Friday, January 12, 2018

சித்தர்களின் கருணையில் - சதுரகிரி யாத்திரை (4)

சதுரகிரி தொடர் பதிவில் கோரக்கர் குண்டா என்ற பகுதி வரை வந்தடைந்தோம். இங்கிருந்து யாத்திரை மீண்டும் தொடர்கின்றது. அதற்கு முன்பாக, சதுரகிரி தல புராணம் காண்போம்.சதுரகிரி மலை மீது பச்சைமால் என்பவர் பசு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்பசுக்களின்
பாலை விற்பனைஅதில் ஒரு பசு மட்டும் பால் கொடுப்பதில்லை. இவ்வாறு பல நாட்கள் கொடுக்காததைக் கண்டு பச்சைமால் காரணம் புரியாமல் சிந்தித்துக் கொண்டிருந்தார். பசுக்கள் காலையில் மேய்த்துவிட்டு மாலையில் கொட்டிலுக்கு வரும்போது பால் கொடுக்காத ஒரு பசு மட்டும் ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் நின்று தன்மடிப்பாலை சொரிந்து கொண்டிருந்தது. இதை பார்த்த பச்சைமால் தன்கையில் வைத்திருந்த கம்பால் பசுவை அடித்தார். அப்பொழுது பசுமாடு விலகி ஓடிவிட்டது. அந்த பால் சொரிந்த இடத்தில் சிவபெருமான் அடியார் கோலத்தில் தலையில் இரத்தம் வடிய நின்றார். இதைப்பார்த்த பச்சைமால் அதிர்ச்சியடைந்து அடியாரை வணங்கி
மன்னிப்பு கேட்டு ரத்தம் வடிந்த இடத்தில் அருகிலிருந்த செடியின் இலையைப் பிடுங்கி வைத்து கட்டினார். உடனே ரத்தம் நின்று வடுவும் தெரிந்தது. அடியார் வடிவத்தில் வந்த சிவன் இந்த இடத்தில் யாம் இங்கே தங்கியிருக்க விரும்புகிறோம். எனவே இங்கே கோயில் கட்டி வழிபாடு செய்யுங்கள். அவ்வாறு செய்து வந்தால் அனைவருக்கும் வேண்டிய பலன் கிடைக்கும் என்று கூறிவிட்டு லிங்கமாகி மறைந்துவிட்டார். இதை பச்சைமால் இப்பகுதி பெரியவர்களிடம் கூறி கோயில் உருவாக்கி வழிபாடு செய்து வந்தனர். பின் கோரக்கர் சித்தர் போன்ற பல சித்தர்கள் தங்கி பல சித்துக்கள் செய்ததாகக் கூறப்படுகிறது. அவ்வாறு தங்கிய சித்தர்களின் பெயர்களால் அந்த இடங்கள் அவர் பெயர்களாலேயே இன்றும் வழங்கப்படுகிறது.

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் பற்றி மற்றொரு தலவரலாறும் கூறப்படுகிறது.

சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான்.இவனது பெற்றோர் தில்லைக்கோன் - திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்துவிட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்றபோது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக் கொண்டாள். வழக்கத்தைவிட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கொண்ட அவர்,
அவளுக்கு சடதாரி என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான். சுத்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக் கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான். சிவபெருமான் அவனை தேற்றி, நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன்.
நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி மகாலிங்கம் என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.


சரி. வாருங்கள்..நம் யாத்திரையைத் தொடர்வோம்.நாம் சதுரகிரி சென்ற போது, சந்தன மகாலிங்கம், சுந்தர மகாலிங்கம் மட்டுமே உள்ளது என்று நினைத்து சென்றோம். அந்த வரிசையில் இந்த கோரக்கர் குண்டா மிகப் பிரசித்தி பெற்றது. மலையின் அடியில் இந்த இடம் இருந்தது. வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று நடையைக் கட்டினோம். பிலாவடி கருப்பர் தரிசனம் பெற்றுவிட்டால், சதுரகிரி இரட்டை லிங்கங்கள் அருகே என்றும் சொன்னார்கள்.

