Subscribe

BREAKING NEWS

17 November 2017

அம்மம்மா வெகுதெளிவு அவர்வாக்குத்தான்

அகத்தியரின் அருள் பூஜை - நிகழ்வின் துளிகள்

சென்ற சனிக்கிழமை 11/11/2017 ஆயில்ய ஆராதனையில் அகத்தியருடன் இணைந்த நிகழ்வின் துளிகளை இங்கே பதிவாக்க  விழைகின்றோம்.

பூஜை சரியாக காலை 9 முதல் 10 மணிக்குள் ஆரம்பிக்கலாம் என்று குருக்கள் சொல்லி இருந்தார். நாம் சரியாக 9 மணிக்கு பூஜை பொருட்களுடன் திருக்கோயிலை அடைந்தோம். அன்று முருகப் பெருமானுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. முருகன் அருள் பெற்று முடித்ததும், நம்மை பஞ்சாமிர்தம் தயார் செய்ய சொன்னார்கள்.கொண்டு சென்ற பழங்களை, ஒவ்வொன்றாக சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டிருந்த போது, நம் குழுவின் தம்பிகள், இவர்கள் தங்கக் கம்பிகள்..வினோத்தும், சரவணனும் வந்து சேர்ந்தார்கள், வந்த உடன் பூஜைக்கு தாயார் செய்யும் பணியில் ஈடுபட்டார்கள். நாம் பஞ்சாமிர்தம் போன்றவற்றை தயார் செய்ததை பார்த்து, ஒரு அம்மையார் நம்மிடம் வந்து, நானும் உதவ விழைகின்றேன் என்றார்.

நாமும், நீங்களும் எங்களுக்கு உதவுங்கள் என்றோம், பின்பு ஒவ்வொரு அர்ச்சனை பொருட்களை எடுத்து அடுக்கி வைத்தோம், அப்போது தான் மஞ்சள் பொடி வாங்கவில்லை என்று தெரிந்தது. நம் அலைபேசியில் இரண்டு வாரங்களாக மென்பொருள் தொந்திரவு உள்ளதால், நாம் நமக்குத் தெரிந்த அபிஷேக பொருட்களை வாங்கினோம். இதில் மஞ்சள் பொடியை விட்டு விட்டோம். இந்த பதிவிலும் அதிகமாக அருள் காட்சிகளை இணைக்க முடியவில்லை, நமக்கு கிடைத்த காட்சிகளை இந்த பதிவில் இணைக்கின்றோம்.

அதற்கு முன்பாக அகத்தியம் சொல்லவும் சில உண்மைகளை இங்கே அறிய இருக்கின்றோம்.


"அகத்தியரே பெரும்பேற்றை அடைந்தோராவார்
    அம்மம்மா வெகுதெளிவு அவர்வாக்குத்தான்
அகத்திலுறை பொருளெல்லாம் வெளியாய்ச் சொல்வார்
    அவர்வாக்குச் செவி கேட்க அருமையாகும்
அகத்தியரின் பொதிகையே மேருவாகும்
    அம்மலையும் அகத்தியரின் மலையுமாகும்
அகத்தியரினடையாளம் பொதிகை மேரு
    அவர் மனது மவரைப் போற் பெரியாருண்டோ "

அகத்தியமே சத்தியமாய் ..சத்தியமே அகத்தியமாய் உணர்த்தும் வரிகள், பொதுவாக படித்தாலே பொருள் உணரலாம். நம்முடைய அருள் நிலைக்கேற்ப, பொருள் இலங்கும் என்பது திண்ணம். பொதுவாக சித்தர் பாடல்களை நாம் இங்கே பதிவேற்ற முடியுமே தவிர, பொருள் உணர்த்துவது பரம்பொருளின் கையிலே தான். இதனை சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் என்ற மகத்துவம் பொருந்திய மாணிக்க வாசகரின் கருத்தின் மூலம் அறியலாம்.



மேலும் மற்றொரு பாடலை சிந்திப்போம்.

கூறுமே யாம்நினைத்த சங்கற்பத்தை
  குருவானாற் சொல்லிடுமே அடியாராவோம்
யாருமே எட்டிரண்டும் பத்தென்றார்கள்
  யார் சொன்னார் அகத்தியரே விரித்துச் சொன்னார்
தாருமே மாந்தர்களும் மயங்கினார்கள்
  தமர்சித்த ரானாக்காற் சொல்லுவார்கள்
கோருமே நீர் கேட்கச் சொல்லி வாரேன்
  குரு  வாகு மந்திரங்க ளீதுதானே

இன்னும் சற்று ஆழமாக யோகக் கலையின் சூட்சுமத்தை இங்கே பகிர்கின்றார். அகத்தியரை அருட்குருவை மனதுள் வைத்து, போற்றுவோம். போற்றினால் தானே குருவின் மூலம் திருவின் அருள் பெற முடியும். குருவின் கால் பட்ட இடமெல்லாம் கைலாயம் என்ற உண்மையை உள்வாங்குவோம். அகத்தியரின் புனிதம் பெட்ரா பூமி நம் தமிழ்நாடு.சரி மீண்டும் பூஜைக்கு வருவோம்.

