Subscribe

BREAKING NEWS

28 November 2017

ஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம்

சித்தர்களின் வழிபாடு, பூஜை என்று நம்மை வழிநடத்தும் குருமார்களின் ஆசியோடு, இன்றைய பதிப்பில் சிவவாக்கியம் பற்றி சிந்திக்க இருக்கின்றோம்.  முதன் முதலாக சிவ வாக்கியத்தை மருதேரியில் உள்ள பிருகு அருள் நிலையத்தில் கேட்டோம். செல்வம் ஐயாவின் கணீர் குரலில் "ஓடியோடி யோடி யுட்கலந்த சோதியை" என்று பாடிய ஜீவன் உள்ள சிவனின் வாக்கியமான  சிவவாக்கியம் இன்னும் நம்மை உய்விக்கின்றது.

சித்தர்களின் மார்க்கத்தில் வந்த பிறகு, நாம் சித்தர்களின் வழிபாடு, பூஜை என்று செய்வதோடு மட்டும் நில்லாது, சித்தர்களின் வாழ்வியல் நெறிகளை, முறைகளை அறிந்து பின்பற்ற வேண்டும்.இது தான் சித்தர்களின் விருப்பமும் கூட. உதாரணத்திற்கு பல் துலக்குதல், இன்று ஏனோ,தானோ என்று கடமைக்கு பல் துலக்கும் பற்பசை, செயற்கை குச்சி கொண்டு அவசர,அவசரமாக பல் தேய்க்கின்றோம். ஆனால் நம் சித்தர்கள் தந்த தமிழ் மொழியில் உள்ள சொல்லாடலைப் பாருங்கள்.




பல் தேய்த்தல் அன்றி பல் துலக்குதல். தேய்ப்பது என்றால் பாத்திரம் தேய்ப்பது என்று தெரியும், நாமும் நம் பற்களை பாத்திரங்களாக நினைத்து தேய்த்துக் கொண்டு வருகின்றோம். ஆனால் நாம் செய்ய வேண்டியது, பல் துலக்குதல், துலக்குதல் என்றால் என்ன? எப்போது துலங்கும்?



தொட்டால் தானே துலங்கும், கையில் உள்ள விரல்களைக் கொண்டு பல் துலக்க பழகுங்கள், நம் முன்னோர்களும் இதைத் தான் கரி,உப்பு கொண்டு விரல்கள் மூலம் பற்களைத் தொட்டு துலக்கினார்கள். ஆனால் நாம்? பற்பசையை விட்டொழியுங்கள், பற்பொடியை உபயோகியுங்கள். மெடிக்கல் ஷாப், ஷாப்பிங் கடைகளுக்கு செல்வத்தைத் தவிர்த்து, இறைமை உறையும் நாட்டு மருந்து கடைகளுக்கு சென்று பாருங்கள், உண்மையான ஆரோக்கியத்தை நாம் பெற முடியும்.இனிமேலாவது பல் துலக்குவோமா? மீண்டும் இதனைப் பற்றி வேறொரு பதிவில் ஆராய்வோம்.

ஓடியோடி யோடி யுட்கலந்த சோதியை
நாடிநாடி நாடிநாடி நாட்களும் கழிந்துபோய்
வாடிவாடி வாடிவாடி மாண்டு போன மாந்தர்கள்
கோடிகோடி கோடிகோடி யெண்ணிறந்த கோடியே

என்ற சிவவாக்கியரின் பாடல்,  சிந்தனைகளை எழுப்பாமல் இல்லை, இதயத்துள்ளே இருக்கும் இறைவனைக் காணாமல்  தேடியலைந்து, இறுதியில் எங்கும் காண இயலாமற் அறியாமையால் மாண்டுபோனார்கள். அவ்வாறு மாண்டு போவனர் எண்ணிக்கை எத்தனை என்று அறிவுறுத்தியவர் சிவவாக்கியர்.மூடப்பழக்க வழக்கங்கள்,தீண்டாமை,போலி சாமியார்கள்,அகத்தில் அழுக்குடன் திரியும் மானிடரைக்  கண்டிக்கிறார். எத்தனை உண்மையான செய்திகள் இங்கே சொல்லி இருக்கின்றார். கோடிக்கணக்கான மனிதர்கள் ஓடி ஓடி, நாடி நாடி, வாடி வாடி இறைவனை அறியாது சென்று விட்டார்கள் என்று சொல்கின்றார். அப்படியானால் இறைவன் கோவிலில் இல்லையா? என்று கேட்கின்றீர்கள்? இறைவன் கோவிலில் மட்டும் அல்ல, அனைத்திலும் இருக்கின்றார். இந்த அண்டம் முழுதும் இறையே..அண்டத்தில் உள்ள இறைவன், இந்த பிண்டத்திலும் இருக்கின்றார். எப்படி இருக்கின்றார்? அன்பே சிவம் என்ற ஜோதியாய் இருக்கின்றார்.


