Subscribe

BREAKING NEWS

01 August 2018

தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்

அன்பார்ந்த மெய்யன்பர்களே...

நம் தளம் வாயிலாக அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. மாதத்தின் முதல் பதிவில் இது போன்ற தான,தர்ம காரியங்களை நாம் செய்ய வேண்டும். தர்மம்,உதவி என அன்னதானமும், மகேஸ்வர பூசையும் செய்து வரும் தயவு சித்தாஸ்ரமம் நிகழ்வுகளை இங்கே அள்ளித் தெளிக்க இருக்கின்றோம். குருவருளால் தான் இந்தப் பதிவு இங்கே அருளப்படுகின்றது.

அன்னதானம், மகேஸ்வர பூசை மட்டும் தான் இங்கே நடைபெறுவதாக நாம் நினைத்தோம். அதனையும் தாண்டி  கோ பூசையும்/ கோ தானமும் இங்கே நடைபெற்று வருகின்றது.இதோ அதனைப் பற்றிய செய்தித்துளிகள்.


14,05,2018 அன்று மஹேஸ்வரபூஜையுடன்,கோபூஜை, அன்னதானம் ஆகியவை பெங்களூர் சிவகாமி அவர்களால் நடைபெற்றது. அம்மையாருக்கும் நம் நன்றியையும் இங்கே தெரிவித்துக் கொள்கின்றோம்.







அடுத்த நாள் பெங்களூர் நாகபூசணம்சாமி அவர்களை 90 சாதுக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

அன்ன தானம்-தானத்தில் சிறந்த தானம் 

அன்ன தானம் நம்மிடம் இருக்கும் பொருளை மற்றவர்க்கு ஈந்து - கொடுப்பவரும், பெறுபவரும் மகிழ்ச்சி அடைவதால் ஏற்படும் - பெரும் புண்ணியம் பெறுவதற்கான புனிதச் செயல்.

தலைப்படுதானம், இடைப்படுதானம், கடைப்படுதானம் என்று பொதுவாக மூன்று வகைப்படுத்தப்படுகின்ற தானங்களிலும்,
தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் கொடுக்கப்படும் சுமார் 42 வகை தானங்களிலும்,
மிக மிக உயர்ந்ததாகவும், உன்னதமானதாகவும், அனைவரும் செய்தே ஆகவேண்டிய தானமாகவும் கருதப்படுவது அன்னதானம் மட்டுமே ஆகும்.

உணவின்றி உயிரில்லை. உலகில்லை.
உணவே அனைத்திற்கும் ஆதாரமாக விளங்குகின்றது.
வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்க்கு தானமாக அளிப்பதே அன்னதானம் ஆகும்.

அன்னதானம் அளவற்ற புண்ணியத்தினை நல்கும். மற்றப் பொருட்களையெல்லாம் தானமாகக் கொடுத்தாலும், பெறுபவர், இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றச் செய்யும். ஆனால், அன்னதானம் செய்தால் மட்டுமே போதும் என்ற சொல்லை தானமாகப் பெறுபவரிடமிருந்து கொண்டு வரும். ஆகையாலே பூரணமான தானம் - அன்னதானம் மட்டுமே ஆகும்.

எந்த ஒரு பெரும் வைபவத்திலும் இறுதியாக அமைவது அன்னதானம் மட்டுமே. வைபவத்தில், எந்த ஒரு குறையிருந்தாலும் அந்தக் குறைகள் அனைத்தையும் களைவது அன்னதானம் மட்டுமே ஆகும்.

உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ஈரேழு ஜன்மங்களையும் தொடர்ந்து வரும். அன்னதானம் மட்டுமே செய்தவரை மட்டும் சென்றடையாமல், செய்தவரின் சந்ததியினரையும் காத்துத் தொடரக் கூடியது.

நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில்,நமது கர்மவினையை மாற்றும் சக்தி அன்னதானத்திற்கு உண்டு;

எளிமையான சுயபரிகாரம் இது;அதே சமயம் மிகவும் சக்தி வாய்ந்த சுயபரிகாரமும் இதேதான்!

