Subscribe

BREAKING NEWS

18 August 2018

கோவிலுக்கு சென்று முத்தெடுக்கலாமா?

அனைவருக்கும் வணக்கம்.

கோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய இந்தப் பதிவில் முயற்சி செய்கின்றோம். அனைத்தும் குருவின் வசம் ஒப்படைத்து விட்டோம். சரி..என்னப்பா தீடீர்ன்னு
கோவில்களுக்கு செல்வதன் முழு பலனை அடைய என்பது பற்றி பேசுகின்றோம் என்று கேட்பது நம் காதில் விழுகின்றது. தினமும் தான் கோயிலுக்கு செல்கின்றோம். ஆனால் ஒன்றும் நடந்த பாடில்லை என்று நொந்து கொண்டவர்களே அதிகம். நாமும் முதலில் அப்படித் தான் இருந்தோம். இப்போது தான் கொஞ்சம் தெரிந்து வைத்து இருக்கின்றோம். அந்த அனுபவத்தை இங்கே சொல்ல விழைகின்றோம்.



கோயிலுக்கு போறதுக்கெல்லாம் என்னப்பா..நெனச்சா போய்ட்டு வர வேண்டியது தானே? உங்க வீட்டுக்கு திடீர்னு நாம் நினைக்கிற மாதிரி வர முடியுமா? இல்ல ஒரு பெரிய அலுவலக அதிகாரியை திடீர்னு நம் இஷ்டத்திற்கு சென்று பார்க்க முடியுமா? ஒரு அலுவலக அதிகாரியை சந்திக்க முதலில் அவரோட நேரத்தைபார்த்து முன் அனுமதி வாங்கணும். அந்த நேரத்துக்கு போறதுக்கு முன்னாடி அவரிடம் என்ன பேசணும், எப்படி பேசணும், வேற ஏதாவது கொண்டு போகணுமா? என்றெல்லாம் யோசித்து விட்டு அங்கு செல்கின்றோம். ஒரு சாதாரண அலுவலக அதிகாரியைப் பார்க்கவே இத்தனை  முன்னேற்பாடுகள்/ மெனக்கெடல்கள் செய்கின்றோம். ஆனால் இந்த அகில உலகத்தையே ஆளும் இறைவனை தரிசிக்க நாம் எப்படி போகின்றோம்.?

ஒன்னு போற வழியிலே கன்னத்துல போட்டு போறது, கோயிலுக்கு போயிட்டு அரை குறையா தரிசனம் பண்றது, செல்பி எடுக்குறது.. நம் தலத்தில் நாம் பதிவேற்றம் செய்யும் காட்சிகள் அனைத்தும் முறையாக அனுமதி பெற்றுத் தான் இங்கே அருளப்படுகின்றது என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகின்றோம். கோயிலுக்கு போனா தான் தேவையில்லாத பேச்செல்லாம் பேசுறது னு சொல்லிட்டே போகலாம். கோயில்ல இப்படி என்றால் திருஅண்ணாமலை கிரிவலத்தில் சொல்லவே வேண்டாம். இந்த மாதிரி தரிசனம் செய்தால் ஒரு பலனும் கிடைக்காது. 

கோயில்கள் பெருங்கடல்கள் போன்றவை. அங்கு சென்று முத்தும் எடுத்து வரலாம். கிளிஞ்சல்கள் எடுத்து வரலாம், வெறும் கால்களை மட்டும்  நனைத்தும் வரலாம். நாம் தான் முடிவெடுக்க வேண்டும் நமக்கு என்ன வேண்டும் என்று? முத்தா? கிளிஞ்சல்களா?



நான் இனிமேல் கோயிலுக்கு போகமாட்டேன் அப்பா என்று கூறினாள் ஒரு சிறுமி. அந்த தந்தை என்ன காரணம் என்று கேட்கின்றார். எப்போது நான் கோயிலுக்கு சென்றாலும் , அங்கே இருப்பவர்கள் அபிஷேகம்,ஆரத்தி போன்ற நேரங்களில் தங்கள் அலைபேசியை பயன்படுத்துகின்றனர். சிலர் கோயிலுக்கு வந்ததும் தான் அலைபேசியை நன்கு பயன்படுத்துகின்றனர் என்று அடுக்கடுக்காய் அடுக்கிக் கொண்டே போனாள்.

