குரு
சொல்ல சொல்ல இனிக்கும் வார்த்தை..அல்ல.. வாழ்க்கை. நம்மிடம் உள்ள குற்றம் குறைகளை களைந்து நமக்கு ஒளி கொடுப்பவர். உங்களுடைய குரு யார் என்பது உங்களுக்குத் தெரியாது, குரு தான் தம்முடைய சீடனைத் தேர்வு செய்கின்றார். ஒரு குருவைத் தேர்ந்தெடுக்கும் நெறிமுறைகளை நீங்கள் அறிந்ததில்லை.
ஆம்! எத்துனை ஆழ்ந்த வாசகம். நாம் இவர் தான் நமக்கு குரு என்று தீர்மானிக்க முடியுமா?ஹ்ம்ம்..முடியவே முடியாது. ஆனால் குருவானவர் நம்மை தேர்ந்தெடுத்து, பக்குவப்படுத்தி, குறை களைந்து நம்முள் உள்ள பாழ்பட்டுக் கிடக்கும் மனமாகிய நிலத்தை பண்படுத்தி உழுது, பயிர் செய்கின்றார். இதனை நாம் சொல்வது எளிது.ஆனால் உணர்வது கடினம். மாணிக்கவாசகருக்கு சிவபெருமானே குருவாக வந்தார் என்றால் அவர் செய்த புண்ணிய பேறன்றோ!
அண்மையில் சுகி சிவம் அவர்களின் மொழியில் தாயுமானவர் பற்றிய செய்திகளை கேட்டோம். குருவானவர் கூவி நின்று கொண்டு ஆளைக் கூப்பிடும் வேலையை ஒரு போதும் செய்வதில்லை. இது தான் குருவின் மாண்பும் ஆகும். குரு ஒருவரா? பலரா? என்றும் கேள்விகள் எழலாம். நம் தளத்தில் குருவினைப் பற்றி பல முறை பேசி உள்ளோம். ஆனாலும் குருவின் பெருமை கடலினும் பெரிது. இதனைத் தான் பதிவின் ஆரம்பத்தில் சொன்னோம்..குரு ..வார்த்தை அல்ல. வாழ்க்கை.
குருவின் கை பிடித்து நடக்க பழகும் போதும் நமக்கு பல இடர்ப்பாடுகள் வரும், அதனைக் கண்டு சோர்வுறாது, மேலும் மேலும் வாழ்க்கையில் நடை போடா வேண்டும். ஆன்மிகம் என்றாலே ஏதோ கோயில்,குளம் செல்வது என்று எண்ணாது, இல்லற வாழ்க்கைக்கு இனிமை தர அடித்தளமாய் அமைவது ஆன்மிகம். வயதான காலத்தில் ஆன்மிகத்திற்கு செல்லலாம் என்று நினைப்பது பெரும் தவறு. உடலில் தெம்பும் ,மனதில் உறுதியும் இருக்கும் இளமையில் செல்லவில்லை என்றால் பின் எப்போது? என்ற கேள்வியை கேட்டுப் பாருங்கள்.
ஆன்மிகத்தில் பல மார்க்கங்கள் உள்ளன. பக்தி,யோகம் என.. தாம் பற்றியுள்ள மார்க்கத்தில் எந்த ஒரு சந்தேகமின்றி, கேள்விக்கணைகளை விடுத்தது, முழு அர்ப்பணிப்போடு மார்க்கத்தை பின்பற்றுங்கள். உங்களுக்குள் குருவின் தோன்றல் பிறக்கும். ஒரு குருவைப் பற்றி, இன்னொரு குருவிடம் சென்று பேசவே பேச கூடாது. இன்று அப்படியா? ஒவ்வொருவரும் மற்றவர்களை பற்றி பேசித் தான் சுகம் கண்டு கொண்டிருக்கின்றோம். இன்று யோகத்தில் பல மார்க்கங்கள் ஆனந்த யோகம், குண்டலினி யோகம்,தியான யோகம் என கிளை விரிகின்றது. இதில் உள்ள ஒவ்வொருவரும் சந்திக்க நேர்ந்தால் தான் கற்றது தான் பெரிது என்று கூச்சலிடும் நிலை தான் ஏற்படும். உண்மை நிலையில் ஒவ்வொரும் மற்றவரின் யோகத்தை பாராட்ட வேண்டும். தம் உண்மை நிலையில் நெறி பிறழாது வாழ வேண்டும். இதுவே குருவிற்கு செய்யும் மரியாதை என்று யாம் நினைக்கின்றோம்.
