Subscribe

BREAKING NEWS

21 October 2018

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே

அனைவருக்கும் வணக்கம்.

நம் தளத்தின் மாத துவக்கம் அன்னசேவை போன்ற பதிவுகளால் தான் ஆரம்பம் ஆகும். யாராவது கவனித்தீர்களா? என்று தெரியவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக வேறு சில பதிவுகள் தரப்பட்டிருக்கும். இவை நாம் தீர்மானம் செய்யவில்லை. குருவருளால் தான் இவை தீர்மானம் செய்யப்படுகின்றன. செப்டம்பர்  மாதம் மனைவிக்கு மரியாதை என்ற பதிவு தரவேண்டி அளித்தோம். அக்டோபர் மாதம் தாமிரபரணி புஷ்கரம் பற்றிய பதிவு அளித்தோம். இவை இரண்டும் குருவருளால் தான். இதோ  இன்றைய பதிவில் உண்டி கொடுத்தோர் பற்றி பார்க்க இருக்கின்றோம்.


தமிழ்க் காப்பியமாகிய மணிமேகலை, உயிர்களின் வாழ்க்கைக்கு உணவு எவ்வளவு முக்கியமானது என்பதனை எடுத்துரைக்கும். இந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்கு உண்ணுவதற்கு உரிய உணவு கொடுத்தோர், உயிர் கொடுத்தோராகக் கருதப்படுவார்கள்.

மண்டிணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே


என்று குறிப்பிடுகிறது மணிமேகலை. உணவு இல்லாமல் எந்த உயிரும் வாழ இயலாது. எனவே, உயிர் வாழ்வதற்கு அடிப்படைத் தேவை உணவு. மேலும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு
இல்லாத நாடு, பொருளியல் வளம்பெற்ற நாடாகக் கருத இயலாது. உணவுப் பற்றாக் குறையே, நாட்டின் அமைதி இன்மைக்கும்,சமூக விரோதச் செயல்களுக்கும் அடிப்படைக் காரணம்.

ஒரு நாட்டில் நிலையான அரசும், நேர்மையான ஆட்சியும்,செல்வச் செழுமையும், அமைதியும் இருக்க வேண்டுமானால்,அந்நாட்டில் உணவு போதிய அளவுக்கு விளைவிக்கப்பட வேண்டும்.பார்ப்பதற்கு ஏதோ மேலெழுந்த வரிகள் போன்று இருக்கின்றது.சற்று ஆராய்ந்து பார்த்தால் இந்த வரிகள் நாட்டின் அறம் பற்றியும் பேசுகின்றது. இப்போது புரிகின்றது? ஏன் வள்ளலார் அன்னதானத்தை கையில் எடுத்தார் என்று? ஆம்..உணவு என்ன அப்படியே கிடைத்து விடுமா என்ன?

உணவு உற்பத்திக்கு அடிப்படை அமைத்துக் கொடுப்பது மழை.மழை இல்லாவிட்டால், இந்த உலகத்தில் ஒரு புல்கூட முளைக்காது. உயிர் வாழ்வதும் கடினம். இந்த உண்மையை நன்கு
உணர்ந்தவர் வள்ளுவர். உலகிற்கு உணவுப் பொருள் உற்பத்தியாவதற்குக் காரணம் மழை. எனவே மழையைப் பற்றிய கருத்துகளை வழங்குவதற்கு வள்ளுவர் ஓர் அதிகாரத்தை அமைத்துள்ளார்.

கடவுள் வாழ்த்திற்கு அடுத்த நிலையில் இரண்டாவதாக வான் சிறப்பு என்ற அதிகாரத்தை அமைத்துள்ளார். இதிலிருந்து மழைக்குத் திருவள்ளுவர் கொடுத்த சிறப்பு புலனாகும்.

