Subscribe

BREAKING NEWS

13 January 2018

முன்னோர்களின் ஆசி பெற 2018 ல் மறைமதி வழிபாடு

 சில பதிவுகளுக்கு முன்பாக, முழுமதி வழிபாடு பற்றி..அதாங்க..பௌர்ணமி வழிபாடு பற்றி அறிந்தோம். இதே போல் மறைமதி வழிபாடு உண்டா? என்று தேடிப் பார்த்தோம். சில குறிப்புகள் நமக்குக் கிடைத்தது. அவற்றைத் தொகுத்து இங்கே தருகின்றோம்.

முதலில் நமக்கு பௌர்ணமி வழிபாடு மட்டும் தான் பரிட்சயம் ஆகி இருந்தது. பௌர்ணமி என்றாலே திருஅண்ணாமலை கிரிவலம் என்று சொல்லும் அளவிற்கு நம் கால்கள் நேரே அங்கு செல்கின்றது. 2016 டிசம்பர் தொடங்கிய கிரிவலம் தற்போது வரை தொடர்ந்து வருகின்றது. ஏதோ 2017 ம்  ஆண்டில் நம்மால் உருப்படியாக புதிய விஷயம் செய்தோம் என்றால், அது கருணைக் கடலின் கருணையன்றோ !

அடுத்து நமக்குக் கிடைத்த விரதம். சொல்லாடல் என்று பார்த்தால் அது அமாவாசை. அதுவும் குறிப்பாக
ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசை . தமிழ் மாதங்கள் அனைத்திலும் அமாவாசை வந்தாலும், தை, ஆடி, புரட்டாசி அமாவாசை மிக பிரசித்தி பெற்றது. பௌர்ணமி வழிபாடு குறிப்பாக இல்லறத்தின் தேவைகளுக்காக செய்ய வேண்டிய ஒன்றாகும். அமாவாசை வழிபாடு முக்தி போன்ற மறைபொருள் தேவைகளுக்கு செய்ய வேண்டியது. அதற்காக அமாவாசை வழிபாடு பற்றி அஞ்ச வேண்டாம். நம் முன்னோர் அருள், பித்ரு தோஷம் போன்றவற்றிற்கு அமாவாசை வழிபாடு சிறப்பாக அமைகின்றது.

நம்மைப்  பொறுத்தவரை அமாவாசை வழிபாடு நம் TUT குழுவின் உதவியின் மூலம் அன்னதானமாக நடைபெற்று வருகின்றது. முதலில் நாம் அகத்தியர் வனம் மலேஷியா குழுவினர் துணையோடு அன்னதானம் செய்ய ஆரம்பித்தோம். கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்புறங்களில் செய்த அன்னதானம், பின்பு சென்னை வேளச்சேரி மற்றும் சுற்றுப்புறங்களில் விரிந்தது. சென்ற மாதம் சைதையில் செய்தோம். இந்த மாதம் சென்னையை விட்டு, எம்பிரான் அருளும் திருஅண்ணாமலையில் செய்தோம். அனைத்தும் குருவருளால் மட்டுமே. நாம் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிடுவதில்லை. ஆனால் நடப்பவை அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இது அன்னதானத்தில் மட்டும் அன்று, உழவாரப் பணி ஆகட்டும், அகத்தியர் ஆயில்யம் பூஜை ஆகட்டும், தல யாத்திரை ஆகட்டும். அனைத்தும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இவ்வாறு தொடங்கிய அன்னதான சேவை, நம் குழுவின் உறவுகளால், அமாவாசையில் செய்தாலும் நன்றாக இருக்கும் என்ற வேண்டுகோளுக்கிணங்க, அமாவாசை தோறும் அன்னசேவை எங்களால் முடிந்த ஒரு 10 பேருக்கு செய்து வருகின்றோம். இதோ தை  அமாவாசை வரப் போகின்றது. அமாவாசை சிறப்புகள், 2018 ல் அமாவாசை எப்படி வழிபாடு செய்யலாம் என்று கீழே உள்ள காட்சிப் படங்கள் மூலமும் காணலாம்.



தை அமாவாசை

நமக்கு  மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிப்பர். இதை அமாவாசை விரதம் என்பர். ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம் வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகியன. தை அமாவாசை அன்று ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு, கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி மூதாதையர்களுக்குப் படையல் செய்து சிறப்பு பூசை (திதி) செய்வர்.
இராமேசுவரம்,திருச்செந்தூர், முக்கடல் கூடும் கன்னியாகுமரி, மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் மக்கள் கூட்டம் கூடுதலாக இருக்கும்.

