Subscribe

BREAKING NEWS

21 March 2019

கல்யாண தீர்த்தம் அகத்தியர் தரிசிக்க வாங்க!

அனைவருக்கும் அன்பு வணக்கம்.

2016 ஆண்டில் நமக்கு கிடைத்த அகத்தியர் தரிசனத்தை இங்கே தொகுத்து தர விரும்புகின்றோம். 2016 ஆண்டில் தான் தேடல் உள்ள தேனீக்களாய் குழுவிற்கு விதை போடப்பட்டது. அப்போது நம்முடன் சில அகத்திய சொந்தங்கள் ஒன்றிணைந்தார்கள். இன்று வரை அந்த உறவு தொடர்ந்து கொண்டு வருகின்றது. 2016 ஆண்டில் தமிழக முழுதும் உள்ள அகத்திய அடியார்களை ஒன்றிணைக்க விரும்பி திட்டம் தீட்டினோம். ஆனால் இறையின் திட்டம் வேறாக இருந்தது. அந்த திட்டத்திற்காக சில அகத்திய சொந்தங்களுடன் நாம் பேசி வந்தோம். சரி. நாம் கட்டாயம் அத்திரி,கல்யாண தீர்த்தம், பாபநாசம் சென்று வரலாம் என விரும்பினோம். பெரம்பலூர் சதீஸ் ஐயா , திருச்சி செல்லப்பன் அண்ணா  , சென்னை விஜயலட்சுமி அம்மா என ஒன்றிணைந்து நாம் மேற்கொண்ட யாத்திரை இது.

இந்த பதிவை நாம் இன்று தர வேண்டும் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் இன்று தருவது மிகப் பொருத்தம் ஆகும். இன்று செல்லப்பன் அண்ணனின் திருமணம் நடைபெற உள்ளது. திருமண நாள் பரிசாக நம் தளம் சார்பில் இந்த பதிவை சமர்பிக்கின்றோம். ஏனென்றால் அடி நாயேன் சித்தமார்க்கத்தில் நுழைய முழு முதற்காரணம் திரு.செல்லப்பன் அண்ணனை சாரும்.

மண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே

இன்று திருமண நாள் காணும் செல்லப்பன் அவர்களுக்கும், கல்பனா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

சரி...தரிசனத்திற்கு செல்வோமா?



ஓம்  அகத்தீசப்  பெருமானே  போற்றி 
ஓம்  அகிலம் போற்றும்  அறிவுக்கடலே போற்றி
ஓம்  அட்டமா  சித்துகள்  பெற்றவரே  போற்றி 
ஓம்  அகத்தியர்  மலை மீது  அமர்ந்தவரே  போற்றி 

முதல் நாள் அத்திரி மலை, பாபநாசம் சென்று வந்தோம். அடுத்த நாள் கல்யாண தீர்த்தம் அகத்தியர் அருவி நீராடல், அடுத்து மேலே கொஞ்ச தூரம் மலை ஏற கல்யாண தீர்த்தம் அடையலாம்.



வித விதமாக அபிஷேகம் செய்தோம். 

ஓம்  தமிழ்  முனியே  போற்றி 
ஓம்  இறைவனிடம்  தமிழ்  கற்றவரே  போற்றி 
ஓம்  தமிழின்  முதல் தொண்டரே  போற்றி 
ஓம்  தமிழின் முதல்  முனைவரே  போற்றி                                        










ஓம்  பொதிகைமலை  மாமுனியே  போற்றி 
ஓம்  தவ சீலரே  போற்றி 
ஓம்  சிவ சீடரே  போற்றி 
ஓம்  கும்ப சம்பவரே  போற்றி 

புற வழிபாட்டின் புனிதம் உணர்த்தப்பட்டோம்.










அக வழிபாட்டின் ஆனந்தம் உணர்ந்தோம்.

ஓம்  நந்தீஸ்வரரின் சீடரே போற்றி 
ஓம்  தன்வந்திரியிடம்  மருத்துவம்  பயின்றவரே  போற்றி 
ஓம்  தேரையருக்கு  மருத்துவம்  பயிற்றுவித்தவரே  போற்றி
ஓம் காமேஸ்வரி  மந்திர  உபதேசம்  பெற்றவரே  போற்றி 








அட..என்ன ஒரு ஆனந்தம். பரவசம். இன்னும் அந்த பேரானந்த உணர்வு நம்மை உயிர்ப்பிக்க செய்கின்றது.

