Subscribe

BREAKING NEWS

23 November 2019

பிரார்த்தனை எவ்வாறு இருத்தல் நல்லது?(ரகசியம் 4)


உங்கள் பிரார்த்தனை நிறைவேறுவதற்கான காரணம் உங்களது ஆழ்மனம் என்று நான் கூறினால் அதை நீங்கள் நம்புவீர்களா?அல்லது மறுப்பீர்களா?அல்லது நான் வணங்கும் கடவுள்தான் இதனை செய்தது என்று சொல்வீர்களா?  ஒரு முக்கியமான கோட்பாடு என்னவென்றால் மின்சாரம் உயர் மின் ஆற்றலை கொண்டு குறைந்த மின் ஆற்றலுக்கு செல்கிறது என்பது நீங்கள் அறிவீர்கள் ஒரு மின் விளக்கை இயக்கும்போது அல்லது ஒரு மின்சார அடுப்பை பயன்படுத்தும் போது இது விளங்கும்  மின்சாரத்தின் கோட்பாட்டினை அது  மாற்றுவதில்லை மாறாக அதை உங்களது வசதிகேற்ப பயன்படுத்துகிறீர்கள் இப்படி இயற்கையோடு இணைந்து செயல் புரிவதன் மூலம் மனித குலத்திற்கு எண்ணற்ற வகையில் பயனளிக்கும் பல அற்புதமான கண்டுபிடிப்புகளையும் கண்டறிதல் நிலையில் உங்களால் நிகழ்த்த முடியும்.


கோட்பாடு என்பது  நம்பிக்கை விதிக்கு ஏற்ப செயலாற்றுகிறது நம்பிக்கை என்றால் என்ன? அது ஏன் பலனளிக்கிறது? அது எவ்வாறு செயல்படுகிறது? என்பதை நீங்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

 நம்பிக்கை விதையை உங்கள் இதயத்தின் மீது மனம் செயல்படும் முறையில் நீங்கள் நம்பிக்கை கொள்ளவேண்டும் அதாவது நம்பிக்கையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது தான் இதன் பொருள். உங்கள் மனம் எதை நம்புகிரதோ அதைத்தான் சிந்தித்துக் கொண்டு இருக்கிறது உங்களுடைய எல்லா அனுபவங்களும் நிகழ்வுகளும் நிலைகளும் உங்கள் எண்ணங்களை பயன் வடிவமாகும் என்பதால் இவை உருவாக்கப்படுகின்றன. ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் சந்திக்கும் விளைவுகள் நீங்கள் நம்பிக் கொண்டிருக்கும் விஷயங்களால் ஏற்படுவதில்லை மாறாக ஆழ் மனதில் பதிந்திருக்கும் நம்பிக்கையினால் தான் ஏற்படுகின்றன மனித குலத்தை புற்றுபோல அரித்துக் கொண்டிருக்கும் பொய்யான நம்பிக்கைகள் அபிப்பிராயங்கள் மூடநம்பிக்கைகள் பழக்கங்கள் ஆகியவற்றை ஏற்று கொள்வதை  நிறுத்துங்கள். என்றென்றும் நிலைத்திருக்கும் என்றுமே உண்மைகள் மீது நம்பிக்கை கொள்ளச் செய்யுங்கள் அது  அத்தருணத்தில் உங்கள் ஆழ்மனம் மேல் நோக்கி கடவுளை நோக்கி செல்லத்  துவங்கும்.

 இப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஆழ்மனத்தின் கோட்பாடுகளை நம்பிக்கையுடன் நடைமுறைப்படுத்தும் எவரும் தமக்காகவும் பிறருக்காகவும் மன வலிமையை பெறுவார்கள் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்ற உலகளாவிய இதற்கேற்ப சாதனைக்கான பலன் கிடைக்கும்.   தொடக்கநிலை எதிர்வினை என்பது உங்கள் எண்ணத்தில் இயல்புக்கேற்ப இயங்கும் உங்கள் ஆழ்மனத்தின் செயல்பாடு இணக்கம் ஆரோக்கியம் அமைதி நல்லெண்ணம் ஆகிய   கருத்துக்களால்  உங்கள் மனதை நிரப்புங்கள் உங்கள் வாழ்வில் அதிசயங்கள் நிகழும்.