அன்னதானம் செய்வதால் நமது ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் மட்டுமல்ல;நமது 14 வயது முதல் இன்று வரையிலும் நம்மைச் சுற்றிலும் இருப்பவர்களிடமிருந்து நாம் பெற்ற சாபங்களும் நீங்கிவிடும்;

இந்த மகேஸ்வர பூசை முழுதும் அருமையான காணொளித் தொகுப்பாக காண கிடைக்கின்றது.இதோ இங்கே பதிவேற்றம் செய்கின்றோம்.

அருணாச்சலையில் உள்ள பூஜா மஹேஷ்வரர் விழாவில் மலேசிய குருவினால் ஆசீர்வதிக்கப்பட்டது! ஒரு புதிய அனுபவம் புதிய நட்புகளை உருவாக்கி நிறைய அறிவைக் கொண்டுவந்துள்ளது.


மே,ஜூன் மாத மாலைப்பொழுது அன்னதானம் இட்லி,சப்பாத்தி,காய்கறி குருமா,தேங்காய் சட்னி என சுமார் சராசரியாக 90க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. பார்ப்பதற்கு எளிதாக இருக்கும். ஆனால் சேவையில் ஈடுபட்டால் தான் மகிமை,மகத்துவம் புரியும். நாம் ஒரு நாள் நேரில் இருந்து முழுதும் பார்த்தோம்.அந்த அனுபவத்தை தனிப்பதிவில் தருகின்றோம்.

8/6/2018 அன்று சுமார் 90 சாதுக்களுக்கு உணவு  ஹேமலதா நாகபூசனம் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு வழங்கப்பட்டது.அவர்கள் மென்மேலும் சிறப்புடன் வாழ தயவு ஆசிரமம், நம் TUT குழுவும் இணைந்து வாழ்த்துகின்றது.










நமது முந்தைய ஐந்து பிறவிகளில் செய்த கர்மவினைகளின் வலிமையை குறைத்துவிடவும் முடியும்;

ஒருபோதும் அசைவ அன்னதானம் செய்யக் கூடாது;

ஒருபோதும் கட்டாய அன்னதானம் செய்யக் கூடாது;

வீடு,வாசல் இல்லாமல் வாழ்பவர்களுக்கு இலவசமாக தரும் உணவுக்கே அன்னதானம் என்று பெயர்;
அனாதை இல்லங்களில் செய்யும் அன்னதானத்திற்கும் பலன் உண்டு;

பழமையான சிவாலயங்கள், நமது ஊரில் இருக்கும் புராதனம் மிக்க சிவாலயங்களில் செய்யப்படும் அன்னதானத்திற்கே #தெய்வீக சக்தி அதிகம்!

பின்வரும் சிவாலயங்களில் ஏதாவது ஓரிடத்தில் அன்னதானம் செய்வது மிக சிறப்பு

திருஅண்ணாமலை
சதுரகிரி
பர்வதமலை
கொல்லிமலை

இந்த இடங்களில் அன்னதானம் செய்ய இயலாதவர்கள் அவரவர் வசிக்கும் ஊரில் இருக்கும் சிவாலய வாசலிலேயே அன்னதானம் செய்யலாம்.

நமது மனப்பூர்வமான அன்னதானமே முக்கியம்;இந்த அன்னதானம் செய்வதை ஒருபோதும் வெளிப்படுத்தக் கூடாது. இங்கு நாம் வெளிப்படுத்தக் காரணம். இந்தப் பதிவைப் பார்த்து யாரேனும் ஒருவர் இது போன்ற செயலில் ஈடுபட வேண்டும் என்பதே.நாம் அன்னதானம் செய்வதோடு நமது மனம் நிறைவடைந்துவிடும்;

இதே போன்று திரு.முரளி சின்னப்பா குடும்பத்தினர் அன்னாரது பிறந்த நாளை தயவு ஆசிரமத்தில் கடந்த 10/6/2018 அன்று கொண்டாடி உள்ளார்கள். நமது விண்ணப்பமும் இது தான். மால்,தியேட்டர், ஹோட்டல் சென்று பிறந்தநாளை கொண்டாடுவதை விடுத்து, இது போல் அன்னம்பாலிப்பு செய்து உங்கள் பிறந்தநாளை கொண்டாடிப் பாருங்கள். நீங்கள் பிறந்ததின் நோக்கம் புரியும். வாழக்கையின் மகத்துவம் தெரியும்.

