Wednesday, November 22, 2017

தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம்

என்ன தலைப்பே புது விதமாய் உள்ளது என நினைக்கின்றீர்களா?

கேள்விக் குறியோடு பதிவு ஆரம்பித்தாலும், நீங்கள் ஆச்சர்யத்தில் உறைவது உறுதி. முதலில் தங்கச் சாலை பற்றி அறிந்து கொள்வோம். இந்தியாவில் முதன்முதலில் 1640-களிலேயே மின்ட் எனப்படும் நாணயச் சாலை சென்னையில்தான் நிறுவப்பட்டது. முதலில் தங்கம், பிறகு வெள்ளி, செம்பு நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. 1869-ல்தான் இந்த நாணயச்சாலை மூடப்பட்டது. இன்றைக்கும் ஜார்ஜ் டவுனில் நாணயச் சாலை இருந்த இடம், தங்கச் சாலை என்றே அழைக்கப்படுகிறது.

இந்த அளவில் புகழ் பெற்ற தங்கச் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பற்பல கோயில்கள் அமைந்துள்ளன. ஆம் ! நம்மைப் பொறுத்த வரையில் தங்கச் சாலையில் உள்ள ஒவ்வொரு கோயில்களும் வைரங்களே. அந்த வகையில் பல வழிகளில் சைவத் தொண்டு ஆற்றிக்கொண்டு வரும் ஒரு சபை பற்றி இன்று அறிய உள்ளோம்.


திருமுறைச் செல்வர் சிவதிரு வே.வேதகிரி ஐயாவின் சொற்பொழிவு கந்தகோட்டத்தில் உள்ள சைவ சமய பக்த ஜன சபையில் இந்த வருட கந்த சஷ்டி விழாவினை யொட்டி நாள்தோறும் தொடர் சொற்பொழிவாய்  நிகழ்ந்து வந்தது. நமக்கு அழைப்பிதழ் கிடைத்தவுடன் துள்ளிக் குதித்தோம். விடுமுறை தினத்தில் சென்று கேட்கலாம் என்று இருந்தோம். துளஸீஸ்வரர் திருக்கோயிலில் உழவாரப் பணி முடித்து விட்டு, அன்று மாலை சொற்பொழிவு கேட்க சென்றோம்.

முருகனின் வேலாலும்,மயிலாலும்,சேவலாலும்  கந்த கோட்டம் அருள் கோட்டமாய்  அன்று மிளிர்ந்தது, அறுபடை வீடுகளை ஒரே இடத்தில் இருந்து தரிசிப்பதைப் போன்று யாம் உணர்ந்தோம்.

கந்தகோட்டத்தைக் கடந்து நேரே சென்று வரும் சாலையில் இடப்புறம் திரும்பினால், அங்கே ஒரு வைரம் மின்னிக் கொண்டு உள்ளது. ஆம்..அது தான் சைவ சமய பக்த ஜன சபை. எந்த ஒரு விளம்பரங்களும் இன்றி, சைவ சிந்தனைகளை பரப்பிக் கொண்டு வருகின்றார்கள். இந்த சபையின் வரலாறு பற்றி அறிய விரும்பினோம். ஆனால் வாய்ப்பு அமையவில்லை. மிகவும் குறுகலான பாதையில் மாடிக்கு சென்றால் சைவ சமய பக்த ஜன சபை காணலாம். இது போன்று பல ஆன்மிக சபைகள் சென்னையில் சைவம்.வைணவம் என்று ஆன்மிகத்தை கொண்டு சென்று வருகின்றார்கள்.இது போன்ற ஆன்மிக தலங்களுக்கு தத்தம் உறவுகளுடன் சென்று பாருங்கள்.மேலே பார்த்தீர்களா? மிக மிக குறுகலான பாதை, சைவ சமய பக்த ஜன சபை இருப்பதே தெரியாது. இருக்கும் இடம் தெரியாவிட்டாலும், இறைவன் இருக்கும் இடத்தை இவர்கள் தொட்டுக் காட்டுவது சிறப்புத் தானே?

