Subscribe

BREAKING NEWS

21 February 2019

TUT சிவராத்திரி உழவாரப் பணி அறிவிப்பு

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் 12 ம் தேதி 2018 பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் அருளிய உழவாரப் பணி பற்றிய பதிவை இங்கே தர விரும்புகின்றோம்.

குருவின் அருளில் திளைப்பது நாம் இந்த பிறவியில் செய்த புண்ணியமே ஆகும். குரு தான் இறையை நமக்கு காட்ட முடியும். எந்த மார்க்கமாக இருந்தாலும் குரு இன்றேல் திரு இல்லை. மாதவா என்று நாம் அந்த பரம்பொருளை அழைக்கின்றோம். இதனை பொருள் விளக்கமாக
 மாதா வா! என்று எடுக்கவும். அன்னையின் மூலமே இந்த பிறவி நமக்கு கிடைத்து இருக்கின்றது.அன்னையை தொழாது நாம் இந்த பிறவி நோக்கம் அடைய முடியாது. இறை உணர்த்திய மகான்கள் கூட அன்னை என்றதும் வந்தார்கள் அல்லவா? பட்டினத்தார், ஆதி சங்கரர் போன்றோர் அன்னையின் மகிமையை நமக்கு உணர்த்திய பெரு மகான்கள் ஆவர். அடுத்து
மா தவா! என்று ஒரு நிலையை நாம் குருவின் மூலம் அடைய வேண்டும். குருமார்கள் ஒன்றும் காணக் கிடைக்கும் நபர்கள் அல்லர். குருமார்கள் உணர வேண்டிய உத்தமர்கள் ஆவர். குரு என்பது நபர்களைத் தாண்டிய ஒரு நிலை. குரு என்பவர் ஊசி போன்றவர். துணியாகிய இறைவனையும், நூலாகிய நம்மையும் குரு என்ற ஊசி தான் இணைக்கிறார். இன்னும் குரு பற்றி பேசுவோம்.

வழக்கம் போல் சுமார் 10 மணி அளவில் பெருங்களத்தூர் சதானந்த சுவாமிகள் ஆசிரமம் அடைந்தோம்.ஒவ்வொருவராக வந்து சேர்ந்தார்கள். சுமார் 6 பேர் இருந்திருப்போம்.




முதலில் குருவிடம் விண்ணப்பம் செய்து விட்டு அன்றைய மகம் நட்சத்திரத்தில் பணியை செய்ய தொடங்கினோம்.



அன்னதானம் செய்வதற்கு அன்னக்கூடத்தில் இருக்கைக்களை பாலா சரி செய்து கொண்டிருந்தார்.



கண்டிராஜ் சுவாமிகள் சுத்தம் செய்த போது எடுத்த காட்சி.






ஆடவர் குழு அங்கே இருந்த தியான மண்டபத்தை சுற்றிலும் தூய்மை செய்தார்கள்.









மகம் பூஜை நடந்து கொண்டிருந்தது. கண்களுக்கு கண்கொள்ளா காட்சி, காதுகளுக்கு அருமையான விருந்து.



                         பூசை பொருட்களை கழுவி காய வாய்த்த போது












                           இதோ. தரிசனம் செய்ய தயார் நிலையில்.




குருவே சரணம் 


திருவே சரணம் 


அற்புதக் காட்சி தந்து நம்மை ஆட்கொள்ளும் குருவிடம் சரணாகதி வேண்டினோம்.




அடுத்து அன்னசேவை நடைபெற்றது. இரை உண்ணும் முன் இறையை நினைத்து உண்ணும் வழக்கம் இங்கு கண்டோம்.








ஆண்டுகள் பல கடந்தாலும் எப்போதும் சதானந்த சுவாமிகள் அருளிய உழவாரப் பணி இன்னும் நம் மனதில் பசுமையாக உள்ளது.

