அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.
நம் தளத்தின் மாத துவக்கம் அன்னசேவை போன்ற பதிவுகளால் தான் ஆரம்பம் ஆகும். யாராவது கவனித்தீர்களா? என்று தெரியவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக வேறு சில பதிவுகள் தரப்பட்டிருக்கும். இவை நாம் தீர்மானம் செய்யவில்லை. குருவருளால் தான் இவை தீர்மானம் செய்யப்படுகின்றன.கடந்த டிசம்பர் மாத பதிவாக அகத்தியர் ஜெயந்தி பற்றி அளிக்க நேரிட்டது. ஜனவரி மாதத்தை வாழ்த்து பதிவாக அளித்தோம். இனிமேல் மகேசுவர பூசை பதிவு வழக்கம் போல் தொடரும்.
அடுத்து சாதுக்கள் உண்ண ஆரம்பித்து விட்டார்கள். என்னப்பா சிவனடியார், சாதுக்கள் என்று நாம் புளகாங்கிதம் கொள்வதாக நினையாதீர். சிவனடியார் ஒவ்வொருவரும் நம் ஊழ்வினை கழிக்க வந்தவர்கள். அடியார் வேறு.சிவன் வேறு அல்லர். நம் தேகமே கர்ம வினைகளின் தொகுப்பு, வினைப்பதிவு தான் நமக்கு தேகத்தை தருகின்றது, இந்த சதைப் பிண்டத்தில் எத்துணை ஜென்ம கர்ம வாசனைகள்.
இவை அனைத்தும் ஒரு நொடியில் போய் விடுமா என்ன? கொஞ்சம் கொஞ்சமாக இது போன்ற தர்ம காரியங்களை செய்து செய்து, மனதை அறிந்து இனி எண்ணத்தால் கூட தீங்கிழைக்க மாட்டேன் என்ற நிலை வர வேண்டும்.
பார்க்க பரதேசி போன்று நீங்கள் சாதுக்களை எண்ணலாம். அந்த பரத்தை அல்லவா இவர்கள் தேடுகிறார்கள். பட்டினத்தாரை எடுத்துக் கொள்ளுங்கள். எத்துணையோ பொன்னை,பொருளை உதறி விட்டு அல்லவா ஒரே ஒரு துணி உடுத்தி வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது கணக்குப்பிள்ளை நம்மிடம் உள்ள பொன்னையும்,பொருளையும் என்ன செய்வது என்று கேட்டதற்கு போய் ..குப்பையில் தூக்கிப் போடு என்றார். அதே போல் இங்கே எத்துனை சாதுக்கள் தம் வீட்டை விட்டு,பொருள் பற்றை விட்டு வந்திருக்கின்றார்களோ?
அதனால் தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். சாதுக்களை கண்டால் மனத்தளவிலாவது வணங்குங்கள். அருகே சென்று அவர்களுக்கு என்ன தேவை என்று கேட்டு வாங்கிக்கொடுங்கள். குறைந்த பட்சம் நூறு ரூபாய் செலவழிப்பதில் தவறொன்றும் இல்லை. கை, கால் நன்றாகத் தானே உள்ளது.ஏன் இப்படி என்று நினைக்காதீர்கள். இதோ.திருமந்திரம் சொல்கின்றது.
அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில் என்
பகரு ஞானி பகல் ஊண் பலத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயம் தானே
அந்தணர்க்கு ஆயிரமாயிரம் (கிராமங்கள்) செய்தாலும், ஆயிரமாயிரம் கோட்டை, கோயில்கள் கட்டி முடித்தாலும், ஞானிக்கு அளிக்கப்படும் ஊண் பலம் என்று சொல்லப்படும் அன்னதான தர்மத்திற்கு ஈடாக எந்த செய்கையும் நிச்சயமாக நிகரில்லை என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார் திருமூலர்.
அன்று மகேசுவர பூசை முடித்த பின்னர் மேலும் சிலர் வந்தார்கள்.அவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.
பின்னர் சுவாமிகளிடம் சொல்லிவிட்டு, கிரிவலம் தொடங்கினோம்.