தந்தை சிறிது நேரம் அமைதியானார். குழந்தை சொல்வதில் நியாயம் இருக்கின்றது என்று எண்ணினார். சரிம்மா.. நீ கோயிலுக்கு செல்வது பற்றி கடைசி முடிவு எடுக்கும் முன்னர் நான் ஒன்று சொல்லலாமா? என்று கேட்டார். சொல்லுங்கள் அப்பா என்றாள் அந்த சிறுமி.

சரிம்மா... நீ நாளை கோயிலுக்கு செல்லும் போது, ஒரு  டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொண்டு இரண்டு முறை கோயிலை சுற்றி வர வேண்டும். அதுவரை டம்ளர் தண்ணீர் கீழே ஒரு துளி சிந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். கண்டிப்பாக செய்கின்றேன் அப்பா என்று கூறினாள்.

அடுத்த நாள் அந்த சிறுமி கோயிலுக்கு சென்று வந்ததையும், டம்ளர் தண்ணீரையும் அவள் தந்தையிடம் காட்டினாள். தந்தை உடனே மகிழ்ந்து அவளிடம் சில  கேள்விகளை கேட்டார்.

1. இந்த முறை யாரையாவது அலைபேசியுடன் பார்த்தாயா?

2. இந்த முறை யாராவது அலைபேசியில் பேசுவது கண்டாயா?

நான் எப்படி அப்பா இதை பார்க்க முடியும். நான் யாரையும் பார்க்க வில்லை. என் கவனம் முழுதும் டம்ளர் தண்ணீர் மீது தான் இருந்தது.  அது கீழே சிந்திவிடக் கூடாது என்பதிலே என் கவனம் செலுத்தினேன்.

அப்படி என்றால் அதே சூழ்நிலை. சூழ்நிலையில் மாற்றம் இல்லை. நம் மனதில் தான் மாற்றம் வேண்டும். டம்ளர் தண்ணீர் நமக்கு என்ன சொல்கின்றது? எப்போது நாம் கோயிலுக்கு சென்றாலும்  நாம் கடவுளைப் பற்றியும், அவருடன் நாம் எப்படி தொடபு கொள்வது என்பது பற்றியும் நாம் எப்படி நம்மை முன்னேற்ற வேண்டும் என்றும், நாம் எப்படி மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பது பற்றியும் தான் சிந்திக்க வேண்டுமே தவிர, மற்றவர்களை அவர்களது செயல்களை கண்டிப்பாக சிந்திக்க கூடாது என்றார். இப்படி நாம் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தால் நாம் நம் வாழ்க்கையில் தோல்வி என்பதை சந்திக்க மாட்டோம் என்று கூறி முடித்தார்.

ஆமாம் அப்பா. சரியாக சொன்னீர்கள். இது தான் கோயிலுக்கு நாம் செல்ல வேண்டிய முறை. இதனை நாம் கடைபிடித்தால் கடவுளைக் காணலாம் என்றால் அந்த சிறுமி.



இது அந்த சிறுமிக்கு மட்டுமல்ல. நமக்கும் பொருந்தும். கோயிலுக்கு அலைபேசியில் பேசிக்கொண்டு வீண் வெட்டிக்கதை பேசுபவர்கள் கடற்கரையில் தனது காலை மட்டும்  நனைத்துக் கொண்டு வருகின்றார்கள். அலைபேசி இருந்தும் அதனை அணைத்து விட்டு, அந்த பரம்பொருளின் மீது பார்வை செலுத்துபவர்கள் கிளிஞ்சல்கள் அள்ளலாம். கோயிலில் உழவாரப்பணி செய்து வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவன் நாமம் சொல்லி, அனைவருக்கும் பிரார்த்திக்கும் உள்ளங்கள் கண்டிப்பாக முத்தெடுக்கும் என்பது உறுதி.

