Subscribe

BREAKING NEWS

28 November 2017

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2)

கிரிவலம் என்ற ஒற்றைச் சொல்லுக்குத்தான் எத்தனை மகிமைகள்! கிரி என்றால் மலை,
வலம் என்ற சொல்லுக்கு உங்களுக்கே பொருள் தெரியும். மலையையைச் சுற்றி வலம் வருவது தான்
கிரிவலம். பொதுவாக கிரிவலம்  என்று சொன்னாலே அனைவருக்கும் திருஅண்ணாமலை என்று
தான் நினைவிற்கு வரும், ஒவ்வொரு தமிழ் மாத அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில்
திருஅண்ணாமலை கிரிவலம் பிரசித்தி பெற்று வருகின்றது.

அந்த வகையில் இன்று நாம் கிரிவலம் பற்றியும், திருஅண்ணாமலை பற்றியும் அறிய உள்ளோம்.





திருஅண்ணாமலை ஒரு வரலாறு முக்கியத்துவம் பெற்ற தமிழ்நாட்டில் உள்ள மிகவும் பழமை
வாய்ந்த புண்ணிய திருத்தலமாகும். இங்கு உள்ள கோயிலில் அருணாச்சலேஸ்வரர் அக்னிவடிவதில் காட்சியளிக்கிறார். இது ஒரு பாடல்பெற்ற ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயில் பிரகாரங்களில்
 உள்ள கற்களில் பல முக்கிய குறிப்புகள் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வெழுத்துக்கள் பல நிகழ்வுகளை மக்களுக்கு தெரிவிக்கின்றன. மேலும் இக்கோயில் மற்றும் ஸ்தலத்தை பற்றிய விவரங்கள்
இங்கு கிடைத்த   செப்பு தகடுகளால்  கிடைக்கப்பெற்றது.

திருவண்ணாமலையின் புகழை மேலும் தமிழ் சைவ மகாகவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்,
மற்றும் சம்பந்தர் ஆகியவர்கள் அவர்கள் இயற்றிய கவிகள் முலம் மக்களுக்கு எடுத்துரைத்துள்ளனர்.
தமிழ் இலக்கியங்களான தேவாரம் மற்றும் திருவாசகம் இதனை வெளிக்காட்டுகிறது.
அருணாச்சலேஸ்வரரை பற்றியும் திருவண்ணாமலையை பற்றியும் அருணகிரிநாதர் அவர்கள் எழுத்துகள் முலம் சிறப்பாக உரைத்துள்ளார். இப்படைப்புகளை வாசித்த சோழ மன்னர்கள் மிகவும் பூரிப்படைந்து இக்கோயிலுக்காக பல உதவிகளை செய்துள்ளனர். மேலும் கடவுள் அருணாச்சலேஸ்வரர் மகிமை
மீது மிகுந்த நம்பிக்கை அடைந்துள்ளனர். சோழ மன்னர்கள் பல கோபுரங்கள், மண்டபங்கள்,
கோயிலை சேர்ந்த கட்டிடங்கள் கட்டிகொடுத்து கடந்த ஆயிரம் காலமாக கோயில் முன்னேற்றம்
அடைய உதவியுள்ளனர்.



மேலும் விஜய நகரை ஆண்ட மன்னர் கிருஷ்ணதேவராயர் திருவண்ணாமலை கோயில் வளர்ச்சிக்காக கோபுரங்கள், மண்டபங்கள் என பல கட்டிடங்களை கட்டிக்கொடுத்து உதவியுள்ளார். இதில் 217 அடி கொண்ட ராஜகோபுரம் மன்னர் கிருஷ்ணதேவராயர் உதவியால் உருவாக்கப்பட்டது. இவர் அண்ணாமலையாரின் தீவிர பக்தராக விளங்கினார். இக்கோபுரமானது இந்தியாவின் உயரத்தில்
இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இக்கோயில் சிவன் பார்வதிக்காக இந்தியாவில்
 கட்டப்பட்ட மிக பெரிய கோயில் என்று வரலாறு கூறுகிறது. மற்றும் ஒரு சிவன் பக்தரான  பல்லாலா இக்கோயிலுக்காக பல கட்டிடங்கள் கட்டி கொடுத்துள்ளார். இவர் செய்த உதவியை சிவனடியார்
 பாராட்டும் விதத்தில் பல்லாலா இறைவனடி சேர்ந்த பின்பு சிவபெருமானே வந்து இம்மன்னருக்கு
வாரிசு இல்லை என்றதால் அவரே இறுதி சடங்குகள் செய்தார் என வரலாறு கூறுகிறது.


