Subscribe

BREAKING NEWS

18 April 2019

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - தொடர்ச்சி...

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சில பதிவுகளுக்கு முன்னர் நாம்  மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 என்ற தலைப்பில் மாசி மக ஹோமத்தை பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சியை இந்த பதிவில் தொடர விரும்புகின்றோம்.குருவருள் முன்னின்று நம்மை நடத்த வேண்டுகின்றோம்.

சென்ற பதிவில் ஹோம காட்சிகள் நாம் தரவில்லை. இதோ இங்கே தருகின்றோம்.


ஹோம காட்சிகள் நம்மை வெகுவாக ஈர்த்தது. பொதிகையடி பாபநாசத்தில் சாஸ்தா ஆலயத்தில் இது போன்ற இயற்கை சூழல் நம்மை இன்னும் உரம் போட்டது.

















பூராணாகுதி இடப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்ட காட்சிகள் இங்கே தருகின்றோம்.



தாளமும், மேளமும் , நாதஸ்வரமும் என மங்கல இசை ஒலிக்க, அந்த ஹோம மூலிகை வாசத்தில், சாஸ்தாவின் அருளில் இன்னும் அந்த ஹோமம் நம் உடல் சிலிர்க்க வைக்கின்றது.







கிராம தேவதை, காவல் தெய்வங்களை நாம் நிறைய சந்நிதிகளில் கண்டோம். தரிசனம் செய்தோம்.



அடுத்து அன்னை லோபாமுத்ரா சமேத அகத்தியருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.






அகத்தியரின் அருளில் திளைத்தோம்.


  நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை
       நீங்காதார்  குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
     சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
     வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர்  என்று யுகயுகத்தும் தோன்றும்
     அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்!



ஆம். அன்றைய தினம் நெஞ்சார அகத்தியரை மனதுள் வைத்தோம்.


அடுத்து கோ பூஜை நடைபெற்றது.










எல்லா தெய்வங்களையும் வழிபட்ட பலனை பசுவுக்கு செய்யும் ஆராதனையால் அடையலாம் என்கிறன வேத புராணங்கள். கோடி கோடி யாகங்கள் செய்த பலனும், கோடானு கோடி வருடங்கள் தவம் செய்த புண்ணியமும் ஒரே ஒரு முறை பசுவை வழிப்பட்டாலே கிடைத்து விடும்.
மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவியரும் முப்பத்து முக்கோடி தேவர்களும், நாற்பத்து எண்ணாயிரம் ரிஷிகளும் அஷட் வசுக்களும், நவகிரங்களும், தச நாகங்களும், அஷ்டதிக்கு பாலர்களும் பசுவின் உடலில் ஆட்சி செய்கின்றனர்.

இவர்கள் அனைவருக்கும் மேலானவளும், ஈரேழு பதினான்கு உலகங்களையும் உயிர்களையும் படைத்து காத்து ரட்சிப்பவளானா தேவி மனோன்மணியான பராசக்தியின் அம்சமே கோமாதா என்கிறது கோமாதா மகாத்மியம்.



கோ பூஜை மிக மிக உயர்ந்த பூஜை ஆகும். நாம் முதன் முதலில் பாலா ஐயாவை சந்தித்த போதும் பௌர்ணமி யாகமும், கோ பூஜையும் சின்னாளபட்டியில் கண்டோம். அதே போல் தான் அன்றைய தினமும் கண்டோம்.







அடுத்து மீண்டும் அகத்தியர் தரிசனம் பெற்றோம்.






அடுத்து அன்னதானம் பாபநாசம் கோயிலில் நடைபெற்றது. பின்னர் அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது.சும்மா சொல்ல கூடாது..? என்ன ருசி. குருவின் அருளாலே அந்த ஜீவ அமிர்தம் உண்டோம். இந்த யாகம் நமக்கு குரு சீடர் பரம்பரை பற்றி சில செய்திகளை உணர்த்தியது.

யாகம் என்றால் வெறும் யாகம் மட்டுமல்ல. அதனோடு சேர்ந்து கோ பூஜை, அன்னதானம் போன்றவற்றை செய்ய வேண்டும் போன்ற செய்திகளை உளவாங்கி அங்கிருந்து நாம் முழுமை பெற்றோம்.

மீண்டும் அடுத்த மாசி மக கும்ப பௌர்ணமி யாகத்திற்கு நாம் ஓராண்டு காத்திருக்க வேண்டும். அதனால் தான் கடைசி நிமிட ஏற்பாடாக சென்று வந்தோம். அகத்தியரின் அருள் வாக்கின் படி, இந்த யாகம் எம் வாழ்வின் திருப்புமுனையாகவே அமைந்தது.வழிநடத்தும் குருவின் பொற்பாதம் சரணம் அடைகின்றோம்.

நம் தளம் சார்பில் இந்த யாகத்திற்கு நம்மால் இயன்ற தொகையை நேரில் வழங்கினோம். பொருளுதவி செய்த அனைவருக்கும் நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னதானத்திற்கு அரிசி வாங்கிக்கொடுத்த திரு.பத்ம குமார் அவர்களுக்கு இங்கே நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அடுத்த பதிவில் மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக :-

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - 2019 - https://tut-temple.blogspot.com/2019/04/2019_12.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா அழைப்பிதழ் - 19/02/2019 - https://tut-temple.blogspot.com/2019/02/19022019.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - https://tut-temple.blogspot.com/2018/03/blog-post_16.html
மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா அழைப்பிதழ்- http://tut-temple.blogspot.in/2018/02/blog-post_17.html 

No comments:

Post a Comment