இந்த பதிவு நாம் இரண்டு பதிவுகளுக்கு முன்னால் இருக்கின்ற "கோவிந்தா...கோவிந்தா...கோவிந்தா!" என்ற பதிவின் மூலம் தரப்படுகின்றது. அதனை மீண்டும் இங்கே ஒருமுறை தருகின்றோம்.

பக்தர்களின் கவனத்திற்காக செய்ய வேண்டியது மற்றும் செய்யக்கூடாதது என்ன என்பது பற்றிய ஒரு பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 
  • நீங்கள் ஶ்ரீரங்கத்திற்கு யாத்திரை தொடங்குவதற்கு முன்பு, உங்கள் இஷ்ட அல்லது குலதெய்வத்தை வழிபடவும்.
  • நீங்கள் ரங்கநாதசுவாமி பெருமாளை வழிபடச் செல்வதற்கு முன்பு காவிரி நதியில் குளிக்கவும்.
  • திருக்கோயிலுள்குள் நுழைவதற்கு முன்பு சுத்தமாகக் குளித்து சுத்தமான உடையணியவும்.
  • திருக்கோயிலுக்குள் முழுகவனத்தையும் ரங்கநாதசாமி பெருமாள் மீது செலுத்தவும்.
  • கோயிலுக்குள் முழு அமைதி காத்து “ஓம் நமோ நாராயணா” என்ற மந்திரத்தை ஓதவும்.
  • கோயிலில் இருக்கும்போது பண்டைய பழக்கவழக்கங்கள் மற்றும் பயன்பாடுகளை மதித்து நடக்கவும் மற்றும் உங்கள் சக யாத்ரீகர்களிடையே சமய உணர்வுகளைப் பரப்பச் செய்யவும்
  • உங்களுடைய காணிக்கைகளை உண்டியலில் மட்டுமே செலுத்தவும்
  • கோயில் வளாகங்களை தூய்மையாக வைக்கவும்
  • நீங்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு முன்பு, செல்போன்கள், கால்குலேட்டர்கள், காமரா முதலியன போன்ற எலக்ட்ரானிக் கருவிகள் மற்றும் காலணி முதலியனவற்றை வெளியே விட்டுச் செல்லவும்

செய்யக்கூடாதவை

  • நகைகள் அல்லது பணம் எடுத்துச் செல்ல வேண்டாம்
  • அசைவ உணவு சாப்பிடக் கூடாது
  • மது அல்லது இதர போதைப் பொருட்களை அருந்துதல் கூடாது
  • புகை பிடிக்கக் கூடாது
  • தங்குமிடம் மற்றும் தரிசனத்திற்கு இடைத்தரகர்களை அணுகுதல் கூடாது
  • கோயில் வளாகத்தில் மற்றும் வளாகத்தைச் சுற்றி காலணி அணிதல் கூடாது.
  • தெரு வியாபாரிகளிடமிருந்து போலி பிரசாதங்களை வாங்குதல் கூடாது.
  • பெருமாளை வணங்குவது (வழிபடுவது) தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் கோயிலுக்குள் வர வேண்டாம்
  • தரிசனம் பெறுவதற்கு அடித்துக் கொண்டு முந்திச் செல்ல வேண்டாம், உங்கள் முறைவரும் வரை வரிசையில் காத்திருக்கச் செய்யவும்.
  • பழக்கவழக்கம் அல்லது உபயோகிக்கும் முறையின் காரணமாக நீங்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு தடைசெய்யப்பட்டிருக்குமானால், கோயிலுக்குள் நீங்கள் நுழையக் கூடாது
  • பிச்சையெடுப்பதை ஊக்குவிக்கக்கூடாது
  • தண்ணீர் மற்றும் மின்சாரத்தை வீணடிக்கக்கூடாது
  • அந்நியர்களை அறைகளுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கக்கூடாது
  • மற்றவர்களிடம் சாவிகளை கொடுத்தல் கூடாது
  • திறந்தவெளியில் எச்சில் துப்பவோ சிறுநீர் அல்லது மலம் கழிக்கவோ செய்தல் கூடாது
  • செல்போன், காமிரா அல்லது மின்சார அல்லது மின்னணு கருவி எதையும் எடுத்துச் செல்லுதல் கூடாது
  • ஆயுதங்கள் எதையும் எடுத்துச் செல்லுதல் கூடாது
இவை பொதுவாக அனைத்து கோயில்களுக்கும் பொருந்தும். இன்னும் சற்று விரிவாக கீழே தருகின்றோம்.