ஐந்தே ஒரு பாடலே ஓராயிரம் அர்த்தம் சொல்கின்றது என்றாலே, அவருடைய மொத்தமான 1012 சிவவாக்கியப் பாடல்கள் ...அப்ப்பா..நினைத்தாலே மலைக்கின்றது. சிவவாக்கியத்தை பற்றி மேலும் உணர குருவருள் புரிய வேண்டுகின்றோம்.சிவவாக்கியர் பற்றி கிடைத்த செய்திகளை இங்கே அறியத் தருகின்றோம்.

‘அபிதான சிந்தாமணி’ எனும் நூலில் இவரைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.காசிக்குப் போக வேண்டும் என்ற முடிவெடுத்து தேச சஞ்சாரம் செய்து காசியை அடைந்தார். மூச்சுக் காற்றைக் கட்டுப்படுத்தும் பிராணாயாம வித்தை அறிந்து ஒரு செருப்பு தைப்பதை தொழிலாக கொண்ட ஞானியிடம் சீடராக சேர்ந்தார். இருவரிடமும் ஈர்ப்பு சக்தி ஏற்பட்டு நெருங்கிய நண்பர்கள் போல் கலந்தனர்.சிவ வாக்கியர் தனது மனக்குறையை கூறி தன்னை ஆதரிக்கும்படி வேண்டினார். சிவ வாக்கியரைச் சோதிக்க “ சிவ வாக்கியா! என்னிடம் செருப்பு தைத்த கூலிக்குக் கிடைத்த காசு என்னிடம்இருக்கிறது. இதனை எடுத்துப்போய் என்னுடைய தங்கையான கங்காதேவியிடம் கொடுத்து விட்டு வா…..,அத்துடன் இந்த பேய்ச் சுரைக்காய் ஒரே கசப்பாகக் கசக்கிறது. இதன் கசப்பையும் கழுவிக் கொண்டு வா!’என்றார்.

Imagesசிவவாக்கியர்.jpg


காசையும் பேய்ச்சுரைக்காயையும் பெற்றுக்கொண்ட சிவ வாக்கியர்  நேராக கங்கை நதிக்கரை வந்தார்.கொடுத்த காசைச் சுழன்றோடும் ஆற்று நீரின் மேல் வைக்க நீருக்குள்ளிருந்து இரு வளைக்கரம் வெளியே நீண்டு அந்தக் காசைப் பெற்றுக்கொண்டது. மறு நிமிடம் மறைந்தது. எவ்வித வியப்பும் கொள்ளாது, தன்னிடமிருந்த பேய்ச் சுரைக்காயை எடுத்து நீரில் அலம்பிக் கொண்டு போய் சித்தரிடம் கொடுத்தார்.  ‘சிவ வாக்கியா, வந்துவிட்டாயா! நான் அவசரப்பட்டு விட்டேன். நீ கங்காதேவியிடம் கொடுத்த காசு எனக்குத் திரும்பவும் வேண்டுமே…, இதோ இந்தத் தோல்பையில் தண்ணீர் இருக்கிறது. அங்கே கொடுத்த காசை இந்தத் தண்ணீரிடம் கேள்’ என்றார். சிவ வாக்கியர் எவ்வித சலனமும் இன்றிக் கேட்டார். தண்ணீருக்கு உள்ளிருந்து ஒரு வளைகரம் நீண்டது. அதன் கரத்தில் காசு இருந்தது. சிவ வாக்கியர் அந்தக் காசை சித்தரிடம் கொடுத்தார்.


