குன்றத்தூர்
சென்னையின் புண்ணிய பூமி. திரும்பிய இடமெல்லாம் கோயில்கள். சைவம் ஊற்றெடுக்கும் உன்னத ஊர். குன்றத்தூர் என்றாலே நமக்கு முருகப் பெருமான் தான் நினைவிற்கு வருகின்றார். ஆனால் தற்போது நாம் செல்லும் போது, சைவம்,வைணவம் என்று குன்றத்தூர் களை மட்டுமளவு திருக்கோயில்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றைப் பார்க்கும் போது, நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் இறை வழிபாட்டில் ஈடுபட்டிருப்பார்கள் என்று வியக்கத் தோன்றுகின்றது.
இவற்றையும் தாண்டி பார்க்கும் போது, பெரிய புராணம் என்ற அடியார்களின் பெருமையை பறைசாற்றிய நூலை எழுதிய தமிழ்ப் புலவரான சேக்கிழார் இங்கே பிறந்தவர் என்று நினைத்துப் பார்த்தால் உடல் சிலிர்க்கிறது. இத்தகு புண்ணிய தலத்தில் நாம் கால் பதிப்பது சிறப்பன்றோ? அடுத்த முறை குன்றத்தூர் செல்லும் போது, குன்றத்தூர் அடிவாரத்தில் இருக்கும் கந்தழீஸ்வரர் தரிசனம் பெறுங்கள். நாம் சொல்ல வருகின்ற செய்தி புரியும். இங்கு தினமும் சேக்கிழார் வந்து வழிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேக்கிழார் பெருமான் வைகை நதிக்கரைத் தெய்வங்கள்,காவிரிக்கரை கடவுளர்கள் என தரிசித்து விட்டு, தொண்டை மண்டலம் வந்து சேர்ந்தார். இப்போதைய குன்றத்தூரில் உள்ள இறைவனை தரிசித்து விட்டு, அங்கேயே தங்கினார். தன்னை இழந்தார். சிவத்திடம் சரணாகதி அடைந்தார். சிவ பெருமான் ஒரு நாள் , அவருக்கு அற்புத தரிசனம் அளித்ததோடு, அவரிடம் இருந்த கர்வம்,செருக்கு போன்றவற்றை அழித்தார். கந்துதல் என்றால் பற்றுதல் என்று அர்த்தம். புகழ் ,பெயர் என பற்றிக் கொண்டிருந்த தனது பற்றுக்களை நீக்கியதால், இத்தல இறைவனுக்கு கந்தழீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. இதுவே இத்தலத்தின் புராதனம் ஆகும்.
அம்பாள் பெயர் இங்கே நகைமுகைவல்லி. சதுரவடிவ ஆவுடையாரில் பிரமாண்டமாக லிங்க திருமேனியராக சுவாமி அருள்பாலிப்பது சிறப்பு. சோழர் கால கோவில் இது. இந்தக் கோவிலுக்கு சற்று அருகில் தான் சேக்கிழாரின் அவதாரத் தலம் உள்ளது. இங்குள்ள அம்மனை வழிபட்டால் தமது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கி.பி. 1241 ஆம் ஆண்டு, திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீராஜராஜனின் ஆட்சியில், இந்த ஆலயத்துக்குச் செய்த திருப்பணி விவரங்கள் கல்வெட்டில் உள்ளன. பல்லவ மன்னனும் ஸ்ரீகிருஷ்ண தேவராயரும் கூட இந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர்.
பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்கை, ரிஷபாரூடர் போன்றோர் உள்ளனர். பிரகாரத்தின் சுவற்றில் தனது காலை லிங்கத்தின் மீது தூக்கி வைத்து தனது கண்ணை பிடுங்கும் கோலத்தில் கண்ணப்ப நாயனார் ஓவியம் உள்ளது. மலையடிவாரத்துக்கு அருகிலேயே கந்தனின் மாமனான திருமால், ஊரகப்பெருமாள என்ற திருநாமத்துடன் கோயில் கொண்டுள்ளார். அதையடுத்து சிவபெருமானின் கந்தழீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
சென்ற முறை நாம் குன்றத்தூர் சென்ற போது, தரிசித்த காட்சிகள் இங்கே இணைத்துள்ளோம். திருக்கோயில் நடைசாற்றும் நேரம் நெருங்கியதால், நம்மால் அதிகமாக ஒன்ற முடியவில்லை. ஆனால் சேக்கிழார் பாதம் பட்ட மண் எனும் போது, நமக்கு கிடைத்தற்கரிய பேறு கிடைத்துள்ளது என்று மனம் உருகினோம். வேண்டத்தக்கது அறிவோனும், வேண்டமுழுதும் தருவோனும், எளியோர்க்கு எளியோனுமாகிய கந்தழீஸ்வரரைப் பற்றுவதை விட, நமக்கு வேறு என்ன வேண்டும்?
