உங்களது மனம்தான் உங்களுடைய விலைமதிப்பற்ற உடமை. அது எப்போதும்
உங்களுக்குள்ளேயே இருக்கிறது ஆனால் நீங்கள் அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதை
அறிந்து கொண்ட பிறகு அதன் அற்புதமான சக்தி உங்களுக்கு சொந்தமாகும். நாம் முன்பே
பார்த்தபடி உங்கள் மனதிற்கு வெளி மனம் ,ஆழ்மனம் ,ஆகிய இரு நிலைகள்
உள்ளன நீங்கள் உங்கள் வெளி மனத்தைக் கொண்டு சிந்திக்கிறீர்கள் உங்களது வழக்கமான
சிந்தனைகள் ஆழ்மனதிற்குள் சென்று பதிந்துவிடுகிறது. பின்னர் உங்கள் ஆழ்மனமானது
உங்களது எண்ணங்களில் அதற்கு ஏற்றார் போல் அவற்றை படைக்கின்றது. உங்களது ஆழ்மனம்
தான் உங்கள் உணர்ச்சிகளின் இருப்பிடம் ஆகும். இது தான் படைக்கும் மனம் என்று
சொல்வார்கள் நீங்கள் நல்லவற்றை சிந்தித்தால் நல்லவை மலரும் தீயவற்றைச்
சிந்தித்தால் தீயவையே பிறக்கும். இப்படித்தான் உங்கள் மனமும் வேலை செய்கின்றது.
நீங்கள் முக்கியமாக நினைவில் வைக்க வேண்டியது என்னவென்றால் உங்களது
ஆழ்மனம் ஒரு கருத்தை ஏற்றுக் கொண்டு விட்டால் அது உடனே அதை செயல் படுத்த
துவங்கிவிடும். ஆழ்மனம் நல்ல கருத்துக்களுக்கும் தீய கருத்துக்களுக்கும் ஒரே
விதமாகத்தான் செயல்படுகின்றது. என்பது வியப்பான உண்மை, என்று நாம் முதலில்
பார்ப்போம் எதிர்மறையான வழியில் இவ்விதியை நடைமுறைப்படுத்தினால் தோல்வியும்
வருத்தமும் ஏற்பட காரணமாகிவிடும்.
அதேசமயம் உங்களது
வழக்கமான சிந்தனை ஆக்கபூர்வமானதாகவும் இருக்கும் பட்சத்தில் நீங்கள் முழு
ஆரோக்கியத்தையும் வெற்றியையும் செழிப்பையும் அனுபவிப்பீர்கள். நீங்கள் சரியான வழியில்
சிந்திக்கவும் உணரவும் துவங்கிவிட்டால் மன அமைதியும் ஆரோக்கியமும் உடலும்
கண்டிப்பாக உங்கள் வசப்படும் நீங்கள் மனதளவில் ஒரு விஷயத்தை ஏற்றுக் கொண்டு அதை
உண்மை என உணரும் போது உங்களது ஆழ்மனம் அதை ஏற்றுக்கொண்டு அதை உங்கள் அனுபவம் நிகழ்த்தும் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் கருத்தை உங்கள் ஆழ்மனத்தை ஏற்றுக் கொள்ள
வைப்பதுதான். அப்படி நிகழும் உங்களது ஆழ்மனம் நீங்கள் விரும்பும் ஆரோக்கியத்தையும்
அமைதியையும் செழிப்பையும் உங்களிடத்தில் கொண்டு வந்து சேர்க்கும்.
நீங்கள் ஆணையிடுங்கள்
உங்களது ஆழ்மனம் தன் மீது பதிந்துள்ள கருத்தினை அப்படியே உங்கள் நிஜ வாழ்க்கையில்
பிரதிபலிக்கும்.
