Subscribe

BREAKING NEWS

01 November 2018

அன்பே அகத்தியம் - மகேஸ்வர பூசை பதிவு

அனைவருக்கும் வணக்கம்.

நம் தளத்தின் மாத துவக்கம் அன்னசேவை போன்ற பதிவுகளால் தான் ஆரம்பம் ஆகும். யாராவது கவனித்தீர்களா? என்று தெரியவில்லை. கடந்த இரண்டு மாதங்களாக வேறு சில பதிவுகள் தரப்பட்டிருக்கும். இவை நாம் தீர்மானம் செய்யவில்லை. குருவருளால் தான் இவை தீர்மானம் செய்யப்படுகின்றன. செப்டம்பர்  மாதம் மனைவிக்கு மரியாதை என்ற பதிவு தரவேண்டி அளித்தோம். அக்டோபர் மாதம் தாமிரபரணி புஷ்கரம் பற்றிய பதிவு அளித்தோம். இவை இரண்டும் குருவருளால் தான். இதோ  இன்றைய பதிவில் மீண்டும் முதல் பதிவான அன்னசேவை பற்றி பேச விரும்புகின்றோம்.


இன்றைய பதிவில் சென்ற மாதம் நமக்கு ஒரு வாய்ப்பு தந்த திருஅண்ணாமலை சித்தாஸ்ரமத்தில் நடைபெற்ற மகேஸ்வர பூசை பற்றி தான் காண உள்ளோம். நம்மைப் பொறுத்த வரையில் வருடத்திற்கு ஒரு முறை மகேஸ்வர பூசை செய்வது மிக மிக நன்று. நாம் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவங்களை இங்கே இந்த மகேஸ்வர பூசையில் சமர்ப்பிக்க நமக்கெல்லாம் ஒரு வாய்ப்பு என்று தான் சொல்ல வேண்டும். அப்படி என்றால் நாம் பாவங்கள் செய்து விட்டு ,இங்கு வந்து பிராயசித்தம் தேடிக் கொள்ளலாமா? என்று விதண்டாவாத கேள்வி வேண்டவே வேண்டாம். இந்த அக்னி மலையில் நம் பாதம் படவே கொஞ்சமாவது புண்ணியம் வேண்டும். அதிலும் சில பங்கு இருந்தால் தான் இது போன்ற பூசைகள் கண்டு கேட்டு உணர முடியும்.

பொதுவாக ஒரு செய்தி சொல்ல விரும்புகின்றோம். என்னையும் மாற்றிக்கொள்ள முயற்சிசெய்து கொண்டு தான் இருக்கின்றோம். தர்மம் செய்ய 10 ரூபாய் பெரியது,ஷாப்பிங் போக 1000 ரூபாய் ரொம்ப சிறியது..இது எவ்வளோ பெரிய உண்மை..தானம் தர்மம் என்றால் பாக்கெட்டை பிடித்து கொள்கின்றோம்.

ஒரு பக்கம் கீதையை படிக்க அலுப்பு,100 பக்க வார இதழ் படிக்க ஆர்வம். இதுவும் யதார்த்தமான ஒன்று தான். இது போல் தொடர்கதையாகி பட்டியல் நீளும்.

1 மணி நேரம் கடவுளை வணங்க சலிப்பு,3 மணி நேரம் சினிமா விருப்பம். எப்போதாவது பொழுது போக்கிற்கு என்றால் பரவாயில்லை. எப்போதுமே இப்படி என்றால் என்ன தான் செய்வது?

பத்திரிக்கை செய்திகளில் எந்த சந்தேகமும் இல்லை,வேத வார்த்தைகளில் ஆயிரம் சந்தேகம். கண்மூடித்தனமாக பத்திரிகை,இணைய செய்திகளை நம்புகின்றோம். ஆனால் வேதம்,இறைவன், பக்தி,யோகம் என்றால் ஆயிரமாயிரம் கேள்விகள்.சமீபத்தில் கூட ஒரு கேள்வி கண்டோம். கடவுள் இருக்கின்றாரா? இல்லையா என்று? இந்த கேள்வியை நன்கு படித்த ஆசிரியர் கேட்டது கொடுமையிலும் கொடுமை.

மந்திரம் ஓதுகையில் வார்த்தைகளின் தடுமாற்றம்,புறம் பேசுகையில் ஒரு வார்த்தை கூட தடுமாறுவதில்லை.

பொழுது போக்க முதல் வரிசை,கோவிலுக்கு வந்தால் கடைசி வரிசை, அதுவும் கதவின் வெளியே

அனாவசியமாக பேச பல மணி நேரம் சலிப்பேயில்லை,இருபது நிமிட தியானம் கசக்கிறது. இதுவும் நம்மை உணரத்தான்..உணர்த்தத்தான்.