சிவனடியார் இங்கு அக்னி வடிவத்தில் உருவான மற்றொரு வரலாறு சுவாரசியமான புராணம்.
ஒரு தருணத்தில் பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு வாக்குவாதம் ஈற்பட்டு உச்சத்தை எட்டிய நிலையில்,
சிவன் இதற்கு ஒரு முடிவை எடுத்துரைக்க அக்னி வடிவத்தில் தோற்றமளித்து விஷ்ணுவையும்,
பிரம்மாவையும் சிவனுடைய கால்கள் மற்றும் சிரசத்தை கண்டுபிடிக்க சவால் விடுத்தார்.
இந்த சவாலை ஏற்ற பிரம்மா மற்றும் விஷ்ணு தோல்வியடைந்தனர். இந்த போட்டியில் பிரம்மா
 ஜெயிக்க சிவனிடம் பொய் சொல்லிவிட்டார். இதனால் கோபமடைந்த சிவன் பிரம்மாவிற்கு சாபம் கொடுத்தார். இந்த சாபத்தினால் பிரம்மாவிற்கு இந்தியாவில் எந்த இடத்திலும் கோயில் இல்லை.
இதனால் பிரம்மாவை யாரும் எந்த கோயிலிலும் சென்று வணங்க முடியாத நிலை உள்ளது. இன்று திருவண்ணாமலையில் சிவனடியார் அக்னியாக வழிபடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக
உள்ளது. ஆதலால் இது ஒரு பஞ்சபூத ஸ்தலமாக தமிழ்நாட்டில் திகழ்கிறது.




திருவண்ணாமலையில் இருக்கும் அருணாச்சலேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் இருக்கும் மிக
பழமை வாய்ந்த கோயிலாகும். இந்த கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது.
பல மன்னர்களின் முயற்சியால் நன்கு வளர்ந்து இன்று புகழுடன் விளங்குகிறது. மேலும் தமிழ் சைவ மகாகவிகளான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்பந்தர் மற்றும் அருணகிரிநாதர் கவிதைகள்
மூலம் பாராட்டுகளைப்  பெற்ற ஸ்தலமாக உள்ளது. பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னி வடிவத்தில் உருவெடுத்துள்ளதால் பக்தர்களிடையே இதற்கு மேலும் சிறப்புண்டு. உலகை உருவாக்கிய மற்ற நான்கு பூதங்கள் நீர், வாயு, ஆகாயம், மற்றும் பூமி. இந்த அழகிய சிவனடியார்களின் கோயில்
அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை அடிவாரத்தில் உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கோயிலை சென்றடைய காட்பாடி [ வேலூர் ]. ரயில் நிலையத்திலிருந்து சுமார் 80 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து 180கி.மீ தொலைவில் உள்ளது. சிவன் இங்கு மலை வடிவத்தில் தோன்றுவதால் அண்ணாமலை என்றும் அழைக்கப்படுகிறார். சிவனை அசைக்க முடியாத மலை என நம்புவதால்
 பக்தர்கள் சிவனடியாரை அண்ணாமலையார் என்றும் பெயர் சூட்டி வழிபடுகின்றனர்.
 அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஆறு பிரகாரங்கள் கோயிலை சுற்றி அமைக்கப்பட்டுள்ளது.
ஓவ்வொரு பௌர்ணமி அன்று பக்தர்கள் கிரிவலம் வருவது பழக்கமாகவும் புண்ணியமாகவும்
கருதப்படுகிறது. லட்ச கணக்கான சிவ பக்தர்கள் இங்கு பௌர்ணமி அன்று கிரிவலம் வருகின்றனர்.
 கிரி என்று அழைக்கப்படும் மலையை சுற்றி வலம்வருவதால் கிரிவலம் என்ற பெயர் வந்தது.
ஒரு முறை இந்த மலையை சுற்றி வருவதற்கு 14 கி.மீ நடக்கவேண்டும். இதை மேற்கொள்ளும்
 அனைத்து பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் மன அமைதிபெற்று உடல் முழு உற்சாகமும் பெறும்  என்பதில் பக்தர்களிடையே உள்ள முழு நம்பிக்கை.



