Subscribe

BREAKING NEWS

15 September 2019

மகாளய பட்சம் 2019 எளிய முறையில் தர்ப்பணம்!!

மாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். 
Image result for எளிய முறை தர்ப்பணம்


அறிவியல் ரீதியாக பூமி மற்றும் கிரகங்கள் சூரியனை சுற்றி வருகின்றன.
பூமி, சூரியனின் வட கிழக்கில் பங்குனி மாதமும், தென்மேற்கில் புரட்டாசி மாதமும் வருகிறது. இந்த வேளையில் இறைவழிபாடுகள் போற்றப்படுகின்றன. மாதந்தோறும் வரும் அமாவாசை அன்று காலமான மூதாதையர்களுக்குத் திதி கொடுத்தால் யாரை நினைத்துத் திதி கொடுக்கிறோமோ அவர்கள் மட்டும் வந்து திதியை பெற்றுக் கொள்வர். ஆனால், மகாளய அமாவாசை அன்று திதி கொடுத்தால் நம் மூதாதையர்கள் அனைவரும் ஒன்றாக வந்து திதியைப் பெற்றுக் கொண்டு வாழ்த்துவதாக ஐதீகம். இதனால் அன்றைய தினம் பித்ருக்களுக்கு திதி கொடுப்பது சிறப்பாகப் போற்றப்படுகிறது. பித்ருக்கள் இறந்த திதி தெரியாதவர்கள் கூட அன்று தர்ப்பணம் செய்யலாம். அன்று ஒரு வேளை உணவு உண்டு விரதம் கடைபிடிப்பது சிறப்பாகும்.

பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட கால அளவை குறிப்பதாகும். மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பெளர்ணமிக்கு பின்னர் வரும் 15 நாட்களை குறிப்பதாகும்.

இன்றைய தினம் (14.09.2019) மகாளய பட்சம் ஆரம்பமாகிறது. இதனைத் தொடர்ந்து வரும் அமாவாசை மகாளய அமாவாசை எனப்படும். இந்தக் காலத்தில் முன்னோரை ஆராதிக்க வேண்டும். அவர்கள் நினைவாக தானம் அளிப்பது சிறந்த பலனைத் தரும்.

மகாளய பட்சம் இன்று 14 செப்டம்பர் 2019 முதல் 28 செப்டம்பர் 2019 வரை நடக்க உள்ளது. மகாளய பட்சம் காலத்தில் முன்னோர்களை வழிபடுவதன் மூலம் பல பலன்களை பெற முடியும். மகாளய பட்சம் 15 நாட்கள் செய்ய வேண்டியது, செய்யக் கூடாததைத் தெரிந்து கொள்வது அவசியம். இந்த பதினைந்து நாட்களும் முன்னோர்களின் நினைவாக சுபநிகழ்வுகளைத் தவிர்த்து அவர்களுக்குரிய சிரார்த்தம், தர்ப்பணம் ஆகியவற்றை செய்வதால் அவர்களது ஆன்மாக்கள் சாந்தி பெறும்.

நமது மூதாதையர்களான பித்ருக்கள் அவர்கள் நினைக்கிற போதெல்லாம் பூலோகத்திற்கு வர இயலாது. பித்ருக்கள் பக்ஷமான ஆடி மாதத்தில் பித்ருக்கள் தங்களின் சந்ததிகளை ஆசீர்வதிக்க பூலோகத்திற்கு வருவதாகவும் பின் உத்திராயண புண்ய காலத்தில் தை அமாவாசையில் பித்ரு லோகம் செல்வதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன. எனவே அமாவாசை, மாதப்பிறப்பு, இறந்த அவர்கள் திதி மற்றும் மகாளயபட்ச தினங்களில் தான் அவர்கள் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகிறார்கள்.

