Subscribe

BREAKING NEWS

21 November 2019

காலத்தால் மறுக்கமுடியாத மாபெரும் (ரகசியம் 1)


ன்பு ஆன்மீக நண்பர்களுக்கு வணக்கம். 
நீண்ட இடைவெளிக்குபிறகு இந்த பதிவினை அளிக்கின்றேன். 
இந்த பதிவு ஒரு தொடராக வரவுள்ளது.  இது உங்களது வாழ்க்கையில் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம்...


ஆம் இது ஒரு ஆழ்மனதினை நம் வசப்படுத்தி நாம் விரும்பும் நமக்குத்தேவையானதை  பிரபஞ்சமிடமிருந்து பெறுவது. 

உலகெங்கிலும் உள்ள சகலவிதமான மனிதர்கள் எண்ணற்ற அற்புதங்கள் நிகழிந்திருப்பதை நாம் காண்கிறோம்.நீங்கள் உங்களின் ஆழ்மனதின் மந்திர சக்தியை உபயோகிக்க  துவங்கும்போது உங்களுக்கும் அற்ப்புதங்கள் நிகழும்.நீங்கள் உங்கள் வழக்கமாக சிந்திக்கும் மனப்பாங்கிலிருந்து பார்க்கும் உங்களது பழக்கங்களே உங்களுடைய விதியை வடிவமைத்து உருவாக்குகின்றன.என்பதை இங்கே எடுத்துரைக்க உள்ளேன். (ஏனெனில் ஒருமனிதன் தன் ஆழ் மனதில் என்ன நினைக்கிறானோ அதுவாகவே ஆகிறான் )

ஏன்? ஒரு மனிதன் சோகமாகவும் ஒருமனிதன் உற்ச்சாகமாகவும் இருக்கிறான்?ஏன்? ஒருவர் மகிழ்ச்சியிலும் செல்வத்திலும் திளைக்கிறான்?மற்றொருவர் ஏழ்மையிலும் துயரத்திலும் தவிக்கிறான்?ஏன்? மற்றொருவர் முழுமையான துணிச்சலோடும், தன்னம்பிக்கையோடும், இருக்கிறார்?ஏன் ஒருவர் அழகான மாட மாளிகையில் குடியிருக்கிறார்?மற்றொருவர் அவலமான குப்பைமேட்டில் வாழ்கிறார்?

ஏன்? ஒருவர் மிகப்பெரிய வெற்றியாளராகவும் மற்றொருவர் படு தோல்வியாலராகவும்  இருக்கிறார்? ஏன்? ஒருவர் தன் வேலையில் சாதனையாளராகவும் மற்றொருவர் தன் வாழ்நாள் முழுதும் கஷ்டபட்டு உழைத்தும் குறிப்பாக சாதிக்கமுடியாமல் தவிக்கிறார்?

ஏன்? ஒரவர் தீரா நோயிலிருந்து பரிபூரண நிவாரணம் பெறுகிறார்?,மற்றொருவர் அந்நோயிலிருந்து மீளமுடியாமல் தவிக்கிறார்?ஏன் பல நல்ல அன்புள்ளம் கொண்ட தெய்வ நம்பிக்கை உள்ள ஒருவர் துன்பங்களையும் சித்ரவதைகளையும் அனுபவிக்கிறார்?ஏன் பல ஒழுக்கங்கெட்ட தெய்வ நம்பிக்கையற்ற மனிதர்கள் வெற்றியும் பெருஞ்செல்வமும் ஒளிமிகு ஆரோக்கியமும் பெற்றுள்ளார்கள்?ஏன் ஒருவர் மகிழ்சிகரமான  மண வாழ்க்கையும் மற்றவர் துன்பமான  விரக்தியான இல்லற மண வாழ்க்கையும் அனுபவிக்கிறார்கள்?

இக்கேள்விக்கெல்லாம்  விடைகள் உண்டா? ஆம் உண்டு என்பதே என் பதிலாகும்... 
அத்தனைக்கும் காரணம் உங்களது.. ஆழ்மனத்தின் செயல்பாடுகளே !

இதனைப்பற்றிய முழு தகவல்களுடன் வரும் பதிவுகளில் பார்ப்போம் ...

சிந்தனைகள் தொடரும்!!!.


No comments:

Post a Comment