தற்பொழுது அண்ணாமலை என்று அழைக்கப்படும் மலை பல்வேறு காலங்களில் பலவிதமான
 உருவத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த மலை கிருதாயுகத்தில் அக்னியாகவும்,
திரேதா யுகத்தில் மாணிக்க கல்லாகவும், துவாபரயுகத்தில் தங்கமாகவும், தற்பொழுது
இக்கலியுகத்தில் வெறும் கல்லால் உருவெடுத்த மலையாகவும் விளங்குகிறது.அருணாச்சலேஸ்வரர்
கோயிலில்  அஸ்டலிங்கம் என எட்டு வித லிங்கங்கள் உள்ளன. இவைகள் ஓவ்வொன்றும் ஓவ்வொரு 
திசையை நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. ஓவ்வொரு லிங்கமும் உலகில் இருக்கும் வெவ்வேறு
திசைகளை குறிக்கின்றது. இவ்வெட்டு லிங்கங்களின் பெயர்கள் இந்திரலிங்கம், அக்னிலிங்கம், யமலிங்கம், நிருதிலிங்கம், வருணலிங்கம், வாயுலிங்கம், குபேரலிங்கம், ஈசானியலிங்கம்  என்று அழைக்கப்படுகிறது.
இவையனைத்து லிங்கங்களும் மனிதனுடைய ஓவ்வொரு காலகட்டத்தை குறிக்கின்றது. அத்துடன் பக்தர்களின் நன்மைக்காக பல நன்மைகளால் அருள்புரிந்து சிறப்பான வாழ்க்கை  அமைய வழி
செய்கிறது. இவ்வெட்டு லிங்கங்களும் எட்டு நவகிரகங்களை குறிக்கிறது. இவை வேண்டி வணங்கும் பக்தர்களுக்கு பல நன்மைகள் பயக்கும் என்பதில் உண்மையுண்டு என்று நம்புகிறார்கள்.

கிரிவலம் வரும் வழியில் முதலில் தோன்றுவது இந்திரலிங்கம். இந்த லிங்கம் கிழக்கே பார்த்து அமைக்கப்பட்டுள்ளது. இந்த லிங்கம் பூலோக தேவனான இந்திரதேவனால் நிறுவப்பட்டது.
சூரியனின் மற்றும் சுக்கிரனின் ஆட்சியில் உள்ள லிங்கம் வணங்கும் பக்தர்களுக்கு நீண்ட ஆயுளும்
பெருத்த செல்வமும் வழங்கும்.



கிரிவலம் வரும் வழியில் இரண்டாவது லிங்கம் அக்னிலிங்கம். இந்த லிங்கம் தென்கிழக்கு திசையை நோக்கியுள்ளது. இந்த லிங்கத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் இது கிரிவலம் செல்லும் வழியில்
இடது புறம் இருக்கும் ஒரே லிங்கம் ஆகும். அக்னிலிங்கத்தை பிராத்தனை செய்யும் பக்தர்கள்
 நோயின்றி முழு ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என நம்பபடுகிறது. இந்த லிங்கத்தின் கிரகம்
 சந்திரன். மேலும் சந்திரகிரகம் என்பதால் வாழ்க்கையில் வரும் இடஞ்சல்களை அகற்றும் சக்தியுள்ளது.
 இந்த லிங்கம் தாமரை தெப்பகுளத்திற்கு அருகே உள்ளது.

