Subscribe

BREAKING NEWS

24 November 2017

சுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி

அவசியம் மலை யாத்திரை குழுவின் மூலம் சென்ற மாதம் நாம் கைலாஷ் கோணா மலை சென்றோம், அப்போது நாம் நாகலாபுரம் சென்ற போது,சுருட்டப்பள்ளி,வேதநாராயணப் பெருமாள்,சுரைக்காய் சித்தர் என பல தரிசனம் பெற்றோம். அந்த தரிசனத்தில் கடந்த பதிவில் ஒரே கல்லுல இரண்டு மாங்காய் என்பது போல் இரண்டு திவ்ய தரிசனமாக வேதநாராயணப் பெருமாள் மற்றும்  ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் தரிசனம் பெற்றோம். இதோ இந்தப் பதிவில் சுருட்டப்பள்ளி சிவனைப் பற்றி சிறிது காண்போம்.

சிவனை எப்போதும் லிங்க வடிவில் தான் காண்கின்றோம். அண்டத்தில் உள்ளதே இந்த பிண்டத்தில் என்று உணர்த்தும் நிலையே இது. இருப்பினும் அபிஷேகப் பிரியனை, அலங்காரப் பிரியன் போல் உருவாக கொண்டு காண வேண்டும் என்றால் அது இங்கே மட்டும் தான். எங்குமே காண முடியாத கோலத்தில் சிவன் பள்ளி கொண்ட நிலை.இந்த தலத்தின் சிறப்பே இது தான். மற்றுமொரு சிறப்பாக இங்குள்ள அனைத்து தெய்வங்களும் தத்தம் மனைவியரோடு காட்சி அளிப்பது. 

இன்னும் பற்பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது இந்த திருத்தலம். 1972 ம் வருடம் காஞ்சி ஸ்வாமிகள் மஹா பெரியவா இங்கு வந்து 10 நாட்கள் தங்கியிருந்தார் என்பது சிறப்பாகும். அந்நாட்களில் தினமும் பள்ளி கொண்டீஸ்வரரையும் , தம்பதி சமேத தட்சிணாமூர்த்தியையும் வலம் வந்து தரிசனம் செய்வார்.

மஹா பெரியவாவின் பாதம் பட்டவுடன் இத்தலத்திற்கு பக்தர்கள் வருகை அதிகமாகி வருகின்றது. இத்தலத்தை அனைவரும் தரிசிக்க வேண்டும் என்று அனுக்கிரகம் பண்ணி உள்ளார். அதனால் தான் பெரியவாவின் பக்தர்கள் இங்கே வருகின்றார்கள் என்பது கண்கூடு. உதாரணத்திற்கு நம்மையே இங்கு சொல்ல விரும்புகின்றோம். மஹா பெரியவா பற்றி கடந்த ஓராண்டு மேலாகா தான் அறிந்தோம். இதோ, அவரின் கருணையில், அவரின் பாதம் பட்ட இடத்தில், தண்டிப்பதற்கு கூட தகுதியற்ற நம்மை, நல்லதொரு தரிசனத்தில், சுருட்டப்பள்ளி செல்ல அனுகிரகித்தது மஹா பெரியவா தான்.


பள்ளிகொண்ட ஈஸ்வரன் சன்னதி. வரிசையில் நிற்கும்போது சுவற்றில் வரைந்த மஹா பெரியவரின் திருவுருவப் படம் கண்களில் பட்டது. ‘ஜெய ஜெய சங்கர… ஹர ஹர சங்கர’ மனம் குதூகலமடைந்தது.



இந்த ஆலயத்தின் மற்றுமொரு சிறப்பு என்னவென்றால் இங்கு பல மூர்த்திகள் தத்தம் மனைவியர்களுடன் அருள் பாலிப்பது,.இங்கு வந்து வழிபட்டால், குடும்பத்துடன்,மங்களகரமான வாழ்வினை பெறுவார்கள் என்பது உறுதி.

நின்றும்,  இருந்தும், கிடந்தும், நடந்தும் எம் பெருமாள் காட்சி அளிப்பதை அனைவரும் அறிவீர்கள். திருமலையில் நின்றும், விஷ்ணுவாக நின்றும், ஸ்ரீரங்கத்தில் கிடந்தும், காஞ்சியிலும், திருக்கோவிலூரில் நடந்தும் அருள் பாலிக்கின்றார். ஆனால் நம் பரமேஸ்வரன் ! அவரும் நின்றும், இருந்தும், கிடந்தும், நடந்தும் அருள் பாலிக்கின்றார்.