சித்தர் இதனை கண்டு மகிழ்ச்சியடைந்தார். ‘ எனக்கேற்ற மாணவனாக நீ பரி பக்குவம் பெற்றுள்ளாய் ’என்று ஆசீர்வதித்தார். அந்த பேய்ச் சுரைக்காயையும், கொஞ்சம் மணலையும் கொடுத்து, ‘முக்தி நிலை சித்திக்கும் வரை நீ இல்லறத்தில் இருக்க வேண்டும். இந்த இரண்டையும் எந்தப் பெண் உனக்குச் சமைத்துகொடுக்கிறாளோ அவளை நீ மணந்து இல்லறம் நடத்துவாயாக’ என்று ஆசீர்வதித்தார். இத்தனை காலம் அவருக்கு இருந்த மனக்குறை அதுதான். ஐம்பத்தொரு வயது வரை திருமணமின்றி இருந்த தனக்குள் இல்லற நாட்டம் ஏற்பட்டிருந்ததை இவர் எவ்வாறு அறிந்தார் என்று வியந்தார்.குருவின் பாதம் தொட்டு வணங்கி அவரிடம் சித்த உபதேசம் பலவும் கேட்டறிந்து, பின் பிரிந்தார் ஒருவருக்கு பெரிய அனுபவமும் அவனுக்கு நடைமுறை வாழ்க்கையில் ஏற்படும், - உள்ள சூட்சமங்களை அறிந்து, மக்களுக்கு உபதேசிப்பது அறிவுதான். செல்லும் வழியில் பல அனுபவங்களால் அவர் தவஞானம் அறிவைப் பெற்றார். ஆன்மாவால் பெறுகின்ற அற்புதமான சுகத்தை அளப்பரிய நிலையான இன்பத்தை ஓரே ஒருவரால் மட்டுமே இந்த உலகத்திற்கு தரமுடியும். அவரே ஞானகுரு ஆவார்.வித்தை கற்றுக் கொடுப்பவர் வித்யாகுரு. வினைகளை தீர்க்க வந்தவன் ஞானகுரு.


உடம்பால் மனிதன் பெறுகின்ற இன்பம் சரீர சந்துஷ்டி ஆகும். ஆன்மாவினால் பெறுகிற இன்பம் ஆத்ம சந்துஷ்டி. இதுவே பேரின்பம் எனப்படுகிறது. கல்வி நெறியை வரையறை செய்வது யோக சாஸ்திரம்.சிவ வாக்கியர் ஆதம் தத்துவத்தை அற்புதமான பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இவரது பாடல் திருவிளக்கமாகத் தோன்றிவர். பாடல்கள் பெரும்பாலும் திருமந்திர நடையை ஒத்திருக்கும்.கடவுள் ஆன்மாவின் உள்ளத்தில் ஞானமயமாக நிலவுகிறார்.எதிர்ப்பட்ட பெண்களிடமெல்லாம் “ இந்தப் பேய்ச்சுரைக்காயையும் மணலையும் பிசைந்து அமுது படைக்கும் பெண் உங்களில் யார்?” என்று கேட்டார். இளமையும் அழகும் நிரம்பிய சிவ வாக்கியரை நெருங்கிய பெண்கள் அந்தக் கேள்வியைக் கேட்டதும் ஓடி ஒளிந்தனர். சிலர் இவரை பித்தர் என்றனர்.சிலர் புத்தி பேதலித்து விட்டது ஓடி ஒளிந்தனர்.


இதனால் மிகவும் சலித்துப்போன சிவவாக்கியர் கடைசியாக சிற்றூரில் குறவர்கள் வசிக்கும்பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது ஒரு குடிசையின் வாயிலில் கன்னிப் பெண் ஒருத்தி உட்காரந்திருந்தாள்.சிவ வாக்கியரை கண்டதும் ஏதோ ஒரு உள்ளூணர்வு தூண்ட அவரை எழுந்து வணங்கி ஒதுங்கி நின்றாள்.குடிலின் வாசலில் மூங்கில்கள் பிளக்கப்பட்டு கட்டுகட்டாகக் கிடந்தது.

” வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லையா அம்மா? ” என்று சிவ வாக்கியர் கேட்டார்.


