Subscribe

BREAKING NEWS

14 November 2017

சித்தர்களின் ராஜ்ஜியத்தில் இரண்டு நாட்கள்

பொதுவாக சித்தர்கள் என்றாலே தற்போது வித்தகர்கள், மாயாஜாலக்காரர்கள் என்று பல செய்திகள் தற்போது பரவி வருகின்றது. திடீரென்று விபூதி வர வைத்தல் போன்ற சித்துக்களை செய்வபவர்கள் சித்தர்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால் உண்மையில் சித்தர்கள் நம்முடைய மூதாதையர்கள், வாழும் ஜீவனில் சிவனைக் கண்டவர்கள், சிவனைப் பற்றிச் சொன்னவர்கள், சிவனைப் பற்றவும் சொன்னவர்கள்.

வாழும் வழி காட்டியவர்கள், ஜீவ அமிர்தம் பற்றி உரைத்தவர்கள், முக்தியைப் போதித்தவர்கள்,பக்தியை ஆராதித்தவர்கள், யோகத்தை ஊட்டியவர்கள்,தமிழ் வளர்த்த பெருமான்கள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.பரமாத்மா எங்கும் தனியாக இல்லை. நமது உடம்பு தான் பரமாத்மாவின் இடம் ஆதலால் கடவுளைத்தேடி எங்கும் அலைய வேண்டாம். உடம்பைப் பேணுவதே கடவுட்பணி, உடம்பினுள்ளேயே பரமாத்மாவைக் கண்டு மகிழ்ந்திரு என்பது சித்தர் கொள்கை.
உன்னுள்ளும் இருப்பான் என்னுள்ளும் இருப்பான்
உருவம் இல்லா உண்மை அவன்.
இதை உணர்ந்தார் இங்கே உலவுவதில்லை
தானும் அடைவார் அந்நிலை தன்னை.

பற்பல வகைகளில் நாம் சித்தர்களை வகுத்துக் கொண்டிருக்கின்றோம்.உதாரணமாக


  1. சன்மார்க்கச் சித்தர்கள் - திருமூலர், போகர்.
  2. ஞானச் சித்தர்கள் - பட்டினத்தார், பத்திரகிரியார், சிவவாக்கியர், பாம்பாட்டிச் சித்தர், பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், அழுகண்ணர், இடைக்காட்டுச் சித்தர்.
  3. காயச் சித்தர்கள் - கோரக்கர், கருவூர்ச் சித்தர், மச்சமுனி, சட்டமுனி, சுந்தரானந்தர், உரோமரிஷி
அறிவியலை பிடித்து உலுக்கியவர்கள், சித்த வைத்தியத்தின் தூண்கள் அவர்கள், சித்தர்கள் கண்டறிந்த வாத வித்தையே சிறந்த விஞ்ஞான ஆராய்ச்சியாகும். உலோக வகைகள், உப்பு வகைகள், பாஷாண வகைகள், வேர் வகைகள், பட்டை வகைகள், பிராணிகளி்ன் உடம்பிலே உற்பத்தியாகும் கோரோசனை கஸ்தூரி, மூத்திரம், மலம் முதலியவைகளின் குணங்களை ஆராய்ந்து கண்டிருக்கின்றனர்.

காட்டிலும் மலையிலும் குகையிலும் வாழ்ந்த சித்தர்கள் தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கிறார்கள். இன்றிருப்பதைப்போல பரிசோதனை சாலைகள் அன்று இருக்கவில்லை. எனினும் அவர்களின் ஆராய்ச்சிகள் இன்றைய விஞ்ஞான ஆய்வுடன் ஒத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.


சித்தர்களின் ஞானம் அபாரமானது.மதவாதிகள், ஆத்திகர்கள், அவனன்றி ஓரணுவும் அசையாது என்ற நம்பிக்கை உள்ளவர்கள். மக்கள் நூறாண்டுகள் தான் உயிர் வாழமுடியும் என்று நம்புகின்றனர். ஆனால் சித்தர்களின் நம்பிக்கை இதற்கு மாறானது. நூற்றுக் கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழமுடியும் என்பது சித்தர்களின் நம்பிக்கை.கற்பக மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர் நோயின்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர் வாழமுடியும் என்பது சித்தர்களின் நம்பிக்கை. எனவே இன்று நாம் பல சித்தர்களின் உயிர்நிலை கோயில்களைத் தேடிக் கொண்டிருக்கின்றோம்.