எண்ணங்கள் ஆழ்மனதிற்கு அனுப்பப்படும் போது மூளையில் உள்ள உயிரணுக்கள்
பதிவுகள் நிகழ்கின்றன என்று மனநல மருத்துவர்களும் குறிப்பிடுவார்கள் ஏதாவது ஒரு
கருத்தை உங்களால் மனம் ஏற்றுக் கொண்டு விட்டால் அதை நடைமுறைப்படுத்த உடனே அது
செயலில் இறங்கி விடும். கருத்துக்களை தொடர்புபடுத்தி செயலாற்றுவது அடிப்படையில்
அதை நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுவதும் சேகரித்து வைத்திருக்க முடியும். ஒவ்வொரு துளி
அறிவையும் உங்கள் நோக்கம் அதை நிறைவேற்ற பயன்படுத்துகிறது உங்களுக்குள் இருக்கும்
பெரும் சக்தியையும் ஆற்றலையும் அறிவையும் அது பயன்படுத்திக்கொள்கிறது இயற்கை
விதிகள் எல்லாம் ஒன்று திரட்டி அதன் பாதையை அமைத்துக் கொள்கிறது சில நேரங்களில்
அது உங்கள் கஷ்டங்கலுக்காண தீர்வை உடனே வழங்கலாம், சில நேரங்களில்
அதற்கு பல நாட்கள் வாரங்கள் அல்லது அதற்கும் அதிகமான நேரம் பிடிக்கலாம், அதன்
வழிகள் நம் அறிவிற்கு அப்பாற்பட்டவை.
வெளி மனத்திற்கும் ஆழ்மனதில் உடலுக்கும் மனதுக்கும் இடையே வேறு வேறுபாடு:-
வெளிய மனமும் ஆழ் மனமும்
இரண்டு மனங்கள் அல்ல என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும் அவை ஒரு மனதிற்குள்
அமைந்துள்ள சிறு செயல்கள். பகுத்தறியும் மனம் தான் உங்களது வெளிமனம் வீட்டையும்
வாழ்க்கையும் தேர்ந்தெடுப்பதை ஒரு நல்ல முடிவுகளையும் வெளி மானத்தின் மூலமாகத்தான்
எடுக்கிறீர்கள் மறுபுறத்தில் உங்களது தேர்வு எதுவும் இல்லை இந்த விடயம் தானாகவே
இயங்க வைக்கப்படுகிறது. செரிமானம் சுவாசித்தல்
ஆகிய இன்றியமையாத செயல்கள் உங்கள் வெளிமனத்தின் ஆதிக்கம் இல்லாமல் உங்களது ஆழ்மனத்தால் இயக்கப்படுகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஆழ்மனம் தன் மீது பதிக்கப்படும் கருத்துக்களை எல்லாத்தையுமே ஏற்றுக்கொள்ளும் ஒரு செழிப்பான நிலத்தை போன்றது உங்கள் எண்ணங்கள்
செயல் திறன்கள் கொண்டவை எதிர்மறையான அவை அறிவுபூர்வமான எண்ணங்கள் தொடர்ந்து உங்கள்
மனதில் எதிர்மறையாகவே செயலாற்றுகின்றன உடனடியாகவோ அல்லது சிறிது காலம் கழித்து அவை
வடிவம் பெற்று உங்களுடைய எண்ணங்களுக்கு ஏற்றவாறு உங்களது வாழ்க்கையை மாற்றுகிறது.
ஹிப்னாடிசம் செய்பவர்கள் மனத்தின் மூலம் உறக்க நிலைக்கு உட்படுத்தப்படுவார்கள் அவர்கள் மீது உளவியலாளர்கள் எண்ணற்ற பரிசோதனைகளையும் நிகழ்த்தியுள்ளனர் பகுத்தறிவு செயல்முறைக்கு தேவையான தேர்ந்தெடுப்பு கலையும் ஒப்பீடு களையும் ஆழ் மணம் மேற்கொள்வது இல்லை என்பதை இந்த ஆராய்ச்சி
தெளிவாக எடுத்துக் காட்டுகிறது தூண்டுதல் மூலம் உங்கள் ஆழ்மனதில் எந்த அளவுக்கு
தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை உணர ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்.
பயிற்சி பெற்ற மன வசிய நிபுணர் ஒருவர் தன்னிடம் சிகிச்சை பெற வரும்
ஒருவரிடம் அவர் நீ நாய் என்றோ அல்லது பூனை என்றோ நம்பவைக்க வெளியிலிருந்து
தூண்டினால் அந்த நபர் இம்மி பிசகாமல் அப் பாத்திரமாகவே மாறி நாயை போலவும் பூனைகள்
போலவும் சத்தமிடுவார்கள் அவருடைய தோற்றம் நடை பாவனை யாவும் அந்த நேரத்திற்கு
தற்காலிகமாக மாறிவிடுகிறது இதுதான் ஆழ்மனத்தின் அபரிமிதமான சக்தி ஒன்று.
