Subscribe

BREAKING NEWS

04 October 2019

அகோர வீரபத்திரர் அனுமந்தபுரம் கோவில் தரிசனம்...

தாம்பரம் TO செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள் கோவிலில் இருந்து அனுமந்தபுரம் ரோடு வழியாக சரியாக  10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அனுமந்தபுரம்.  இங்கே அகோர வீரபத்திர சுவாமிகள் எழுந்தருளி சேவை சாதிக்கிறார் .அகோர என்றால் கோபம் கோபமான தோற்றத்தில் மூலவர் வீற்றிருக்கிறார் .கோவில் நடை திறக்கும் நேரம் காலை எட்டு மணி முதல் நண்பகல் ஒரு மணி வரையிலும்,பின்பு நாலு மணி முதல் இரவு எட்டுமணி வரையிலும் நடை திறந்திருக்கும், அரசாங்கத்தால் நடத்தப்படும் அன்னதானம் இங்கு தினமும் வழங்கப்படுகிறது .இது இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கோவிலாகும்.
சிங்கபெருமாள் கோவில் to அனுமந்தபுரம் ரோடு 

 சிங்கபெருமாள் கோவில் to அனுமந்தபுரம் ரோடு ,   இந்த பசுமை நிறைந்த வழியை கடந்து போகும்போது வழியில் தென்மேல்பாக்கம் ,கொண்டமங்களம் மற்றும் தர்காஸ் ஆகிய சிற்றூர்களை கடந்து சென்றால் கடைசியாக நாம் அனுமந்தபுரம் சென்றடையலாம் .

அஷ்ட  வீரட்டங்களில் குறிப்பிடத் தக்கது தட்சனைத் தண்டித்தது. தட்சனின் மகளாகத் தோன்றி, தாட்சாயினி எனும் பெயரில் வளர்ந்துவந்த உமையவளின் வழிபாட்டை ஏற்று, அவளை மணம் முடித்தார் சிவனார்.



வழியில் நாம் காணும் வழிகாட்டி பலகை 
அதன் பொருட்டு அவர் மேல் கோபம் கொண்டிருந்த தட்சன், ஒருமுறை மாபெரும் யாகத்தை நடத்தினான். அதற்கு சிவனாரை விடுத்து மற்ற அனை வருக்கும் அழைப்புவிடுத்தான். சிவ பெருமானுக்குரிய அவிர்பாகத்தை கொடுக்க மறுத்து பெரும் தவறிழைத்தான்.

வீரபத்திர சுவாமிக்கு முன்பு நாம் காணும் ஐயனார் கிராமத்து கோவில்

கோவிலின் வெளிப்புற தோற்றம்


                                                  (குளக்கரை அரசமர விநாயகர் )


 தட்சனின் ஆணவத்தை அழிக்க எண்ணிய சிவப்பரம்பொருள், தன் அம்சமாக வீரபத்திரைத் தோற்றுவித்தார்.  பின்னர் சிவக்கட்டளையை ஏற்று தட்சனையும் அவனது யாகத்தையும் அழித்தார் வீரபத்திரர் என்கின்றன புராணங்கள். ஈசனிடமிருந்து தோன்றிய வீரபத்திரர், குலதெய்வமாக  மக்களால் வழிபடப்படுகிறார்.  பராசக்தியால் தோற்றுவிக்கப்பட்ட பத்ரகாளி வீரபத்திரருக்குத் தேவியாக இருந்து அருள்கிறாள். வீரபத்திரரும், பத்ரகாளி யும் தட்ச யாகத்தை சம்ஹாரம் செய்த நிகழ்ச்சி, புராணங்களிலும் இலக்கியங்களிலும் பெரிதும் போற்றப் படுகிறது. மகா ஸ்கந்தம், சிவமகா புராணம், பாகவதம், காசிகண்டம்  போன்ற நூல்களில் `தட்ச சம்ஹாரம்' பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது.கோவிலின் வலதுபுறம் சற்று தொலைவில் அமைந்துள்ளது இந்த பத்ரகாளியம்மன் கோவில் அதனை கீழே உள்ள புகைப்படத்தில் நீங்கள் காணலாம்.


அருள்மிகு பிடாரி பத்ரகாளியம்மன் கோவில்









பிடாரி காளியம்மன் கோவிலின் முழுத்தோற்றம் 






பிடாரி காளி கோவிலின் அருகில் புதியதாக கட்டப்படும் திருக்குளம்


இக்கோவிலின் பின்புறத்தில் அமைந்துள்ளது அருள்மிகு மொண்டிமாரியம்மன் ஆலயம் .
மொண்டி மாரியம்மன் ஆலயம் 
மொண்டி மாரியம்மன் கோவிலின் முழு தோற்றம் 
































மூலவர் சன்னதி

கந்தபுராணம், தட்ச யாகப் பரணி, திருக்குற்றால புராணம், காஞ்சி புராணம், பறியலூர் புராணம் ஆகிய நூல்களில் வீரபத்திரரின் பெருமைகள் காணப்படுகின்றன. அங்காள பரமேஸ்வரி பெருமைகளைக் கூறும் கதைப்பாடல்களிலும் வீரபத்திரர் பற்றிய பெருமைகள் கூறப்படுகின்றன.


 வெற்றிலை இல்லாத சுபகாரியங்கள் இல்லை. பலவகை உள்நோய்களை அடியோடு தீர்க்கும் குணமுடையது வெற்றிலை. அதுபோல் வெற்றிலைத் தோட்டத்தில் தோன்றியவர், "அனுமந்தபுரம் ஸ்ரீ அகோர வீரபத்திரர்!" தீய சக்திகள்,  மனதை பாதிக்கும் பில்லி சூனியம் ஏவல் ஆகியவற்றை விரட்டும் சக்தி மிக்கவராக விளங்குகிறார். மனநலம் பாதிக்கப்பட்டோர், தீராத மனோ வியாதியால் பீடிக்கப்பட்டோர், மனக்குழப்பம், தெளிவின்மை,  மனசஞ்சலம், வேலை வாய்ப்பு, பதவி உயர்வு போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வுவேண்டி சில நாட்கள் இங்கு தங்கி குணம்பெற்று செல்கின்றனர்.சென்னையை சுற்றி உள்ள மக்களுக்கு இது ஒரு குல தெய்வமாகவும் விளங்குகிறது,பிரார்த்தனை நிறைவேறியவுடன் பொங்கல் வைத்து இத்தல வீரபத்திரரை வணங்கி வழிபடுகின்றனர்.
கோவிலின் பின்புற தோற்றம் 

கோவிலின் விசேஷ நாட்களின் விவரம் 

கோவிலின் எதிரே உள்ள திருக்குளம்

திருக்குளத்தின் முழுத்தோற்றம்






கோவிலின் அருகில் தனியாக அமைக்கப்பட்ட சிவன் கோவில் 




இங்கு மூலவருக்கு வெற்றிலை மாலை  காப்பு விசேடமான ஒன்று. ஆதலால் அர்சனையுடன் சேர்த்து  வெற்றிலை மாலையும் பக்தர்கள் வாங்கிச்செல்வது வழக்கம்.அமாவாசை .பௌர்ணமி ,சிவராத்திரி போன்ற நாட்களில் திருவிழாகோலம் பூண்டிருக்கும் அப்போது சிங்கபெருமாள்கோவிலில்  இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்,மற்ற நாட்களில் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படுகிறது.






No comments:

Post a Comment