உழவாரப் பணி அறிவிப்பு:

 இறை அன்பர்களே.நமது TUT குழுமத்தின் உழவாரப்பணியை பற்றிய அறிவிப்பை இத்துடன் அறிவிப்பு செய்கின்றோம். இறை அருளாலும்,குருவருளாலும் மாசி மாத  உழவாரப் பணி   திருக்கோவிலில்  வருகின்ற 24/2/2019 ஞாயிற்றுக்கிழமை பீர்க்கன்காரணை சீனிவாச நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஆதிகாரணீஸ்வரர் ஆலயத்தில்  நடைபெற உள்ளது.உழவாரப்பணியைத் தொடர்ந்து அபிஷேகம்,ஆராதனை நடைபெறும்.அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு தொண்டினை சிறப்பிக்குமாறு 
கேட்டுக் கொள்கின்றோம்.
நிகழ்வின் நிரல் 
  • உழவாரப்பணி 
  • அபிஷேகம்,ஆராதனை 
  • தீபாராதனை 
  • பிரசாதம் வழங்கல் 
நாள்:24/2/2019 ஞாயிற்றுக்கிழமை 
இடம் : அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஆதிகாரணீஸ்வரர் ஆலயம் 
நேரம்: காலை 9:30  மணி முதல் 1 மணி வரை 
தங்களின் வருகையை கண்டிப்பாக உறுதி செய்ய தொடர்பு கொள்ளவும் 
7904612352 / 9677267266












கோயில் முகவரி:-

அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை உடனுறை ஸ்ரீ ஆதிகாரணீஸ்வரர் ஆலயம் 
அம்மன் கோயில் தெரு,
சீனிவாச நகர்,
பீர்க்கன்காரனை 
சென்னை - 600063

வழித்தட முகவரி https://goo.gl/maps/X8QsAj2wuay

அனைவரும் வருக! இறையருள் பெறுக !!

- மீண்டும் சிந்திப்போம்.

மீள்பதிவாக:-

 நல்லவே எண்ணல் வேண்டும் : கூடுவாஞ்சேரி நூலக உழவாரப் பணி அனுபவம் - https://tut-temple.blogspot.com/2019/02/blog-post_10.html


"சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - தொடர்ச்சி - https://tut-temple.blogspot.com/2019/01/blog-post_14.html


"சித்தன் அருள்" அருளிய கோடகநல்லூர் உழவாரப் பணி - மார்கழி மாத உழவாரப் பணி அறிவிப்பு - https://tut-temple.blogspot.com/2018/12/blog-post_7.html

பனப்பாக்கம் உழவாரப்பணி அனுபவம் - அகத்தியர் அழைத்தார்...ஆனந்தம் தந்தார்... - http://tut-temple.blogspot.com/2018/12/blog-post_16.html 

கோடகநல்லூர் ஸ்ரீ பூமி நீளா சமேத ப்ரஹன்மாதவர் மலரடி சரணம் (22/10/2018 - அன்று, அந்தநாள்>>இந்த வருடம்) - http://tut-temple.blogspot.com/2018/10/22102018.html

உள்ள நிறைவைத் தந்த பனப்பாக்கம் உழவாரப் பணி & TUT தளத்தின் உழவாரப் பணி அறிவிப்பு  - http://tut-temple.blogspot.com/2018/11/tut.html

உழவாரப் பணிக்கு இணையேது இவ்வுலகில் - பனப்பாக்கம் ஸ்ரீ அகத்திய முனிவ தம்பதிக்கு உருத்திராக்க மண்டபம் அமைக்கும் விழா - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_20.html

பனப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ மாயூரநாதர் திருக்கோயில் உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_56.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html
தாமிரபரணி தாயே போற்றி - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_12.html


தாமிரபரணி புஷ்கரம் தீப ஆரத்தி பெருவிழா அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post.html

இறை, சித்தர், தாமிரபரணி அருளை பெறுவதற்கு தாமிரபரணி புஷ்கரம் அழைக்கின்றது - http://tut-temple.blogspot.com/2018/07/blog-post_24.html




No comments:

Post a Comment