Thursday, August 9, 2018

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (11/08/2018)

 அன்பார்ந்த மெய்யன்பர்களே..

இந்தப்பதிவில் நாம் வருகின்ற ஆடி மாத அகத்தியர்  ஆயில்ய ஆராதனை நிகழ்வுகளை தொகுத்து வழங்க உள்ளோம். சென்ற ஆனி மாத பூசை எப்படி நடைபெற்றது? நாம் சில விஷயங்களுக்காக சொந்த ஊருக்கு செல்ல நேரிட்டது. வழக்கம் போல் நம் அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பாக ஆயில்ய பூசை கண்டு களித்து அருள் பெற்று உள்ளார்கள் என்பது தெளிவாக தெரிந்தது.

கருணை விழியால் அன்பின் ஆழம் உணர்த்துபவர் அகத்தியர் ஆவார். ஞானத்தின் வடிவாக நமக்கு விளங்குபவர். ஞானம் என்றாலே அருட்பெருஞ்சுடர் வருமன்றோ..இதோ..அருட்பெருஞ்சுடரைப் பார்க்கின்றோம், பருகுகின்றோம், கேட்கின்றோம். பொதிகை வாசனை அகத்தில் வைக்க விரும்புகின்றோம். அகத்தியம் என்பது வெறும் புறம் சார்ந்த செய்தி அல்ல; இது அகம் சார்ந்தது. புறத்தில் தோய. தோய..அகத்தில் அன்பின் ஆழமும், கருணையின் கண்களும் திறக்கும். இது தான் அகத்தியம். சரி..வாருங்கள். சரவணன் ஐயா நம்முடன் இணைந்த பூசைத் தொகுப்பை காண்போம்.

வழக்கம் போல் நாம் கனிகள், தேன் போன்றவற்றை வாங்கிவிட்டோம். 


பஞ்சாமிர்தம் தயார் செய்து கொண்டிருந்த போது எடுத்த நிலை.திரு.ஹேமந்த் ஐயா அவர்களை அஷ்டதிக்கு தீபம் போட நாம் பணித்தோம். அவரும் திசைக்கு ஒன்றாக எடுத்து வைத்து தீபம் ஏற்ற முற்பட்டார்.


இதோ..பஞ்சாமிர்தம் தயார். 

அஷ்ட திக்கு விளக்கு சரியாக அமையவில்லை. காற்று தீபத்தின் ஒளியை அன்பால் மீண்டும்,மீண்டும் தழுவியது. 


ஒரு வழியாக தீபங்கள் ஏற்றிவிட்டோம்.பஞ்சாமிர்தமும் தயார். அடுத்து என்ன? அபிஷேகம் தான். இதோ..அபிஷேக காட்சிகள் ஒவ்வொன்றாக தருகின்றோம்.

அருகம்புல், வில்வம்,நெல்லிப்பொடி, மஞ்சள்,பால்,தயிர்,தேன் ,பஞ்சாமிர்தம்,மூலிகை, மூன்று வித பன்னீர், சந்தனம் என ஒவ்வொரு அபிஷேகமாக ஐயனை கண்டு களித்தோம். இங்கு விபூதி அலங்காரம் சிறப்பாக இருக்கும் என்பது அனைவர்க்கும் தெரியும். அடுத்து விபூதி அலங்காரம் தான்.


அன்பின் ஆழத்தை ஐயன் உணர்த்தினார். கருணை விழியால் நம் கண்களைத் திறந்தார். அபிஷேகத்தின் போது சித்தர்கள் போற்றித் தொகுப்பை ஓதினோம். இதற்கெல்லாம் ஒரு புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஆயில்ய நட்சத்திர வேளையில் நம் ஐயன் முன்பு, அபிஷேகம் கண்டு, சித்தர்கள் அனைவரையும் துதிக்க வேண்டும் என்றால் ..சும்மா கிடைக்குமா இந்த அருள் நிலை. கோடிகள் கொட்டிக் கொடுத்தாலும் இது கிடைக்கவே கிடைக்காது.அடுத்து அலங்காரத்திற்கு தயார் செய்த போது 
இதோ..அனைவரும் தயார். தீப ஆரத்தி தயார் .கண்களைத் திறந்து கொள்ளுங்கள்.புறக் கண்ணை மட்டுமல்ல: அகக் கண்களையும் தான். அப்போது தான் அகத்தியம் தங்களினுள் சென்று கிடைக்கும்.

