Subscribe

BREAKING NEWS

04 January 2020

பிறவி என்னும் கர்மாவின் மாய பிடியில் நாம் ...


பிறவி என்னும் கர்மாவின்  மாய பிடியில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கும்  அனைத்து மனிதப் பிறவிகளுக்கும் வணக்கம், எவ்வளவுதான் சொந்தங்கள் பந்தங்கள் செல்வங்கள் பணபலம் படைபலம் அனைத்தும் இருந்தாலும் இவை அனைத்தையும் விட்டு ஒருநாள் நாம் செல்லப் போகின்றோம் என்பது அனைவருக்கும் தெரியும், இருந்தும் நாம் அந்த மாய உறவுகள் இடத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கின்றோம், இந்த பூமியில் வாழ்வதற்கு இது எல்லாம் வேண்டும் தான் இல்லை என்று மறுப்பதற்கு இல்லை ஆனால் அது மட்டுமே முழுமை ஆகாது, இது எல்லாம் வேண்டும் என்று நாம் நினைத்தாலும் சில பேருக்கு அது அமைவதில்லை காரணம் என்னவாக இருக்கும். அதுவே கர்மா என்னும் நம்முடைய புனர்ஜென்மம் பந்தமாகும், அதன்படியே நாம் இப்போது அனுபவிக்கின்ற அனைத்து விதமான நன்மை மற்றும் தீமைகள் அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றது, இதை மாற்றுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, ஆனால் மறு ஜென்மம் ஒன்று இருந்தால் அந்த ஜென்மத்தில் இவைகள் அனைத்தையும் மாற்றுவதற்கு தேவையான அனைத்தையும் இந்த ஜென்மத்தில் நாம் செய்தாக வேண்டும், அது புண்ணிய காரியங்கள் தானதர்மங்கள் சக மனிதர்களுடன் அன்புடன் வாழ்தல் போன்றவைகளாகும்,




அந்தவகையில் நாம் ஆன்மீக பயணம் மேற்கொண்டு பல பல புண்ணிய ஸ்தலங்களை தரிசனம் செய்து முடிந்த அளவிற்கு தான தர்மங்கள் செய்து வருகின்றோம் என்பது அனைவருக்குமே தெரியும்.
 அதன்படி தற்போது நாம் சென்று வந்த புண்ணிய ஸ்தலங்கள் ஆகிய நவகைலாயம் மற்றும் நவதிருப்பதி பற்றிய கோவில்களின் சிறப்புகள் பற்றி பதிவுகளை தற்போது வரும் நாட்களில் பார்க்கலாம்.




உலகில் சிவலிங்கத்திற்கு பெயர்பெற்றது  இமயமலையில் உள்ள சிவ கைலாயம் ஆகும்.  சிவாலயங்கலுக்கு  பெயர் பெற்றது தென் தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள புண்ணிய நதியாம் தாமிரபரணிக் கரையிலுள்ள நவ கைலாயம்.ஆகும்.
 நவகைலாயம் திருக்கோயில்கள் உருவான விதமாவது, புண்ணிய மலையான பொதிகை மலையில் தவம் புரிந்து வந்த மாமுனிவர் அகஸ்தியரின் பிரதான சீடரான உரோமச முனிவர் தன் குருவின் துணை கொண்டு சிவபெருமான் காட்சி பெற்று முக்தி அடைய விரும்பினார்.அதை அறிந்துகொண்டு அகத்திய முனிவர் அவரிடம் அதற்கான வழி முறைகளை கூறினார்.


 அதன்படி உரோமச முனிவர் தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடி சிவபெருமானை வழிபட்டார் பின்னர் நவகோள்கள் வரிசையில் சிவபெருமானை வணங்க புறப்பட்டார் உரோமசமுனிவர்.
எந்தெந்த  இடங்களில் எல்லாம் வணங்க வேண்டும் எந்த இடத்தில் வழிபட்டால் மிகச்சிறப்பான பலன்கள் மிக விரைவில் கிட்டும் என்பதை அடையாளம் காட்டுவதற்காக தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை அகத்திய மாமுனிவர் மிதக்க விட்டார், அந்த மலர்கள்.கீழே கொடுக்கப்பட்டுள்ள வரிசையின்படி கறை ஒதுங்கியது.