இராமேசுவரத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ராமநாத சுவாமி மற்றும் அம்பாள் திருச்சிலைகள் தை அமாவாசை தினத்தன்று அங்குள்ள அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும். கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தை அமாவாசையை முன்னிட்டு இராமேசுவரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். இராமேசுவரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தன்று லட்ச தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் அருள்மிகு நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோயிலில் காணும் இடமெல்லாம் ஒளிச்சுடர்களாகவே காணப்படும். பல்லாயிரக்கணக்கானோர் சுற்றுவட்டாரங்களில் இருந்து வந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோயிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றிவைத்து வழிபடுவார்கள்.
அமாவாசையை முழு நிலவு ஆக்கிய அன்னை அபிராமியின் பக்தனுக்கு அருளும் மாண்பினை விளக்கும் காட்சி யொன்று எல்லா ஆலயங்களிலும் , திருக்கடவூர் அன்னை அபிராமியின் திரு முன்னும் நடப்பது வழக்கம்


பொதுவாக அமாவாசை தினங்கள் என்றாலே இருட்டு, கருமை என்பதே அனைவரிடத்திலும் இருந்து வரும் கருத்தாக உள்ளது. ஆனால் இந்து தர்மப்படி அமாவாசை தினங்களில் தான் விண்ணுலகில் உலவும் மறைந்த நம் முன்னோர் தங்களின் சந்ததியினரின் வேண்டுதல்களை - வழிபாடுகளை ஏற்க இப்பூவுலகிற்கு வருகிறார்கள் என்று காலங்காலமாக நம்பப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே அமாவாசை நாட்களிலோ அல்லது அதற்கு ஓரிரு நாட்கள் கழித்தோ மூதாதையரை வழிபடும் வழக்கம் வந்திருக்கலாம் என்று தெரிகிறது.

தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை தினங்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை தினங்களில் விரதம் கடைபிடிப்பர். ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை தினங்களுக்கு என்று பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. அவற்றில் முக்கிய இடம்வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை எனலாம். அந்த வகையில் இந்த ஆண்டு வரும் (ஜனவரி 16,2018) செவ்வாய்க்கிழமை தை அமாவாசை தினம் வருகிறது.

பல ஆண்டுகளாக மூதாதையர்களை நினைக்கத் தவறியவர்கள் ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் மட்டும் தர்ப்பணம் செய்தாலே அந்த ஆண்டு முழுவதும் அவர்கள் தர்ப்பணம் செய்ததற்கு சமம் என்ற ஒரு ஐதீகம் நிலவுகிறது.
அன்றைய தினம் எப்படி?



ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ராமநாத சுவாமி, அம்பாளுடன் தை அமாவாசை தினத்தன்று அங்குள்ள அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும். கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன. தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். ராமேஸ்வரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

பூர்வஜென்ம பலன்கள் தொடர்ந்து வருவதாகக் கருதப்படுவோரும், தங்களின் முன்வினை நீடிப்பதாகக் கருதுவோரும் தை அமாவாசை நாளில் ராமேஸ்வரம் கடல் தீர்த்தத்திலோ அல்லது முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரியில் உள்ள தீர்த்தத்திலோ நீராடினால் பாவம் நீங்கி சுபிட்சம் பெறுவார்கள் என்று ஆண்டாண்டு காலமாக அசைக்கமுடியாத நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாக கன்னியாகுமரியில் கடற்கரையிலும் தை அமாவாசை நாளில் பித்ரு தர்ப்பணம் செய்வோர் உண்டு.

தவிர பொதுவாகவே அமாவாசை என்றால் சிவன் கோயில்கள் உள்பட அனைத்து கோயில்களிலுமே சிறப்பு ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். தை அமாவாசை நாளில் முருகப்பெருமான் உறையும் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. முருகப்பெருமானைப் பொறுத்தவரை தமிழ்க்கடவுள் என்பதால், தமிழ் மாதங்களில் முக்கிய மாதமான தை மாதத்தில் வரும் அமாவாசை நாளில் முருகருக்கு சிறப்பு செய்யப்படுவதாக கருதலாம்.
ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதிர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.
 எல்லா மாதங்களில் வரும் அமாவாசை சிறப்பானதாக இருந்தாலும், புரட்டாசி மாதம் வரும் அமாவாசையை ‘பெரிய அமாவாசை’ என்றும் ‘மகாளய அமாவாசை’ என்றும் சிறப்பித்து கூறுவார்கள். இந்நாளில் முன்னோர்கள், மூத்தோர்கள், இறந்த தாய், தந்தையரை நினைத்து வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது.

அவர்களை நினைவுகூர்ந்து நாம் செய்யும் வழிபாடுகள், தர்ம காரியங்கள் ஆகியவை அந்த ஆத்மாக்களுக்கு மகிழ்வளிக்கும் செயலாகும். இதனால், அவர்களது
பரிபூரண ஆசி நமக்கும் நம் சந்ததிக்கும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவரவர் குடும்ப வழக்கப்படி முன்னோர்களுக்கு எந்த வகையில் வேண்டுமானாலும்
வழிபாடுகள் செய்யலாம். புரோகிதர்களை அழைத்து யாகம், ஹோமம் செய்து வணங்கலாம். இறந்தவர்களின் போட்டோவுக்கு வீட்டில் மலர் மாலைகள் சூட்டி, அவர்கள் விரும்பி சாப்பிட்ட உணவு வகைகளை படைத்து வணங்கலாம். இறந்த அப்பா, அம்மாவுக்கு திதி, சிரார்த்தம் செய்யாமல் விட்டவர்கள், அப்பா, அம்மா
இறந்த தேதி, திதி போன்றவற்றை மறந்தவர்கள் இந்த மகாளய அமாவாசையில் அவர்களை நினைத்து வணங்கலாம். துர்மரணம், விபத்து, அகால மரணம்
அடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைப்பதற்கு இந்த நாள் மிகவும் உகந்ததாகும்.