உள்ளே சென்று பார்த்தால், பல்வேறு காலத்தில் சைவம் வளர்த்த பெரியவர்களின் அணிவகுப்பைக் காண முடிந்தது.தங்களின் பார்வைக்கு கீழே 
முருகன் புகழ் பாடும் சபையில் பாம்பன் ஸ்வாமிகள் இல்லாது இருக்குமா?
முருகனாய்,அழகனாய் அங்கே வேல் பூஜை செய்தனர். வேலை வணங்குவதே நம் வேலை என நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.


அனைவரும் வந்து சேர்ந்த உடன், முதல் பூஜை ஆரம்பமானது, சொற்பொழிவாளர் அறிமுகம் நடந்த உடன், சிவ திரு  வேதகிரி ஐயா அன்றைய சொற்பொழிவை தர ஆரம்பித்தார்கள். அன்றைய தலைப்பாக மகான்கள் வரிசையில் வள்ளிமலை சுவாமிகள் பற்றியும், சேஷாத்திரி சுவாமிகள் பற்றியும்  கூறினார்கள். வேதகிரி ஐயா வின் மொழியில் திருப்புகழ் போன்ற திரு நூல்களை நாம் கேட்டிருக்கின்றோம். ஆனால் இங்கே புதுமையான தலைப்பாக மகான்களின் மகிமை பற்றி.சொல்லவும் வேண்டுமா என்ன? கேட்டால் தான் தெரியும்.


வள்ளிமலை சுவாமிகள் பற்றி பற்பல அறிய வேண்டிய அரிய முத்துக்கள். வள்ளிமலை சுவாமிகள் வளர்ந்த விதம், திருப்புகழ் கற்றுக் கொண்டது, படிபூஜை ஆரம்பித்தது என்று  அமர்க்களப் படுத்திவிட்டார் என்றே சொல்ல வேண்டும். இவற்றை இங்கே சுருக்கமாக இங்கே தருகின்றோம்.

பழனியில் கல்லுக்கட்டி சாமியார் என்று அழைக்கப்பட்ட கணபதி சுவாமிகள் என்ற ஒருவர் இருந்தார். அவரோடு மைசூர் அரண்மனையில் சமையற்காரராக வேலை பார்த்த ஒருவருக்கு தொடர்பு ஏற்பட்டது. தற்செயலாக ஒரு நாள் கல்லுக்கட்டி சாமிகள் திருப்புகழை பாடும்போது அதை இந்த சமையற்காரர் கேட்டார். மெய்மறந்தார். மேற்கொண்டு தொடர்வதற்கு முன்னர் இந்த சமையற்காரர் பற்றி சற்று தெரிந்துகொள்வோம்.

சமையற்காரரின் சொந்த ஊர் திருச்செங்கோடு. ஆனால் மைசூருக்கு பல ஆண்டுகள் முன்பே சென்றுவிட்ட குடும்பம். அரண்மனை சமையற்காரர் என்றால் சும்மாவா? கைநிறைய பொருளை சம்பாதித்தபோதும் அதில் ஏனோ மனநிறைவு ஏற்படவில்லை. அப்படியே புறப்பட்டு பழனி வந்தவர் கணபதி சுவாமிகளிடம் திருப்புகழ் கேட்டார். திருப்புகழின் சந்தமும், ஓசை நயமும் கருத்துக்களும் பொருட்செறிவும் அவரை கவர்ந்தன. திருப்புகழுக்கு அடிமையானார்.

அதை தாம் அனுபவிப்பதிலும் பிறரை அனுபவிக்கச் செய்வதிலும் நிபுணரானர். பழநியிலிருந்து திருவண்ணாமலை வந்து, ஸ்ரீ ரமண மகரிஷி, ஸ்ரீ சேஷாத்திரி சுவாமிகளைச் சந்தித்து பின்பு வள்ளிமலையை அடைந்தார். பின்பு மலைமேல் ஓர் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டு வள்ளிமலை சுவாமிகளாக அங்கேயே தங்கிவிட்டார். அங்குள்ள மக்களுக்கு திருப்புகழ் பாடல்களைக் கற்பித்து வந்தார். மலைமேல் பொங்கி அம்மனுக்கு கோயில் ஒன்றும் அமைத்து வழிபட்டு வந்தார். 1950ஆம் ஆண்டு ஆஸ்ரமக் குகையில் மகா சமாதி வாய்க்கப் பெற்றார்.