ஓம்  வயதில் எல்லையில்லா  சித்தரே போற்றி 
ஓம் குருவுக்கெல்லாம்  மகா குருவே  போற்றி 
ஓம் சித்தருக்கெல்லாம் மகா சித்தரே  போற்றி 
ஓம் பஞ்சேஷ்டி தலம் உறைபவரே போற்றி 










ஓம் அகத்தியம்  தந்த  அருளாளரே  போற்றி 
ஓம் அகத்தியர்  காவியம்  தந்தவரே  போற்றி
ஓம்  அகத்தியர்  வெண்பா அருளியவரே  போற்றி 
ஓம் அகத்திய  நாடி அருளியவரே  போற்றி    

அடுத்து சிவபுராணம் போன்ற பதிகம் பாடி, தீப ஆராத்தி செய்து வழிபாடு நடந்தது. பின்னர் அனைவரும் தனித்தனியாக தரிசித்தோம்.



எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று நெக்குருகினோம்.

ஓம் அகத்திய சம்ஹிதை  அருளியவரே  போற்றி 
ஓம் ஐந்து சாஸ்திரம்  தந்தவரே  போற்றி 
ஓம் கிரியை யோகம்  படைத்தவரே போற்றி 
ஓம்  ஆறெழுத்து  அந்தாதி  அருளியவரே  போற்றி                       

அடுத்து குழுவாக தருணத்தை காட்சிப்படமாக மாற்றினோம். பிரசாதம் விநியோகித்து அகத்தியரிடம் நன்றி கூறி விடை பெற்றோம்.




ஓம்  வாகட  வெண்பா  அருளியவரே  போற்றி 
ஓம்  சிவா சாலம்  தந்தவரே போற்றி 
ஓம்  சக்தி  சாலம்  தந்தவரே  போற்றி 
ஓம்  சண்முக சாலம்  தந்தவரே  போற்றி        





 இந்த அருவியின் உயரம் 100 மீட்டர். பாபனாசர் கோயிலில் இருந்து இந்த அருவியை நடந்தே வந்தடையலாம். இந்த அருவியில் நீராடுவது நம் பாவத்தை கழுவுவதற்கு மட்டுமின்றி பல மூலிகைச் செடிகளை கடந்து வருவதால் நோய்களை குணப்படுத்தவும் உதவும் என்று நம்பப்படுகிறது.
இந்த அருவியின் வழியாக மலை மேல் நடந்து சென்றால், இதன் தொடக்க நிலையை அடையலாம். கல்யாண தீர்த்தம் என்றழைக்கப்படும் அந்த இடம், ஒரு பெரிய சுவற்றின் பின்னால் ஒழித்து வைக்கப்பட்டதை போல் அமைந்திருக்கும்.இதற்கு புராணம் சொல்லும் காரணம், சிவபெருமானின் திருமணத்தை காண வந்த எண்ணிலடங்கா கூட்டத்தினால் ஏற்பட போகும் அசம்பாவிதத்தை தடுக்க, பூமியை சமநிலைப்படுத்த அகஸ்தியர் செய்த அமைப்பு இதுவென்று.             

ஓம் சமரசநிலை  ஞானம்  போதிதவரே  போற்றி 
ஓம்  சக்தி  சூத்திரம்  சமைத்தவரே  போற்றி 
ஓம்  இராமனுக்கு சிவகீதை  அருளியவரே  போற்றி 
ஓம்  ஆதித்ய ஹிருதயம் அருளியவரே  போற்றி                   

ஓம்  வாதாபியை  வதம்  செய்தவரே  போற்றி
ஓம்   சுவேதனின்   சாபம்  தீர்த்தவரே  போற்றி 
ஓம்  இடும்பனை  காவடி  எடுக்க  வைத்தவரே  போற்றி 
ஓம்  தொல் காப்பியரின்  குருவே  போற்றி

ஓம் கடல் நீரைக் குடித்து  வற்றச் செய்தவரே போற்றி 
ஓம் நீரின் மேலே  தவமிருந்தவரே  போற்றி 
ஓம் விந்திய மலையின்  அகந்தையடக்கியவரே போற்றி 
ஓம்  அசுராசுரர்களை  அழித்தவரே போற்றி                                        

