இறை அடியார்களே.
நாம் ஏற்கனவே அறிவித்ததைப் போல், சென்ற ஞாயிறு(11/06/2017) அன்று உலக நன்மை,உலக அமைதி வேண்டி கூட்டுப் பிரார்த்தனை பற்றி அறிவித்து இருந்தோம். பதிவினை படித்த அன்பர் பெருமக்கள் அனைவரும் இந்த வேள்வியில் கலந்து இருப்பீர்கள் என்று நம்புகின்றோம். வேள்வியில் இணைந்து ஷடாக்ஷர மந்திரம் ஓதிய அனைவரது வாழ்விலும் இன்ப ஒளி வீச ஆறுமுகனார் அருள் புரிவாராக !
இங்கே டெங்கிலில் உள்ள ஸ்ரீ மயூரநாதர் ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள் ஆலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்வின் துளிகளை இணைத்துள்ள ஒளிப் படங்கள் மூலம் உணர்வோம்.நேற்றைய தினம் வெள்ளியங்கிரி யாத்திரை சென்றதால், மலையேற்றத்தின் போது, ஷடாக்ஷர மந்திரம் ஓதி
தலைவரை (சிவ பெருமானை) தரிசித்தோம்.
ஷடாக்ஷர மந்திரம் என்கிறோமே? அப்படி என்றால் என்ன? இதன் மகிமை என்ன?
ஷடாக்ஷர - ஆறு எழுத்துக்கள்
ஷடாக்ஷர மந்திரம் என்பது 6 எழுத்துகள் இணைந்த மந்திரம்.அந்த ஆறெழுத்து மந்திரம்
சரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன் மகிமை என்ன ?
ச - லக்ஷ்மிகடாக்ஷம்
ர - ஸரஸ்வதி கடாக்ஷம்
வ - போகம் - மோக்ஷம்
ண - சத்ருஜயம்
ப - ம்ருத்யுஜயம்
வ - நோயற்ற வாழ்வு
ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம். நம: சிவாய என்பது பஞ்சாக்ஷரம். ஓம் நம: சிவாய என்பது ஷடாக்ஷரம் நம: குமாராய என்பதும் ஷடாக்ஷரம் ஓம் நம: கார்த்தகேயாய என்பது குஹ அஷ்டாக்ஷரம் (8 எழுத்து) ஓம் நம; குருகுஹாய என்பதும் குஹ அஷ்டாக்ஷரம். ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் முத்திரை அடி குருகுஹ. இதய குகையில் அமர்ந்து அஞ்ஞானம் அழித்து ஞானம் அளிக்கும் வள்ளல் குகன்.
ஓம் நம: ஸரவணபவாய என்பது குஹ தசாக்ஷரம் (10 எழுத்து).
ஓம் நம ஸரவணபவ நம ஓம் என்பது குஹ த்வாதசாக்ஷரம் (12 எழுத்து).
வடமொழியில் பீஜாக்ஷர மந்திரத்தில் அக்ஷரம் இரண்டு தடவை வரக் கூடாது என்பர்.
ஆகவே வடமொழியில் சரவணபவ என்பது ஷடாக்ஷரம். ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக விளங்குகின்றன.
திருப்பரங்குன்றம் - மூலாதாரம்
திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம்
பழனி - மணிபூரகம்
சுவாமிமலை - அனாஹதம்
திருத்தணிகை - விசுத்தி
பழமுதிர்சோலை - ஆக்ஞை.
ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் ஸ்கந்த ஷஷ்டியில் துதித்து வழிபட்டு குஹானந்த அனுபூதி வாரிதியில் மூழ்குவோம்.

No comments:
Post a Comment