மகாளய அமாவாசையன்று புரோகிதர்களுக்கு எள் தானம் தருவது சிறப்பாகும். சனீஸ்வரனுக்கு எள் விளக்கு ஏற்றி வணங்கலாம். ஏழை, எளியோர், இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வை, துண்டு போன்றவற்றை வாங்கித் தரலாம். வீட்டு வேலை செய்யும் பெண்கள், ஏழை பெண்களுக்கு நல்லெண்ணெய் தானம் செய்யலாம். முன்னோர்களை நினைத்து காகத்துக்கு உணவு வைக்கலாம். பசு மாட்டுக்கு கீரை, பழ வகைகள் தரலாம். யானைக்கு கரும்பு, பழவகைகள், சர்க்கரை பொங்கல் அளிப்பதால் பாவ தோஷங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும்.

நம்மை பெற்று, வளர்த்து ஆளாக்கி மறைந்த தாய், தந்தையரையும் முன்னோர்களையும் நினைத்து, அவர்கள் செய்த நல்ல காரியங்களையும் நம்மை ஆளாக்குவதற்கு அவர்கள் பட்ட சிரமங்களையும் ஒவ்வொரு அமாவாசையும் நினைவுகூர்ந்து தர்ப்பண சடங்கு நிறைவேற்றுவது மிகவும் புண்ணிய காரியமாக சொல்லப்படுகிறது. புண்ணிய மாதமான புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசையன்று இந்த செயலை செய்வது மிகமிக விசேஷமாக கூறப்படுகிறது. இந்நாளில் முன்னோரை நினைவுகூர்ந்து அவர்களது பரிபூரண ஆசிகளை பெறுவோமாக!

புரட்டாசி அமாவாசை 

சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரை-குடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள்.

இந்நாள் மிகவும் புண்ணியமான மகாளய அமாவாசை நாள். முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச் சிறந்த பலனை கொடுக்கும்.

கருடபுராணம், விஷ்ணு புராணம் போன் புராணங்களிள், “ ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும், முடியாதவர்கள் காகத்திற்கு அன்னம் வைக்கலாம்,. பசுவுக்கு அகத்திகீரை, பழம் கொடுக்க வேண்டும் என்கிறது.

மகாளய அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பாவனி கூடுதுறை உள்ளிட்ட புண்ணிய நீர் நிலைகளில் ஏராளமானோர் புனித நீராடி மூதாதையர்களுக்கு பித்ரு பூஜை செய்து வழிபடுவார்கள்.

மகாளய அமாவாசையில் பால், தயிர், நெய், தேன், பழங்களை நிவேதனமாக வைக்கலாம். பலகாரம், சாதவகைகளையும் படையல் செய்யலாம். வசதி குறைந்துள்ளவர்கள் மூதாதயரை மனதில் நினைத்து அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு உணவாகத் தந்தாலே போதும்.

முதியவர்கள் இருவருக்காவது உணவும், ஆதரவற்றவர்களுக்கு துணிமணியும் வயிறார உணவளியுங்கள். அமாவாசையில் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நோய் நொடிகள் அகலும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் அமையும்.
இப்பூஜையால் தீராத கடன் ஒழியும். தீர்க்க முடியாத வியாதிகள் குறையும். யார் விட்ட சாபமோ என அஞ்சிய வாழ்க்கை அகலும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். நாமும் நம்முன்னோர்களுக்கு மகாளய அமாவசை தினத்தன்று பூஜை செய்து அவர்களின் ஆசி பெறுவோம்.

வசதி இல்லாதவர்கள் நம் முன்னோர்களை மனதில் நினைத்து பசு மாட்டிற்கு அகத்திக் கீரையை உணவாகத் தந்தாலே போதும். அமாவாசையில் அவர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் செல்வம், புகழ், நீண்ட ஆயுளைத் தரும்.























தேதிகளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். தை, ஆடி, புரட்டாசி அமாவாசை வழிபாட்டை மேற்கொண்டு, முன்னோர்களின் ஆசி பெற்று, வாழ்வில் வளம் பெறுங்கள். நம் தள வாசகர்கள், உறவுகள் என அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை நம் TUT தளம் சார்பாக தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம். அனைவரது இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கலோ பொங்கல் என பொங்கட்டும்.

மீள் பதிவாக:-

வாழ்வில் பூரணம் பெற 2018ல் முழு நிலவு வழிபாடு  - http://tut-temple.blogspot.in/2018/01/2018.html


No comments:

Post a Comment