வானுலகத்தில் வாழும் தேவர்கள் உண்ணும் உணவை ‘அமிழ்தம்’ என்பார்கள். அமிழ்தத்தை உண்டால் இறப்பு இல்லை என்பர். தேவர்கள் அமிழ்தத்தை உண்டு சாகாவரம் பெற்றனர். எனவே
இதைத் தேவாமிர்தம் என்பர். நாம் உண்ணும் உணவு மிகவும் இனிமையாகவோ, சுவையாகவோ இருந்தால் அமிழ்தம் போல் இருக்கிறது என்கிறோம். அமிழ்தத்தை உண்ட அனுபவமோகண்ணால் கண்ட அனுபவமோ இல்லாமலே ‘என்ன சுவை! என்ன  சுவை, அமிழ்தம் போல் இருக்கிறது’ என்று சொல்கிறோம்.

‘அமிழ்தம்’ என்ற சொல் மிகுந்த செல்வாக்கு பெற்றுள்ளது.எனவே தான் உயிர்களை வாழவைக்கும் உணவைத் தரும்மழையையும் அமிழ்தம் போன்றது என்கிறார் வள்ளுவர். எனவே தான் உண்டி கொடுப்பது என்றால் உயிர் கொடுப்பது போன்றதாகும். நாமும் அமாவாசை போன்ற நாட்களில் அன்னசேவை செய்து வருகின்றோம். அகத்தியர் வனம் மலேசியா குழுவும் நம்முடன் இந்த சேவையில் இணைந்து வழிகாட்டி வருகின்றது.

இனி திருஅண்ணாமலை தயவு சித்தாஸ்ரமம் நிகழ்வுகளை இங்கு தொகுத்தளிக்க விரும்புகின்றோம்.

இங்கு காலை முதல் இரவு வரை அடுப்பு எரிந்து கொண்டு தான் இருக்கின்றது. அக்னி தலமான திருஅண்ணாமலையில் அன்னசேவை செய்வது நமக்கு பற்பல புண்ணியம் சேர்க்கும் செயலாகும். அன்னபூரணி இங்கு பூரணத்துவம் பெற்று இங்கே இருப்பதால் தான் உணவு என்று கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று பதில் சொல்லாது உணவு தருகின்றார்கள். காலையில் சிறு வண்டியில் சாம்பார் சேர்த்து சாதம் கொடுக்கின்றார்கள். மதியம் மகேஸ்வர பூசை செய்து சாதுக்களுக்கு அன்னம்பாளிப்பு செய்து வருகின்றார்கள்.மாலையில் சாதுக்களுக்கு சப்பாத்தி,இட்லி என உணவு தருகின்றார்கள்.







மாலை உணவு பரிமாறப்படும் காட்சிகள். இங்கு இரவு உணவு என்று கிடையாது, சாதுக்களுக்கு மாலையில் தான் உணவு தர வேண்டும் என்பது நியதி..நாமும் மாலையில் தான் உணவு உட்கொள்ள வேண்டும். என்ன செய்வது ? நம் சூழல், பணி போன்றவற்றை பார்க்கும் போது நாம் நடுநிசியில் அல்லவா உணவு உட்கொள்கின்றோம்.





இந்த காட்சியில் முதலாவதாக இருக்கிறாரே? இவர் பாடினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். அடுத்த முறை நேரில் அவருடன் பேச வேண்டும்.















 இவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய செய்தி இருக்கின்றது? இவர்கள் தட்டில் உணவு கண்டதும் சாப்பிட மாட்டார்கள். அனைவரும் கூடி, சில பதிகங்கள் பாடி, நன்றி சொல்லித் தான் உணவை சாப்பிட ஆரம்பம் செய்வார்கள். இது நாம் கைக்கொணர வேண்டிய பழக்கம். பதிகங்கள் பாடவேண்டாம், ஆனால் தயை கூர்ந்து நன்றி சொல்லியாவது சாப்பிட ஆரம்பிக்கலாமே...

அடுத்து மகேஸ்வர பூசை நிகழ்வுகள். மகேஸ்வர பூசைக்கு உபயம் செய்த நல்ல உள்ளங்களுக்கு தயவு சித்தாஸ்ரமத்தின் சார்பிலும், நம் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவின் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கர்மம் நீக்கும் பூசை மகேஸ்வர பூசை, அடியார்களிடம் அன்பை தரும் பூசை மகேஸ்வர பூசை, சித்தமெல்லாம் சிவமயம் என உணர்த்தும் பூசை மகேஸ்வர பூசை.