ஆஹா ..அற்புதம்.இந்த அற்புத காட்சியைப் பார்க்கும் போது,
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே..என்று பாடத் தொடங்கியது மனது.
தினமும் சேக்கிழார் வந்து வழிபட்டுள்ளார் என்று ஏற்கனவே சொல்லி இருக்கின்றோம். நாம் ஒவ்வொருவரும் ஆலய தரிசனம் செய்து வருகின்றோம், எத்தனையோ ஆலயங்கள் சென்று வந்தாலும், நம் வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் என்றால் நாம் சும்மா இருப்போமா? தினமும் சென்று தரிசனம் பெறுவோம் அல்லவா? நாமும் ஆலய தரிசனத்தில் கூடுவாஞ்சேரியில் உள்ள வேலி அம்மன் தரிசனமும், மாமரத்து விநாயகர் கோயிலில் உள்ள விநாயகர்,முருகர்,அகத்தியர் தரிசனமும் பெற்று வருகின்றோம், வாரத்தில் ஒரு நாளாவது கட்டாயம் இங்கு வந்து அருள் பெறுகின்றோம். அது போல் தான் கந்தழீஸ்வரர் ஆலயம் சேக்கிழார்க்கு. அனு தினமும் அவர் வழிபட்ட ஆலயம். இதுவே இத்திருத்தலத்தின் சிறப்பு.
இத்தகு சிறப்புமிக்க ஆலயத்தில், வருகின்ற 03/11/2017 வெள்ளிக்கிழமை பௌர்ணமி அன்று அன்ன அபிஷேக விழா நடைபெற இருக்கின்றது.மாலை 6:30 மணிக்கு மேல் அன்ன அபிஷேகமும், 8:00 மணிக்கு மேல் அன்னதானமும் நடைபெறுகின்றது.
எண்ணிக்கை முக்கியமல்ல...எண்ணங்களே முக்கியம்... உழவாரப் பணி அனுபவம் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_27.html
சென்னையின் புண்ணிய பூமி. திரும்பிய இடமெல்லாம் கோயில்கள். சைவம் ஊற்றெடுக்கும் உன்னத ஊர். குன்றத்தூர் என்றாலே நமக்கு முருகப் பெருமான் தான் நினைவிற்கு வருகின்றார். ஆனால் தற்போது நாம் செல்லும் போது, சைவம்,வைணவம் என்று குன்றத்தூர் களை மட்டுமளவு திருக்கோயில்கள் நிறைந்திருக்கின்றன. இவற்றைப் பார்க்கும் போது, நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் இறை வழிபாட்டில் ஈடுபட்டிருப்பார்கள் என்று வியக்கத் தோன்றுகின்றது.
இவற்றையும் தாண்டி பார்க்கும் போது, பெரிய புராணம் என்ற அடியார்களின் பெருமையை பறைசாற்றிய நூலை எழுதிய தமிழ்ப் புலவரான சேக்கிழார் இங்கே பிறந்தவர் என்று நினைத்துப் பார்த்தால் உடல் சிலிர்க்கிறது. இத்தகு புண்ணிய தலத்தில் நாம் கால் பதிப்பது சிறப்பன்றோ? அடுத்த முறை குன்றத்தூர் செல்லும் போது, குன்றத்தூர் அடிவாரத்தில் இருக்கும் கந்தழீஸ்வரர் தரிசனம் பெறுங்கள். நாம் சொல்ல வருகின்ற செய்தி புரியும். இங்கு தினமும் சேக்கிழார் வந்து வழிபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சேக்கிழார் பெருமான் வைகை நதிக்கரைத் தெய்வங்கள்,காவிரிக்கரை கடவுளர்கள் என தரிசித்து விட்டு, தொண்டை மண்டலம் வந்து சேர்ந்தார். இப்போதைய குன்றத்தூரில் உள்ள இறைவனை தரிசித்து விட்டு, அங்கேயே தங்கினார். தன்னை இழந்தார். சிவத்திடம் சரணாகதி அடைந்தார். சிவ பெருமான் ஒரு நாள் , அவருக்கு அற்புத தரிசனம் அளித்ததோடு, அவரிடம் இருந்த கர்வம்,செருக்கு போன்றவற்றை அழித்தார். கந்துதல் என்றால் பற்றுதல் என்று அர்த்தம். புகழ் ,பெயர் என பற்றிக் கொண்டிருந்த தனது பற்றுக்களை நீக்கியதால், இத்தல இறைவனுக்கு கந்தழீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. இதுவே இத்தலத்தின் புராதனம் ஆகும்.
