Subscribe

BREAKING NEWS

06 November 2018

"தேடல் உள்ள தேனீக்களாய்" குடும்பத்தின் தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள்

அனைவருக்கும் வணக்கம்.

நம் வாழ்வியலில் பண்டிகைகள் ஒவ்வொன்றும்  கொண்டாட்டத்தின் அடிப்படைக் கூறு ஆகும். நட்புக்கள்,சுற்றார்,உறவினர் என அனைவரும் ஒன்று கூடி அன்பைக் கொடுத்து அன்பை வாங்குவதே பண்டிகையின் நோக்கம் ஆகும். தமிழ் மொழியில் பார்க்கும் போது நம்மிடம் உள்ள பண்டங்களை ஈகை செய்வதே பண்டிகை ஆகும். அதாவது பண்டம் + ஈகை = பண்டிகை ஆயிற்று.

இந்த தீபத்  திருநாளில் பிரபஞ்சம் தன் தூய கருணையை அனைவருக்கும் வழங்கி, நம்மிடம் உள்ள
அஞ்ஞான இருள் நீங்கி மெய்ஞ்ஞானஒளி வீச சித்தர்களிடம்,குருமார்களிடம்,மகான்களிடம் இந்த நன்னாளில் விண்ணப்பம் வைக்கின்றோம். நம் தளம் இந்த இனிய நாளில் அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் வாழ்த்துக்கள் சொல்வதில் மகிழ்ச்சி அடைகின்றது.


நாம் சென்ற வாரமே தீப ஒளி திருநாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டோம். இந்தப் பதிவில் அவற்றை தொகுக்க விரும்புகின்றோம். இது ஒரு சுய தம்பட்ட பதிவல்ல. இதனைப் பார்த்து ஒரு நான்கு நல்ல உள்ளங்கள் நம்மோடு இணைந்தாலும் சரி..இல்லையென்றால் அவர்களே இது போன்ற சேவைகளை தொடங்கினாலும் சரி.இதுவே இந்தப் பதிவின் உள்ளார்ந்த நோக்கம் ஆகும்.






அனைவரையும் முதலில் வருக ! வருக !! என்று வரவேற்கின்றோம்.

சென்ற வாரம் நடைபெற்ற ஆயில்ய பூசையின் போதே நாம் தீபாவளிக் கொண்டாட்டத்தை ஆரம்பித்து விட்டோம். அன்றைய தினம் ஆயில்ய பூசை முழுமை பெற்றதும் குருக்களுக்கு ஸம்பாவனை கொடுக்கும் போதே இனிப்பு,காரம்,தாம்பூலம்,வாழைப்பழம் வைத்து கொடுத்தோம். இது போன்று சுமார் 50 பொட்டலங்கள் தயார் செய்தோம். நம் அன்பர்கள், நம் சேவையில் உதவும் கரங்கள் என்று கொடுக்கலாம் என்று தான் நினைத்தோம். கோயிலில் உள்ள அனைத்து குருக்களுக்கும் சேர்த்து கொடுத்தோம். அவர்களின் முகத்தில் சந்தோசம் களை கட்டியது. நமக்கும் ஒரு ஆரவாரமான தீப ஒளித் திருநாள் பண்டிகை தொடங்கியதை உணர்ந்தோம்.




அடுத்த நாள் வெள்ளிக்கிழமை அன்று கூடுவாஞ்சேரி மாடம்பாக்கத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் நம் அலுவலக நண்பர்களின் உதவியுடன் (HELPING  HANDS ) அவர்களுக்குத் புத்தாடை வாங்கிக் கொடுத்தோம். அந்த இல்லத்தில் இருந்த அனைவரும் மிக வயது முதிர்ந்தவர்கள். அவர்களுக்கு இலகுவாய் இருக்கும் பொருட்டு, நைட்டியும் , லுங்கியும் வாங்கிக் கொடுத்து  பெற்றோம்.