இறைவனை ஆலயத்தில் தொழ அகத்தினாலும் புறத்தினாலும் தூய்மையானவர்களாக இருந்தாலே போதும் என்றாலும், கோவில் தரிசனத்திற்கு என்று பெரியோர்கள் வகுத்த விதிமுறைகளை பின்பற்றினால், அதற்குரிய பலன்கள் முழுமையாக கிட்டும்.




கோவில் தரிசனத்தில் முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டியவை :

  • எந்தக் கோவிலுக்கும் செல்வதற்கு முன்னால் அந்த கோவிலைப் பற்றி ஓரளாவாவது தெரிந்துவைத்துக்கொண்டு பின்னர் செல்லவேண்டும். முதன்முறையாக செல்லும் கோவில் என்றால், அந்த கோவிலைப் பற்றிய விபரங்களை அர்ச்சகரிடமோ அல்லது கோவில் அலுவலகத்திடமோ கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும்.
  • குளித்துவிட்டு தூய்மையான ஆடைகள் அணிந்து அவரவர் வழக்கப்படி திருநீறு அல்லது திருமண் ஆகியவற்றை அணிந்து கோவிலுக்கு செல்லவேண்டும்.
  • பெண்கள் இறுக்கமான ஆடைகள், டீ-ஷர்ட் உள்ளிட்டவைகளை அணிந்து கோவிலுக்கு செல்லவே கூடாது.
  • ஆண்கள் பெர்முடாஸ், ஷார்ட்ஸ் போன்ற ஆடைகளை அணிந்து செல்லவே கூடாது. நாம் போவது பொழுது போக்கிற்கு அல்ல. நமது உடைகள் நாகரீகமாக இருப்பது மிக மிக அவசியம்.
  • உள்ளே செல்லும் முன், அவரவர் மொபலை சுவிச் ஆஃப் செய்யவேண்டும் அல்லது சைலண்டில் வைக்க வேண்டும்.
  • கோவில் கோபுரத்தை கண்டவுடன் கைகூப்பி வணங்கவேண்டும்.
  • ஆலயத்தில் கை, கால்கள் சுத்தம் செய்ய தண்ணீர் வசதி இருக்குமானால நமது கை, கால்களை கழுவிக்கொள்ளவேண்டும்.
  • மலர்கள், வெற்றிலைப் பாக்கு, கற்பூரம், ஊதுபத்தி, வாழைப் பழம் உள்ளிட்ட மங்கலப் பொருட்களை அர்ச்சனைக்காக வாங்கி செல்லவேண்டும். (வாழைப்பழத்தில் புதிதாக வந்திருக்கும் மரபணு மாற்றப்பட்ட மஞ்சள் வாழைப்பழம் மற்றும் பச்சை நாடன் கூடவே கூடாது.)
  • சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டி பைகள் மற்றும் கேரி பேக்குகளை தவிர்க்கவேண்டும். நமது வீட்டிலிருந்து அர்ச்சனைத் தட்டோ, சிறு மூங்கில் கூடையோ, காகிதப் பையோ அல்லது துணியினால் ஆன பையையோ கொண்டு சென்று, அதில் மேற்படி மங்கலப் பொருட்களை எடுத்துச் செல்லவும். பையும் மாறாது. உங்கள் பொருள் உங்களுக்கே கிடைக்கும். 
  • கோவிலுக்கு உள்ளே உள்ள விநாயகரை முதலில் தரிசித்து குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் இடவேண்டும். பிரார்த்தனை நல்லபடியாக நிறைவற, ஆலய தரிசனம் முழுமையான பலன் தர தும்பிக்கையான் அருளை வேண்டிக்கொள்ளவேண்டும்.
  • பின்னர் நந்தி, கருடன் மற்றும் மயில் உள்ளிட்ட பிரதான வாகனங்களை வணங்கவேண்டும்.
  • மூலஸ்தானத்துக்கு வெளியே நிற்கும் துவார பாலகர்களை (இறைவனின் மெய்க்காப்பாளர்கள்) மானசீகமாக வணங்கி இறைவனை தரிசிக்க அவர்களது அனுமதியை பெறவேண்டும்.
  • மூலமூர்த்தியை வழிபட்டபின் சுற்றிலும் உள்ள மற்ற மூர்த்தங்களை வழிபடல் வேண்டும்.
  • சண்டேசுவரரை அமைதியாக வணங்க வேண்டும். கைகளை தட்டுவது, சொடுக்கு போடுவது கூடாது.