”அய்யா, தாங்கள் யாரென்று தெரியவில்லை. என்னுடைய பெற்றோர்கள் கூடை முடைய மூங்கில் வெட்டப்போயிருக்கிறார்கள்.” 


“ பெண்ணே! நான் சாப்பிட்டுப் பலநாள் ஆகிவிட்டது.எனக்குப் பசி அதிகமாக இருக்கிறது. என்னிடம் பேய்ச் சுரைக்காயும் மணலும் இருக்கிறது. இவற்றைச் சமைத்து எனக்கு உணவு பரிமாற முடியுமா ?" என்று சிவ வாக்கியர் கேட்டபோது பதிலேதும் கூறாது அவரிடமிருந்து அதனைப்பெற்றுக்கொண்டு உள்ளே சென்றாள். ஏளனமாக ஏதும் கேள்வி கேட்காமல் பரிபக்குவ நிலையில் பேய்ச்சுரைக்காயையும் மணலையும் பிசைந்து எவ்விதக் குறைபாடும் இல்லாமல் சமைத்து வைத்து அவரைச் சாப்பிட அழைத்தாள்.குருநாதர் அடையாளம் காட்டிய பெண் இவள்தான் என்று தெரிந்து கொண்டார். வீடு திரும்பிய பெற்றோர்கள் வீட்டிற்குள் சிவ வாக்கியர் உடகார்ந்து இருப்பதைப் பார்த்துவிட்டு திகைத்தபோது, அந்த பெண் நடந்ததைக் கூறினாள். பேய்ச்சுரைக்காயும் மணலும் உணவாக்கப்பட்டததை அறிந்த அவர் ஒரு சித்தராக இருக்க வேண்டும் என்று கருதினார்.


”அய்யா, நீங்கள் இல்லாத நேரத்தில் உங்கள் பெண் நான் கொடுத்த பேய்ச்சுரைக்காயும் மணலை அற்புதமான உணவு படைத்தாள்.எதிர்வாதம் செய்வதை அறியாத ஒரு பொறுமையான பெண் இவள் என்பதை அறிந்தேன்.நான் தவம் செய்வதற்கு துணையாக இவள் இருப்பாள் என நிரூபித்துவிட்டாள்..இவளை நான் மணம் செய்யவிரும்புகிறேன்” என்றார்.

Indexவாக்கியர்கல்யாணம்.jpg


“சுவாமி, நாங்கள் செய்த புண்ணியம் அது, ஆயினும் எங்கள் குல வழக்கப்படி திருமணத்திற்குப் பின்பும் தாங்கள் எங்களுடன் தங்கி இருக்கவேண்டும்” – என்றனர். சிவ வாக்கியர் மறுப்பு ஏதும் சொல்லாமல் ஒப்புக் கொண்டார். வெண்கலத்தைத் தட்டி ஓசை எழுப்பி திருமணத்தை அங்கேயே நடத்தி வைத்தார்கள்.குடும்பவாழ்க்கையை மேற்கொண்ட போதும் ஆசைகள் அற்ற, நிலையில்தான் இருந்தார்.


குறவர் குலத்தோடு ஐக்கியமான பின் அவர்களுக்குரிய வேலைகளான,பாசி பவளமணி சேகரித்தல், காடுகளுக்குச் சென்று மூங்கில் வெட்டி முறம் செய்தல் போன்ற வேலைகளை சிவ வாக்கியர் அவர்களோடு சேர்ந்து செய்து வந்தார். இந்நிலையில் ஒருநாள் மூங்கில் வெட்டுவதற்குக் காட்டினுள் சென்ற போது, அங்கிருந்த ஒரு பருத்த மூங்கில் மரத்தினை கண்டு அதனை வெட்டினார். அப்படி வெட்டியபோது வெட்டப்பட்ட இடத்திலிருந்து பொடிபொடியாகத் தங்க துகள்கள் உதிர்வதைக் கண்டு திடுக்கிட்டு போனார் சிவவாக்கியர்.

”சிவபெருமானே! ஆட்டைக் கொண்டு வந்து காட்டி வேங்கைப் புலியைப் பிடிப்பது போல் தங்கத்தைக்காட்டி என்னைக் கட்டிப் போட எண்ணுகிறாயா? இது ஆட்கொல்லி அல்லவா, நான் வேண்டுவது முக்தி! அதனை விடுத்து புத்தியைத் தடுமாறச் செய்யும் இந்த யுத்தி வேண்டாம்” என சிவ வாக்கியர் தூரமாய் போய் நின்றார்.

