Subscribe

BREAKING NEWS

03 March 2019

மகா சிவராத்திரி அழைப்பிதழ் (04/03/2019)


அன்பார்ந்த மெய்யன்பர்களே.

அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் சிவ ராத்திரி  அனைவரும் கொண்டாட உள்ளோம். நமக்கு கிடைத்த அழைப்பிதழ்களை இங்கே ஒரு சேர பகிர்கின்றோம். அனைவரும் அருகில் உள்ள தொன்மை வாய்ந்த சிவாலயம் சென்று, ஈசனை வழிபட்டு, வினைத் தூய்மை பெறவும். மேலும் தற்போது மிக மிக அதிக அளவில் எதிர்பார்க்காத சம்பவங்கள்  அதிகளவில் கேட்டு மனம் அவதியுற்றோம். இந்த நிகழ்வுகளுக்கு முன்பாக சித்தன் அருளில் மாமகரிஷி அகத்தியர் பெருமான் அஷ்ட திக்குகளிலும் விளக்கு போடுங்கள்  சென்ற ஆண்டு என்று வாக்கு உரைத்தார்.  முடிந்தவர்கள் வாரம் ஒருமுறையாவது விளக்கேற்றுங்கள். முடியாதவர்கள் மாதம் ஒருமுறையாவது விளக்கேற்றி வழிபடவும்.

இந்த அஷ்ட திக்கு விளக்கு வழிபாட்டை  மேற்கொள்ள உள்ள சிவ ராத்திரி வழிபாட்டில் தயவு செய்து இணைக்கவும். நமக்கு முதன் முதலாக சிவராத்திரி அழைப்பு அருள்மிகு கந்தழீஸ்வரர் வழங்கி உள்ளார். இணைப்பைப் பார்த்து அருள் பெறவும்.



நமக்கும் கந்தழீஸ்வரருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஊர் ஊராக சுற்றாதே குன்றத்தூரை சுற்று என்று நமக்கு உணர்த்தியவர். இங்கு சென்றால் மனம்,மொழி,மெய் ஒடுங்குவதை உணரலாம். சேக்கிழார் தினமும் தொழுத சிவனார் இங்கு தானே உள்ளார். இங்கு சென்றால் ஒரே தரிசனத்தில் திருஊரகப் பெருமாள்,குன்றத்தூர் முருகன் தரிசனம் ஒருங்கே பெறலாம். சென்ற ஆண்டு உழவார செய்து மனதிற்கினிய தரிசனம் தந்தார் நம் ஈசன்.



 அடுத்த படியாக நமக்கு ஸ்ரீ துளஸீஸ்வரர் கோயிலில் இருந்து அழைப்பு வந்துள்ளது. நான்கு கால பூஜை பற்றி அழைப்பிதழில் காணவும்.

சிங்கப்பெருமாள் கோயில் அருகில் உள்ள குளத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் ஆலய அழைப்பிதழ் 




இவருக்கும் நமக்கும் அன்பின் பிணைப்பு உண்டு. ஆம்.இங்கு உழவாரப் பணியும் செய்தோம். சில மரங்கள் நட்டோம். அன்று நாம் செய்த உழவாரப் பணிக்காக நம் தல அன்பர்கள் அனைவருக்கும் அன்பு பாராட்டி மரியாதை செய்தது இன்னும் தித்திப்பே. இவர் அகத்தியர் வழிபட்ட எம் பெருமான் ஆவார்.




 அடுத்து நாம் காண இருப்பது திருநிலை பெரியாண்டவர் அழைப்பு

04.03.2019 அன்று மஹா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு திருநிலை பெரியாண்டவர் ஆலயத்தில் மாலை 3.00மணி முதல் தேவார இசை ,சிறப்பு வேள்வி பரதநாட்டியம் பெரியாண்டவர் அங்காலபரமேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தல் சிறப்பு நான்குகால அபிஷேகமும் ஆராதனைகள் அன்னதானம் நடை பெற உள்ளது வருகின்ற பக்தர்கள் அனைவரும் வில்வம் மற்றும் மலர்களால் தங்கள் கைகளால் இறைவனுக்கு அர்ச்சனைகள் செய்யலாம் இரவு சிவபுராணம் நாடகம் நடைபெறும் முன்றாம் கால பூசையில் ருத்திராட்சம் இலவசமாக வழங்கப்படும்
இறைவன் அருளை பெறுமாறு அழைக்கின்றோம்




  திருநீரும் மருந்தாகும் உந்தன் அருளாலே
திசை எட்டும் வளமாகும் உந்தன் பேராலே
திருநிலையில் சுடரானை துன்பமிலா வாழ்வானை
ஒருநிலையாய் நின்றவனே பெருநிலையாய் அருள்பவனே
பிணிசூழா காத்திடுவாய் பேரின்பம் நல்கிடுவாய்
வளமான வாழ்வும் தந்திடுவாய் உன் இன்னருளாலே
மனமறிய செய்த பாவங்கள் நீக்கிடுவாய்
நாடிவந்தொர்க்கு நல் அருள் புரியும் நாயகனே
குலம்தழைக்க வருவோனே குன்றா வளம் தருவோனே
உனையே கதியென்று பணிந்திட்டோம் அருள்வாய்
பெரியாண்டவபெருமானே.

