை உண்டாக்கி இருக்கிறது பாருங்கள் சிறிய விஷயம்தான் பாசமாக செய்தது இது கூட எவ்வளவு பெரிய ஆபத்தை உண்டாக்கி இருக்கிறது.
இங்கு நாம் கவனிக்க வேண்டியது ஆன்மிக வழி தேடல்களில் பயணித்துக்
கொண்டு இருப்பது ஒரு நல்ல விஷயம் என்றாலும் நம் உடல் நலத்தை கண்டிப்பாக பேணி
பாதுகாக்க வேண்டும் அதற்கு உடற்பயிற்சி யோகா, மனநல பயிற்சி இது போன்ற விஷயங்கள்
இக்காலத்திற்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது. இதையெல்லாம் பின்பற்றாமல் நல்ல உடல்
ஆரோக்கியம் இல்லை நல்ல பொருள் வசதி இல்லை அப்படின்னு கடவுள்
மேல குத்தம் சொல்றதுல எந்த பிரயோஜனமும் இல்லை. நல்ல ஆரோக்கியம் இருந்தாலே நல்ல
செல்வங்கள் நம்மை வந்து சேரும் அதற்கான உழைப்பு நம்ம கிட்ட இருக்கும் இதுதான் நான்
இங்கு சொல்ல வர்ற விஷயம் .
சரி கடைசியா நாம கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்விக்கு பதில் பாத்துருவோம் மழைக்காலம் வரப்போகுது அதுக்காக நாம தானியத்தை சேர்த்து வைக்கிறோம் ஏன்னா மழை காலத்துல தானியங்கள் கிடைக்காது. தொடர்ந்து மழை பெய்தால் நம்ம வெளியில போயிட்டு எதையும் வாங்கிட்டு வர முடியாது சில பொருட்கள் கிடைக்கும் சில பொருட்கள் கிடைக்காமல் போகும் அதனால உணவு பொருட்களை நம்ம சேர்த்து வைப்போம். அதுபோலத்தான் ஆன்மீகத்துல நாம கொஞ்சம் கொஞ்சமா புண்ணியத்தை சேர்த்து வைக்கிறோம் ஒருவேளை மழை காலத்துல மழையே வராமல் போகலாம் ஆனால் சேர்த்துவைத்த நம்ம தானியங்கள் வீணா போகாது கண்டிப்பா அத நம்ம அடுத்த நாளைக்கு பயன்படுத்திக்கலாம் ஆனா மழையே வராது அப்படி நினைச்சுகிட்டு தானியத்தை சேர்த்து வைக்காமல் இருந்தால் ஒரு வேலை மழைக்காலம் வந்து தொடர்ந்து வெளியில் வர முடியாத அளவுக்கு போச்சுன்னா நாம பட்டினிதான் கிடக்க வேண்டும். அது போல தான் நம்ம ஆன்மீக பயணத்தில் ஒவ்வொரு கோவிலுக்கும் போறோம் அங்க இருக்கக்கூடிய புனித தீர்த்தங்களில் நீராடி அங்கு இருக்கக்கூடிய கோவில்களில் தரிசனம் செய்து, முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்கின்றோம் இந்த சேர்த்து வைத்த புண்ணியங்கள் நமக்கு கண்டிப்பாக பயன்படா விட்டாலும் நிச்சயமாக யாருக்கும் தொந்தரவாக இருக்காது அது தானியத்தை சேர்த்து வைக்காமல் இருப்பதைவிட மேலாகும் எனவே புண்ணியத்தின் அளவுகளை நாம் நினைக்காமல் அதன் வழியில் பயணிப்பது மேலாகும். கடவுள் இருக்கிறார் என்றால் அது பயன்படும் இல்லையென்றால் வீண்போகாது.
விவாதங்கள் தொடரும்...
No comments:
Post a Comment