Subscribe

BREAKING NEWS

02 January 2019

மார்கழி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 05/01/2019

அனைவருக்கும் வணக்கம்.

நம் தளத்தின் மூலம் நம்மால் முடிந்த அளவில்  அறப்பணிகள், சேவைகள்,பூசைகள் என செய்து வருவது அனைவரும் அறிந்ததே. மாதம் தோறும் அகத்தியர் பெருமானுக்கு ஆயில்ய ஆராதனை செய்து வருகின்றோம். இது அகத்தியர் பெருமானுக்கு மட்டும் நடைபெறுகின்றது என்று நீங்கள் நினைக்க வேண்டாம். நேரில் வந்து பார்த்தால் தான் தெரியும். இது அனைத்து சித்தர்கள், மகான்களுக்கான பூசை. ஆயில்ய ஆராதனையில் சித்தர்கள் போற்றித் தொகுப்பை நாம் ஓதி வருகின்றோம். இதுவே நம்மை வழி நடத்தி வருகின்றது.

இந்த பயணத்தில் நாம் அடுத்து அடி எடுத்து வைத்தது மோட்ச தீப வழிபாடு. சென்ற ஆடி மாதம் கோலாகலமாக சிறப்பாக கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் ஆலயத்தில் வழிபாடு நடைபெற்றது. இந்த வழிபாட்டில் நமக்கு நேரிடையாக வந்து , முதல் வழிபாட்டை துவக்கி வைத்த அகத்தியர் அடியார்கள் பாதம் தொட்டு வணங்குகின்றோம். இதோ இந்த மாதம் மார்கழி  மோட்ச தீப வழிபாட்டிற்கு அனைவரையும் இந்த பதிவின் மூலம் அழைக்கின்றோம். இப்போது தான் ஆரம்பித்தது போல் இருந்தது. அதற்குள் ஆடி,ஆவணி,புரட்டாசி,ஐப்பசி,கார்த்திகை  என ஐந்து  மோட்ச தீப வழிபாடு குருவருளால்  முழுமை பெற்றுள்ளது.

அனைவருக்கும் இங்கே பணிவான வேண்டுகோள் ஒன்றை சமர்ப்பிக்கிறோம். மோட்ச தீப வழிபாட்டின் பதிவுகளை, காணொளிகளை பார்த்து யாரும் தாமாக வழிபாட்டினை செய்ய வேண்டாம். குருவருள் இன்றி இந்த வழிபாடு முழுமை பெறாது. அப்படி இந்த வழிபாட்டை மேற்கொள்ள விரும்புபவர்கள் தங்களுக்கு தெரிந்த அருகில் உள்ள ஜீவ நாடியில் குருவிடம் உத்திரவு பெற்று மேற்கொண்டு வழிபாட்டை செய்யலாம். வேறு ஏதேனும் இந்த வழிபாடு சம்பந்தமாக நம்மை தொடர்பு கொள்ளலாம்.


சரி.சென்ற கார்த்திகை   மாத நிகழ்வின் துளிகளை பார்த்துவிடுவோமா? 

இந்த மாத பூசை வெகு தாமதமாக ஆரம்பித்தது. இது நமக்கு ஒரு வித பதட்டத்தை தந்தது, ஆனால் கடைசியில் தான் நமக்கு தாமதத்திற்கான காரணம் புரிந்தது.



மோட்ச தீபத்திற்கு நாம் சில முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும். அதில் குறிப்பாக அகல், எள்,பச்சரிசி இவை அடங்கும்.இவற்றை வாங்கி, நன்கு கழுவி காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். மிக மிக பொறுமையும் ,சிரத்தையும் அவசியம்.



கோயிலில் விளக்கேற்றும் இடத்தை நன்கு கூட்டி, பெருக்கி , பின்னர் சாணம் கொண்டு மொழுகி வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து தீபங்களை தயார் செய்ய வேண்டும். வழக்கம் போல் சிவசங்கர் இந்த சேவை ஆரம்பித்தார். அவரோடு மேலும் சில அன்பர்களும் சேவையில் ஈடுபட்டனர்.



தீபத்திற்கு திரியை தயாரிக்கும் பணியை ஆடவரும், தீபமேற்ற வாழை இல்லை, அகல் வைத்தல் போன்றவற்றை மகளிரும் செய்து கொண்டிருந்தார்கள்.



அகத்தியரிடமும், வினை தீர்க்கும் விநாயகரிடமும் சங்கல்பம் செய்தோம்.








அனைத்தும் ஒருங்கே நேர்த்தியாக நடந்து கொண்டிருந்தது.



                                                    குத்து விளக்கேற்ற தயார் செய்த காட்சி



இதோ..தீபங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.





மோட்ச தீபம் ஒவ்வொன்றாக ஏற்றப்பட்டு வருகின்றது. அன்றைய தினம் பிரகாசம் தெரிந்தது.







 கண்ணைப் பறிக்கும்  ஒளி வெள்ளம். இது நமக்கு புதிதாக இருந்தது.  இந்த இடத்தில் தான் சென்ற குரு பூசையில் 108 விளக்கேற்றி வழிபட்டோம். அதன் தொடர்ச்சியாக நாம் இங்கே மோட்ச தீபம் ஏற்றுகின்றோம் என்றால் குருவின் கருணைக்கு எல்லையேது?