Periyandavar Temple Thirunilai ஸ்ரீபெரியாண்டவர் ஆலயம்
திருநிலைகிராமம், ஒரகடம் அஞ்சல், திருக்கழுக்குன்றம் வழி செங்கல்பட்டு
வட்டம் ,காஞ்சிபுரம் மாவட்டம்- 603109 cell 9842740957



சக்தியின் சூலாயுதம் திருநிலையில் வீழ்ந்த போது 21 மண் உருண்டைகள் சிதறி வீழ்ந்து அவை சிவகணங்களாக மாறிய தலம்.திருநிலையில் சிவகணங்கள் மண்ணில் இருந்து தோன்றி ஈசனை மண் உருகொண்டு வணங்கி அருள் பெற்றது போல் நாமும் சிவகணங்கள் மற்றும் ஈசனின் அருள் பெற 21 மண் உருண்டைகள் பிடித்து சிலையின் முன்புறம் செவ்வக வடிவில் அடுக்கி வைத்து ஒவ்வொன்றுக்கும் அபிஷேகம் செய்து கற்பூர ஆராதனை காட்டி அருள் பெருவதால் எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு பெறலாம்.

அடுத்து நமக்கு உழவாரப் பணி செய்ய இந்த சிவராத்திரிக்கு அழைப்பு விடுத்து, நமக்கு சிவராத்திரி அழைப்பிதழ் தந்துள்ளார் பெருங்களத்தூர் ஆதிகாரணீஸ்வரர்.





அடுத்து அன்னம்புத்தூர் ஆலய அழைப்பிதழ் பகிர்கின்றோம் 








 மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்திருந்து சிவ அபிசேகங்களை காண்பதால் உடல் ஆரோக்யம் பன் மடங்கு பெருகும், நோய் எதிர்ப்பு சக்தி பெருகும் ..உடலில் அன்று இரவில் சுரக்கும் விச அமிலங்கள் உடலில் கூடாமல் தடுக்கப்படும்.தமிழக சிவாலயங்களில் இரவு நான்கு கால அபிசேகங்கள் நடக்கும்...ஆற்றோரம் இருக்கும் சிவாலயங்கள் வழிபாடு மிக சிறப்பு பழமையான சிவாலயங்களில் உங்கள் மனதையும் உடலையும் காக்கக்கூடிய சக்திகள் அதிகம்.
சிமெண்டால் பெரிய பெரிய பொம்மைகள் செய்து ஆர்க்கெஸ்ட்ரா வைத்து கட்டணம் வசூலிக்கும் இடங்களுக்கு சென்று சிவத்தை தேடாதீர்கள்.மகா சிவராத்திரி சிவபெருமான் கோடிக்கணக்கில் செலவு செய்து உங்களை என் இடத்துக்கு வா என அழைக்க மாட்டார்..வருபவனை முடிந்தவரை பல இடைஞ்சல் கொடுத்து தடுக்கத்தான்  செய்வார். ஜாலியா சுற்றுலா போகிறவர்கள் அங்கு போங்க...தனிமையில் அமானுஷ்ய அமைதியில் இருக்கும் சிவனை வழிபட்டு சிவனருள் பெற விரும்புவோர் உண்மையான மன வலிமை இருப்போர் பழமையான சிவ ஸ்தலத்துக்கு போங்க..பேராசக்காரர்கள் மட்டும் அலங்காரம் நிறைந்த விளம்பரம் நிறைந்த இடத்துக்கு போவார்கள்.


அனைவரும் மறவாது அருகில் உள்ள சிவாலயம் சென்று, ஆன்ம ஆலயத்தில் ஜோதி தரிசனம் பெற்று வாழ்வில் வளம் பெறுங்கள்.

முந்தைய பதிவுகளுக்கு:

 சிவராத்திரி விரதம் அறிந்து கொள்வோம் - https://tut-temple.blogspot.com/2019/02/blog-post_27.html

 மகா சிவராத்திரி அழைப்பிதழ் - https://tut-temple.blogspot.com/2018/02/blog-post_87.html


 சிவராத்திரி விரதம் - செய்ய வேண்டியது - http://tut-temple.blogspot.in/2018/02/blog-post_12.html

No comments:

Post a Comment