Subscribe

BREAKING NEWS

03 February 2019

தை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 04/02/2019

அனைவருக்கும் வணக்கம்.

நம் தளத்தின் மூலம் நம்மால் முடிந்த அளவில்  அறப்பணிகள், சேவைகள்,பூசைகள் என செய்து வருவது அனைவரும் அறிந்ததே. மாதம் தோறும் அகத்தியர் பெருமானுக்கு ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம். இது அகத்தியர் பெருமானுக்கு மட்டும் நடைபெறுகின்றது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நேரில் வந்து பார்த்தால் தான் தெரியும். இது அனைத்து சித்தர்கள், மகான்களுக்கான பூசை. ஆயில்ய ஆராதனையில் சித்தர்கள் போற்றித் தொகுப்பை நாம் ஓதி வருகின்றோம். இதுவே நம்மை வழி நடத்தி வருகின்றது.

இந்த பயணத்தில் நாம் அடுத்து அடி எடுத்து வைத்தது மோட்ச தீப வழிபாடு. சென்ற ஆடி மாதம் கோலாகலமாக சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நமக்கு நேரிடையாக வந்து , முதல் வழிபாட்டை துவக்கி வைத்த அகத்தியர் அடியார்கள் பாதம் தொட்டு வணங்குகின்றோம். இதோ இந்த தை மாதம்   மோட்ச தீப வழிபாட்டிற்கு அனைவரையும் இந்த பதிவின் மூலம் அழைக்கின்றோம். இப்போது தான் ஆரம்பித்தது போல் இருந்தது. அதற்குள் ஆடி,ஆவணி,புரட்டாசி,ஐப்பசி,கார்த்திகை,மார்கழி   என ஆறு   மோட்ச தீப வழிபாடு குருவருளால்  முழுமை பெற்றுள்ளது.எண்ணைக்கையில் என்ன உள்ளது? எண்ணங்களில் தான் அனைத்தும் உள்ளது.

அனைவருக்கும் இங்கே பணிவான வேண்டுகோள் ஒன்றை சமர்ப்பிக்கிறோம். மோட்ச தீப வழிபாட்டின் பதிவுகளை, காணொளிகளை பார்த்து யாரும் தாமாக வழிபாட்டினை செய்ய வேண்டாம். குருவருள் இன்றி இந்த வழிபாடு முழுமை பெறாது. அப்படி இந்த வழிபாட்டை மேற்கொள்ள விரும்புபவர்கள் தங்களுக்கு தெரிந்த அருகில் உள்ள ஜீவ நாடியில் குருவிடம் உத்திரவு பெற்று மேற்கொண்டு வழிபாட்டை செய்யலாம். வேறு ஏதேனும் இந்த வழிபாடு சம்பந்தமாக நம்மை தொடர்பு கொள்ளலாம்.

மார்கழி மாத அமாவாசை வழிபாடு மிக மிக சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் அனுமன் ஜெயந்தி சேர்ந்து கொண்டதால் மார்கழி மோதிச்சா தீப வழிபாடு நம் எண்ணத்தில் இன்னும் நிறைந்து உள்ளது. தை மாத அமாவாசை பற்றி சிறிது உணர்வோம்.

வருகிற புஷ்ய (தை) அமாவாசை நாளை  (04.02.2019) அமைகிறது... எல்லா பஞ்சாங்கங்களிலும் "மஹோதயம்" என்று குறிப்பிட்டிருக்கும். மஹோதயம் என்றால் என்ன? மஹோதயம் என்றால் மகா உதயம் என்று கொள்ளலாம். உதயம் அதாவது காலையில் சூரியனின் உதயம் அல்லவா.... ஆனால் அன்று மஹத்தான உதயம் என்கிறது சாஸ்திரம். மாக மாசத்தில் வரும் அமாவாசை அன்று திங்கள்கிழமையும், ச்ரவண நக்ஷத்ரமும், வ்யதீபாத யோகமும், சதுஷ்பாத கரணமும் சேர்ந்த நாளில்தான் மஹோதயம்.

சூர்யோதயத்துற்கு முன் சமுத்ரம், மஹாநதி, ஆறு, குளம் அல்லது கடைசி பக்ஷமாக கிணற்றிலோ ஸங்கல்பம் செய்து ஸ்நானம், வேதவித்துக்களுக்கு தானம், ஜபம், பூஜை, ஹோமம், பித்ரு தேவைகளுக்கு ஸ்ராத்தம் போன்ற கர்மங்கள் செய்வது அனந்தமான பலனைத் தரும் என்றும் அந்த நாள் கோடி சூர்ய க்ரஹணத்திற்கு ஸமானம் என்று ரிஷிகள் கூறியுள்ளார்.
(ஆதாரம்..வைத்யநாத தீக்ஷிதீயம்)

இப்படிப்பட்ட புண்ணியதிரு நாள் திரும்ப வருகிறது. அவர்களின் திருவருள் பெற அனைவரும் இது அறிய இப்பதிவு.. அன்று அனைவரும் பூஜை, ஜபம், பாராயணம் என செய்து குருமண்டலத்தின் நல்லாசிகள் பெறுவோம்....