கூடுவாஞ்சேரி திரு.சிவஞானம் ஐயாவிற்கு நம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இவரின் தொடர்பு கிடைக்க நாம் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இறைநிலையின் கருணையை எண்ணி எண்ணி மகிழ்கின்றோம். இவரின் அறிமுகம் வார்த்தைகளில் அடங்காதது. எப்படி எப்படியோ ஆரம்பித்த ஆன்மிக பயணம் கூடுவாஞ்சேரியில் நம்மை முழுமை பெற செய்திருக்கிருக்கின்றது.

















கூடுவாஞ்சேரி திரு.சிவஞானம் ஐயா அவர்கள் நம் குருநாதர் வேதாத்திரி மகரிஷி அவர்களின் பேரன் ஆவார். கேட்கும் போதே உணர்வு எப்படியோ, நமக்கு இந்த புனித மண்ணில் மெய் சிலிர்க்க வைக்கின்றது. இவரைப் பற்றி தனிப்பதிவாக அளிக்க குருவருள் வேண்டுகின்றோம். இன்னுமொரு செய்தி..இந்த பதிவு அளிப்பதற்கு முன்னர் திரு.சிவஞானம் ஐயா அவர்களிடம் சந்தித்து பேசி வந்தோம். பதிவில் யார் என்று பார்க்கும் போது மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றது..இது குருவருள் தானே !



















                                        நன்றி..நன்றி....கோடான கோடி நன்றி










அடுத்து மாலை அன்னதான காட்சிகள்




















அன்னதானம் மட்டுமின்றி இங்கு கோ தானம் செய்கின்றார்கள். மிக மிக மகிழ்வாக உள்ளது. இது போன்ற ஆசிரமங்களில் மற்ற உயிர்களையும் வளர்த்து நமக்கு தேவையான பொருட்களை பெறுவது நலம். இதன் மூலம் நாம் முன்னோர் காட்டிய வழியில் செல்லலாம். உதாரணத்திற்கு நாட்டு ரக பசு மாடுகளை தானம் செய்து தூய திருநீறு பெறுதல், அன்றாட அபிஷேகத்திற்கு தூய பசும் பால்,கோமியம் என அடுக்கிக் கொண்டே போகலாம். பதிவை முழுமை செய்ய விரும்புகின்றோம்.















29/7/2018 அன்று கோ தானம் செய்த உபயதாரர் கூடுவாஞ்சேரியை சேர்ந்த திரு.விட்டல் குடும்பத்தார்க்கு நம் நன்றியை தயவு சித்தாஸ்ரமம் சார்பிலும், நம் தளம் சார்பிலும் தெரிவித்துக் கொள்கின்றோம். இப்பொது ஒரு விஷயம் நம் கண்ணில் பட்டுள்ளது. தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் என்ற இதற்கு முந்தைய பதிவில் கோ-பூசையோடு என்று பதிவு ஆரம்பம் செய்தோம்.இன்றைய பதிவில் கோ-தானம் என்று பசுவிற்குரிய செய்தியோடு முழுமை செய்கின்றோம். இதனை நாம் தீர்மானிக்கவில்லை. நமக்கு மேலே உள்ள திருவருளும் குருவருளும் தான் தீர்மானிக்கிறார்கள்.

வழிநடத்தும் குருமார்களுக்கு நன்றி.

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் !
பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை !
என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற !
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே !

மேலும் விபரங்களுக்கு:

ஸ்ரீ சரவணபவா சுவாமிகள்,
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம், கிரிவல பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகில், திருவண்ணாமலை, செல்: (0)9944800220 (இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மகேஸ்வர பூஜை செய்ய பதிவு செய்து கொள்ளலாம்)

ஆகஸ்ட்  மாத நிகழ்வின் துளிகளை அடுத்த பதிவில் அறிவோம்.

மீள்பதிவாக:-


தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post.html

பல கோடி நன்மைகள் வழங்கும் அன்னதானம் & மகேஸ்வர பூசை - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_8.html

அன்னதானம் கொடுப்பது அனைத்தையுமே கொடுப்பதாம் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - ம(மா)கேஸ்வர பூசை - http://tut-temple.blogspot.in/2018/01/blog-post_24.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_18.html



No comments:

Post a Comment