16/06/2018 அன்று மஹேஸ்வரபூஜை  சேலம் Dr.நர்மதாஅவர்களின் உபயத்தால் நடைபெற்றது.

மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக 17.06.2018 அன்று காலை கோமாதா தானம் நடந்தது.
உபயதாரர் ஆவடி ஜெகதீஸ் அவர்களை மனமார வாழ்த்தி வணங்குகின்றோம்.









வள்ளலார் பெருமான் வாக்கு !
************

*அன்னதானம் செய்யுமிடத்தில் அருளும், அன்பும் தழைத்தோங்கும், தர்மதேவதை அவ்விடத்தில் நித்தியவாசம் செய்யும். கல்வி, செல்வம், ஞானம், மகிழ்ச்சி என அனைத்து நன்மைகளும் கிடைக்கும். என்றும் நம்மைப் பாதுகாத்து துணை நிற்கும்..

*மிக கடும் தோஷங்களையும் குறைக்கும் மகத்தான சக்தி அன்னதானத்திற்கு உண்டு.

* பசித்தவர்களுக்கு உணவிட்டவனை கோடைகால சூரியன் கூட வருத்தமாட்டான். வெம்மை மிக்க மணலும் வருத்தாது. மழை, நெருப்பு, காற்று என்று பஞ்சபூதங்ளாலும் சிறுதீங்கும் உண்டாகாது..

* பசி நீங்கினால் உள்ளம் குளிரும். சித்தம் தெளியும். அகமும் முகமும் மலரும். உள்ளும் புறமும் களை உண்டாகும். கடவுள் நம்பிக்கை துளிர் விடும். தத்துவம் தழைக்கத் துவங்கும்.

* பசி என்பது உடலில் பற்றி எரியும் நெருப்பு. அறிவாகிய விளக்கை அணைக்க முயலும் விஷக்காற்று. பாய்ந்து கொல்லப் பார்க்கும் புலி. உச்சி முதல் பாதம் வரை பாய்ந்து பரவும் விஷம்.

* பசித்த உயிர்களுக்கு உணவளித்தும், உயிர்க்கருணை செய்தும் ஜீவகாருண்ய நெறியைப் பின்பற்றினால், தனிப்பெருங்கருணையோடு விளங்கும் அருட்பெருஞ்ஜோதியாகிய ஆண்டவரின் அருளுக்குப் பாத்திரமாகலாம்...

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.!!


21.06.2018 அன்று  இட்லி,சாம்பார்,உப்புமா என 86சாதுக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.







23.06.2018 அன்று மாலைப்பொழுது அன்னதானம் - இட்லி,சாம்பார்,விஜிடபிள்குருமா என 103சாதுக்களுக்கு வழங்கப்பட்டது.பெரியகோவில் பார்சல் 205 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.

29.06.2018 அன்று காலை மூக்குபொடிசாமி சார்பில்  அன்னதானம் வழங்கப்பட்டது.





29. 6.2018 அன்று பிறந்த நாள் காணும் திரு பாண்டியன் அவர்களை வாழ்த்தி,  மாலை சாதுக்கள்
அன்னதானமாக  இட்லி,தோசை,சாம்பார், தேங்காய் சட்னி என வழங்கப்பட்டது.


தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்

அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் !
பொன்னம் பாலிக்கும்; மேலும், இப் பூமிசை !
என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு, இன்பு உற !
இன்னம் பாலிக்குமோ, இப் பிறவியே !

மேலும் விபரங்களுக்கு:

ஸ்ரீ சரவணபவா சுவாமிகள்,
ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம், கிரிவல பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகில், திருவண்ணாமலை, செல்: (0)9944800220 (இந்த எண்ணில் தொடர்பு கொண்டு மகேஸ்வர பூஜை செய்ய பதிவு செய்து கொள்ளலாம்)


ஜூலை மாத நிகழ்வின் துளிகளை அடுத்த பதிவில் அறிவோம்.

மீள்பதிவாக:-

தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post.html

பல கோடி நன்மைகள் வழங்கும் அன்னதானம் & மகேஸ்வர பூசை - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_8.html

அன்னதானம் கொடுப்பது அனைத்தையுமே கொடுப்பதாம் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - ம(மா)கேஸ்வர பூசை - http://tut-temple.blogspot.in/2018/01/blog-post_24.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_18.html

No comments:

Post a Comment