Subscribe

BREAKING NEWS

05 January 2020

சேரன்மகாதேவி (சந்திரன்) பரிகார ஸ்தலம்...

சேரன்மகாதேவி இது நவ கைலாயத்தில் இரண்டாவது இடத்தைப் பெறுவது
சேரன்மகாதேவி திருக்கோவில் ஆகும். இந்த கோவில் நவகிரகங்களில்
சந்திரன் ஆட்சி பெற்று விளங்குகிறது. இந்த கோவில் தாமிரபரணி ஆற்றின்
தென்கரையில் அமைந்துள்ள புண்ணிய ஸ்தலமாகும் திருநெல்வேலியில்
இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் இக்கோவில் உள்ளது.


கோவிலின் ராஜகோபுரம் 

 ஸ்ரீ அம்மன் அம்மநாதசுவாமி என்ற கைலாய கைலாசநாத சுவாமிஆகவும்
ஆவுடை நாயகி அம்பிகை ஆகவும் அருள் பாலிக்கின்றார்.
கிழக்கு வாசல் அழகிய சிறிய ராஜகோபுரம் கம்பீரமாக அமைந்திருக்கும்.
இக்கோவிலுக்கு இரண்டு பெரிய வாயில்கள் உள்ளன.
 கோவிலின் வடக்குப் பகுதியில் அம்மனும் சுவாமியும் தெற்குப்பகுதியில்
ஆவுடை அம்மை அம்மனும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இங்கு அம்மனாதர் தாமே சுயம்புவாக காட்சி அளிக்கின்றார்.

கோவிலின் ராஜகோபுரம் 
கோயிலில் நந்தி கொடி மரம் ஆகியவையும் கோயில் உள்ளே உள்ள
மண்டபத்தில் துவார பாலகர்களும் நடுவே நந்தியும்
பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது தெற்கு நோக்கிய பகுதியில் நடராஜர்
சிவகாமி அம்மையுடன் காரைக்கால் அம்மையும் உள்ளார் சூரியன்
சந்திரன் ஆகியோர் மேற்கு நோக்கி உள்ளனர்.

இக்கோவிலில் தெற்கு நோக்கி ஒரு வாசலும் கிழக்கில் ஒரு மண்டபமும் அமைந்துள்ளது இந்த மண்டபம் தற்போது தூண்கள் சிதைந்து காணப்பட்ட நிலையில் சிவனை வைத்து வழிபட்ட உரோமச முனிவரின் திருவுருவம் இந்த மண்டப தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளது இங்கு உரோமச முனிவரும் பக்தர்கள் வணங்கிவந்திருக்கின்றனர்.


மேலும் தெற்கு நோக்கி இரண்டு பெண்கள் உரல் உலக்கை உடன் நிற்கும் காட்சிகள் கையில் வைத்திருக்கும் காட்சியும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது.

காசி விஸ்வநாதர் விசாலாட்சி சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன்
கஜலட்சுமி சனீஸ்வரர் சண்டிகேஸ்வரர் உள்ளனர் இக்கோவில்
தல புராணத்தை பற்றிக் கூறும் போது உரோமச முனிவர்
கைலாய மலையை அடைந்து நித்தியத்துவம் வேண்டும் என்று கேட்டு
ஆலமரத்தின் அடியில் சிவலிங்கம் கண்டு பூஜை செய்து வழிபட்டார்.



  இங்கு சிவபெருமான் உரோமச முனிவருக்கு காட்சி தந்தார் கோவிலின் தலவிருட்சம் ஆலமரம். இக்கோயிலின் மூலஸ்தானத்தை இரண்டு பேர் சேர்ந்து கட்டியுள்ளனர் என்பதற்கு வரலாறு உள்ளது .


அதாவது இரண்டு சகோதரிகள் சேர்ந்து அம்மனாக சுவாமி கோவிலில்
மூலஸ்தானத்தை கட்டுவதற்காக தாங்கள் செய்து வரும் நெற்குத்தும்
தொழில் செய்து பணம் சேர்த்து வந்துள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு
கோவில் மூலஸ்தானம் கட்டுவதற்கான பணம் சேரவில்லை இது குறித்து
மிகவும் கவலை அடைந்து சிவபெருமானை பக்தியுடன் வழிபட்டனர்.