கிரிவலத்தில் மூன்றாவது லிங்கமாக அமைந்துள்ள லிங்கம் யமலிங்கம். இந்த லிங்கம் தெற்கு திசையை நோக்கியுள்ளது, யமதர்மனால் நிறுவப்பட்ட லிங்கம் என கூறப்படுகிறது. இது செவ்வாய் கிரகத்திற்கு
 உட்பட்ட லிங்கம். இதனருகில் சிம்ம தீர்த்தம் உள்ள தெப்பகுளம் அமைந்துள்ளது. இதை
வேண்டுபவர்களுக்கு பண நெருக்கடி இல்லாமல் சந்தோஷமாக வாழலாம்.

கிரிவலம் பாதையில் நான்காவதாக உள்ள லிங்கம் நிருதி லிங்கம். இதன் திசை தென்கிழக்காகும்.
இதனுடைய கிரகம் ராகுவாகும். பூதங்களின் ராஜாவால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. சனி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பகுளம் இதனருகில் உள்ளது. இதை வேண்டும் பக்தர்கள் நிம்மதியாக
பிரச்னைகளின்றி வாழலாம்.



கிரிவலம் பாதையில் ஐந்தாவதாக உள்ள லிங்கம் வருண லிங்கம். இதற்குரிய திசை மேற்கு.
மலைதரும் வருணதேவனால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இந்த லிங்கத்தை ஆட்சி செய்யும் கிரகம்
சனி பகவான். இங்கு வருண தீர்த்தம் என்னும் தெப்பகுளம் உள்ளது. சமூகத்தில் முன்னேற்றமடையவும்
கொடிய நோய்களிலிருந்து தப்பிக்கவும் இந்த லிங்கத்தை பக்தர்கள் பிராத்தனை செய்ய வேண்டும்.

கிரிவலம் பாதையில் ஆறாவதாக உள்ள லிங்கம் வாயு லிங்கம். இந்த லிங்கம் வடமேற்கு திசையை நோக்கியுள்ளது. வாயு பகவானால் இந்த லிங்கம் நிறுவப்பட்டது. இதை ஆட்சி செய்யும் கிரகம்
கேதுவாகும். இந்த லிங்கத்தை சேவித்து வந்தால் இருதயம், வயிறு, நுரையீரல் , மற்றும் பொதுவாக
வரும் நோய்களிலிருந்து காத்து கொள்ளலாம்.

கிரிவலத்தில் உள்ள ஏழாவது லிங்கம் குபேர லிங்கம். வடதிசையை நோக்கியுள்ள இந்த லிங்கம்
குருவை ஆட்சி கிரகணமாக கொண்டுள்ளது. செல்வத்தை வழங்கும் குபேர தெய்வத்தினால் இந்த
லிங்கம் நிறுவப்பட்டது. பக்தர்கள் செல்வ செழிப்புடன் திகழ இந்த லிங்கத்தை பிராத்தனை செய்ய
வேண்டும்.

கிரிவலத்தில் உள்ள கடைசி லிங்கம் ஈசானிய லிங்கம். வடகிழக்கை நோக்கியுள்ள இந்த லிங்கம்
ஈசானிய தேவரால் நிறுவப்பட்டது. புதன் கிரகம் இந்த லிங்கத்தை ஆட்சி செய்கிறது. இந்த லிங்கத்தை சேவித்து வரும் பக்தர்கள் மன அமைதியுடனும், அனைத்து காரியங்களிலும் ஜெயம் கொண்டு
திகழ்வார்கள்.

