Thursday, November 30, 2017

மண(ன)ப் பொருத்தம் - தொடர்பதிவு (3)


மணப் பொருத்தம் என்ற தொடர் பதிவில் இரண்டு பதிவுகளை நாம் பதிவிட்டோம். இல்லறமாகிய நல்லறம் சிறக்க நாம் திருமணம் என்ற உறவை பார்க்கும் கோணத்தை மாற்ற வேண்டும். அதற்கு இந்த தொடர் பதிவு உதவும் என்று நம்புகின்றோம். முந்தைய பதிவுகளில் மனைவி நல வேட்பு நாள் என்பது பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றியும் அறிந்து இருப்போம். மனைவி நல வேட்பு நாளை ஆகஸ்ட் மாதம்தான் கொண்டாட வேண்டும் என்று அவசியமில்லை. அப்படியென்றால் கணவனுக்கு? என்றொரு நாள் வேண்டாமா? என்று நினையாது, வாழ்க்கைத்துணை ஒருவரையொருவர் அன்பு பாராட்டி வாழ்ந்து பாருங்கள். பின்னர் என்ன ..மணப் பொருத்தம் என்பது மனப் பொருத்தமாக அமையும். பின்னர் இல்லறம் நல்லறமாகவும் இருக்கும். இந்த பதிவில் இவை பற்றி மேலும் சிந்திக்க இருக்கின்றோம்.


இனிக்கும் இல்லறம் அமைத்திட வேண்டுமா? முதலில் நாம் ஏற்கனவே சொல்லியவாறு திருமண விழாவினை அருள் விழாவாக மாற்றுங்கள். இது ஒன்றும் அடிமாட்டு சந்தை அல்ல. இங்கே இரு மனங்கள் இணைகின்றன. இந்த ஆரம்பம் தான் வாழ்வின் எல்லை வரை நீடிக்க இருக்கின்றது. பெற்றோர்கள் தயை கூர்ந்து இதைப் பற்றி யோசியுங்கள்.


வாழ்க்கைத் துணை ஒவ்வொருவரும் மற்றவரை புரிந்து, அவர் திறமையை ஊக்குவித்து, கவலையில் ஆறுதல் அளித்து, குறை பொறுத்து, முயற்சியில் ஒத்துழைத்து , கோபத்தில் அமைதி காத்து, அன்பு பாராட்டி வாழ வேண்டும். இது தான் இனிக்கும் இல்லறம் அமைய அடிப்படையான கோட்பாடு. இதனை அனைவரும் மறந்து விடுவதால் தான் இன்பம் கொடுக்கின்ற குடும்பத்தில் பல பிரச்சினைகள்.வாழ்க்கைத்துணை ஒவ்வொருவரும், மற்றவரை மனதார விரும்ப வேண்டும். முழுமையாக நம்ப வேண்டும்.


இது மிக மிக முக்கியமான ஒன்று. கணவன் மனைவி இருவரின் ரசனையும் ஒரே மாதிரி இருக்கும் என்று நாம் நினைக்க வேண்டாம். ஒவ்வொருவரின் சுபாவம், வளர்ப்பு, அகம் பொறுத்து இது மாறுபடும். நல்லறம் காக்க, ஒருவர் ரசனையில் மற்றொருவர் குறுக்கிடாது வாழ வேண்டும். 

அடுத்த படியாக செல்வம். செல்வம் பெரிது தான். அந்த செல்வத்தை விடப் பெரிது மனநிம்மதி. அந்த மனநிம்மதியை கணவனும் மனைவியும் மாறி மாறி கொடுத்து பழக வேண்டும்.

இந்த உலகில், பெற்றோருக்கு அடுத்தபடி ஆறுதல் தருகின்ற உறவு, அன்பு தருகின்ற உறவு, காத்து ரட்சிக்கும் உறவு என்றால்  அது கணவனுக்கு மனைவியும், மனைவிக்கு கணவனும் தான். இந்த உறவு பட்டுப் போகாமல் நாள்தோறும் தழைக்க வேண்டும்.

வெளியுலக வாழ்க்கை வேறு. அதாவது பொருள் சம்பாதிப்பது போன்றது. குடும்ப வாழ்க்கை வேறு. இது அன்பும் ,அருளும் சம்பாதித்து செலவழிப்பது. இரண்டையும் தனித்தனியே வைத்துக் கொள்ள பழக வேண்டும். வெளியுலக வாழ்க்கையில் உள்ள சிந்தனைகளை, சிக்கல்களை, கவலைகளை வீட்டுக்குள் சென்று குடும்ப வாழ்க்கையில் நுழைக்காதீர்கள். எப்படி வேலை முடித்து வீட்டுக்குள் செல்லும் போது, காலணியை கழற்றி வீட்டுக்கு வெளியே வைக்கின்றோமோ, அதே போல வெளியுலக வாழ்க்கை ,அது சார்ந்த விஷயங்களையும் வெளியிலேயே வைத்து விடுங்கள். இது தான் இன்று பல குடும்பங்களில் உள்ள பிரச்சனைகளுக்கு காரணம். ஒரே நாளில் பழக்கத்திற்கு வராது . கொஞ்சம் கொஞ்சமாக பழகி முயற்சி செய்யுங்கள்.