திருச்செங்கோட்டில் நின்றும், சிவலிங்கமாக இருந்தும், சிதம்பரத்தில் நடந்தும், சுருட்டப்பள்ளியில் கிடந்தும் அருள் பாலிக்கின்றார். இந்த தலத்தில் தானே நம் சர்வேஸ்வரன், பரமேஸ்வரன் கிடந்த கோலத்தில் உள்ளார்.இத்திருத்தலத்தின் தலவரலாற்றை அங்கே இருந்த சிலரிடம் கேட்டபோது நமக்கு தெரிவித்ததை இங்கே பகிர்கின்றோம்.


துர்வாச மகரிஷியின் சாபத்தால் இந்திரலோக பதவியை இழந்தான் இந்திரன். அசுரர்கள் அவனது ராஜ்யத்தைப் பிடித்தனர். இழந்த பதவியை பெற வேண்டுமானால் பாற்கடலை கடைந்து, அமுதம் உண்டு பலம் பெற வேண்டும் என தேவகுரு பிரகஸ்பதி கூறினார்.

திருமாலின் உதவியுடன் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்திர மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்கள் ஒரு புறமும், அசுரர்கள் ஒரு புறமுமாக பாற்கடலை ஏகாதசி தினத்தில் கடைந்தனர். வாசுகி பாம்பு வலி தாங்காமல் விஷத்தை கக்கியது. தேவர்களும், அசுரர்களும் பயந்து இதிலிருந்து தங்களை காப்பாற்ற சிவனை வேண்டினர். சிவன் தன் நிழலில் தோன்றிய சுந்தரரை அனுப்பி அந்த விஷத்தை திரட்டி எடுத்து வர கூறினார். சுந்தரர் மொத்த விஷத்தையும் ஒரு நாவல் பழம் போல் திரட்டி சிவனிடம் தந்தார்.

அப்போது முப்பத்து முக்கோடி தேவர்களும், ""சிவபெருமானே! இந்த விஷத்தை வெளியில் வீசினால் அனைத்து ஜீவராசிகளும் அழியும். இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து எங்களை காத்திடுங்கள்என மன்றாடினர்.உடனே சிவன் "விஷாபகரண மூர்த்தி'யாகி அந்த கொடிய நஞ்சினை விழுங்கினார். இதைக்கண்டு பயந்த லோகமாதா பார்வதி, சிவனை தன் மடியில் கிடத்தி அவரது வாயிலிருந்த விஷம் கழுத்தினை விட்டு செல்லாதவாறு கைவைத்து அழுத்தினாள். இதனால் சிவனின் கழுத்தில் (கண்டத்தில்) நீலநிறத்தில் விஷம் தங்கியது. அதனால் அவர் "நீலகண்டன்' ஆனார். விஷத்தை தடுத்து அமுதம் கிடைக்கச் செய்ததால் அம்மன் "அமுதாம்பிகை' ஆனாள்.

 ஆலகால விஷமருந்தி, கண்டத்திலே நிறுத்தி, நீலகண்டர், காள கண்டர் , நஞ்சுண்டேஸ்வரர் என பெயர் பெற்றார் நம் பெருமான். அப்படியே விஷத்தினை தான் உண்டு,கண்டத்தில் நிறுத்தி,கைலாயம் செல்லும் நம் தலைவர், சுருட்டப்பள்ளி வரும் போது களைப்புற்றார். விஷம் வேறு உள்ளதால் மயக்கமும் உற்றார்.

இந்த மயக்க நிலையிலேயே தாயாரின் மடியில் தலை வைத்து களைப்பாறுகின்றார். இங்கே அம்பிகை சர்வ மங்களா என்ற நாமத்துடன், நம் பெருமானை தன் மடி தலை வைத்து சயனகோலத்தில் இருப்பதால் பள்ளிகொண்டீஸ்வரர் என்று வழங்கப் பெறுகின்றார். சுவாமி பள்ளி கொண்டிருப்பதால், "பள்ளி கொண்டீஸ்வரர்' எனப்படுகிறார். பிரதோஷ காலத்தில் இத்தலத்து ஈசனை வழிபட்டால் சகல செல்வங்களும் கிடைக்கும் என்பது தொண்நம்பிக்கை. இத்திருக்கோயில் விஜயநகர பேரரசர் வித்யாரண்யரால் கட்டப்பட்டது. இங்குள்ள சிவபெருமான் மனித உருவில், ஆலகால விஷம் உண்டபின்னர், பார்வதி தேவியின் மடியில் தலை வைத்து படுத்தபடி ஓய்வெடுக்கும் உருவில் இருக்கிறார்.