 உங்களிடம் ஒரு மனம் தான் உள்ளது ஆனால் அந்த ஒரு மனம் தனிப்பட்ட குறிப்பிடத்தக்க செயல்திறன் கொண்ட இரு பகுதிகளை பெற்றுள்ளது இந்த இரு பகுதிகளையும் பிரிக்கும் எல்லைக்கோட்டின் பற்றி உளவியல் பயிலும் மாணவர்களுக்கு நன்றாக தெரியும் உங்கள் மனதில் இருவேறு செயல்பாடுகளும் முற்றிலும் மாறுபட்டவை அவை ஒவ்வொன்றும்  தனக்குரிய தனித்துவமிக்க இயல்புகளையும் சிறப்புகளை  பெற்றுள்ளன மனதில் இந்த இரு செயல்பாடுகளையும் வேறுபடுத்தி காட்ட பல பெயர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன இவற்றில் உள்நோக்கு மனம்.  வெளிமனம், ஆழ்மனம், விழித்திருக்கும் மனம், உறங்கும் மனம் ,மேல்மட்ட மனம் ,அடிமட்ட மனம் ,தன்னிச்சை மனம்,ஆண் மனம், பெண் மனம், ஆகியவை அடங்கும் இவையாவும் மனதின் இந்த இருவேறு இயல்புகளையும்  குறிக்கின்றன.

 உங்கள் மனதில் ஒருவேளை இயல்புகளை இருக்க இந்த பதிவு முழுவதும் வெளிமனம் ஆழ்மனம் என்ற சொற்களை பயன்படுத்துகிறேன் உங்களுக்கு வேறு சொற்கள் எதையேனும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தோன்றினால் அதை நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம் மனதில் வேறு இயல்புகளை அடையாளம் கண்டு கொண்டு அவற்றை ஏற்றுக் கொள்வது தான் இங்கு முக்கியம்.

 உங்கள் மனதை ஒரு பூந்தோட்டம் என்று நினைத்துக் கொள்வதுதான் அதன் செயல்பாடுகளையும் பற்றி தெரிந்து கொள்ள துவங்க ஒரு சிறந்த வழி நீங்கள்தான் தோட்டக்காரர் நாள் முழுவதும் உங்கள் மனதில் எண்ணங்கள் என்னும் விதைகளை நினைக்கின்றீர்கள் பல சமயங்களில் எண்ணங்களை விதைத்து வருகிறோம். என்ற உணர்வு கூட உங்களுக்கு இருப்பதில்லை ஏனெனில் அதில் உங்களுக்கு பழக்கமான சிந்தனைகளின் அடிப்படையில் உருவானவை உங்கள் ஆழ்மனதில் எதை நினைக்கிறீர்கள் அதுவே உங்கள் உடலிலும் சுற்றுச்சூழலும் உருப்பெறுகின்றன .

உங்களுடைய ஆழ்மனத்தை எல்லாவிதமான விதைகளும் அவை நல்லவை கெட்டவை முளைவிட்டு குறிப்பாக வளர்வதற்கு உதவும் ஒரு பலமான மூலமாக கற்பனை செய்து கொள்ளுங்கள் நீங்கள் முட்களை விதைத்தால்  திராட்சைகளை பறிக்கப் போவதில்லை, விஷ செடியை விதைத்தால் ஆப்பிளை அறுவடை செய்யப் போவதில்லை ஒவ்வொரு எண்ணமும் ஒரு காரணம் ஒவ்வொரு சூழ்நிலையும் ஒரு விளைவு இது உங்கள் எண்ணங்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது இவ்விதத்தில் நீங்கள் விரும்பும் சூழ்நிலைகளை மாத்திரம் உங்களால் உருவாக்கிக் கொள்ள முடியும்.