இதைதான் நாம் நமக்குத் தேவையானவாறு நம் மனதை கட்டுக்குள் வைத்து
நமக்கு தேவையானதை பெற பயிற்சி மேற்கொள்ளுதல் வேண்டும் உங்களது வெளிமனம் சில
சமயங்களில் ஒரு வாயிற்காவலன் ஆக செயல்படுகிறது என்பதை நாம் முன்பே பார்த்தோம்
பொய்யான கருத்துக்கள் ஆழ்மனதில் பதிய விடாமல் பாதுகாப்பது தான் நமது மிக
இன்றியமையாத வேலைகளில் ஒன்று. இது இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதற்கு
காரணம் ஆழ்மனம் தூண்டுதலால் தான் எளிதில் தூண்டக்கூடிய ஒன்று என்று மனதில் நிறுத்துங்கள்.
சுயபிரகடனம் அதாவது ஆட்டோ சஜஷன்
ஆட்டோ சஜஷன் என்பது ஏதாவது ஒரு விஷயம் தீர்மானம் திட்டமிட்ட தனக்கு தனக்குத்தானே தீவிரமாக சொல்லிக் கொள்வதாகும்
தீங்குவிளைவிக்காத முறையாகப்
பயன்படுத்தப்பட்டால் அதிக நன்மை அளிக்கும். உதாரணமாக
ஒரு 75 வயது ஒரு மூதாட்டி ஒருவர் தன் நினைவாற்றலை திறன் குறித்து எப்போதும்
மிகவும் பெருமை கொண்டிருந்தார் எல்லோரையும் போல சில சமயங்களில் அவர் சிலவற்றை
மறப்பதுண்டு ஆனால் அதைப்பற்றி பெரிதாக அவர் அப்போது
கவலைப்படவில்லை இருந்தாலும் வயது ஆக ஆக அவர் தனக்கு மறதி ஏற்பட்ட
சந்தர்ப்பங்களில் கவனித்து அது குறித்துக் கவலைப்படத் தொடங்கினார் ஒவ்வொரு முறை
அவர் எதையாவது மறந்த போதும் என் வயது காரணமாக எனக்கு ஞாபக மறதி ஏற்படுகிறது என்று
கூறலானார்.
இந்த எதிர்மறைப் தூண்டுதலால் மற்றவர்களின் பெயர்களையும்
நிகழ்வுகளையும் அவர் மேலும் மேலும் கிட்டதட்ட நம்பிக்கையை இழக்கும் நிலைக்கு
வந்தார் பின்னர் அதிர்ஷ்டவசமாக தன்னைத்தானே எவ்வளவு சீரழித்து கொண்டிருக்கிறோம்
என்பதை உணர்ந்துகொண்டார் தன்னுடைய நிலைமையை மாற்ற அவர் முடிவு செய்தார்.
நான் ஏன் நினைவை இழக்கிறோம்
என்று நினைக்க தூண்டப்படும் ஒவ்வொரு முறையும் அவர் தன் சிந்தனையை
அங்கேயே நிறுத்தி விடுவார் அதோடு தன் எண்ணப் போக்கையும் வலுக்கட்டாயமாக மாற்றுவார்
நாள்தோறும் பலமுறை நேர்மறையான சுய பிரகடனம் பயிற்சி செய்தார் அவர் தனக்கு தானே இவ்வாறு கூறிக்கொண்டார்.
இன்று முதல் எல்லா விதத்திலும் என் நினைவு மேம்படுகிறது ஒவ்வொரு
குறிப்பிட்ட நேரத்தில் எனக்கு தேவைப்படும் அனைத்தும் என் ஞாபகத்தில் இருக்கும்
எனக்கு கிடைக்கும் என் மனப் பதிவுகள்
தெளிவாகவும் நிச்சயமான தாகவும் இருக்கும் நான் அவற்றை எளிதாக நினைவில் நிறுத்திக்
கொள்வேன் நான் எவற்றை நினைவு கொள்ள விரும்பும் அவையெல்லாம் சரியான முறையில் என்
மனதில் வந்து சேரும் நான் ஒவ்வொரு நாளும் வேகமாக முன்னேருகிரேன் விரைவில் இதுவரை இல்லாத அளவு என் நினைவு மேம்படும் அது அவ்வாறு
நடக்கும்.
இவ்வாறு அவர் பயிற்சி செய்தார் சுமார் மூன்று வாரங்களுக்குப் பிறகு
அவருடைய ஞாபகம் நல்ல நிலைக்கு திரும்பியது..
சிந்தனைகள் தொடரும்...