அங்கு சென்ற பின் நமக்கு ஒரு செய்தி கிட்டியது. இது போன்ற சேவைகளை பட்டறையை செய்தி கிடைக்கும் போது நம்மால் முடிந்தால் பொருளுதவி செய்யலாம். இல்லையேல் அப்படியே சும்மா இருக்க வேண்டும். என்ன செய்கின்றார்கள் என்று அவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு, அவர்களுடன் சென்று நம்மால் முடிந்த உடல் உழைப்பை நல்கலாம். இதற்கு நாள்,நட்சத்திரம்,கிழமை போன்றவை பார்த்துக் கொண்டிருந்தால் ஒன்றுமே ஆகாது. இப்படி நம் உடல் உழைப்பை நல்கும் சமயங்களில் அங்கிருக்கும் தாத்தாக்களிடம், பாட்டிகளிடமும் நாம் ஆசி பெறலாம். இது எப்படிஒரு உயர்ந்த வாய்ப்பு.? இனி இது போன்ற சேவைகளில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள். இது யோகங்களுள் ஒன்றான கர்ம யோகம் ஆகும்.








நாம் மேசொன்னது போல் ஆசி பெற்ற தருணம்.

அடுத்து அங்கிருந்து மீண்டும் கூடுவாஞ்சேரி மாடம்பாக்கத்தில் உள்ள நந்தீஸ்வரர் சிறார் குழுவை பார்க்க சென்றோம். செல்லும் போதே நம் நண்பர் வெறும் கையோடு போனால் நன்றாக இருக்காது என்று சொன்னார். நாம் உடனே நம்மிடம் இனிப்பு,காரம் கொண்ட பொட்டலங்கள் உள்ளது.அதனை அப்படியே சிறுவர்களிடம் ஆளுக்கொன்றாக கொடுத்துவிட்டு வரலாம் என்று சொன்னோம்.சரி..என்று சம்மதித்து அங்கே சென்றோம். இந்த இல்லத்திற்கும் சென்று ஓராண்டுக்கு மேலாகிவிட்டது.










ஒவ்வொரு குழந்தையும் நம் அருகில் வந்து வணக்கம் கூறி அழகாக பேசினார்கள். இவர்களில் பலர் வசதி இன்றி இருக்கின்றார்கள். புத்தாடை எடுத்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும். ஆனால் நாம் சிறிய அளவிலான குழு. நம்மால் முடிந்த ஒரு தொகையை கையில் கொடுத்து உபயோகிக்கும்படி சொன்னோம்.







அப்போதே அங்கிருந்த ஒரு மழலை இனிப்பு சாப்பிட்டதை பார்க்கும் போது மனதிற்கு நிறைவாக இருந்தது. அடுத்து மீண்டும் கூடுவாஞ்சேரி சென்று வேலி அம்மன் ஆலயத்தில் TUT குடும்பத்திற்காக பிரார்த்தனை செய்து இதே போன்று பொட்டலங்களை கொடுத்தோம். 



மீதமுள்ள இனிப்புகளில் இது போன்று தான் வைத்தோம்.


அடுத்து நமக்கு மாதந்தோறும் அன்னசேவையில் உதவி வரும் உணவகத்தில் பணிபுரியும் அன்பர்கள், கோயிலில் வெளியே பூக்கள்  விற்பனை செய்பவர்கள் என கொடுத்துவிட்டு, நம்முடன் அலுவலகத்தில் பணிபுரியும் TUT நண்பர்கள் சிலருக்கும் TUT தீபாவளி பொட்டலங்கள் கொடுத்தோம். சிறிய அன்பளிப்பாக இருந்தாலும் நம்மால் முடிந்த அளவில் இந்த தீப ஒளித் திருநாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்து உள்ளோம். பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல் நம்மிடம் உள்ள அன்பை நம் அன்பர்களுக்கு கொடுத்துள்ளோம். இந்த உன்னதமான சேவையில் நம்மோடு ஈடுபட்ட அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ( பொருளுதவி,உடல் உழைப்பு போன்ற வகைகளில் ) இந்த நன்னாளில் நன்றி தெரிவித்துக் கொண்டு, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டி இந்த நன்னாளில் வேண்டுகின்றோம்.

- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

அன்பே அகத்தியம் - மகேஸ்வர பூசை பதிவு - http://tut-temple.blogspot.com/2018/11/blog-post.html

திருச்சீரலைவாய் கந்த சஷ்டித் திருவிழா 2018 அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/11/2018.html

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_61.html

தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post.html

பல கோடி நன்மைகள் வழங்கும் அன்னதானம் & மகேஸ்வர பூசை - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_8.html

அன்னதானம் கொடுப்பது அனைத்தையுமே கொடுப்பதாம் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - ம(மா)கேஸ்வர பூசை - http://tut-temple.blogspot.in/2018/01/blog-post_24.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_18.html

பாடல் பெற்ற தலங்கள் (6) - கும்பாபிஷேகத்திற்கு காத்துக் கொண்டிருக்கின்றார் அச்சிறுபாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரர் - http://tut-temple.blogspot.com/2018/10/6.html

பாடல் பெற்ற தலங்கள் (5) - திருஆனைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/09/5.html

பாடல் பெற்ற தலங்கள் (4) - திருமூக்கீச்சரம் பஞ்சவர்ணேசுவரர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/08/4.html

பாடல் பெற்ற தலங்கள் (3) - திருச்சிராப்பள்ளி தாயுமானவர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/07/3.html

பாடல் பெற்ற தலங்கள் (2) - திருவெறும்பூர் எறும்பீசுவரர் கோயில் - http://tut-temple.blogspot.com/2018/06/2.html

பாடல் பெற்ற தலங்கள் (1) - திருநெடுங்களம் - http://tut-temple.blogspot.com/2018/05/1.html

 சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_16.html

 வல்வினை நீக்கும் வல்லக்கோட்டை முருகா சரணம் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_9.html
சிவன்மலை கந்தன் பாதம் கனவிலும் காக்கும் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_20.html
இது சிவன் மலை ஆண்டவன் கட்டளை - உத்தரவுப் பெட்டி - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_19.html

கந்தனுக்கு அரோகரா... ஆடிக் கிருத்திகை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_7.html

ஆடிக் கிருத்திகை - மாற்றம் அதை தந்திடுவான் மீஞ்சூரான் - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_3.html 

திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_27.html

திருப்புகழைக் கேட்கும் செவி - ஸ்ரீமத் அருணகிரிநாதர் குருபூஜை விழா - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_54.html

அழகெல்லாம் முருகனே ... அருளெல்லாம் முருகனே... - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_47.html

தேனி சண்முகநாத மலை தரிசனம் (1) - http://tut-temple.blogspot.com/2018/06/1.html

வெற்றி வேல் வீர வேல் - தேனி சண்முகநாத மலை தரிசனம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post.html

இது சிவன் மலை ஆண்டவன் கட்டளை - உத்தரவுப் பெட்டி - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post_19.html

சண்முகா சரணம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_84.html

முருகன் அருள் முன்னிற்க! பங்குனி உத்திரம் 2018 - http://tut-temple.blogspot.in/2018/03/2018.html

முருகன் அருள் முன்னிற்க! - பங்குனி உத்திரம் கொண்டாட்டம் - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post.html

நால்வரின் பாதையில்... திருப்புகழ் தலங்கள் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_30.html

வேலை வணங்குவதே நம் வேலை! - http://tut-temple.blogspot.com/2018/04/blog-post_2.html

திருச்சீரலைவாய் நாதனே போற்றி - கந்த சஷ்டி பதிவு (4) - http://tut-temple.blogspot.com/2017/10/4_25.html

குன்றத்தூர் முருகனுக்கு அரோகரா - கந்த சஷ்டி பதிவு (3) - https://tut-temple.blogspot.in/2017/10/3.html

முருகன் 60 - கந்த ஷஷ்டி சிறப்பு பதிவு - (2) - https://tut-temple.blogspot.in/2017/10/60-2.html

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_20.html

திருத்தலங்களின் சிறப்பு - சிவத்திரு.வேதகிரி அவர்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_12.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

வேலவனின் திருப்பாதத்தில் - வேல்மாறல் அனுபவம் - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_10.html

வேல்மாறல் அகண்ட பாராயணம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_12.html

வெற்றியைத் தரும் வேலவா போற்றி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_6.html

சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வின் துளிகள் - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_12.html

64 வது நாயன்மார் - http://tut-temple.blogspot.in/2017/06/64.html


No comments:

Post a Comment