அம்பாள் பெயர் இங்கே நகைமுகைவல்லி. சதுரவடிவ ஆவுடையாரில் பிரமாண்டமாக லிங்க திருமேனியராக சுவாமி அருள்பாலிப்பது சிறப்பு. சோழர் கால கோவில் இது. இந்தக் கோவிலுக்கு சற்று அருகில் தான் சேக்கிழாரின் அவதாரத் தலம் உள்ளது. இங்குள்ள அம்மனை வழிபட்டால் தமது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
கி.பி. 1241 ஆம் ஆண்டு, திரிபுவனச் சக்கரவர்த்தி ஸ்ரீராஜராஜனின் ஆட்சியில், இந்த ஆலயத்துக்குச் செய்த திருப்பணி விவரங்கள் கல்வெட்டில் உள்ளன. பல்லவ மன்னனும் ஸ்ரீகிருஷ்ண தேவராயரும் கூட இந்தக் கோயிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர்.
பிரகாரத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்கை, ரிஷபாரூடர் போன்றோர் உள்ளனர். பிரகாரத்தின் சுவற்றில் தனது காலை லிங்கத்தின் மீது தூக்கி வைத்து தனது கண்ணை பிடுங்கும் கோலத்தில் கண்ணப்ப நாயனார் ஓவியம் உள்ளது. மலையடிவாரத்துக்கு அருகிலேயே கந்தனின் மாமனான திருமால், ஊரகப்பெருமாள என்ற திருநாமத்துடன் கோயில் கொண்டுள்ளார். அதையடுத்து சிவபெருமானின் கந்தழீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.
ஆஹா ..அற்புதம்.இந்த அற்புத காட்சியைப் பார்க்கும் போது,
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே..என்று பாடத் தொடங்கியது மனது.
தினமும் சேக்கிழார் வந்து வழிபட்டுள்ளார் என்று ஏற்கனவே சொல்லி இருக்கின்றோம். நாம் ஒவ்வொருவரும் ஆலய தரிசனம் செய்து வருகின்றோம், எத்தனையோ ஆலயங்கள் சென்று வந்தாலும், நம் வீட்டிற்கு அருகில் உள்ள ஆலயம் என்றால் நாம் சும்மா இருப்போமா? தினமும் சென்று தரிசனம் பெறுவோம் அல்லவா? நாமும் ஆலய தரிசனத்தில் கூடுவாஞ்சேரியில் உள்ள வேலி அம்மன் தரிசனமும், மாமரத்து விநாயகர் கோயிலில் உள்ள விநாயகர்,முருகர்,அகத்தியர் தரிசனமும் பெற்று வருகின்றோம், வாரத்தில் ஒரு நாளாவது கட்டாயம் இங்கு வந்து அருள் பெறுகின்றோம். அது போல் தான் கந்தழீஸ்வரர் ஆலயம் சேக்கிழார்க்கு. அனு தினமும் அவர் வழிபட்ட ஆலயம். இதுவே இத்திருத்தலத்தின் சிறப்பு.
இத்தகு சிறப்புமிக்க ஆலயத்தில், வருகின்ற 03/11/2017 வெள்ளிக்கிழமை பௌர்ணமி அன்று அன்ன அபிஷேக விழா நடைபெற இருக்கின்றது.மாலை 6:30 மணிக்கு மேல் அன்ன அபிஷேகமும், 8:00 மணிக்கு மேல் அன்னதானமும் நடைபெறுகின்றது.
அடியார்கள் அனைவரும் இந்த அன்ன அபிஷேக விழாவில் கலந்து கொண்டு, கந்தழீஸ்வரர் மற்றும் நகைமுகைவல்லி தாயார் அருளும் பெறும்படி நம் TUT குழுவின் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம். அன்ன அபிஷேகம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இனிவரும் பதிவுகளில் அறிவோம்.
முந்தைய பதிவுகளுக்கு:-
எண்ணிக்கை முக்கியமல்ல...எண்ணங்களே முக்கியம்... உழவாரப் பணி அனுபவம் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_27.html
வாருங்கள்...உளம் ஆற உழவாரப் பணி செய்வோம் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_17.html
கணவன் மனைவியிடையே ஒற்றுமையும், அன்பும் ஓங்க ஓர் பரிகார ஸ்தலம்...- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_14.html
ஸ்ரீ வில்வநாயகி சமேத ஸ்ரீ துளஸீஸ்வரர் அருள் பெற வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/07/blog-post_99.html
சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் - உழவாரப் பணி அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_2.html
என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html
ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html
ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html
ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html
சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html
மனிதம் வளர்க்கும் மாமனிதர் முல்லைவனம் - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_77.html
பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html
AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html
ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html
உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html
பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html
காப்போம் வாருங்கள் - தமிழகத்தில் உள்ள ஒரே கரக்கோயில் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_7.html
நவராத்திரியில் நவரசங்கள் தரும் நவதரிசனம் - (9) - https://tut-temple.blogspot.in/2017/10/9.html
எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html
No comments:
Post a Comment