மகாளய பட்சத்து அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் அண்டவெளியில் மிக அபரிதமான பித்ருக்களின் ஆசி இருக்கிறது. நாம் அளிக்கும் நீரையும், எள்ளையும் தேடிக் கோடானுகோடி பித்ருக்கள் பூமிக்கு வருவார்கள். இதனால், வாழும் காலத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளான இவர்கள் ஆன்மா சாந்தியடைய அனைவரும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
மகாளய அமாவாசை நாளில் தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு, கோ தானம், தானியங்கள், எள், எள் எண்ணெய், வெல்லம், பணம், வஸ்திரம், போர்வை, சால்வை, விளக்கு, கைத்தடி, குடை, விசிறி, செருப்பு ஆகியவற்றில் எது முடியுமோ அதனைத் தானம் அளிக்கலாம்.  தானம் பெறுபவர்களுக்குத் தாம்பூலமும், தட்சிணையும் கண்டிப்பாகத் தருதல் வேண்டும். தானம் பெறுபவர்களை மரியாதையாக நடத்துதல் மிகவும் முக்கியம்.

அதேபோல், வாய்ப்புள்ளவர்கள் இந்தியாவின் கயா, தனுஷ்கோடி போன்ற பிதுர் காரியத்துக்காகவே பிரசித்தி பெற்ற தலங்களில் அல்லது கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற நீர் நிலைகளிலுக்கருகில் உள்ள கரைகளில் திதியும், தானமும் தருவது சிறப்பு.

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதால் பல்வேறு பலன்கள் நம்மைச் சேர்கின்றன. 
Image result for எளிய முறை தர்ப்பணம்
1ம் நாள் – 14.09.2019 - பிரதமை - செல்வம் சேரும் 
2ம் நாள் – 15.09.2019 - துவிதியை - பெயர் சொல்லும் குழந்தைகளைப் பெறலாம். 
3ம் நாள் – 16.09.2019 - திரிதியை - நினைத்த காரியங்கள் நிறைவேறும் 
4ம் நாள் – 17.09.2019 - சதுர்த்தி - பகையிலிருந்து எளிதில் விடுபடலாம். 
5ம் நாள் – 18.09.2019 - பஞ்சமி - அசையா சொத்துக்கள் மற்றும் செல்வம் பெருகும். 
6ம் நாள் – 19.09.2019 - சஷ்டி - பேரும், புகழும் தேடி வரும். 
7ம்நாள் – 20.09.2019 - சப்தமி - தகுதியான மற்றும் சிறந்த பதவிகள் கிடைக்கும்.
8ம் நாள் – 21.09.2019 - அஷ்டமி -அறிவு கூர்மை பெறும். 
9ம் நாள் – 22.09.2019 - நவமி - நல்ல வாழ்க்கைத்துணை மற்றும் நல்ல குடும்ப சூழல் அமையும். 
10ம் நாள் – 23.09.2019 -  தசமி - நீண்ட நாள் ஆசை உடனடியாக நிறைவேறும். 
11ம் நாள் – 24.09.2019  - ஏகாதசி - கல்வி, விளையாட்டு, கலைகளில் அசுர வளர்ச்சி கிடைக்கும். 
12ம் நாள் – 25.09.2019 -  துவாதசி - ஆபரணங்கள் சேரும். 
13ம் நாள் – 26.09.2019 - திரயோதசி - விவசாயம் மற்றும் தொழில் செழிக்கும். தீர்க்காயுள் கிடைக்கும். 
14ம் நாள் –  27.09.2019 - சதுர்த்தசி - பாவம் கழியும். வாரிசுகளுக்கும் நன்மையே நடக்கும். 
15ம் நாள் – 28.09.2019 - மகாளய அமாவாசை - அத்தனை பலன்களும் நமக்குக் கிடைக்க, நமது முன்னோர்களின் பரிபூரண ஆசி கிடைக்கும். 

இவ்வாறான சிறப்புக்களால்தான், தை அமாவாசை, ஆடி அமாவாசையைக் காட்டிலும் மகாளய அமாவாசை அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அனைத்து முன்னோர்களுக்கு மட்டுமல்லாமல், நண்பர்களுக்கும், முகம் தெரியாதவர்களுக்கும் கூட அன்று தர்ப்பணம் செய்யலாம் என்பது மகாளயத்தின் சிறப்பு.