பிரதோஷ வழிபாடு இங்கே மிக விமரிசையாக வெகு காலமாக நடைபெற்று வருகின்றது.இங்கே நந்திதேவர், நந்திகேஸ்வரர் என்று அழைக்கப்படுகின்றார்.பள்ளிகொண்ட ஈஸ்வரரை சுற்றி ப்ருகு , பிரம்மா, மகாவிஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், அகத்தியர், புலஸ்தியர், கௌதமர், தும்புரர், வசிஷ்டர், விஷ்வாமித்திரர், வால்மீகி, தேவேந்திரன், ஸ்ரீ விநாயகர், முருகன் ஆகிய அனைவரும் வணங்கி நிற்கின்றார்கள்.

சிவன் பள்ளி கொண்ட நிலையும், அனைத்து தெய்வங்களும் தம்பதி சமேதராக இருப்பதும் இக்கோயிலின் தனிச் சிறப்பாகும். பள்ளி கொண்ட ஈஸ்வரன் - சர்வ மங்களாம்பிகை, வால்மீகிஸ்வரர் - மரகதாம்பிகை, விநாயகர் - சித்தி, புத்தி, சாஸ்தா - பூரணை, புஷ்கலை, குபேரன் - கவுரிதேவி, சங்கநிதி மற்றும் பதுமநிதி இப்படி அனைவரும் தத்தம் மனைவியருடன் உள்ளனர்.
மூலவர் வால்மீகிஸ்வரர் என்றழைக்கப்படுகிறார். இவருக்கு எதிரில் ராமலிங்கம் உள்ளது. இந்த சன்னதிக்கு வெளியே துவார பாலகருக்கு பதில் சங்கநிதியும், பதுமநிதியும் உள்ளனர். அம்மன் மரகதாம்பிகை சன்னதிக்கு வெளியில் துவார பாலகியருக்கு பதில் பாற்கடலிலிருந்து கிடைத்த காமதேனுவும், கற்பகவிருட்சமும் உள்ளனர்.பிரகாரத்தில் விநாயர், முருகன், பிருகு முனிவர், பிரம்மா, விஷ்ணு, மார்க்கண்டேயர், நாரதர், சந்திரன், குபேரன், சூரியன், சப்தரிஷிகள், இந்திரன் வீற்றிருக்கிறார்கள்.

பேருந்தை விட்டு இறங்கியதும் நம்மை வரவேற்கும் கோபுரமும், நந்தியும். தங்களின் பார்வைக்கு


   நாளெல்லாம் நந்திதேவரை பார்த்துக் கொண்டிருக்கலாம் என்று தோன்றுகின்றது அல்லவா?



இதோ நம்மை வரவேற்கும் கோடி புண்ணியம் தருகின்ற கோபுர தரிசனம்.



உள்ளே நுழைந்ததும், சுருட்டப்பள்ளி ஈசனை உணர்த்தும் உள் கோபுரம் 



இதோ நம் தள உறவுகளுக்காக , சுருட்டப்பள்ளி ஈசன் தரிசனம். என்ன அழகு! என்ன அருள் ! சொக்கிப் போனோம் சொக்கநாதரைப்  பார்த்து, மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருந்தோம். தலைவரின் அழகைப் பார்த்து நமக்கு பித்து பிடித்து விடும் போல அல்லவா இருக்கின்றது 



பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத்  தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே

என்ற சுந்தரர் பாடிய சுந்தரப் பாடலை மனதில் ஓதிக் கொண்டே விடை பெற்றோம். 



பேருந்து வசதி :


சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புத்தூர் வழியாக செல்லும் அனைத்து பேருந்துகளும் சுருட்டப்பள்ளியில் நிற்கும், இறங்கிய இடத்திலேயே சுருட்டப்பள்ளி ஈசனின் கோபுரம் நம்மை வரவேற்கும்.



முந்தைய பதிவுகளுக்கு :-


வேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_23.html

தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html
துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.html

நவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html






No comments:

Post a Comment