ஒரே ராசியில் சூரியனும் சந்திரனும் ஒன்றுசேரும் புனிதநாளே அமாவாசை...

மாதம்தோறும் வரும் அமாவாசை திதியில் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்பது சாஸ்திரம்.அப்படி கொடுக்க முடியாவிட்டாலும், 
ஆடி அமாவாசை,
மகாளய அமாவாசை,
தை அமாவாசை 

ஆகிய தினங்களில் கண்டிப்பாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.இது போன்று தர்ப்பணம் கொடுக்க முடியாத அன்பர்களுக்காக தான் சித்தர் பெருமக்கள் மோட்ச தீப வழிபாடு தந்துள்ளார்கள்.

சூரியன், வடக்கு நோக்கி தன் பயணத்தை துவக்கும் உத்ராயண காலத்தின் துவக்க மாதமான தை, தெற்கு நோக்கி பயணம் துவங்கும் தட்சிணாயண காலத்தின் துவக்க மாதமான ஆடி மாதங்களில் வரும் அமாவாசை முன்னோரை நினைவு கூர முக்கியமான நாள்.

சாஸ்திரப்படி ஆடி முதல் மார்கழி முடிய உள்ள காலத்தில் நம்முடைய முன்னோர்களான பித்ருக்கள் நம்மைப் பார்ப்பதற்காக இந்த உலகத்துக்கு வருகின்றனர். அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து புறப்படும் நாள் ஆடி அமாவாசை. எனவே, அவர்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம் என்பதைத் தெரிவிப்பது போலவும், அவர்களை பூமிக்கு வரும்படி அழைப்பு விடுப்பதுபோலவும் ஆடி அமாவாசையன்று அவர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும் என்கிறது சாஸ்திரம்.

அவர்கள் பூமிக்கு வந்து சேரும் நாள் மகாளய அமாவாசை ஆகும். எனவே, அன்று அவர்களுக்கு நாம் தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

பித்ருலோகத்தில் இருந்து வந்த நம் முன்னோர்கள் திரும்பவும் பித்ருலோகத்துக்குச் செல்லும் நாள் தை அமாவாசை. அன்று அவர்களை வழியனுப்பும் விதமாக தர்ப்பணம் கொடுக்கவேண்டும்.

இந்த மூன்று அமாவாசை தினங்களில் நாம் கண்டிப்பாக நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவேண்டும். இந்த மூன்று அமாவாசையில் நடைபெறும் மோட்ச தீப வழிபாடு மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த தலங்கள் பல இருக்கின்றன. அவற்றுள் ராமேஸ்வரம் மிகவும் முக்கியமானதும் விசேஷமானதுமான தலம் ஆகும். ஆடி அமாவாசையன்று ராமேஸ்வரத்தில் கடல் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது அளவற்ற நன்மைகளைத் தரவல்லது. 

குறிப்பாக அக்னி தீர்த்தத்தில் நீராடுவது மிகவும் விசேஷம்.அமாவாசையன்று பித்ரு வழிபாட்டை காலையிலேயே தொடங்கிவிடவேண்டும். இந்த தை  மோட்ச தீப வழிபாட்டிற்கு வரும் அன்பர்கள் கண்டிப்பாக அசைவம் தவிர்த்து விரதம் இருக்கவும். 

ஏதேனும் ஒரு தீர்த்தக் (நதி) கரைக்குச் சென்று நீராடி, தர்ப்பணம் கொடுத்து வரவேண்டும். 

மதுரை பக்கம் உள்ளவர்கள்.... திருவேடகத்தில் கொடுக்கலாம்.... இது சிவாலாயத்தோடு....  காசிக்கு நிகரானது. இங்கு வைகை தெற்கு வடக்காக ஓடுகிறது..

மதியம் வீட்டில் மறைந்த நம் முன்னோர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து, விளக்கேற்றி, ஓர் இலையில் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான உணவு வகைகளைப் படைக்கவேண்டும்.