ஒரு கை தட்டி ஓசை எழுப்ப முடியுமா? இரண்டு கைகளும் இணைத்து தட்டினால் தான் ஓசை வரும். ஒருவர் உணர்ச்சிவசப்பட்டால் ,மற்றவர் அமைதி காத்து பழக வேண்டும். கணவன் என்று கையும், மனைவி என்ற மற்றொரு கையும் சேர்ந்து தட்டுங்கள். வாழ்தல் புரியும், அறம் தலைக்கும், இல்லறம் செழிக்கும்.

கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம். தவறில்லை, இது எல்லா குடும்பங்களிலும் தவிர்க்க முடியாதது. இந்த கருத்து வேறுபாடுகள் பெரிதாக வளரக் கூடாது, வீட்டின் நாள் சுவர் தவிர்த்து வெளியேயும் வரக் கூடாது. இந்த கருத்து வேறுபாடுகள் சுமார் ஒன்றிரண்டு நாட்களில் சரி செய்ய வேண்டும். நீண்ட நாட்கள் தொடர விடாது இருக்க வாழ்க்கைத்துணை ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும்.

விளையாட்டுக்குக் கூட உங்கள் வாழ்க்கைத் துணையை நக்கல் செய்வதோ, ஏளனமாக பேசுவதோ கூடாது. இதனால் வரும் மனக் காயம் ஆறவே ஆறாது.

சுருக்கமாக சொல்வதென்றால் கணவன்,மனைவி என இருவரும் வெல்வதே வாழ்க்கை விளையாட்டு. ஆனால் கணவன் தான் மட்டும் ஜெயிக்க வேண்டும் என்றோ, மனைவி தான் மட்டும் ஜெயிக்க வேண்டும் என்று விரும்புவதோ இல்லறமும் அல்ல, நல்லறமும் அல்ல.


கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன...? என்று சில டிப்ஸ்களை இங்கே பட்டியல் செய்துள்ளோம். நீங்களே உங்களை எடை போட்டுப் பாருங்கள், எங்கே சரி செய்ய வேண்டுமோ, அங்கே சரி செய்யுங்கள். பின்னர் என்ன? வாழ்க்கை வாழ்வதற்கே.


1. அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.


2. மனது புண்படும்படி பேசக்கூடாது.


3. கோபப்படக்கூடாது.


4. சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.

5. பலர் முன் திட்டக்கூடாது.


6. எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.


7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.


8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.


9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.


10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.


11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.


12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.


13. வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.


14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.


15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.


16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.


17. ஒளிவு, மறைவு கூடாது.


18. மனைவியை நம்ப வேண்டும்.


19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.


20. மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.


21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.


22. தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.


23. உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.


24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.


25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.


26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று 

ஒதுங்கக்கூடாது.

27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால்

 மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.


- மீண்டும் அடுத்த பதிவில் மனம் விட்டுப் பேசுவோம்.

முந்தைய பதிவுகளுக்கு:- மண(ன)ப் பொருத்தம் - தொடர்பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/2.html

 மண(ன)ப் பொருத்தம் - தொடர்பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/08/1.html

மண(ன)ப் பொருத்தம் - தொடர் பதிவு - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் (1) - http://tut-temple.blogspot.in/2017/07/1.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html

இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. 'வெற்றி' உங்களை தேடி வரும்..! - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_4.html

சிக்கல்களில் இருந்து சீக்கிரம் மீள்வோமா? - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_2.html

ஓடுவது முள் அல்ல...நம் வாழ்க்கை - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post.html

தாலாட்டு வேண்டுமா? தேசிய கீதம் வேண்டுமா? - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_51.html

இவ்வளவுதங்க குடும்பம்...! - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_98.html

நட்பின் வலிமை - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_55.html

ஆழ்மனத்தின் ஆற்றல் - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_17.html

உருகி உருகி நான் பிராத்திக்கும் கடவுளிடம் ஒரு நாள் பேச சந்தர்ப்பம் கிடைத்தது... - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_6.html

கடவுளை காட்டுங்க! - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_24.html

சில நேரங்களில் சில மனிதர்கள்... - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_14.html

கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!! - http://tut-temple.blogspot.in/2017/04/blog-post_13.html

கண்ணனுக்கு சொன்ன கதை - http://tut-temple.blogspot.in/2017/04/kannanukku-sona-kathai.htmlNo comments:

Post a Comment

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