அடுத்து கிரிவலம் செல்வதற்கான சில யோசனைகளை இங்கே அறியலாம். நம்மைப் பொறுத்தவரை அந்த எஜமானின் ஏகாந்த நிலை உணர, பௌர்ணமி அல்லாது மற்றைய தினங்களில் கிரிவலம் செல்வது நன்று.
இப்போதெல்லாம் ஏனோ,தானோ என்று தான் செல்கின்றார்கள், அங்கே வந்து கொண்டு தொலைக்காட்சி
சீரியல்கள் போன்ற தேவையில்லாத செய்திகள் பேசிக்கொண்டு தான் கிரிவலம் வருகின்றார்கள்.ஆனால்
கிரிவலத்தின் நோக்கம் இது அன்று. மனதில் சிவ சிவ என்று நமக்குத் தெரிந்த சிவா மந்திரத்தையோ அல்லது
இறை நாமத்தையோ ஜெபித்துக் கொண்டு செல்ல வேண்டும். திருஅண்ணாமலை ..வார்த்தைகளில் அடங்கா
ஆன்மிக பூமி. எப்போதும், யாராவது இங்கே கிரிவலம் வந்து கொண்டுதான் இருப்பார்கள் என்பது
திருஅண்ணாமலையில் தனிச்சிறப்பு.