1)பாபநாசம், (சூரியன்) ஸ்ரீ கைலாசநாதர் அம்பாள் ஸ்ரீ உலகாம்பிகை.
2) சேரன்மகாதேவி, (சந்திரன்)ஸ்ரீ அம்மைனாதர் அம்பாள் ஸ்ரீ ஆவுடை நாயகி.
3) கோடகநல்லூர், ஸ்ரீ கைலாசநாதர் அம்பாள் ஸ்ரீ சிவகாமி.
4)குன்னத்தூர், ஸ்ரீ கோத பரமேஸ்வரர் அம்பாள் ஸ்ரீ சிவகாமி.
 5) முறப்பநாடு, ஸ்ரீ கைலாசநாதர் அம்பாள் ஸ்ரீ சிவகாமி.
6) 8ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீ கைலாசநாதர் அம்பாள் ஸ்ரீ சிவகாமி.
7)தென்திருப்பேரை, ஸ்ரீ கைலாசநாதர் அம்பாள் ஸ்ரீ அழகிய பொன்னம்மை.
8)ராஜபதி, ஸ்ரீ கைலாசநாதர் அம்பாள் ஸ்ரீ சௌந்தர்யா நாயகி பொன்னம்பாள்.
9) சேந்தமங்கலம், ஸ்ரீ கைலாசநாதர் அம்பாள் ஸ்ரீ சௌந்தர்யா நாயகி.


ஆகிய இடங்களில் அந்த ஒன்பது மலர்களும்  தாமிரபரணி நதிக்கரையில் கறை ஒதுங்கியது.அந்தந்த இடங்களில்  உரோமச முனிவர் ஒன்பது சிவலிங்கத்தை வைத்து வணங்கி முக்தி பெற்றார்.என்பது புராண வரலாறு.அடுத்தடுத்து வரும்  பதிவுகளில் இந்த ஒன்பது கயிலாயங்கள் பற்றிய பதிவுகளை ஒவ்வொன்றாக நாம் பார்க்க இருக்கின்றோம்.

 இப்பொழுது நவ கைலாயங்கள் விளங்கக்கூடிய முதல் பரிகார ஸ்தலம் பாபநாசம் ஆகும் இது சூரிய கிரகத்திற்கான பரிகார ஸ்தலம் ஆகும்.
 நாம் செய்த பாவத்தை நாசம் செய்ய செல்ல வேண்டிய ஒரு ஆலயம்  ஆகும் இங்குள்ள பாவநாசம் சந்நிதி எதிரில் உள்ள தாமிரபரணி படித்துறையில் நீராடினால் நாம் செய்த பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம் இந்த திருக்கோவில் திருநெல்வேலியில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது இந்த கோவிலுக்கு முக்கூடல் வழியாகவும் சேரன்மாதேவி வழியாகவும் செல்லலாம் இத்திருக்கோவில் மூலவர் ருத்ராட்சத்தால் ஆனது.

 தாமிரபரணி ஆறு பொதிகை மலையில் தோன்றி சமவெளியை அடையும் இடமே பாபநாசம் இக்கோவிலில் வீற்றிருக்கும் இடம் எழில் சூழ்ந்துள்ளது வற்றாத ஜீவநதியான தாமிரபரணி பாபநாசம் கோவில் அமைப்பு அற்புதமான இயற்க்கை கலையம்சம் பொருந்தியதாக இருக்கின்றது ஏழு தட்டுகள் உடைய பெரிய கோபுரத்தை இத்திருக்கோவில் பெற்றுள்ளது  இது தாமிரபரணி ஆற்றின் மேற்கு கரையில் உள்ளது. அகத்திய முனிவர் தங்கி தவம் புரிந்த இடம் இது என்பதால் முக்கியத்துவம் வாய்ந்தது இந்த கோவில் , கோவில் கோபுரத்தின் உயரம் 80 அடி ஆகும்.