வள்ளிமலை ஸ்வாமிகளை பலர் காணச் சென்றனர். திருப்புகழின் வீச்சு அவரது பேச்சால் பரவத் தொடங்கியது. வரும் அனைவருக்கும் உணவளித்தார். இதன்பொருட்டு 20 க்கும் மேற்ப்பட்ட கறவை பசுக்களை வாங்கினார்.


அடுத்தபடியாக சேஷாத்திரி சுவாமிகள் பற்றி வேதகிரி ஐயா கூற, நாம் கேட்டோம். அதில் அவரது குழந்தைப் பருவம் முதல் திரு அண்ணாமலை வந்து அருள் பாலித்தது வரை கேட்டுக் கொண்டே இருந்தோம். நேரம் சென்றதே தெரியவில்லை. அவ்வளவு கருத்துக்கள், நம் மனதில் தான் நம்மால் இருந்த முடியவில்லை.  சேஷாத்திரி சுவாமிகள் என்று சொன்னாலே தற்போது திருஅண்ணாமலை கிரிவலம் தான் நினைவிற்கு வருகின்றது. அவர் தொடர்ந்து வலியுறுத்துவது எல்லாம், மனதை எப்பொழுதும் இறைவனோடு வைத்திருக்க வேண்டும், சிந்தனைகள் சிதறக்கூடாது என்பதுதான்.  மனதை ஒழுக்கமாக ஒருநிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்றால் உண்மையான பக்தியும், முழுசரணாகதியும் தேவை. ஸத்குருநாதரிடம் வாழ்க்கையை ஒப்படைத்து, சரணாகதி செய்த பின்பு, அவர் பிறப்பிக்கும் ஆணைகளை உண்மையாக பயபக்தியுடன், ஒவ்வொரு சீடரும் நிறைவேற்ற வேண்டும். மக்களுக்கு உதவி செய்வதே மகானின் விருப்பம். அந்த மகேசனின் வாக்குப்படி நடப்பதே, நமது வாழ்க்கையைத் திருப்பும். அவருடைய அறிவுரைப்படி நாம் உண்மையாக நடந்தால் , உண்மையான பேரானந்தம் மிக்க பெருவாழ்விற்குக் கதவுகள் திறக்கப்படும் என்பது சத்தியம். 

காலையில் எழுந்து, இந்த மகானின் பெயரை உள்ளன்போடு உச்சரித்தால் ஓடோடி வந்து நமக்கு உதவுவார் என்ற செய்தி இன்னும் நம்மை வாழ்விக்கின்றது. இவரின் அமர்வு விதம் மிகவும் வித்தியாசமாய் இருக்கும்.


அருமையான சத்சங்கத்தில் இணைந்தது மகிழ்ச்சியாய் இருந்தது. இது போன்ற சத்சங்கங்கள் நடைபெற்றால் உடனே சென்று கேளுங்கள், கேட்க கேட்கத் தான் உள்ளத்தில்  உள்ள மனக் கசடுகள் நீங்கும், அவை நீங்கி விட்டால், பிறகென்ன, உள்ளொளி பெருகும், இறையருள் கிடைக்கும், அருமையான வாய்ப்பு கொடுத்த திரு.வேதகிரி ஐயாவிற்கு எம் மனமார்ந்த நன்றியை TUT தளம் வாயிலாக இங்கே சொல்லி மகிழ்கின்றோம். இது போன்ற சத்சங்களை நம் TUT தளம் வழியாக நடத்த விழைகின்றோம், இறையருளோடு,குருவருளும் முன்னின்று நடத்த வேண்டுகின்றோம்.


முந்தைய பதிவுகளுக்கு :-


துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.html

நவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html
No comments:

Post a Comment

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