கிரிவலம் செல்பவர்களுக்கு சில யோசனைகள் :-

  • பாதணிகள் இல்லாமல் செல்வது பொருத்தமாகும்.
  • கிரிவலம் வரும்போது மலையின் உச்சியை நோக்கியே வலம் வருவது மிகவும் நல்லது.
  • கிரிவலம் பௌர்ணமி தினமும் அல்லது இரவில்,அமாவாசை, மாத சிவராத்திரி அன்று செல்லலாம்.
  • கிரிவலம் செல்பவர்கள் “ஓம் அருணாச்சல” என சொல்லிக்கொண்டு செல்லவேண்டும்.
  • கிரிவலம் வரும்போது எக்காரணத்தைக் கொண்டும் தீய வார்த்தைகளைப் பேசக்கூடாது. 
  • எந்த இடத்திலிருந்து தொடர்ந்தோமோ அதே இடத்தில் முடித்தால்தான் கிரிவலம் முழுமை பெறும் என்கிறது, அருணாசல புராணம். 
  • சித்திரை மாத பௌர்ணமியன்று அண்ணாமலையாரின் கிழக்கு கோபுரத்தின் முன் பசுநெய்யிட்டு, தாமரைத் தண்டு திரியினால் அகல் விளக்கு ஏற்றி அதை உயர்த்திப் பிடித்து தீபத்துடன் அண்ணாமலையை தரிசித்து, பிறகு கிரிவலம் தொடங்க வேண்டும். பிறகு பூதநாராயணர் ஆலயத்தில் பூக்களை தானமளித்து கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.
  • கிழக்கு கோபுர வாயிற்படியில் அருளும் லட்சண விநாயகரை சம்பங்கிப் பூக்களால் அர்ச்சித்து வணங்கி பின் அண்ணாமலையாரை  தரிசிக்க வேண்டும். இதற்கு லட்சண திருமுக தரிசனம் எனப் பெயர். அதன் பின் மகாலட்சுமி காயத்ரி மந்திரத்தை ஜபித்தவாறே கிரிவலம் வந்தால்  செல்வ வளம் பெருகும்.
  • எமலிங்கத்தின் அருகே இருக்கும் எமதீர்த்தத்தில் நீராட வேண்டும். முடியாதவர்கள் அத்தீர்த்தத்தை தலையில் தெளித்துக்கொண்டு, சம்பங்கிப் பூக்களால் அர்ச்சித்து அதை பிரசாதமாகப் பெற்று எமலிங்கத்தின் வாயிலில் நின்று அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதற்கு ஔதும்பர தரிசனம் என்று பெயர். இது நீடித்த ஆயுளைத் தரும். 
  • கிரிவலப் பாதையில் செங்கம் சாலையிலிருந்து வலதுபுறம் திரும்பியதும் அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இது பரஞ்ஜோதி  தரிசனம் என அழைக்கப்படுகிறது. 
  • குபேரலிங்கத்தின் வாசலிலிருந்து அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதனை வைவஸ்வதலிங்கமுக தரிசனம் என்பார்கள்.  
  • பூதநாராயணப் பெருமாளை தரிசித்து நம் பொருளாதார பிரச்னைகளுக்கு அவரிடம் பிரார்த்தனை செலுத்தி பின் அண்ணாமலையை  தரிசிக்க வேண்டும். இது சத்தியநாராயண தரிசனம் எனப்படுகிறது. 
  • கிரிவலம் வரும்போது மிகவும் மெல்ல நடக்க வேண்டும். இறை சிந்தனையோடும் நாம ஜபத்தோடும் நடக்க வேண்டும். 
  • கிரிவலத்தின் போது ஒவ்வொரு திக்கிலும் தியானித்து, கைகூப்பித் துதித்து, ஒரு நிறைமாத கர்ப்பிணி எவ்வளவு நிதானமாக நடப் பாளோ அவ்வளவு மெதுவாக, வைக்கும் காலடி சத்தம் கேட்காதபடி நடக்க வேண்டும். 
  • நீராடி, மடித்துணி உடுத்தி, விபூதி-ருத்ராட்சம் தரித்து கிரி பிரதட்சிணம் செய்ய வேண்டும். அவரவர் சம்பிரதாயப்படி நெற்றிக்கு அணி யலாம்.       
  • நீர் அருந்துவதைத் தவிர வேறு எதையும் உண்ணக்கூடாது. 
  • பாதணிகள் அணியாமல் அண்ணாமலையை வலம் வர வேண்டும்.
  • பிரம்ம தீர்த்தத்தில் நீராடி அண்ணாமலையாரை அர்ச்சித்து மௌனமாக கிரிப்பிரதட்சிணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால்  பாவங்கள் பறந்தோடும்.
  • கிரக பீடைகள் நீங்க விரும்புவோர் சனிக்கிழமையில் அண்ணாமலையை கிரிவலம் வர வேண்டும்.
  • எக்காரணம் கொண்டும் வாகனத்தில் அமர்ந்து கிரிப் பிரதட்சிணம் செய்யக்கூடவே கூடாது.  
  • நிலைத்த இளமை வேண்டுவோர் கிரிவலம் வந்து உண்ணாமுலையம்மனை தரிசித்தல் வேண்டும் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது. 
  • மற்ற தலங்களில் தவமிருந்தால் முக்தி கிட்டும்; இங்கோ, நினைத்த மாத்திரத்திலேயே முக்தி கிட்டும். எனவே முடிந்த போதெல்லாம் அருணாசல மலையை தியானிக்க வேண்டும். 
  • உலகில் எவ்வளவு தவங்கள் உண்டோ அவ்வளவு தவங்களின் பலனையும் கிரிப்பிரதட்சிணம் ஒன்றே தரும் என்பதால் ஆழ்ந்த நம்பிக்கையோடு கிரிவலம் வரவேண்டும். 




இது மட்டுமா? இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் இந்த புண்ணிய பூமியில் உண்டு, ரமணர் ஆசிரமம்,
சேஷாத்திரி, விசிறி சாமியார் என பார் புகழும் பாரத மகான்களை இங்கே தரிசிக்கலாம். சித்தர்கள்
அருளும் சித்தாந்த உலகம் இன்னும் அங்கே உண்டு. இனிவரும் பதிவுகளில் இன்னும் உணர்வோம்.

முந்தைய பதிவுகளுக்கு :-


ஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_28.html


திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_76.html

சுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_24.html 

வேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_23.html

தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.htmlநவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html





No comments:

Post a Comment