சித்தர் மரபை நோக்குங்கால், இதுவரை கண்டுள்ள எண்ணிக்கை கட்டுக்கடங்காதது.சித்தர்களில் 18 பேர் தலையாய சித்தர்கள் ஆவர். ஒவ்வொரு சித்தர்களும் பல கோடி சித்தர் பரம்பரையை உருவாக்கி வைத்து உள்ளனர். நவகோடி சித்தர்கள் உள்ளனர், அகத்திய மாமுனியின் பெயரிலே பல ஆயிரம் சித்தர்கள் ஒவ்வொரு யுகத்திலும் அருள் தந்து உள்ளனர்.

இத்தகைய சித்த பரம்பரையில் வந்தவர்கள் நாம். ஆரோக்யத்திலும் சரி, ஆன்மிகத்திலும் சரி, குழம்பிப்  போயுள்ளோம்.

நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்;
நரகத்தில் இடர்ப்படோம்; நடலை இல்லோம்;
ஏமாப்போம்; பிணி அறியோம், பணிவோம் அல்லோம்;
இன்பமே எந்நாளும், துன்பமில்லை.

என்று பாடிப் பரவசப் பட வேண்டிய நாம், சாதாரண டெங்குவிற்கு பயந்து கொண்டிருக்கின்றோம். இந்த டெங்கு மாதிரி பல  வகையான சுரத்திற்கு தீர்வைக் கொடுத்தவர்கள் நம் சித்தர்கள். அதே போல் தான் ஆன்மிகமும், போலி குருமார்களை பற்றியும்  அன்றே சாடி உள்ளனர். நாம் சித்தர்களிடம் இருந்து பெற வேண்டியது அநேகம் உள்ளது. குருவாய் வந்து அவர்கள் நமக்கு வழிகாட்டிக் கொண்டும் இருக்கின்றார்கள். இதனை நாம் பத்தி பத்தியாய் எழுதினாலும், உணர்ந்தால் தான் உண்மை புரியும். உதாரணத்திற்கு நாம் சென்று வந்த ஓதிமலை தரிசனம். நாம் ஓதியப்பர் தரிசனம் பெற சென்றோம், ஆனால் கருணைக்கடலாம் கந்த பெருமான் எங்களை உழவராம் செய்ய பணித்தார்.இது சித்தர்களின் அருளாலே நமக்குக் கிடைத்தது.

நாம் செய்து வரும் அறப் பணிகளிலும் அவர்களின் வழிகாட்டல் மட்டும் தான், சித்தர்களின் ராஜ்ஜியம் என்று பதிவின் தலைப்பிட்டுளோம்? சித்தர்கள் அனைத்து இடங்களிலும் உணர்வில் கலந்து உள்ளார்கள். தமிழ் நாட்டின் ஒவ்வொரு அடியிலும் சித்தர்களின் பாதம் உண்டு, நாம் தான் உணரவில்லை. அப்படி என்றால், சித்தர்களின் ராஜ்ஜியம் எது? என்று யோசித்தால், கண்டு பிடித்து விட்டீர்களா?

அற்புத மூலிகை வளங்கள் , இயற்கை அன்னையின் தாலாட்டும், பசுமை போர்த்திய வனமும் நிறைந்த சதுரகிரியில் தான் சித்தர்களின் ராஜ்ஜியம் நடைபெற்று வருகின்றது. சித்தர்கள் பல மூலிகைகளை மறைத்து வைத்துளார்கள். தீயவர்களின் கைகளில் இவை சேர்ந்து விடக் கூடாது என்பதற்காகத் தானே தவிர வேறொன்றும் இல்லை. நம்மிடம் இது போன்ற ஏதாவது சிறப்பு மூலிகைகள் கிடைத்தால் சும்மா இருப்போமா? சற்று கற்பனைக் குதிரையை தட்டிவிடுங்கள். நாம் சொல்வது புரியும்.

சதுரகிரி பற்றிய தேடுதலில் முற்பட்ட போது,

அகத்தியர் அருளிய அகத்தியர் 12000” என்கிற நூலில் தனது மாணவரான புலத்த்தியருக்கு கூறுவதாக வரும் பாடல் வருமாறு..