இயற்கையை ரசித்துக்கொண்டே, பச்சை போர்வையில், மனம் முழுதும் பசுமை போர்த்தி நடந்து கொண்டே இருந்தோம். கால் வலி சற்று அதிகமானது, செல்லும் வழியில் மூலிகை டீ, முடக்கத்தான் ரசம் போன்ற கடைகள் இருந்தது, ஆங்காங்கே சற்று இளைப்பாறி நடந்து கொண்டே இருந்தோம். தரிசனம் பெற்று திரும்பிய பின்னனர் தான் நமக்குத் தெரிந்தது- சதுரகிரி முழுதும் சித்தர்களின் ராஜ்ஜியம் தான் . சுமார் 80 இடங்கள் நாம் காண வேண்டிய இடங்கள் என்று.

1.தாணிப் பாறை            
2.ஆசிர்வாத விநாயகர்               
3.கருப்பசாமி கோவில்                
4.குதிரைகுத்தி                                    
5.வழுக்குப் பாறை                            
6.அத்தி பூ/ஊத்து
7.கோணத்தலை வாசல்                 
8.கோரக்கர்குகை                                
9.பச்சரிசிப்பாறை
10.காலற்ற நாற்காலிப் பாறை        
11.இரட்டைலிங்கம்                           
12.வற்றாத நாவலூற்று சுனை   
13.பசுகடை / தீர்த்தம்
14.பிலாவடி கருப்பு                            
15.மூலிகைக்கிணறு                          
16.சுந்தரமகாலிங்கம் கோவில்      
17.சந்தன மகாலிங்கம் கோவில் / ஓடை
18.ஆனந்தவல்லி
19.காளிகா பெரும்காடு / தீர்த்தம்
20.சந்திர தீர்த்தம்
21.தேடிக்கானல்
22.வனதுர்க்கை
23.தவசிக்குகை
24.நவகிரக மலை
25.நெல்லிவனம்
26.வெள்ளைப்பிள்ளையார்
27.அடுக்குப்பாறை
28.ஐஸ்பாறை
29.மூலிகைவனம்
30.வற்றாப்பொய்கை
31.பெரிய மகாலிங்கம்
32.பெரிய கல்திருவோடு
33.கோரக்கர் குண்டம்
34.மொட்டை பெருமாள் கோவில்/பெருமாள் பதி
35.மதிமயக்கி வனம்
36.அகஸ்தியர் குகை
37.மா ஊத்து
38.கும்பமலை குகை
39.முனிஸ்வரன் எல்லை
40.காற்றாடி மேடை
41.கொடைக்காரன் கல்
42.கங்கண ஆறு
43.குளிராட்டி பொய்கை
44.பூஞ்சோலை
45.உரோமரிசி வனம்
46.யுகிமுனி வனம்
47.கடுவெளி சித்தர் குகை
48.சுந்தரனரின் குகை
49.திருமஞ்சன பொய்கை
50.வட்டசுனை
51.கரும்பாறை
52.மஞ்சளாறு
53.சன்னாசி வனம்
54.சங்கிலி பாறை
55.காலங்கி குகை
56.தசவேதிஉதக குகை
57.கன்னிமார் கோவில்
58.பளிஞர்கள் குடிசை / பாறை
59.நந்தீஸ்வரர் வனம்
60.திருக்கைப்பாறை
61.படிவெட்டிப்பாறை
62.கவுண்டிண்ய ஆறு
63.அத்திரி மகரிஷி பாறை
64.பசுமிதி பாதை
65.பாம்புக்கேணி
66.தைல கிணறு
67.ஆற்றுக்குள் பேச்சிப்பாறை
68.காளி கானல் / கருங்கானல்
69.மண்மலை / மேடு
70.ஏமபுர கானல் 
71.வாத மேடு
72.எல்லைக்கல் குட்டம்
73.சதம்பு தறை (சஞ்சீவி மூலிகை)
74.தத்துவ ஞான சித்தர் குகை
75.அழுகண்ணி சித்தர் குகை
76.சிவவாக்கியர் சித்தர் குகை
77.சுரங்க வழி பாதை
78.சாயா விருட்சம்
79.ஜோதிமரம்
80.முகரை வீங்கி மரம்
81.கற்பகதரு விருட்சம்