 அமைதி மகிழ்ச்சி சரியான நடவடிக்கை நல்லெண்ணம் செழித்து வளர நல்ல விதைகளை விதைக்க துவங்குங்கள் அமைதியாகவும் முழு நம்பிக்கையோடு குணநலன்களைப் பற்றிய எண்ணங்கள் பகுத்தறியும் உங்களது அடிமனத்தில் இவற்றை முழுமையாக ஏற்றுக் கொள்ளுங்கள் இந்த அற்புதமான விதைகளை உங்கள் மனம் எனும் பூந்தோட்டத்தில் தொடர்ந்து விதைத்துவாருங்கள் அதன் பலனை நிச்சயமாக  அடைவீர்கள்.  உங்கள் மனம் சரியாக சிந்திக்கும் போது வாழ்வில் உண்மையை நீங்கள் தெரிந்து கொள்ளும்போது உங்கள் ஆழ்மனதில் ஆக்கப்பூர்வமான இணக்கமான அமைதியான எண்ணங்கள் விதைக்கப்படும் போது உங்கள் ஆழ்மனத்தின் அற்புத சக்தி யானது அதற்கேற்றவாறு செயல்படும் அது இணக்கமான சூழ்நிலை களையும் ஏற்றுக்கொள்ளத்தக்க சுற்றுச்சூழல் துறையில் மிகச் சிறந்தவற்றை உங்களிடத்தில் கொண்டு வந்து சேர்க்கும். நீங்கள் சிந்திக்கும் முறையை கட்டுப்படுத்த தொடங்கும்போது உங்களால் உங்கள் ஆழ்மனத்தின் சக்திகளைக் கொண்டு எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்க முடியும் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் அந்த பிரபஞ்சத்தோடு நீங்கள் உண்மையிலேயே உணர்வுபூர்வமாக இணைந்து செயல்படுவீர்கள்.

உங்களை சுற்றி பாருங்கள் நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் எந்த சமுதாயத்தின் அங்கமாக இருந்தாலும் பெரும்பான்மையான மக்கள் தங்களின் துறை உலகத்தில் தான் வாழ்க்கை நடத்துகிறார்கள் என்பதை உங்களால் காண முடியும் அதே நேரத்தில் ஞானத் தெளிவு பெற்று இருப்பவர்கள் தங்களது உலகத்திற்குள் உலாவுகின்றனர். உலகம்தான் புறவுலகில் தோற்றுவிக்கிறது என்பதை அவர்கள் உணர்ந்துள்ளது போல் நீங்களும் உணர்வீர்கள் உங்களுடைய எண்ணங்கள் உணர்வுகள் சில காட்சிகள் ஆகியவைதான் உங்கள் அனுபவங்களை உருவாக்கும்  கோட்பாடுகள் ஆகும்.

உங்களுக்குள் இருக்கும் உலகம்தான் ஒரே படைப்பு பற்றி உங்கள் புறவுலகில் நீங்கள் காணும் அனைத்தும் சுய உணர்வுடனோ அல்லது உணர்வின்றி யோ நீங்கள் உங்கள் அக உலகில் உருவாக்கிய வையே.

 உங்கள் நிறுவனத்திற்கு மனத்திற்கும் இடையே நிலவும் தொடர்பு குறித்த உண்மையை நீங்கள் அறிந்து கொண்டால் உங்கள் வாழ்க்கையையே உங்களால் முற்றிலும் மாற்றி அமைக்க முடியும் நீங்கள் புறச் சூழல்களை மாற்ற விரும்பினால் அதற்கான காரணத்தை மாற்றவேண்டும் சூழ்நிலைகளை சந்தர்ப்பங்களையும் மாற்ற விரும்பும் பலரும் சூழ்நிலைகளிலும் சந்தர்ப்பங்களிலும் ஏன் தொடர்ந்து கவனம் செலுத்துகின்றனர் இது தேவையற்ற கால விரயம் முயற்சி விரைவில் தங்களுடைய சூழ்நிலைகள் ஏதோ ஒரு காரணத்தால் உருவானவையே என்பதை அவர்கள் கவனிக்கத் தவறி விடுகின்றனர் முரண்பாடு குழப்பம் பற்றாக்குறை கட்டுப்பாடு ஆகியவற்றை உங்கள் வாழ்விலிருந்து களைய வேண்டும் என்றால் அதற்கான காரணத்தை களைய வேண்டும் நீங்கள் உங்கள் ஆழ்மனத்தை பயன்படுத்தும் விதமும் அதில் நீங்கள் விதைக்கும் எண்ணங்களும் தான் காரணம். காரணத்தை மாற்றங்கள் விளைவுகள் மாறும்...

 சிந்தனைகள் தொடரும்...


No comments:

Post a Comment