இறை அன்பர்களே.
மிக மிக தாமதமான அழைப்பிற்கு பொறுத்தருள்க!
மறுபிறப் போட்டியிச் சிறுவனை யாளுங்
குறுமுனி யெம்மான் நறுமலர்த் தாளே. (1)
உம்பரு மேத்தும் அம்பிகை பாலர்
கும்பத் தேன்முனி எம்மகத் தாரே. (2)
வருவினை நீக்குயர் குருமுனி பொதிகையில்
இருமுனை பாத மறுமலர் சரணே. (3)
பன்னீ ராயிரம் நன்னூற் பகர்ந்த
தேன்முனி தாளை என்னா வேத்துமே. (4)
பண்டுயர் தேன்முனி அண்ணல்தன் னடிமலர்
எண்ணித் தொழுபவர் புண்ணியர் தாமே. (5)
தென்னவ னோடன் றின்னிசை வீணையில்
தன்திறங் காட்டியாள் தேன்முனி காப்பே. (6)
பொதிகையில் மேவிய அதிமதி மேன்மைப்
பதிதிருத் தேன்முனி கதிதரு வாரே. (7)
கலசத்திற் தோன்றினார் நிலஞ்சம மாக்கினார்
சலந்தனை அடக்கினார் புலத்தியர்க் கையனே. (8)
மகத்திலு முகத்திலும் நிகரிலாப் புகழ்மலி
அகத்தியர் தாளென தகத்திடை மன்னுதே (9)
கும்ப மாமுனி செம்பொ னாரடி
நம்பு வார்வினை வெம்பி வாடுமே (10)
TUT( தேடல் உள்ள தேனீக்களாய்) குழுவின் சார்பாக நாளை (11/11/2017 ) சனிக்கிழமை ஆயில்ய நட்சத்திரத்தில் காலை 9 மணி அளவில் கூடுவாஞ்சேரி - மாமரத்து விநாயகர் ஆலயத்தில் அருள்பாலிக்கும் அகத்திய மகரிஷிக்கு வழிபாடு செய்ய இறையருளும்,குருவருளும் கூட்டியுள்ளது. அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு அகத்தியரின் அருள் பெற வேண்டுகின்றோம்.
இவண்,
நிர்வாகம்
TUT- தேடல் உள்ள தேனீக்களாய்
தொடர்புக்கு : 9677267266/7904612352
முந்தைய பதிவுகளுக்கு:-
பொதிகை வேந்தே ! வருக !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_7.html
அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை - 15/10/2017 - https://tut-temple.blogspot.in/2017/10/15102017.html
அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_27.html
அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017 - https://tut-temple.blogspot.in/2017/09/2017.html
எண்ணுவோம் பெற்றோர்களை முதல் குருவாக! - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_29.html
அகத்தியர் தேவாரத் திரட்டு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_65.html
நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_24.html
மழை வாழ்த்து - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_8.html
சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_4.html