பின்னர் தீபாராதனை காட்டி, காகத்துக்கு உணவளிக்க வேண்டும். பிறகு வீட்டில் உள்ள பெரியவர்களை முதலில் சாப்பிடச் செய்யவேண்டும். பிறகே நாம் சாப்பிடவேண்டும். இப்படிச் செய்வதால், நம் முன்னோர்கள் மிகவும் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிக்கின்றனர். அவர்களுடைய ஆசிகளால் நம் வாழ்க்கையும் நம் சந்ததியினரின் வாழ்க்கையும் மகிழ்ச்சியும் சகல செல்வங்களும் நிறைந்ததாக அமையும் என்பது உறுதி.

மேலும்....  சந்திரன் ஆட்சி பெற்ற கடக ராசியில், சூரியன் சஞ்சரிப்பதே இதற்கு காரணம். 

சூரியன் சிவ அம்சம், சந்திரன் சக்தியின் அம்சம். 

இவ்விரண்டு அம்சங்களும் ஆடி அமாவாசை தினத்தில் ஒன்றிணைவதால் ஆடி அமாவாசை முக்கியத்துவம் பெறுகிறது. 

மேலும், வடக்கேயுள்ள கடக ரேகையில் சூரியனும்  சந்திரனும் இணைவது ஆடி அமாவாசை.

தெற்கேயுள்ள மகர ரேகையில் சூரியனும் சந்திரனும் இணைவது தை அமாவாசை.

மேற்சொன்ன கடக ராசி நீர் ராசியாகவும், மகர ராசியில் திருவோணம் நட்சதிரத்தில்தான் சூரி சந் இணைவு...அதன் அதிபதி சந்திரன் (நீர் நிலைகள்) என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. 

எனவே இவ்விரு அமாவாசை நாட்களில் நீர் நிலைகளில் அதிசயத்தக்க மாறுதல்கள் ஏற்படுவதாக ஆன்மிகம் கூறுகிறது. 

இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது.. முன்னோர் வழிபாட்டிற்கு மிகமிக உகந்த நாள் நாளைய தை மாத அமாவாசை. நாம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு முன்னோர் வழிபாட்டைத் தொடர வேண்டும். நாளைய  தை மாத மோட்ச தீப வழிபாட்டிற்கு வாருங்கள். அதுவே உங்களுக்கு, உங்கள் சந்ததிக்கு சிறப்பு சேர்க்கும். தை மாத சிறப்பு பற்றி பேசிக்கொண்டே போகலாம். 

இந்த மோட்ச தீப வழிபாடானது மிக மிக உயர்ந்த வழிபாடு.,இத்தகைய வழிபாட்டை நமக்கு பணித்த அனைத்து குருமார்களின் பாதம் பணிகின்றோம். அதே போல் சென்ற பூசையில் பங்கு கொண்டு, சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு நல்கி உதவிய அனைத்து அன்பர்களின் பாதம் பணிகின்றோம். இந்த மோட்ச தீப வழிபாடு ஒருவரால் நிகழ்த்தப்படுவதன்று. இது ஒரு கூட்டு வழிபாடு. யாரும் நமக்கு அழைத்து சொல்லவில்லை என்று நினைக்காது தாமாக முன்வந்து உதவுங்கள் என்று வேண்டுகின்றோம்.

இனிவரும் பதிவுகளில் அவ்வப்போது நமக்கு கிடைக்கின்ற செய்திகளை இங்கே பகிர்கின்றோம். சரி..இந்த மாத மோட்ச தீப வழிபாடு பற்றி கீழே கண்டு பங்கு பெறவும். வருபவர்கள் தங்களால் முடிந்த அளவில் நெய் மற்றும் எள்ளு வாங்கி கொண்டு வரவும்.

தை  மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 4/2/2019

மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் தை   மாதம் 21 ஆம் நாள் (04/02/2019)திங்கட்கிழமை   மாலை  5 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷி முன்னிலையில் பித்ருக்களின் ஆசி வேண்டி மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து முன்னோர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.




தொடர்புக்கு : 7904612352/9677267266
tut-temple.blogspot.in
https://www.facebook.com/thedalullathenikalaai/

மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

மார்கழி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 05/01/2019 - https://tut-temple.blogspot.com/2019/01/05012019.html

கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 6/12/2018 - http://tut-temple.blogspot.com/2018/12/6122018.html

ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 7/11/2018 - http://tut-temple.blogspot.com/2018/10/7112018.html

ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_7.html

முன்னோர்களின் ஆசி பெற மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_15.html

வளங்களை அள்ளித் தரும் மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_29.html

21 தலைமுறை முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/21.html

No comments:

Post a Comment