 தீபம் ஏற்றியாகி விட்டது.அடுத்து மந்திர உச்சாடனம் செய்ய உள்ளோம். 





அவ்வப்போது நெய் ஊற்ற வேண்டிய பணியை விஜய சுந்தரி  அவர்கள் செய்து கொண்டிருந்தார்கள். 










மந்திர உச்சாடனத்தை திரு.சிவசங்கர் செய்தார்கள். இரண்டு மந்திரங்கள் 108 முறை சொல்ல வேண்டும். சிவசங்கரும், விஜயசுந்தரி அவர்களும் ஆளுக்கொரு மந்திரமாக பிரித்துக் கொண்டு அழகாய் சொன்னார்கள்.






 அடுத்து ஒவ்வொருவராக வந்து, அவர்களின் முன்னோர்களை நினைத்து வேண்டி, அங்கே பூக்கள் தூவி வழிபாடு செய்ய பணித்தார்கள். 21 தலைமுறை முன்னோர்களின் ஆசி வேண்டி நின்ற ஒவ்வொருவரையும் பார்க்கும் போது, இந்த பூமியில் நாம் பிறந்த நோக்கத்தை இவர்கள் அனைவரும் நிறைவேற்றி வருகின்றார்கள் என்பது உறுதியாக தெரிந்தது.










 அடுத்து உணவு பரிமாறப்பட்டது. உணவு பரிமாற்ற இருந்த வரிசையைப் பார்த்த போது தான் நமக்கே ஆச்சர்யமாக இருந்தது, பூசையை ஆரம்பிக்கும் போது இன்று யார் வருவார்கள் என்று தேடினோம், பூசையின் முழுமையில் நாம் இருக்கின்றோம் என்று சுமார் 50க்கும் மேற்பட்ட அடியார்கள் வந்து கலந்து கொண்டார்கள். அதே போல் தமாதாமாக ஆரம்பித்ததால் தான் இவ்வளவு அன்பர்கள் வந்ததாக நமக்கு தெரிந்தது. 



இனிமேல் அவசரம் வேண்டாம்..பொறுமையே போதும் என்று நாம் உணர்ந்தோம். இது நாம் எம் நன்மைக்காக செய்யவில்லை, அகத்தியரின் அருள் வாக்கின் படி உலகம் உய்ய செய்து வருகின்றோம். இதில் வருவோர், போவோர் கணக்கெல்லாம் நமக்கேது? அனைத்தும் அவருக்குத் தான் தெரியும்.









 அனைத்து நிகழ்வுகளும் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.மீண்டும் ஒரு முறை நீங்களே பாருங்கள்.

 இந்த மோட்ச தீப வழிபாடானது மிக மிக உயர்ந்த வழிபாடு.,இத்தகைய வழிபாட்டை நமக்கு பணித்த அனைத்து குருமார்களின் பாதம் பணிகின்றோம். அதே போல் சென்ற பூசையில் பங்கு கொண்டு, சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு நல்கி உதவிய அனைத்து அன்பர்களின் பாதம் பணிகின்றோம். இந்த மோட்ச தீப வழிபாடு ஒருவரால் நிகழ்த்தப்படுவதன்று. இது ஒரு கூட்டு வழிபாடு. யாரும் நமக்கு அழைத்து சொல்லவில்லை என்று நினைக்காது தாமாக முன்வந்து உதவுங்கள் என்று வேண்டுகின்றோம்.
இனிவரும் பதிவுகளில் அவ்வப்போது நமக்கு கிடைக்கின்ற செய்திகளை இங்கே பகிர்கின்றோம். சரி..இந்த மாத மோட்ச தீப வழிபாடு பற்றி கீழே கண்டு பங்கு பெறவும். வருபவர்கள் தங்களால் முடிந்த அளவில் நெய் மற்றும் எள்ளு வாங்கி கொண்டு வரவும்.

மார்கழி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 6/12/2018

மெய் அன்பர்களே.

நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் மார்கழி  மாதம் 21 ஆம் நாள் (05/01/2019) சனிக்கிழமை   மாலை  5 மணி முதல் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷி முன்னிலையில் பித்ருக்களின் ஆசி வேண்டி மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்ய உள்ளோம். அனைவரும் வருகை புரிந்து முன்னோர்களின் அருளாசி பெறும்படி வேண்டுகின்றோம்.

தொடர்புக்கு : 7904612352/9677267266
tut-temple.blogspot.in
https://www.facebook.com/thedalullathenikalaai/



மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மீள்பதிவாக:-

கார்த்திகை மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 6/12/2018 - http://tut-temple.blogspot.com/2018/12/6122018.html

ஐப்பசி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - 7/11/2018 - http://tut-temple.blogspot.com/2018/10/7112018.html

ஆவணி மாத மோட்ச தீப வழிபாடு அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_7.html

முன்னோர்களின் ஆசி பெற மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_15.html

வளங்களை அள்ளித் தரும் மோட்ச தீப வழிபாடு - http://tut-temple.blogspot.in/2018/05/blog-post_29.html

21 தலைமுறை முன்னோர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றுவோம் - http://tut-temple.blogspot.in/2018/04/21.html


No comments:

Post a Comment