ஒவ்வொருமுறை கிரிவலம் வரும் போது இங்கே நம் மனம் செல்லாமல் இருக்காது. புதிது புதிதாக கிரிவலப்பாதையில் கோயில்கள் முளைக்கின்றன. ஆனால் நம் நால்வர் பதித்த மண்ணில் உள்ள கோயில்களை கண்டும் காணாததும் போல் நாம் இருக்கின்றோம்.
வாயலிங்கம் தரிசனம் முடித்து கிரிவலம் தொடர்ந்தோம்.
இதோ இடுக்கு பிள்ளையார் தரிசனம்.
ஈசான்ய லிங்கம் தரிசனம் பெற்றோம்.
எம லிங்கத்தை நோக்கி.
அடுத்து நிருதி லிங்கம் அடைந்து விட்டோம்.
மீண்டும் ஒரு முறை
பகரு ஞானி பகல் ஊண் பலத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயம் தானே
ஸ்ரீ சரவணபவா சுவாமிகள்,
தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post.html
பல கோடி நன்மைகள் வழங்கும் அன்னதானம் & மகேஸ்வர பூசை - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_8.html
அன்னதானம் கொடுப்பது அனைத்தையுமே கொடுப்பதாம் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - ம(மா)கேஸ்வர பூசை - http://tut-temple.blogspot.in/2018/01/blog-post_24.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_18.html

சாதுக்களை அமர வைத்து, வாழை இலை போட்டு உணவு பதார்த்தங்கள் பரிமாறி,
அவர்களுக்கு சந்தனம் இட்டு, தலையில் பூக்கள் சூடி, கையில்
வாழைப்பழம்,வெற்றிலை,பாக்கோடு தட்சினை கொடுத்து, அவர்களின் கால் தொட்டு
வணங்கி விட்டோம். அடுத்து இதோ சரவன்பவா சுவாமிகள் ஒவ்வொரு அடியாரையும் சிவனாக்கி தீபம் காட்டி வருகின்றார்.
அடுத்து சாதுக்கள் உண்ண ஆரம்பித்து விட்டார்கள். என்னப்பா சிவனடியார், சாதுக்கள் என்று நாம் புளகாங்கிதம் கொள்வதாக நினையாதீர். சிவனடியார் ஒவ்வொருவரும் நம் ஊழ்வினை கழிக்க வந்தவர்கள். அடியார் வேறு.சிவன் வேறு அல்லர். நம் தேகமே கர்ம வினைகளின் தொகுப்பு, வினைப்பதிவு தான் நமக்கு தேகத்தை தருகின்றது, இந்த சதைப் பிண்டத்தில் எத்துணை ஜென்ம கர்ம வாசனைகள்.
இவை அனைத்தும் ஒரு நொடியில் போய் விடுமா என்ன? கொஞ்சம் கொஞ்சமாக இது போன்ற தர்ம காரியங்களை செய்து செய்து, மனதை அறிந்து இனி எண்ணத்தால் கூட தீங்கிழைக்க மாட்டேன் என்ற நிலை வர வேண்டும்.
பார்க்க பரதேசி போன்று நீங்கள் சாதுக்களை எண்ணலாம். அந்த பரத்தை அல்லவா இவர்கள் தேடுகிறார்கள். பட்டினத்தாரை எடுத்துக் கொள்ளுங்கள். எத்துணையோ பொன்னை,பொருளை உதறி விட்டு அல்லவா ஒரே ஒரு துணி உடுத்தி வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது கணக்குப்பிள்ளை நம்மிடம் உள்ள பொன்னையும்,பொருளையும் என்ன செய்வது என்று கேட்டதற்கு போய் ..குப்பையில் தூக்கிப் போடு என்றார். அதே போல் இங்கே எத்துனை சாதுக்கள் தம் வீட்டை விட்டு,பொருள் பற்றை விட்டு வந்திருக்கின்றார்களோ?
அதனால் தான் மீண்டும் மீண்டும் சொல்கின்றோம். சாதுக்களை கண்டால் மனத்தளவிலாவது வணங்குங்கள். அருகே சென்று அவர்களுக்கு என்ன தேவை என்று கேட்டு வாங்கிக்கொடுங்கள். குறைந்த பட்சம் நூறு ரூபாய் செலவழிப்பதில் தவறொன்றும் இல்லை. கை, கால் நன்றாகத் தானே உள்ளது.ஏன் இப்படி என்று நினைக்காதீர்கள். இதோ.திருமந்திரம் சொல்கின்றது.
அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில் என்
சிகரம் ஆயிரம் செய்து முடிக்கில் என்
பகரு ஞானி பகல் ஊண் பலத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயம் தானே
அந்தணர்க்கு ஆயிரமாயிரம் (கிராமங்கள்) செய்தாலும், ஆயிரமாயிரம் கோட்டை, கோயில்கள் கட்டி முடித்தாலும், ஞானிக்கு அளிக்கப்படும் ஊண் பலம் என்று சொல்லப்படும் அன்னதான தர்மத்திற்கு ஈடாக எந்த செய்கையும் நிச்சயமாக நிகரில்லை என்று அழுத்தம் திருத்தமாக கூறுகிறார் திருமூலர்.
அன்று மகேசுவர பூசை முடித்த பின்னர் மேலும் சிலர் வந்தார்கள்.அவர்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.
பின்னர் சுவாமிகளிடம் சொல்லிவிட்டு, கிரிவலம் தொடங்கினோம்.
ஒவ்வொருமுறை கிரிவலம் வரும் போது இங்கே நம் மனம் செல்லாமல் இருக்காது. புதிது புதிதாக கிரிவலப்பாதையில் கோயில்கள் முளைக்கின்றன. ஆனால் நம் நால்வர் பதித்த மண்ணில் உள்ள கோயில்களை கண்டும் காணாததும் போல் நாம் இருக்கின்றோம்.
வாயலிங்கம் தரிசனம் முடித்து கிரிவலம் தொடர்ந்தோம்.
அடுத்து குபேர லிங்கம்.
இதோ இடுக்கு பிள்ளையார் தரிசனம்.
அடுத்து பஞ்சமுக தரிசனம்.
ஈசான்ய லிங்கம் தரிசனம் பெற்றோம்.
அடுத்து மனம் அண்ணாமலையானே..அண்ணாமலையானே என்று குதூகலித்தது.
இதோ நெருங்கி விட்டோம்.
இதற்குத் தானே ஆசைப்பட்டோம் எம் சிவமே..என்று தொழுதோம்.
அடுத்து இந்திர லிங்கம்.
அடுத்து அக்னி லிங்கம்.
எம லிங்கத்தை நோக்கி.
அடுத்து நிருதி லிங்கம் அடைந்து விட்டோம்.
நம் TUT தல அன்பு பரிசை தயவு ஆசிரமத்தில் கொடுத்தோம்.
அன்றைய தினம் சனி பிரதோஷம் என்பதால் நந்தி தரிசனம் பெற்றோம். மகேசுவர பூசையோடு கிரிவலம், பிரதோஷ தரிசனம் என்று சிவனருள் முழுதும் உணர்ந்தோம். ஆனால் நாம் இந்த மகேசுவர பூசை மட்டும் செய்ய நினைத்தோம். நம்மை நம் குருமார்கள் பிரதோஷ தரிசனமும், கிரிவலமும் செய்ய பணித்தார்கள் என்பதே உண்மை. இந்த ஆண்டு மீண்டும் ஒரு முறை நம் தளம் சார்பில் மகேசுவர பூசையுடன் , வஸ்திர தானம் செய்ய உள்ளோம். குருவிடம் விண்ணப்பம் வைக்கின்றோம்.
மீண்டும் ஒரு முறை
பகரு ஞானி பகல் ஊண் பலத்துக்கு
நிகரிலை என்பது நிச்சயம் தானே
மேலும் விபரங்களுக்கு:
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம்,
கிரிவல பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகில்,
திருவண்ணாமலை,
செல்: (0)9944800220
(இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மகேஸ்வர பூஜை செய்ய பதிவு செய்து கொள்ளலாம்)
மீள்பதிவாக:-
தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post.html
பல கோடி நன்மைகள் வழங்கும் அன்னதானம் & மகேஸ்வர பூசை - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_8.html
அன்னதானம் கொடுப்பது அனைத்தையுமே கொடுப்பதாம் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - ம(மா)கேஸ்வர பூசை - http://tut-temple.blogspot.in/2018/01/blog-post_24.html
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_18.html
No comments:
Post a Comment