நாமும், சரவணனும் சென்று மஞ்சள் பொடி வாங்கி வந்து, கொடுத்துவிட்டு, அபிஷேகத்திற்கு சென்றோம். குருக்கள் அபிஷேகம் ஆரம்பிக்கும் போதே, ஆராதனை போற்றிகள் பாட சொன்னார்கள். இந்த முறை நாம் சித்தர்கள் போற்றியை எடுத்து செல்ல மறந்து விட்டோம். பின்பு அலைபேசி மூலம் சரவணனை பாடும் படி கேட்டோம். இம்முறை நமது அலுவலக நண்பர் திரு.பத்ம குமார் பூஜைக்கு வந்திருந்தார். நேரம் ஆக, ஆக அடியார்கள் வந்து கொண்டே இருந்தார்கள். மஞ்சள், சந்தனம்,விபூதி, பஞ்சாமிர்தம், தேன் ,வில்வம் என ஒவ்வொரு அபிஷேகம் முடிந்தது.

அலங்காரம் நடைபெற்றது. இம்முறை அகத்தியரை, அருட்குருவை, நம் அப்பாவை  ராஜ அலங்காரத்தில் பார்க்க துடித்தோம், தலைப்பாகை கட்டும் படி குருக்களிடம் வேண்ட, ராஜ அலங்காரம் தொடங்கியது. சற்று நேரத்தில் தீப ஆராதனை நடைபெற்றது, சொல்லில் அடங்கா அருளை அகத்தியர் வழங்கிக் கொண்டிருந்தார். வானம் வசப்படும் என்ற ஒரு நிலை. பிறவிப் பயன் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கிடைத்தது என்று சுருக்கமாக சொல்லலாம்.

இதோ அருள் வெளிப்பாட்டின் அற்புதங்கள் உங்களுக்காக























மேலே அலங்காரத்திற்கு நம் ஐயன் தயாராக. எத்தனை முறை தரிசித்தாலும்  ஏக்கம் தரும்  உணர்வினில் நம்மை ஆட்கொள்ளும் அகத்தியரின் பதத்தினையும், பாதத்தினையும் பற்றுக்கோடாக்கிட பெற்றோம் இப்பிறவி.








அப்பனே போற்றி, அருள் பெற்ற தேவே போற்றி !! என்று எத்தனை போற்றிகளை நாம் உம்மை துதித்தாலும் ,  உம் அன்பிற்கும், அருளிற்கும் ஈடு இணை உண்டா? அகத்தீசா ! 





அன்றைய தினம் சக்கரைப் பொங்கலும், பஞ்சாமிர்தமும் வழங்கப் பட்டது. அன்று மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை , ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் சனிக்கிழமை அன்று முற்றோதல் நடைபெறுகின்றது. நாம் அடுத்து உழவாரப் பணி விஷயமாக குன்றத்தூர் செல முற்பட்டோம். அப்போது நம் TUT குழுவின் புதிய உறவாம் திரு. கந்தசாமி ஐயாவை சந்தித்தோம்.

நேரில் பூஜையில் வந்து கலந்து அருள் பெற்ற திரு. வினோத்குமார், சரவணன், பத்ம குமார், கந்தசாமி அவர்களுக்கு நன்றி. அருமையாக ஆராதனையை நடத்திக் கொடுத்த குருக்கள் அனைவருக்கும் TUT தளத்தின் வாயிலாக நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

- அடுத்த பதிவில் சந்திப்போம்

முந்தைய பதிவுகளுக்கு :-

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை - 11/11/2017 - https://tut-temple.blogspot.in/2017/11/11112017.html

பொதிகை வேந்தே ! வருக !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_7.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை - 15/10/2017 - https://tut-temple.blogspot.in/2017/10/15102017.html

அகத்தியரை அருட்குருவை அகத்துள் வைப்போம் - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_27.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017 - https://tut-temple.blogspot.in/2017/09/2017.html

எண்ணுவோம் பெற்றோர்களை முதல் குருவாக! - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_29.html

அகத்தியர் தேவாரத் திரட்டு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_65.html

நம்பினால் நடக்கும் என்பது அகத்தியர் வாக்கு - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_24.html

மழை வாழ்த்து - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_8.html

சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_4.html


No comments:

Post a Comment