  • ஆலயத்தில் தரப்படும் விபூதி, குங்குமம் உள்ளிட்டவைகளை மேல்நோக்கி தலையை உயர்த்தி நெற்றியில் அணிதல் வேண்டும். கிழே சிந்துதல் கூடாது. நாம் அணிந்தது போக கைகளில் மிகுதியாக உள்ளவற்றை ஒரு பேப்பரில் மடித்து வீட்டுக்கு கொண்டு செல்லலாம். அல்லது அதற்கு என்று வைக்கப்பட்டுள்ள கிண்ணத்தில் போடலாம். கண்ட கண்ட இடத்தில் அவற்றை போடுதல் கூடாது.
  • அதே போல், விளக்கேற்றிய பின்னர் கைகளில் எண்ணெய் படிந்திருந்தால் அதை நாம் கொண்டு சென்ற துணியில் துடைத்துக்கொள்ளவேண்டுமே தவிர கோவில் சுவற்றில் தேய்த்தல் கூடாது.
  • கோவில் சுவற்றில் கிறுக்குதல், பெயரை எழுதுதல், பரீட்சை எண்ணை எழுதுதல் இவை அனைத்தும் மிகப் பெரிய தவறு. உங்கள் பிரார்த்தனைகளை இறைவனிடம் சொல்லவேண்டுமேயன்றி சுவற்றில் அல்ல.
  • ஆலயப் பிரகாரத்தை மும்முறை வலம் வருதல் வேண்டும். வலம் வருகையில் கைகளை வீசிக்கொண்டு நடக்காது, பொறுமையாக இறைவனின் நாமத்தை உச்சரித்தபடி கைகளை கூப்பிய நிலையில் வணங்க வேண்டும்.
  • கர்ப்ப க்ரஹத்தில் மேல் உள்ள விமானத்தை கைகளை கூப்பி வணங்கவேண்டும்.
  • இறைவனைத் தவிர ஆலயத்தில் வேறு எவரையும் வணங்கக்கூடாது.
  • கோவிலில் வம்பு பேசுதல், உலக விஷயங்களை, லௌகீக விஷயங்களை பேசுதல் அறவே கூடாது.
  • அந்தந்த கோவிலுக்கு செல்லும்போது அந்தந்த கடவுளரின் ஸ்லோகத்தை ஸ்தோத்திரங்களை பாக்களை பக்தியுடன் கூறிக்கொண்டே வலம் வரவேண்டும்.
  •  கலகலவென சிரித்தல், அதிர்ந்து பேசுதல், கூச்சல் போடுதல், மற்றவர்களை கடுகடுத்தல், அதிகாரம் செய்தல் இவை கூடவே கூடாது.
  • பிறரின் உடைகளை, ஆபரணங்களை பார்த்து பொறாமைப்படுதல் பெரிய தவறு.
  • மற்றவர்களை தரிசிக்க விடாது இடையூறாக இருப்பது கூடாது.
  • வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் சுலபமாக தரிசனம் செய்ய உதவவேண்டும்.
  • இலகு தரிசனத்திற்க்காக கையூட்டு கொடுத்தல் கூடவே கூடாது.
  • அர்ச்சகருக்கு தட்டில் உங்கள் தட்சணையை போடுவது தவறல்ல. ஆனால் ஆலயத்திற்கு ஏதாவது செய்ய நினைத்தால் ஆலய உண்டியலில் உங்கள் காணிக்கையை போடவும்.
  • கோவிலில் பிரசாதம் அளித்தால் அதை சாப்பிட்டவுடன் அந்த இலையையோ அல்லது தொன்னையையோ கண்ட இடத்தில் போடாமல், அதற்கென உள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போடவேண்டும்.
  • கொடிமரத்தித்திற்கு அப்பால் அதற்கு கீழே மட்டுமே விழுந்து வணங்க வேண்டும். ஆலயத்தில் வேறு எங்கும் கீழே விழுந்து வணங்குதல் கூடாது.
  • கோவிலில் பசு கொட்டில் இருந்தால், அதை பராமரித்து வருபவர்களிடம் அனுமதி பெற்றே பசுக்களுக்கு பழம், கீரை உள்ளிட்ட உணவுப் பொருட்களை கொடுக்கவேண்டும். (அவங்களுக்கு தான் அவைகளோட உணவு முறைகள் மற்றும் ஒவ்வாமை பற்றி தெரியும்.)
  • வடக்கு திசை நோக்கி சற்று அமர்ந்து இறைவனின் பெயரை கூறி வழிபாட்டை நிறைவு செய்யவேண்டும்.
  • சிவாலயத்தின் குங்குமம், விபூதி உள்ளிட்ட பிரசாதங்களை வீட்டிற்கு கொண்டு வரலாம். தவறு அல்ல.
மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றுங்கள். ஆலய தரிசனத்தின் பலன்களை முழுமையாக பெறுங்கள்.