 2 நிமிடம் இறைவனை வணங்க அலுப்பு,செல் போனை தொய்வில்லாமல் தேய்ப்பு..நாமும் முடிந்த அளவில் அலைபேசி பயன்பாட்டை (தேவையில்லாத பொழுது ) குறைத்து வருகின்றோம்.இவை எல்லாம் நாம் வெட்டியாக வீணாக நேரத்தை பொசுக்கும் தருணங்கள். இதோ இறைவன் தலைமுடியை வெளுப்பாக்கி முதல் தந்தி அனுப்பி உள்ளார். நாம் மேலே கருப்பு சாயம் பூசி நம்மை வேண்டும் என்றால் ஏமாற்றலாம். அந்த பரமனை? முடியுமா? உடலில் தெம்பும், மனதில் வலிமையையும் இருக்கும் போதே அன்பே அகத்தியமாக கொண்டு உங்களால் முடிந்த சேவை செய்யுங்கள்.

இதுவே நாம் சொல்ல வந்த செய்தி. வாருங்கள் திருஅண்ணாமலை செல்வோம்.


அன்றைய தினம் காலை சுமார் 11::30 மணி அளவில் திருஅண்ணாமலை சித்தாஸ்ரமம் அடைந்தோம், நாம் நம் குடும்பம் சகிதமாக சென்று இருந்தோம், எம் பெற்றோர், தம்பி,தங்கை, மச்சான்,மருமகள்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்தோம். சரவணபவா சுவாமிகளிடம் பரஸ்பரம் பேசிவிட்டு, சேவையை தொடங்கினோம்.




                                        உணவருந்த வந்த அடியார்கள் ஒரு பகுதி.




ஆளுக்கொரு உணவை எடுத்துக்கொண்டு பரிமாற ஆரம்பித்தோம்.





   
                                         என் மருமகள் அப்பளம் வைக்கும் காட்சி










அருட்பெருஞ்சோதி ஆண்டவர் தரிசனம் பெற்றோம்.





மொத்தம் நான்கு வரிசைகளில் சாதுக்கள் அமர்ந்து இருந்தார்கள். சுமார் 80 அடியார் பெருமக்கள் வந்திருந்தார்கள்.





















வந்திருந்த அனைத்து  சாதுக்களுக்கும் உணவு பரிமாறி முடித்தோம்.அடுத்து ஒவ்வொரு சாதுக்களுக்கும் நெற்றியில் சந்தனம் வைக்க ஆரம்பித்தோம். வந்தவர்களை உபசரிப்பது தானே நம் தமிழ் பண்பாடு, அதனை இங்கே செய்கின்றோம்.






ஒவ்வொரு சாதுவையும் சாட்சாத் அந்த பரம்பொருளாக பாவித்து, நாம் அவர்களின் தலையின் மேல் பூ வைக்க வேண்டும். பொதுவாக மகேஸ்வர பூசை என்றால் நம் வீடு தேடி வரும் சாதுக்களின் கால் அலம்புவது முதல் தொடங்கும். அதற்கு மாறாக இங்கே நாம் பூக்களை தருகின்றோம்.













அடுத்து வெற்றிலை,பாக்கு, தட்சிணை என கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். நாம் கொடுக்கும் தட்சிணை பத்தோ,இருபதோ, அவர்களின் ஒரு நாள் தேநீர் செலவிற்கு ஆகும் என்று தெரிகின்றது.
அப்படியே அவர்களிடம் ஆசி பெறும் காட்சியும் இணைத்துள்ளோம்.






இது போன்று அனைவரும் சாதுக்களின் கால்களை தொட்டு ஆசி பெற்றோம்.






அடுத்து தான் மகேஸ்வர பூசையின் தாத்பர்யம் அடங்கிய நிகழ்வு ஆரம்பம். இது வரை சாதுக்களை அமர வைத்து, வாழை இலை போட்டு உணவு பதார்த்தங்கள் பரிமாறி, அவர்களுக்கு சந்தனம் இட்டு, தலையில் பூக்கள் சூடி, கையில் வாழைப்பழம்,வெற்றிலை,பாக்கோடு தட்சினை கொடுத்து, அவர்களின் கால் தொட்டு வணங்கி விட்டோம். நீங்களும் அடுத்த பதிவிற்கு தயாராக இருங்கள்.அடுத்து என்ன என்று அடுத்த பதிவில் தருகின்றோம்.

எம் பெற்றோருக்கு இந்த பதிவின் வாயிலாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

வழிநடத்தும் குருமார்களுக்கு நன்றி.

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் !
பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை !
என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற !
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே !

மேலும் விபரங்களுக்கு:

ஸ்ரீ சரவணபவா சுவாமிகள்,
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம், கிரிவல பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகில், திருவண்ணாமலை, செல்: (0)9944800220 (இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மகேஸ்வர பூஜை செய்ய பதிவு செய்து கொள்ளலாம்)


மீள்பதிவாக:-

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_61.html

தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post.html

பல கோடி நன்மைகள் வழங்கும் அன்னதானம் & மகேஸ்வர பூசை - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_8.html

அன்னதானம் கொடுப்பது அனைத்தையுமே கொடுப்பதாம் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - ம(மா)கேஸ்வர பூசை - http://tut-temple.blogspot.in/2018/01/blog-post_24.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_18.html

No comments:

Post a Comment