இவற்றை ஒரே யாத்திரையில் காண முடியுமா ? என்றால் அது நிச்சயம் முடியாது.சித்தர்களின் பரிபூரண ஆசி இருந்தால் தான் இந்த மலைக்கே செல்ல முடியும். இந்த யாத்திரை  செல்வது பற்றி  நாங்கள் யோசிக்கவில்லை. ஆனால் சுமார் 12 பேர் சேர்ந்து திட்டமிட்டோம், சுமார் ஒரு வாரம் முன்பு சென்னையில் மழை பெய்து கொண்டே இருந்தது. யாத்திரையை கைவிடலாமா? வேண்டாம்..வேண்டவே வேண்டாம் என்று முடிவு செய்து, அங்கிருப்பவர்களிடம் விசாரித்து, இங்கே நம் குழு உறவுகளிடம் தினமும் காலையிலும், மாலையிலும் விளக்கேற்றி பிரார்த்திக்க வேண்டினோம். பிராத்தனை வீண் போகவில்லை. இதோ ..சதுரகிரியில் மூலிகை காற்று சுவாசித்து கொண்டிருக்கின்றோம்.
 சதுரகிரியில் உள்ள புல்லும் பேசும். ஆம்..இங்கு மரங்களாய்ப் பிறப்பதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று தோன்றியது.  நேரம் செல்ல,செல்ல  நாம் கடைசியில் சென்று கொண்டிருப்பது புரிந்தது. காலையில் 10 மணி அளவில் ஆரம்பித்த யாத்திரை மதியம் 1 மணி தாண்டியும் சென்று கொண்டிருந்தது.

இதோ பிலாவடி கருப்பர் சன்னதியை நெருங்கி விட்டோம். இங்கு மக்கள் கூட்டம் அதிகம். சிலரின் பிரார்த்தனைகள் இங்கே வைத்தோம். சற்று இளைப்பாறினோம். இங்கே நீரோடை இருந்ததால், மனதுள் ஒரு குளியல் போடலாமா? என்று தோன்றியது. நம்முடன்  பயணித்த உறவுகளை இங்கே யாரையும் காணோம். சரி..சன்னதியில் இருப்பார்கள் என்று தோன்றியது. அந்த குளிரில், நிழலின், ஈரக் காற்றின் வாசத்தில், பசுமையின் வனத்தில், சித்தர்களின் அருளில், அன்பின் ஆழத்தில், பக்தியின் உச்சத்தில், அடடா. ஒரு குளியல் போட்டோம்.

இது போன்ற நீரோடைகளில் குளிக்கும் போது  சோப்பு ,ஷாம்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும். இதனை நம் தாத்தாக்கள் (சித்தர்கள் ) விரும்பமாட்டார்கள். மேலும் சூழலைக் கெடுக்க வேண்டாமே. இங்கு மட்டுமில்லை. எந்த மலைக்கு/ அருவிக்கு  சென்று, நீராட நேர்ந்தால் ..தயை கூர்ந்து சோப்பு ,ஷாம்பு  பயன்படுத்தாதீர்கள். அப்படி பயன்படுத்த வேண்டும் என்றால் உங்கள் வீட்டு குளியலறையை பயன்படுத்துங்கள்.

குளியல் முடித்து ,சற்று தூரம் நடந்தால் ஏகப்பட்ட கடைகள் - சாம்பிராணி, கண்டமணி, புத்தகங்கள்  . இந்த கடைகளைத் தாண்டி சில அடிகள் எடுத்து வைத்தால், நம்மை ஆளும் அரசர்கள் வீற்றிருப்பதைக் காணலாம்.

முதலில் நாம் யாரை தரிசித்தோம்? சுந்தர மகாலிங்கமா? சந்தன மகாலிங்கமா? இரவில் தாங்கினோமோ? தரிசனம் நமக்கு எப்படி இருந்தது? வழக்கமாக நாம் செய்யும் அமாவாசை அன்னதானம் எப்படி நடந்தது? என்பது போன்ற கேள்விகளுக்கு அடுத்த பதிவில் விடை காண்போம்.

 முந்தைய பதிவுகளுக்கு:

 பித்தம் தெளிய சித்தர்கள் அருள் பெற சதுரகிரி பயணம் (3)  - http://tut-temple.blogspot.in/2018/01/3_10.html

 பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா - (2)  - http://tut-temple.blogspot.in/2017/12/2_24.html

 சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்  - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_14.html
 

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