"
சித்தான சித்துமுனி சொரூபரப்பா
யின்னமுண்டு உரைப்போம் கேளு
முத்தான புலத்தியனே முடிமன்னா
மூவுலகில் என்றுமுண்டு சித்தர்வர்க்கம்
வெத்தியுள்ள சதுரகிரி வடபாகத்தில்
என்றுமிருப்பார் ரனேகம்பேர் நாதர்தாமும்
பத்தியுடன் நாதாக்கள் தன்னைக்காண
பாருலகில் வெகுமாண்பர் போவார்பாரே"

-
அகத்தியர் -

"
போவாரே அம்மலையின் அதிசயங்கள்
கோடான கோடிமூலி யனேகமுண்ண்டே
யனைத்தையுமேய ழித்திடவே முனைவர்
மானமுடன் வையகத்தில் மூலிவாழ
நலமுடனே வெகுகாலம் காக்கவேண்டி
நலமுடனே வெகுகால மிருந்துகொண்டு
கோடியாம் மாண்பருக்கு கண்ணில்காணா
குணமுடனே மறைத்தார்கள் நாதாக்கள்தானே"

-
அகத்தியர் -


சித்தநிலையானவர்கள் , அத்தகைய பெருமக்கள் பெருமையான சதுரகிரி மலையின் வட பாகத்தில்  என்றும் இருப்பார்கள். இவர்களை தரிசித்து அருள் பெற மக்கள் சதுரகிரிக்கு அதிகமாய் வரத் துவங்குவார்கள். அப்படிச் வரக் கூடிய மனிதர்கள் மலையில் இருக்கும் அதிசயமான இடங்களையும், அரிய மூலிகைகளையும் அழிக்கத் தலைப்படுவர் என்று கூறுகிறார்.

மக்கள் எத்தனை பேர் வந்து அழிக்க நினைத்தாலும், சித்தர்கள் இந்த பூவுலகின் நன்மையை கருத்தில் கொண்டு அரிய மூலிகைகளை இன்றும் இவர்களின் கண்களில் படாதவாறு மறைத்து வைத்திருக்கின்றனர் என்கிறார். பாதுகாக்கும் அளவை மீறிய ஒரு சில மூலிகைகள் மட்டுமே மக்களின் பார்வையில் கிடைக்குமென்றும். மறைத்து வைக்கப் பட்டிருக்கும் மூலிகைகளை மக்கள் அணுக முடியாத இடங்களில் பத்திரமாக இருப்பதாயும் சொல்கிறார்.

இன்றைக்கு சதுரகிரியில் அகத்தியர் கூறிய நிலமைதான் நிதர்சனமாகி இருக்கிறது.பெருமளவில் மக்கள் நடமாட்டம் மிகுந்துள்ளதன் விளைவாய் காடுகள் அழிக்கப் பட்டு,அரிய பல மூலிகைச் செல்வங்களை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை. இருப்பினும் சதுரகிரி போன்ற மலை யாத்திரை செல்லும் போது, நாம் நம் தரிசனத்தில் மட்டுமே கருத்தில் கொள்ள வேண்டும். சித்தர்களின் அருளோடு,சிவனாரின் அருள் பெற முனைய வேண்டுமே தவிர, தேவையற்ற ஆராய்ச்சிகளில் ஈடுபடக் கூடாது. 


கிழக்கே இந்திரகிரி, மேற்கே வருணகிரி, வடக்கே குபேரகிரி, தெற்கே ஏமகிரி என்ற நான்கு மலைகளுக்கு சூழ்ந்திருக்க நடுவில் சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தகிரி என்ற நான்கு மலைகளும் அமைந்திருப்பதால் சதுரகிரி என்கிற காரணப் பெயர் வந்ததாக சதுரகிரி தலபுராணம் கூறுகிறது.

இத்தகைய சிறப்புமிக்க சித்தர்களின் ராஜ்யத்தில்  வருகின்ற அமாவாசை ( 18,19 நவம்பர் )இரண்டு நாட்கள் இருந்து அன்னதானம் செய்ய  குருவருள் ஆசி கொடுத்துள்ளார்கள்.. 



முந்தைய பதிவுகளுக்கு:-


பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

குழந்தை வரம் அருளும் ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - தொடர்ச்சி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_19.html

இம்மாத மலை தரிசனம் - ஸ்ரீ மிருகண்ட மகரிஷி மலை - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_15.html



இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா ! - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_51.html
வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_3.html

வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_28.html

இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_15.html

பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_19.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_13.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html



No comments:

Post a Comment