ஓம்  காவிரியைப்  பெருக்கியவரே  போற்றி 
ஓம்  தாமிரபரணியை  உருவாக்கியவரே  போற்றி 
ஓம்  ராவணனை  இசையால்  வென்றவரே  போற்றி 
ஓம் அகஸ்தீஸ்வரம்  அமைத்தவரே  போற்றி 

ஓம்  தேவாதி தேவர்களை  காத்தவரே  போற்றி 
ஓம்  சிவசக்தி  திருமண  தரிசனம்  கண்டவரே போற்றி 
ஓம்  சித்த வைத்திய  சிகரமே  போற்றி 
ஓம் அகத்திய  பூஜாவிதி  தொகுத்தவரே போற்றி                     


ஓம்  நான்கு யுகங்களையும்  கடந்தவரே  போற்றி 
ஓம்  முத்தமிழால்  உலகை  ஆண்டவரே  போற்றி 
ஓம்  தமிழ்ச்  சங்கங்களின்   தலைவனே  போற்றி 
ஓம்  சிவசூரிய  வழிபாட்டைத்  துவக்கியவரே  போற்றி
                    

ஓம்  கும்பத்தி லுதித்த  குறுமுனியே  போற்றி 
ஓம்  வடதென் திசையை  சமப்படுத்தியவரே  போற்றி 
ஓம்  உலோபமுத்திரையின்  மணாளா  போற்றி 
ஓம்  அம்பையில்  கோயில்  கொண்டவரே  போற்றி               

ஓம்  அரும் மருந்துகள்  அறிந்தவரே  போற்றி 
ஓம் அனைத்தும் கற்றுத்  தெளிந்தவரே  போற்றி 
ஓம்  முக்காலமும்  உணர்ந்தவரே  போற்றி 
ஓம்  முத்தமிழும்  வளர்த்தவரே  போற்றி                                         

ஓம்  ஆஷா சுவாஸினி மைந்தரே  போற்றி 
ஓம்  நெல்மணிகளின்  தலைவனே  போற்றி 
ஓம்  சிவன்  அம்சமே  போற்றி 
ஓம் திருமால் விசுவரூப தரிசனம் கண்டவரே போற்றி       

ஓம்  சர்வ  சக்திகளும்  தருபவரே  போற்றி 
 ஓம் சகல கலைகளும்  சித்தியாக  அருள்பவரே போற்றி 
ஓம்  பிறவா வரம்  தரும்   பெருமானே  போற்றி 
ஓம்  தேவி  உபாசகரே  போற்றி                                                              

ஓம்  இசையிலும்  கவிதையிலும் மேன்மை தருபவரே  போற்றி 
ஓம்  கல்வித் தடை  நீக்குபவரே  போற்றி 
ஓம்  புத பகவானின்  தோஷம்  நீக்குபவரே  போற்றி 
ஓம்  முன் தீவினைப்  பாவங்கள்  தீர்ப்பவரே  போற்றி           

ஓம்  பேரும் புகழும் மதிப்பும் உண்டாக  அருள்பவரே போற்றி 
ஓம்  பூர்விக சொத்துக்கள் கிடைக்க  அருள்பவரே  போற்றி 
ஓம்  சகலவித  நோய்களையும்   தீர்ப்பவரே  போற்றி 
ஓம்  குடும்பத்தில்  ஒற்றுமை  நிலவச்  செய்பவரே  போற்றி 

ஓம்  பித்ரு சாபம்  நீக்கி    ஆசி பெற  அருள்பவரே  போற்றி 
ஓம்  சத்ருக்களின்  மனம்  மாற்றி  அன்புரச் செய்பவரே  போற்றி 
ஓம்  சித்திகள்  பெற்று  உயரச்  செய்பவரே  போற்றி 
ஓம்  நல் குருவாகி  மனதார  வாழ்த்து பவரே   போற்றி          

ஓம்  அண்டம் பிண்டம் நிறைந்த அயன்மால்  போற்றி 
ஓம்  அகண்டம் பரி பூரணத்தின் அருளே   போற்றி 
ஓம்  மண்டலஞ் சூழ்  இரவிமதி  சுடரே  போற்றி 
ஓம்  மதுரத்   தமிழோதும்   அகத்தீசரே  போற்றி                        