மேலே ஒரு சுய விளம்பரம் தான். தினமணி இணைய நாளிதழில் நம் TUT தளத்தின் மூன்று பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.வழிநடத்தும் குருமார்களுக்கு நன்றி.

1. கட்டுரைகள் என்ற பகுதியில் -

ஜீவனில் சிவத்தை காணும் சித்தர்கள் - பதினெண் சித்தர்கள் தரிசனம் (பகுதி 3) - 

2. புகைப்படங்கள் பகுதியில்

தேடல் உள்ள தேனீக்கள்

3. பொதுவான செய்திகள் பகுதியில்

வாழ்க வளமுடன் என்ற மந்திரச் சொல்!

என்ற பதிவுகள் உள்ளன. இவை அனைத்தும் நம் TUT குழு மூலமே சாத்தியம்.இன்னும் செய்ய வேண்டிய அறப்பணிகள் நம்முன் நிறைந்து உள்ளன. தேடலோடு தேனீக்களோடு இணையுங்கள்.

- அடுத்த பதிவில் மீண்டும் இணைவோம்.

மீள்பதிவாக:-

அற்றார் அழி பசி தீர்த்தல் - அன்னம்பாலிப்பு சிறப்புப் பதிவு - http://tut-temple.blogspot.com/2018/08/blog-post_17.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - http://tut-temple.blogspot.com/2017/10/tut-avm.html 

 கொடுத்துப் பார் - AVM அன்னதான அறிவிப்பு - http://tut-temple.blogspot.com/2017/11/avm.html

 சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.com/2017/06/blog-post_4.html

தேடிப்போய் தர்மம் செய்; நாடி வருவருக்கு உதவி செய் - http://tut-temple.blogspot.com/2018/06/blog-post.html

பல கோடி நன்மைகள் வழங்கும் அன்னதானம் & மகேஸ்வர பூசை - ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_8.html

அன்னதானம் கொடுப்பது அனைத்தையுமே கொடுப்பதாம் - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமத்தில் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் - ம(மா)கேஸ்வர பூசை - http://tut-temple.blogspot.in/2018/01/blog-post_24.html

ஸ்ரீ தயவு சித்தாஸ்ரமம் அருட் தொண்டுகள் - மகேஸ்வர பூசை & அன்னதான சேவை - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_18.html

No comments:

Post a Comment