தவற விடக்கூடாத திதிகள்
மகாளய பட்சத்தில் பரணி நட்சத்திரம் தோன்றும் நாள் மகா பரணி என்றழைக்கப்படுகிறது .இந்த பரணி நட்சத்திரம் யம தர்மராஜன் ஆட்சி செய்யும் நட்சத்திரம்.எனவே இந்த நட்சத்திரம் மிகவும் சிறப்பு வாய்ந்த நட்சத்திரமாக கருதப்படுகிறது.

புரட்டாசி 1 (18.09.2019) செவ்வாய்   - மகாபரணி  - அனைவருக்கும் பொதுவானது

புரட்டாசி 05 (22.09.2019) ஞாயிறு  - மகாவியதீபாதம்  - அனைவருக்கும் பொதுவானது

புரட்டாசி 05 (22.09.2019) ஞாயிறு  - மத்யாஷ்டமி  - அனைவருக்கும் பொதுவானது

புரட்டாசி 06 (23.09.2019) திங்கள்  - அவிதவாநவமி  - அனைவருக்கும் பொதுவானது

புரட்டாசி 09 (26.09.2019) வியாழன் -  சன்னியஸ்தமாளயம்  - சன்னியாசிகளுக்கு

புரட்டாசி 10 (27.09.2019)  வெள்ளி - சதுர்த்தசி  - கஜச்சட்சமயமாளயம்  - விதவைகள் அனுஷ்டிப்பதற்கு

இறந்துபோன நம் பெற்றோர்கள் மட்டுமல்லாது, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமன், மாமி, சகோதரன், சகோதரி, ஆசிரியர், சிஷ்யன், நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், நாம் அறிந்தவர்களில் இறந்துபோன எல்லோரையும் திரும்ப நினைவிற்குக்கொண்டுவந்து அவர்களுக்கும் எள்ளுடன் கலந்த தண்ணீரை வார்த்து தர்ப்பணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்வது அனைத்து ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான்.

எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான். ஒட்டுமொத்த முன்னோரையும் அப்போது நினைவு கூர வேண்டும். தீர்த்தக்கரைகளுக்கு சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும்.  அந்தணர்களுக்கு ஆடைகள், ஏழைகளுக்கு உணவு, படிக்க சிரமப்படும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை என தானமளிக்க வேண்டும்.

இந்த காலங்களில் இராமேஸ்வரம், திருவெண்காடு, கோடியக்கரை, வேதாரண்யம், திருப்பூவனம் காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானஷரோவர், சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம். திருக்கோவரணம் போன்ற இடங்களிலும் பவானி கூடுதுரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், தென்காசி அருகில் உள்ள பாபநாசம் சிவாலய தீர்த்தக்கரை, கும்பகோணம் அருகில் உள்ள செதலபதி ஆதி விநாயகர் ஆலயம், பூம்புகார் சங்கமுகேஸ்வரர் ஆலயம், உடுமலைதிருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் ஆலயம், மற்றும் ஆற்றங்கரைகளிலும் தர்ப்பணம் மற்றும் சிரார்தங்கள் செய்வது சிறப்பு.

எளிய முறை தர்ப்பணம்:
தலை வாழை இலையில், கறுப்பு எள், பொரி, கற்கண்டு போன்றவற்றை வைத்து கொள்ள வேண்டும். முன்னோர் சாபம் நீங்க, தமது முன்னோரின் பெயரை, 21 முறை வெள்ளை தாளில் எழுதி, மஞ்சள் தடவி சுருட்டி, நுாலால் கட்டி எடுத்து கொள்ள வேண்டும். இலையில் அனைத்தையும் வைத்து, கையில் பிடித்து, ஆற்றில், கிழக்கு திசையில் சூரியனை நோக்கி நிற்க வேண்டும். தலைக்கு மேல் துாக்கி, ஆகாயத்தை காட்டி பிரார்த்தனை செய்து, பின் நீரில் மூழ்கி, தண்ணீரை மூன்று முறை தலைக்கு பின்னால் தெளித்து, முழுவதுமாய் மூன்று முறை மூழ்கி வெளியில் வர வேண்டும். இந்த எளிய பரிகாரம், எப்பேர்பட்ட முன்னோரின் சாபத்தையும் நீக்கிவிடும்.






No comments:

Post a Comment