 ஓம்  எண்திசையும்  புகழும்  என் குருவே  போற்றி
 ஓம் இடைகலையின்  சுழுமுனையின்  கமலம்  போற்றி 
ஓம்  குண்டலியில்  அமர்ந்தருளும்  குகனே  போற்றி 
ஓம்  மேன்மை கொள் சைவநீதி  விளங்க  செய்பவரே  போற்றி

ஓம்  கும்பேஸ்வரன் கோயில் முக்தி  அடைந்தவரே  போற்றி 
ஓம்  குருவாய்  நின்று  இன்றும்  ஆசிகள்  அளிப்பவரே  போற்றி 
ஓம்  குருமுனியின்  திருவடிகள்  எப்போதும்  போற்றி 
ஓம் இன்னல்கள்  நீக்கி இன்பம்  தரும்  அகத்தீசப்  பெருமானே 
உமது  திருவடிகள்  சரணம்  போற்றி.... போற்றியே .....            

மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம் 

மீள்பதிவாக:-

 ஞானத்தேவே! வருக! வருக!! - பங்குனி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை - https://tut-temple.blogspot.com/2019/03/blog-post_15.html

 அகத்தியரை அருட் குருவை அகத்துள் வைப்போம் - அகத்தியர் ஜெயந்தி பதிவு - https://tut-temple.blogspot.com/2019/03/blog-post.html

ஸ்ரீ வினை தீர்த்த விநாயகர் ஆலயம் - 7 ம் ஆண்டு அகத்தியர் அவதார பெருவிழா - http://tut-temple.blogspot.com/2018/12/7.html

கும்பமுனி குருவே சரணம்! சரணம்!! - http://tut-temple.blogspot.com/2018/12/blog-post_51.html

அனுவாவி ஸ்ரீ அகத்தியர் ஆயில்யம் நட்சத்திர குருபூஜை பெருவிழா (26/12/2018) - http://tut-temple.blogspot.com/2018/12/26122018_22.html



தூசி கிராமத்தில் ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி (26/12/2018) - http://tut-temple.blogspot.com/2018/12/26122018_19.html

பாண்டிச்சேரி ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்ல திருக்கல்யாணத்திற்கு வாங்க! - http://tut-temple.blogspot.com/2018/12/blog-post_18.html

திருச்செந்தூரில் திருவிழா - ஸ்ரீ அகத்தியர் ஜெயந்தி (26/12/2018) - http://tut-temple.blogspot.com/2018/12/26122018.html 

அகத்திய மகரிஷி நம என்றென்றோது - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - https://tut-temple.blogspot.com/2018/10/blog-post_29.html


வாழ வழி காட்டும் குருவே வருக - ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய ஆராதனை அழைப்பிதழ் - http://tut-temple.blogspot.com/2018/10/blog-post_3.html

அன்பின் ஈசனே போற்றி - ஆவணி மாத அகத்தியர் ஆயில்ய ஆராதனை - http://tut-temple.blogspot.com/2018/09/blog-post_3.html 

அகத்தின் ஈசனே போற்றி - ஆயில்ய ஆராதனை அறிவிப்பு (11/08/2018) - http://tut-temple.blogspot.com/2018/08/11082018.html

கூடுவாஞ்சேரி மாமரத்து விநாயகர் கோயில்,அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 15/07/2018 - http://tut-temple.blogspot.com/2018/07/15072018.html
கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 17/06/2018 - http://tut-temple.blogspot.com/2018/06/17062018.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018  - http://tut-temple.blogspot.com/2018/05/21052018.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!! - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_89.html

கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை - 28/2/2018 - http://tut-temple.blogspot.in/2018/02/2822018.html

மனமது செம்மை யாக அகத்தியர் பூசை தானே - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_6.html

மாசி மகம் கும்ப பௌர்ணமி ஹோமத் திருவிழா - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_16.html

ஓம் அகஸ்த்திய நாதனே - ஸ்ரீ குருமண்டல தெய்வமே ! - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_76.html

அகத்தியர் ஆயில்ய ஆராதனை (21/05/2018) - http://tut-temple.blogspot.com/2018/05/21052018_19.html