இதை அறிந்த சிவபெருமான் ஒரு நாள் மாலை நேரத்தில் அந்தணர் வடிவில்
வந்த இரண்டு சகோதரியின் வீட்டிற்குச் சென்றார். அந்த சகோதரிகள்
இருவரும் அந்தணர் வடிவில் வந்த சிவபெருமான் அமரவைத்து இலையை
போட்டு உணவு பரிமாறினார்கள்.
 அந்தனர் சாப்பாடு உண்டபிறகு சகோதரிகளை வாழ்த்திச் சென்றார்
அன்றிலிருந்து சகோதரி வீட்டில் செல்வம்  பெருகியது.



அதன் பின்னர் சகோதரிகள் இணைந்து கோவிலின் மூலஸ்தானத்தை
கட்டினார்கள் என்பது வரலாறு. இதற்குச் சான்றாக கோவிலில் உள்ள
தூணில் இரண்டு சகோதரிகள் நெல் குத்துவது போல சிற்பம்
வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் இக்கோயிலில் அமைப்பு பணியில்
ராஜராஜ சோழன் ராஜேந்திர சோழன் ஆகியோர் சேர்ந்து கட்டியதாகவும்
கல்வெட்டுச் சான்று உள்ளது சேரன் மகாதேவி மங்கலம் என்ற பெயர்
கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது.


 இக்கல்வெட்டுக்கள் பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் ஆகும்
மகாதேவி என்பது சேர மன்னன் மகளின் பெயர் என்பதும்
தன் மகளின் பெயரை சேரமன்னர் இவ்வூருக்கு சூட்டினான் என்றும்
அதன் பின்னரே சேரன்மகாதேவி என அழைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
 மேலும் இக்கோயிலில் தெற்கு மேற்கு சுவர்களில் உள்ள
மூன்று கல்வெட்டுகள் பெருமாள் ஆழ்வார் என்னும் கைலாய
என்றும் கூறப்படுகிறது.
கோவிலின் பின்புறம் சுற்றும்போது

 கோச்சடைய வர்மறான சுந்தர சோழ பாண்டியன் என்ற அரசர்
காலம் ராச ராச கேசரி வர்மரான  இராசராச தேவர் என்ற மன்னர்
காலமும் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது 


 இக்கோவிலின் அருகே பக்தவச்சலம் கோவில் உள்ளது இக்கோவில்
அருகே யாக தீர்த்தம் உள்ளது இங்கு தான் யாசமா முனிவருக்கு
முக்தி கொடுக்க பக்தவச்சலராக சிவபெருமான் தோன்றினார்
என்றும் கூறப்படுகிறது.


 
கோவில் நுழைவு வாயில் 

கோவிலுக்கும் யாக தீர்த்தத்துக்கும் இடையிலான பகுதியில் ரண
 விமோசன பாறை ஒன்று உள்ளது இங்கு 41 நாட்கள் விடாமல் ஸ்னானம்
செய்தால் தீராத ரணமும் தீரும் மனதில் தீய எண்ணத்துடனும்
தீட்டுடனோ இப்பகுதியில் குளிக்க முடியாது.


 மார்கழி மாதத்தில் வியாச தீர்த்தம் என்று அழைக்கப்படுகின்ற
மகாவிதிபாகம் என்ற திருவிழா நடக்கும் . இத்திருவிழா அன்று
அனைத்து நதிகளும் மூன்று நாட்கள் இப்பகுதியில் சங்கமிக்கும்
என்பது புராணம் கூறும் வரலாறு.

கோவில் அன்றாடபனிகள் செய்துவரும் ஒரு ஏழை அந்தணருக்கு வேட்டி கொஞ்சம் பணம் நமது குழுவின்சார்பாக கொடுத்தபோது 


தற்போது கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவும் ,
திருவாதிரை திருநாளும், நடக்கிறது.

சேரன்மகாதேவி  சென்று சிவனருள் பெறுவோம்.

கோவில் தொடர்பு கொள்ள :-

சந்திரசேகர் பட்டார் செல்:-9442226511

No comments:

Post a Comment