இதனை அருகில் நின்ற நான்கு இளைஞர்கள்,‘அய்யா, மூங்கில் காட்டுக்குள் எதனைக்கண்டு இப்படி அச்சத்துடன் ஓடி நின்கிறீர்கள்?’’
என்று கேட்டனர்.‘’ நான் ஒரு மூங்கிலை வெட்டியபோது அதற்குள்ளிருந்து ஆட்கொல்லி பூதம் வந்தது.அதனைக் கண்டுதான் பயந்து ஓடிவந்தேன்” என்று தங்கமிருந்த இடத்தினைக் காட்டினார். ’சரியான பைத்தியக்காரன் போலும் இவன். தங்கத்தின் மதிப்பறியாதவன்” என்று எண்ணி‘’ஆமாம் ! இது ஆட்கொல்லிதான்.உன்னையும் கொன்றுவிடும். உடனே இங்கிருந்து நில்லாதுஓடி விடவும்” என்றனர். சிவ வாக்கியர் வீடு திரும்பிவிட்டார்.


சிவ வாக்கியர் சென்றதைப் பார்த்த அந்த நான்கு இளைஞர்களும் தங்கத்தை மூட்டைக் கட்டினாரகள். அதற்குள் இருட்டி விட்டது. இரவு வந்த பின் தங்கத்தை ஊருக்குள் கொண்டு போகலாம் என்று திட்டமிட்டனர். இருவர் பக்கத்து ஊருக்குப்போய் பசிக்கு ஏதாவது உணவு வாங்கி வருவதென்றும், மற்ற இருவர் தங்கத்துக்கு காவல் இருப்பதென முடிவாகியது. பக்கத்து ஊருக்கு சென்றவர்கள் மொத்த தங்கத்தை தாங்கள் இருவரும் பிரித்துக்கொள்ள எண்ணினர்.வாங்கி வரும் உணவில் விஷத்தைக் கலந்து காட்டிலிருக்கும் இருவரையும் கொன்றுவிட தீர்மானித்தனர். காட்டில் காவலிருப்பவர்கள் அந்த தங்கத்தை தாங்கள் இருவரும் பங்கிட்டுக்கொள்ள எண்ணம் கொண்டு, அவர்கள் வந்தவுடன் மறைந்திருந்து தாக்கிக் கொல்ல முடிவு செய்தனர்.எண்ணியபடி உணவு வாங்கி வந்த நண்பர்களை மறைந்திருந்து தாக்கிக் கொன்றனர். பிறகு அவர்கள் கொண்டு வந்த விஷம் கலந்த உணவினை உண்டு பிணமானார்கள்.காலையில் மூங்கில் வெட்டவந்த சிவ வாக்கியர் அந்த நான்கு பிணங்களையும் பார்த்து அந்தஆட்கொல்லி நான்கு பேரையும் கொன்றுவிட்டதே என்று வருந்தியபடி அங்கிருந்து அகன்றார்.


முற்றிலும் ஆசை அறுத்த ஞானியாக சிவ வாக்கியர் இருந்தார். சித்தர்கள் ஞான நிலை எய்தும்போது இந்த பிரபஞ்ச இரகசியம் அனைத்தும் திரை அகன்று விடுகிறது.அகக்கண் விழிக்கும்போது புறக்கண்ணுக்குப் புலனாகதது எல்லாம் புலப்படுகிறது. பொய்யான ஆச்சாரங்களையும்,போலியான அனுஷ்டங்களை சிவ வாக்கியர் வெறுத்தார். கடவுள் உன்னுள் இருக்கிறார் வெளியில் தேடி திரியாதே என்று பாடியுள்ளார்.

அடுத்த வாழ்வாங்கு வாழ தொடர் பதிவில் சிவவாக்கியம் பற்றி பேசுவோம்.

சிவவாக்கியர் பொற்ப(பா)தம்  போற்றி! போற்றி !!

முந்தைய பதிவுகளுக்கு :-


திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_76.html


சுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_24.html 

வேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_23.html

தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.htmlநவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html





No comments:

Post a Comment