நமக்கும் பல குருமார்கள் வழிகாட்டி வருகின்றார்கள். வேதாத்திரி மகரிஷியின் அருளினால் தான், அவர் தோன்றிய இந்த கூடுவாஞ்சேரி மண்ணில் நாம் வந்த பிறகு, "தேடல் உள்ள தேனீக்களாய்" உதித்தது. இன்று வரை பல நிகழ்வுகளில் தன் பங்கை ஆற்றி வருகின்றது. நம்மிடம் எந்த ஒரு பொருளாதார வசதி கிடையாது, மாதந் தோறும் நாம் நம்மால் ஆன பொருளினை பகிர்ந்து, அன்னசேவை செய்தோம், குருவின் கருணையில் உழவாரம் செய்ய ஆரம்பித்தோம். சித்தர்களின் அருளில் அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம். இதோ இரண்டாம் ஆண்டின் முடிவில் இருந்து, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம். இதனை ஒரு சிறு நிகழ்வாக கொண்டாட இருக்கின்றோம். விரைவில் அழைப்பிதழோடு அனைவரையும் சந்திக்கின்றோம்.
இதோ இரண்டாம் ஆண்டின் இறுதியில், குருவிற்கு தொண்டாற்ற அழைக்கின்றோம். சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் வருகின்ற பிப்ரவரி 2ம் தேதி மகா குரு பூசை நடைபெற உள்ளது.இதை யொட்டி, வருகின்ற ரவி நாள் அன்று சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் உழவாரப் பணி செய்ய இருக்கின்றோம். வாருங்கள் ! குருவருள் பெறுங்கள் !!
சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_26.html
தமிழ் கூறும் நல்லுலகம் -வருக ! வருக ! - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_5.html
ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html
சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

இறை அன்பர்களே.
நமது TUT குழுமத்தின் உழவாரப்பணி பெருங்களத்தூரில் உள்ள சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் வருகின்ற 28/01/2018 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது.உழவாரப்பணியைத் தொடர்ந்து அபிஷேகம்,ஆராதனை நடைபெறும்.அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொண்டினை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
நிகழ்வின் நிரல்
உழவாரப்பணி
அபிஷேகம்,ஆராதனை
தீபாராதனை
பிரசாதம் வழங்கல்
நாள்:28/01/2018 ஞாயிற்றுக்கிழமை
இடம் : சதானந்த சுவாமிகள் ஆசிரமம்,
பெருங்களத்தூர்
நேரம்: காலை 9 மணி முதல் 1 மணி வரை
தங்களின் வருகையை கண்டிப்பாக உறுதி செய்ய தொடர்பு கொள்ளவும்
அடுத்து வரும் பதிவுகளில் பதிவின் இறுதியில் கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை, விவேக சிந்தாமணி போன்ற அற நூல் கருத்துக்கள் இடம்பெறும்.
- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்
முந்தைய பதிவுகளுக்கு :
ஸ்ரீமத் சதானந்த சுவாமிகள் 96 ஆவது ஆண்டு குருபூஜை விழா (02/02/2018) - http://tut-temple.blogspot.in/2018/01/96-02022018.html
சதானந்த சுவாமிகள் ஆசிரமத்தில் தமிழ் கூறும் நல்லுலகம் - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_26.html
தமிழ் கூறும் நல்லுலகம் -வருக ! வருக ! - http://tut-temple.blogspot.in/2017/12/blog-post_5.html
ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html
சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html
No comments:
Post a Comment