மிகப்பெரிய அறிவியல் அறிஞர்கள்
கவிஞர்கள் பாடகர்கள் எழுத்தாளர்கள் கண்டுபிடிப்பாளர்கள் பலரும் வெளிமனம் மற்றும்
ஆழ்மனத்தின் செயல்பாடுகள் குறித்து ஆழமாக அறிந்திருந்தனர். உடனே தங்களுடைய
குறிக்கோள்களை அவர்கள் அடைவதற்கான ஆற்றலை இந்த பிரபஞ்சம் அவர்களுக்கு கொடுத்துள்ளது என்றால் அது
மிகையாகாது ..
வெளிமனம் என்பது ஒரு பழைய கப்பலின் வெளிப்புற அறையில் இருக்கும் கப்பல் தலைவரை போன்றது அவர் இயந்திர அறையில் இருப்பவர்களுக்கு கட்டளைகளை
பிறப்பிப்பார் அங்கிருப்பவர்கள் பொதி கலன்களையும் இயக்கங்களையும்,இயந்திரங்களையும் கட்டுப்படுத்துவார் இயந்திர அறைக்குள் இருப்பவர்களுக்கு தாங்கள் எங்கு செல்கிறோம்
என்பது தெரியாது அவர்கள் கட்டளைகளை மட்டுமே செயல்படுத்துவார்கள் தலைவர் மற்றும்
பிற கருவிகளின் அடிப்படையில் தவறாக கணித்து அதன் காரணமாக தவறான கட்டளைகளை
அனுப்பினால் அவர்கள் அப்படியே சிறு மாற்றம் கூட இல்லாமல் அப்படியே செய்வார்கள். கப்பல் பாறைமீது கூட மோதும் தான் என்ன செய்கிறோம்
என்பது கூட அவர்களுக்கு தெரியாது அதுதான் ஆழ்மனத்தின் செயல்பாடுகள். கப்பல் தலைவருக்கு தெரியும் என்று அவர்கள் நம்புவதால் பணிக்குழு
உறுப்பினர்கள் அவரிடம் ஏதும் மறுத்துக் கூற மாட்டார்கள் அவர்கள் வெறுமனே அவருடைய
கட்டளைகளை நிறைவேற்றுவார்கள்
கேப்டன் அதாவது கப்பல் படைத் தலைவர் அவருடைய ஆணைகள் அனைத்தும்
நிறைவேற்றப்படும்.என்பதே உண்மை இதேபோன்று வெளிமனம் தான் உங்களுடைய உங்களது ஆழ்மன உடலில் உங்களின் சுற்றுச்சூழல், உங்களின்
நடவடிக்கைகலின் தலைவர் அதாவது எஜமானர் உங்களது வெளிமனம் உண்மை என்று நம்பி எதனை ஏற்றுக் கொண்டிருக்கிறதோ அவற்றின் அடிப்படையில் உங்கள் ஆழ்மனம் நீங்கள் இடும் கட்டளைகளை
ஏற்றுக் கொள்ளும் அது கட்டளைகளை பற்றியோ அல்லது கட்டளைகள் எதன் அடிப்படையில்
கொடுக்கப்பட்டன என்பது குறித்து எந்த விதமான கேள்விகள் கேட்காது.
இதை வாங்கும் வசதி எனக்கு இல்லை.இது என்னால் முடியாது,இது நடப்பதற்கு வாய்பே இல்லை, என்று தொடர்ந்து நீங்கள்
உங்களுக்குள்ளேயே சொல்லிக் கொண்டு வந்தால் உங்கள் ஆழ்மனம் நீங்கள் கூறுவதை
வார்த்தை பிசகாமல் அப்படியே ஏற்றுக் கொள்ளும் நீங்கள் வேண்டியதை வாங்கும் நிலைமையை
அடைய விடாமல் அது பார்த்துக் கொள்ளும். அந்தக் காரையும், அந்த வீட்டையும், என்னால்
வாங்க இயலாது, என்று நீங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கும் வரை உங்களது மனம் உங்கள் கட்டளைகளை அப்படியே நிறைவேற்றும். என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம். இந்த பொருட்களின்
பற்றாக்குறையை அனுபவித்தவாறு உங்கள் வாழ்க்கை பயணம் தொடரும், சூழ்நிலைகள் தான்
இதற்கு காரணம், என்று நீங்கள் நம்புகிறீர்கள் ஆனால் நீங்கள்தான் உங்கள் எதிர்மறையான
மறுப்பும் எண்ணங்களால் அந்த சூழ்நிலைகளை உருவாக்கி உள்ளீர்கள் என்பது உங்களுக்கு
புலப்படாது .
மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்:-
1)உங்களுக்கான புதையல் உங்கள் ஆழ் மனதிற்குள் தான் இருக்கிறது உங்கள் இதயத்தில்
விருப்பத்திற்காக விடையை உருவாக்குங்கள் தேடுங்கள் .
2)கடந்த காலத்தில் வாழ்ந்துவந்த மாபெரும் மனிதர்கள் தங்கள் ஆழ்மனதை
தொடர்பு கொண்டு அதன் சக்தியை விடுவிக்கும் ரகசியத்தை அறிந்திருந்தனர் உங்களாலும் அதை
செய்ய முடியும்.என நம்புங்கள்.
3) உங்களுடைய பிரச்சினைகளுக்கான தீர்வு உங்கள் ஆழ்மனதில் உள்ளது நீங்கள்
உறங்கச் செல்லும் முன் உங்கள் ஆழ்மனதிடம் நான் காலை 4 மணிக்கு
எழுந்திருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு படுக்கச் சென்றால் அது உங்களை சரியான
நேரத்தில் எழுப்பி விடும்.ஆதலால் அதனை உங்களுக்கு ஏற்றவாறு பயன்படுத்திக்கொள்ளுங்கள்
4) உங்கள் உடல் வளர்ச்சியின் காரண கர்த்தாவான உங்கள் ஆழ் மனதால் உங்களை
குணப்படுத்த முடியும் ஒவ்வோர் இரவும் பூரண ஆரோக்கியம் என்னும் கருத்தை மனதில்
கொண்டு உறங்கச் செல்லுங்கள் உங்கள் நம்பிக்கைக்குரிய பணியாளர்களான உங்கள் ஆழ்மனம்
உங்களுக்கு கட்டுப்பட்டு அப்படியே செயல்பட வைப்பார்கள் அது நடக்கும்.
5)ஒவ்வொரு எண்ணமும் ஒரு காரணம் ஒவ்வொரு சூழ்நிலையும் ஒரு விளைவு நீங்கள்
ஒரு புத்தகத்தை எழுத ஒரு அற்புதமான நாடகத்தை பார்க்கவோ அல்லது உங்கள்
பார்வையாளர்களுக்கு சிறப்பான ஒரு சொற்பொழிவும் விரும்பினால் கருத்தினை உங்கள்
ஆழ்மனதில் அன்பாகவும் உணர்வுபூர்வமாகவும் தெரிவியுங்கள் அதை ஒரு திரைப்படமாக காணுங்கள் அது அதற்கு ஏற்றார் போல்
செயல்படும்.
6)நீங்கள் ஒரு கப்பலை வழிநடத்திச் செல்லும் தலைவர் போன்றவர்கள் தலைவர்
சரியான கட்டளைகளை அளிக்க வேண்டும் இல்லையேல் கப்பல் சேதம் ஆகிவிடும். அதுபோலவே
உங்களுடைய அனுபவங்கள் கட்டுப்படுத்தி முறைப்படுத்தும் உங்களது ஆழ்மனதிற்கு நீங்கள்
உங்களுடைய எண்ணங்கள் மூலமாகவும் காட்சிகள் மூலமாகவும் சரியான கட்டளைகளை
இடவேண்டும் என்பதை மறக்க வேண்டாம்.
7)இதனை வாங்கும் பணம் வசதி எனக்கில்லை அல்லது என்னால் இதை செய்ய
முடியாது போன்ற சொற்றொடர்களை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள் உங்கள் ஆழ்மனம்
வார்த்தை பிறழாமல் அவற்றை ஏற்றுக்கொள்ளும் நீங்கள் விரும்புவதை செய்வதற்கான பணமோ
வறுமையோ உங்களிடம் ஒருபோதும் இல்லாதவாறு உங்களது ஆழ்மனம் பார்த்துக்கொள்ளும் என்
ஆழ்மனதின் சக்தி கொண்டு என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்று தொடர்ந்து
கூறி வாருங்கள்.
8)நம்பிக்கை விதிதான் வாழ்வின் விதி, நம்பிக்கை என்பது உங்கள் மனதில்
தோன்றும் ஓர் எண்ணம் ,ஏன் உங்களை பாதிக்கும் அல்லது உங்கள் ஆழ்மனதில் சக்தி உங்களை குணப்படுத்த வல்லது
அல்லது
பலப்படுத்த வல்லது என்று நம்புங்கள் நீங்கள் நம்புவதை போன்றே உங்கள் வாழ்வில்
நடக்கும்.
எண்ணங்களை மாற்றுவோம் நமது தலைவிதியை மாற்றுவோம்.
சிந்தனைகள் தொடரும்...
No comments:
Post a Comment