ராஜ்குமார் அன்ணா அவர்கள் முருகன் அடியார் ஒருவரை கௌரவித்தபோது. உடன் ஆதி ஐயா |
சிங்கபெருமாள் கோவிலில் இருந்து வரும்போது வழிகாட்டிப் பலகை |
சிங்கபெருமாள் கோவிலில் இருந்து சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலும், ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 9 கி.மீ. தொலைவில் இருக்கும் வல்லக்கோட்டை என்ற ஊரில் வல்லக்கோட்டை முருகன் கோவில் அமைந்து இருக்கிறது. இது 1200 ஆண்டு காலம் பழமை வாய்ந்தது. தமிழகத்திலேயே இக்கோவிலில்தான் 7 அடி முருகன் சிலை அமையப்பெற்றுள்ளது. இச்சிலைதான் மிகப்பெரிய முருகன் சிலை ஆகும்.
வல்லக்கோட்டை முருகன் ஆலய தீர்த்தக்குளம் |
முருகப்பெருமானின் துணைவியரான வள்ளி மற்றும் தெய்வானையின் சிலைகள் இருபுறமும் இருக்கின்றன. துர்வாச முனிவரின் ஆலோசனையின்படி தன் ராஜ்ஜியத்தை திரும்பப் பெறுவதற்காக பகரீதன் இந்த கோவிலை கட்டியதாக புராணம் கூறுகிறது. வல்லான் என்கிற அரக்கன் தேவர்களை சித்திரவதை செய்ததாகவும், முருகப்பெருமான் அவனை வீழ்த்தி இவ்விடத்தில் அமைதியை நிலைநாட்டியதாகவும், அவரை பெருமைபடுத்தும்படி இந்த கோவில் கட்டப்பட்டதாகவும் மற்றும் ஒரு புராணச் செய்தியும் கூறப்படுகிறது.
வல்லக்கோட்டை முருகன் கோவில் முகப்புத் தோற்றம் |
வல்லக்கோட்டை முருகன் கோவில் முகப்புத் தோற்றம் |
வல்லக்கோட்டை முருகன் கோவில் முகப்புத் தோற்றம் |
வல்லக்கோட்டை முருகன் கோவில் அன்னதானக்கூடம் K.K.V.K டிரஸ்ட் இயங்கிவரும் அன்னதானக்கூடத்தில் நமது நண்பர்கள் காலை உணவருந்தும் காட்சிகள். |
வல்லக்கோட்டை முருகன் கோவில் அன்னதானக்கூடத்தின் வரவேற்பறை |
வல்லக்கோட்டை முருகன் கோவில் அன்னதானக்கூடத்தின் வரவேற்பறை |
வல்லக்கோட்டை முருகன் கோவில் அன்னதானக்கூடத்தின் வரவேற்பறை |
நம் குழுவினர் அன்னதானம் வழங்கியபோது |
நம் குழுவினர் அன்னதானம் வழங்கியபோது |
நம் குழுவினர் அன்னதானம் வழங்கியபோது |
பூஜைக்காக நாம் கட்டணமாக செலுத்தியது மிகச் சொற்பமே....அக்கட்டணத்தைக்கூட நமது குழுவின் நண்பர் திரு,ஹேமந்த் ஐயா அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள் .அவர்களுக்கு நமது குழுவின் சார்பாக நன்றிகளை தெரிவிக்கின்றோம் .
ஏற்பாடுகள் அனைத்தும் மெய்சிலிர்க்க வைத்தது. முருகனின் திருப்பாதத்தில் நம் குழுவினரே முதலில் அமர்ந்து முருகன் போற்றி பாடல்கள் பாடி அசத்தினார்கள். அனைத்திற்கும் எம்பெருமான் முருகனின் அருளால் திரு ஆதி ஐயா அவர்களே காரணம் என்றே சொல்லவேண்டும்.
பூஜைக்குப் பிறகு நமது குழுவினருக்கு உபயதாரர் மரியாதை வழங்கினார்கள். பின்பு முருகனுக்கு அபிஷேகம் செய்த பால், பஞ்சாமிருதம், வெண்பொங்கல் பிரசாதமாக வழங்கினார்கள்.
வல்லக்கோட்டை கோவிலுக்கு வரும் பக்தர்கள் உணவுக்காக கவலைப்படத்தேவையில்லை. காலை மற்றும் மதியம் இங்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. எத்தனை முறை வேண்டுமோ கேட்டு வாங்கலாம். இந்த ஏற்பாட்டினை மிகச் சிறப்பாக செய்துவரும் வல்லக்கோட்டை பழனி பாதயாத்திரை குழு, தாம்பரம் நண்பர்களுக்கு நமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள் .
வல்லக்கோட்டைக்கு வர விரும்புவோர்,அல்லது அன்னதானம் செய்ய விரும்புவோர் K.K.V.K டிரஸ்ட்டினை தொடர்புகொள்ளலாம்.
அல்லது இந்த இணையத்தில் உள்ள செல்லிடை பேசியிலும் தொடர்புகொள்ளலாம்.
நன்றி.
No comments:
Post a Comment