Subscribe

BREAKING NEWS

10 March 2019

காரி நாயனார்ஆசியுடன் சிவ ராத்திரி

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்.

கணம்புல்ல நம்பிக்குங் காரிக்கும் அடியேன் என்ற பதிவில் நம் தளம் சார்பில் ஒரு புதிய முயற்சி செய்ய இருக்கின்றோம்.  அது குருவருளால் சிறக்க பிரார்த்திக்கின்றோம் என்று கூறி இருந்தோம். ஆம் ! குருவருளால் சிறப்பாக நடைபெற்றது. நம் தளம் சார்பில் இனி 63 நாயன்மார்களின் பூசையை நம்மால் முடிந்த அளவில் அர்ச்சனை செய்து கொண்டாட இருக்கின்றோம்.

இதோ தொடக்கமே காரி நாயனாரின் ஆசிகள் தான்.




அகத்திய பெருமானுக்கு பூ சாற்றினோம்.

அடுத்து 1000 பிரதிகள் சிவபுராணம் அச்சிட்டுள்ளோம். இந்த சிவராத்திரி முதல் விநியோகம் செய்ய உள்ளோம். காரி நாயனரின் போர் பாதத்தில் இன்று வைத்து வணங்கினோம். என்னப்பா? காரி நாயனார் என்று சொல்லிவிட்டு சிவபெருமானிடம் வைத்து உள்ளீர்கள் என்று சிந்திக்க வேண்டாம்.




சிவம் வேறு; அடியார்கள் வேறு அல்ல. இருவரும் ஒன்றே என்று உணர்த்துதலின் உந்துதலே ஆகும். நாம் ஏன் காரி நாயனார் பூசையுடன் இந்த வழிபாட்டை தொடங்கி உள்ளோம். அவர் காரிகோவை என்ற நூலினை இயற்றித் தமிழ் மூவேந்தர்களிடமும் (சேர, சோழ, பாண்டியர்) சென்று நட்பினைப் பெற்றனர். அவர்கல் மகிழும்படி அதற்குப் பொருள் விரித்துரைத்தார்.
அவர்கள் தந்த பெருநிதிக் குவைகளைக் கொண்டு சிவனுக்குப் பல கோயில்கள் கட்டினார். எல்லாருக்கும் மன மகிழும் இன்ப மொழிப்பயனை இயம்பினார். சிவனடியார்களுக்குப் பெருஞ் செல்வங்களை மிகுதியாக வழங்கினார். அட. நாமும் நம்மால் முடிந்த அளவில் சிவத் தொண்டு செய்ய அவரின் பரிபூரண ஆசி கிடைத்திருக்கும் என்று நம்புகின்றோம். இது தாங்க அதிசயம் என்பது. இது போன்ற மெய்யுணர்தல் அவ்வப்போது நமக்கு கிடைத்து வருகின்றது.


நம் தல அன்பர்கள் அனைவருக்காக சங்கல்பம் செய்து விட்டு, அந்த பரம்பொருளின் பாதத்தில் சரண் அடைந்தோம்.







சரி. அன்றைய சிவராத்திரி எப்படி அமைந்தது என்று ன் நமக்கே ஆச்சர்யமாகத் தான் இருக்கின்றது.  வழக்கம் போல் கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் தரிசனம் பெற்றோம். சரியாக அன்று சிவபுராணத்தை ஒரு ஓதினார். அவர் ஓதிய போது நாமும் சில பிரதிகளை அங்கிருந்த அனைவருக்கும் கொடுத்தோம்.




அடுத்து அங்கிருந்து  வேலி அம்மன் கோயிலுக்கு சென்றோம். மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அம்மையப்பனுக்கு கொஞ்சம் மலர்கள் வாங்கி அங்கே கொடுத்து அனைவருக்கும் பிரார்த்தனை செய்தோம்.







அடுத்து அங்கிருந்து கிளம்பி காட்டாங்குளத்தூர் சிவன் கோயிலுக்கு சென்றோம். இந்த தளம் ராகு கேது பரிகார தலம் ஆகும். பலமுறை அந்த வழியே சென்று இருக்கின்றோம்.ஆனால் அன்று தான் நமக்கு அருள் கிடைத்தது. இதைத்தான் நாம் பல முறை உணர்ந்திருக்கின்றோம். ஒரு கோயிலுக்கு செல்வது என்றால் உடனே செல்ல முடியாது. அதற்கென்று நேரம் சூழல் அமைய வேண்டும்.





அடுத்து பிருகு மகரிஷி குடிலுக்கு செல்ல எண்ணி, அலைபேசியில் செய்தி சொன்னோம். அவர்களும் வாருங்கள் என்று நம்மை அழைத்தார்கள். அப்போது தான் மருதேரி செல்லும் வழியில் உள்ள மற்றொரு சிவன் கோயிலான தர்ப்பாரண்யேஸ்வரர் தரிசனம் பெற்றோம். அங்கு அபிஷேகம் கண்டு, சொர்ணாபிஷேகம் பெற்றோம். சிவபுராணம் படித்தோம். ( ஹி.ஹி ..படிப்பது வேறு, பாடுவது வேறு )









பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மருதேரி சென்றோம். மன்னவன் பிருகு அருள் பெற்றோம். சுமார் ஒரு மணிநேரம் அங்கிருந்தோம். பல செய்திகளை பரிமாறினோம். அன்றைய தரிசனம் உங்களுக்காக.





அடுத்து அங்கிருந்து அப்படியே வீரபத்திரர் கோயில் வழியாக திருஇடைச்சுரம் சென்றோம். அதாங்க திருவடிசூலம். பின்னர் செம்பாக்கம் சென்று செபுகேஸ்வரர் தரிசனம் பெற்று, வாலைத் தாயின் தரிசனம் பெற்று காலை 5 மணி அளவில் மீண்டும் கூடுவாஞ்சேரி அடைந்தோம். மிக மிக அருமையான யாத்திரையாக சிவராத்திரி அமைந்தது. ஒவ்வொரு கோயிலையும், பெற்ற  அனுபவத்தையும் தனிப் பதிவாக கொடுக்க ஆசை. குருவிடம் விண்ணப்பம் வைக்கின்றோம்.'



அன்றைய தினம் நாம் அகத்தியரின் அருளையும் இங்கே தருகின்றோம். அகத்தியர் தபோவனம் மலேஷியா குழுவினர் செய்ய நான்கு கால பூசையிலிருந்து சில காட்சிகள் இங்கே.












மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.


முந்தைய பதிவுகளுக்கு:


 மகா சிவராத்திரி அழைப்பிதழ் (04/03/2019) - https://tut-temple.blogspot.com/2019/03/04032019.html

 சிவராத்திரி விரதம் அறிந்து கொள்வோம் - https://tut-temple.blogspot.com/2019/02/blog-post_27.html
 மகா சிவராத்திரி அழைப்பிதழ் - https://tut-temple.blogspot.com/2018/02/blog-post_87.html

 சிவராத்திரி விரதம் - செய்ய வேண்டியது - http://tut-temple.blogspot.in/2018/02/blog-post_12.html



 அறிய வேண்டிய அரிய மனிதர்கள் - 10 ஆவது இந்து சமய சேவை கண்காட்சி - 2019 - https://tut-temple.blogspot.com/2019/02/10-2019.html
9 ஆவது இந்து சமய சேவை கண்காட்சி - 2018 - https://tut-temple.blogspot.com/2018/02/9-2018.html

"ஜீவ அமிர்தம்" பருகலாமே! - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_30.html

No comments:

Post a Comment