சிவப்பு வண்ண மலர்களில் நம் அகத்தினுள் வாழும் அந்த ஈசன், அகத்தீசனாய் அருள் தரும் காட்சி..அப்பப்பா..இரு கண்கள் போதவில்லை நமக்கு.நம் குழுவில் உள்ள அனைவருக்கும்  சங்கல்பம் செய்து, பிரசாதம் பெட்ரா காட்சிகள் மேலே இணைத்துள்ளோம்.

இந்த மாத பூசை அறிவிப்பினை இங்கே தருகின்றோம்.வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெறவும் வேண்டுகின்றோம்.


அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை  

மெய் அன்பர்களே.

TUT( தேடல் உள்ள தேனீக்களாய்) குழுவின் சார்பாக வருகின்ற 11/08/2018 சனிக்கிழமை  ஆயில்ய நட்சத்திரத்தில் மாலை 5:30  மணி அளவில்  கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷிக்கு வழிபாடு செய்ய இறையருளும்,குருவருளும் கூட்டியுள்ளது. அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அகத்தியரின் அருள் பெற வேண்டுகின்றோம்.

இவண்,
நிர்வாகம்
TUT- தேடல் உள்ள தேனீக்களாய் 

தொடர்புக்கு : 7904612352/9677267266
tut-temple.blogspot.in
https://www.facebook.com/thedalullathenikalaai/

கோயம்புத்தூரில் ஆயில்ய வழிபாடு:

அகத்தியரின் ஆயில்ய நட்சத்திரமும்,முழு இரவு நாளும் (அமாவாசை),  கூடி வருகின்ற ஆடி மாதம் 26 ஆம் நாள்(11-08-2018) சனிக்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு ஐஓபி காலனி, மருதமலை, கோயம்புத்தூர், அகத்தியர்/18 சித்தர்கள் ஆலயத்தில்"உலக மக்கள் நலம் " கருதி, சென்னையைச் சேர்ந்த அகத்தியர் மெய்யன்பர்கள் குழுவினர்
சித்தர்களுக்கு சிறப்பு வழிபாடும், அதை ஒட்டி அன்னதானமும்  ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆன்மீகப் பெருமக்களும், மெய்யன்பர்களும் கலந்து கொண்டு சித்தர் பெருமக்களின் அன்பையும் அருளையும் பெறுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றுதும்!!! 
கருத்தப்பாண்டியன் M K
அகத்தியர் மெய்யன்பர்கள் குழு, ஐஓபி காலனி, மருதமலை, கோயம்புத்தூர்-46
அலைபேசி: +91 86107 33409.

அகத்தியர் ஞான இல்லம் - பூஜை

ஆயில்ய அபிஷேகம் மற்றும் பூஜை 11~08~18 மாலை 5 மணிக்கு

அகத்தியர் ஞான இல்லம்
27 பெறம்பை ரோடு
MGR சிலை பின்புறம்
வில்லியனுர்
பாண்டிச்சேரி110
மொபைல் 999459944
அனைவரும் வருக
அகஸ்தியர் அருள் பெருகமேற்சொன்ன ஆயில்ய பூசை முடித்து நாம் வழக்கம் போல் கோயிலில் இருந்து கிளம்பி அலுவலகம் புறப்பட்டோம். அப்போது அகத்தியர் நமக்கு இனி இந்த ஆயில்ய பூசையோடு தர்மம் செய்க என்று உணர்த்தினார்.இதோ அதற்கான காட்சி.
அனைத்தும் அகத்தியரின் அருளாலே என்று கூறி பதிவை முழுமை செய்கின்றோம்.

- அகத்தியம் இன்னும் வளரும் 

மீள்பதிவாக:-

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில்,அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 15/07/2018 - http://tut-temple.blogspot.com/2018/07/15072018.html
கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 17/06/2018 - http://tut-temple.blogspot.com/2018/06/17062018.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_16.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_76.html

அகத்தியர் ஆயில்ய ஆராதனை (21/05/2018) - http://tut-temple.blogspot.com/2018/05/21052018_19.html

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