  சிவராத்திரி சிவலிங்கப் பெருமானை தரிசிப்பது மிகவும் விசேஷமானது அவ்வாறு வழிபட்டால் செய்த பாவங்கள் நீங்கும்.என்பார்கள்.அப்படி

விராட்டு என்பவர்வாழ்க்கையில் விரட்டிக்கொண்டு இருந்த நேரத்தில் அவர் மோட்சத்தை விரும்பி பாபநாசத்தில் பரமேஸ்வரனை நோக்கி யாகம் செய்தார் யாகத்தின் பயனாக பரமேஸ்வரன் அவருக்கு காட்சி தந்தார் அதன் பின் மோட்சத்தை தரத்தக்க சிவபூஜை செய்து மோட்சம் அடைந்தார்.

 நல்ல குலத்தில் பிறந்தவராக இருந்தாலும் சிவபூஜை செய்யாதவர் மேன்மை அடைய மாட்டார் தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் ஆயினும் விதிப்படி சிவபூஜை செய்வாராயின் உயர்ந்த குலத்தினர் ஆவர். என்று நாரத முனிவர் அருளிச் செய்ய கேட்டு பொதிகை,கையம், தருத்தாரம், என்றும் மூன்று மலைகள் ஐம்புலன்களையும் ஒடுக்கி பரமேஸ்வரனை நோக்கி தவம் செய்திட சிவராத்திரி தினத்தில் கோடி உருவம் கொண்டு சிவபெருமான் தோன்றினார்.
 மலைகள் மூன்றும் ஞானத்தினாலே  அறிந்து சிரசிலே கைகுவித்து வணங்கி எங்கும் நிறைந்த மூலப்பொருளே எங்களை அடிமை கொண்டு அருள்க என்று தியானிக்க சிவபெருமான் சகல உருவம் கொண்டு காட்சிதர மூன்று மலைகளும் நிற்க பரமேஸ்வரன் கருணை கூர்ந்து தேவ தட்சனை வரவைத்து பொன்னாலும் மணியாலும் ஆகிய கிரீடம் ஆபரணம் ஆடை குடை சாமரம் முதலானவர்கள் வகைக்கு மும்மூன்று செய்து வரும்படி உத்தரவிட்டார். சந்திர மண்டலத்தை சிங்காதத்தின் மேல் வைத்து அதன் மேல் பொதிகை மலையை அரசனாக்கி அவனுக்கு சந்திர பாண்டியன் என்னும் பெயர் புனைந்தார்.
 பின்னர் கிரீடம் முதலியவற்றை தரித்து பின்பு கைய  மலையையும், தருத்தார மலையையும்,  சோழன் என்னும் பெயருடைய  இரண்டு அரசராக்கி மகுடம்  முதலியவை எல்லாம் அணிந்து பெருமை சேர்த்தார். பின்னர் வேண்டிய வரங்களையும் தந்து அருள் புரிந்தார் என்பது வரலாறு.



பொதிகை மலையின் மீது வந்த அகத்தியர் சிவபெருமான் திருமணக் கோலம் காண வேண்டும்  என்று நினைத்து இருந்த காலமும் உண்டு சொன்ன வாக்கின்படி சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பொதிகை மலைச்சாரலில் உள்ள பாபநாசத்தில் கல்யானதீர்த்தம் என்னும் இடத்தில்  ஸ்ரீ அகஸ்தியருக்கும் அம்மை உலோபமுத்திரை அவர்களுக்கும் கல்யாண கோலத்தில் வந்து காட்சி தந்தார்.
 இன்னும் பலவற்றை தன்னுள் அடக்கி இருக்கிறது பாபநாசம் வரலாற்று சிறப்புமிக்க இத்திருக்கோவில் சென்று வணங்கினால் பாவங்கள் நீங்கும் என்பது நிச்சயம்.


No comments:

Post a Comment