Subscribe

BREAKING NEWS

29 November 2017

ஆலய(ன்ம) தரிசனம் எனும் அற்புத மருந்து

------------------------------------------------------------------------------------------------------------------------

பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
தாங்கிநில்லா அன்பினோடுந்தலைவநின்றா ணிழற்கீழ்
நீங்கிநில்லா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.      

- திருஞானசம்பந்தர்

பொருள் :

  திருநெடுங்களம் மேவிய இறைவனே, குணங்களால் நல்லவர்களும், தவ வேடம் தாங்கியவர்களும் பாரிடை வாழும் மக்களும் பலருடைய இல்லங்களிலும் பலிதேரும் உனது செயல்களில் மனம் ஒன்றி நல்லோர் பாடும் பாடல்களோடு தொழத்தக்க உன் திருவடி வணங்கிக் கரை கடந்த அன்போடு தலைவனாகிய உனது திருவடிகளை நிழலை நீங்கி நில்லாதவர்களாகிய அடியவர்களின் இடர்களைக் களைந்தருள்வாயாக.
------------------------------------------------------------------------------------------------------------------------

நன்று என்பது எது? அதுவும் நாம் வாழ்கின்ற இந்த காலத்தில் நன்று என்பது மிக மிக தேவையான ஒன்று. நன்று என்பது நல்லது,சிறப்பு,பெரிது,அறம்,இன்பம்,நல்வினை,உபகாரம்,வாழ்வின் நோக்கம் என்று பல சொற்களின் மூலம் பயன்பட்டு வருகின்றது. தமிழ் மொழியில் பல செய்திகள் நன்றைப் பற்றி நாம் அறிய முடியும்.



நன்றே செய்க அதுவும் இன்றே செய்க

நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க
நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் நன்று
என்று நம் ஒளவையார் பாட்டி சொல்லி இருக்கின்றார்கள். அதிலும் சர்வேஸ்வரனும், பார்வதி அம்மையாரும் நன்று எது என்று கேட்க,


"ஆலயம் தொழுவது சாலவும் நன்று!" என்று கூறி உள்ளார்கள். அப்படியானால் நல்லாரைக் காண்பதுவும் நன்றே என்பதுவும் நன்றே. இதில் எதை நாம் முதலில் கடைபிடிப்பது? ஆலயம் தொழுவதைத் தான். ஏனெனில் ஆலயம் தொழ,தொழத் தான் நம்மிடம் உள்ள தீய குணங்கள் வெளியேறி, நன்மதிப்பைப் பெறுவோம். நன்மதிப்பும், நற்சிந்தனையும் கிடைத்துவிட்டால்.. வேறென்ன ? நல்லாரைக் காண முடியும், நல்லார் மொழி கேட்க முடியும். ஆலயம் தொழுவது என்பது ஒரு கட்டடத்தின் அடித்தளம் மாதிரி. அடித்தளம் நன்கு அமைந்து விட்டால், எப்போதும் துன்பம் வராது. துன்பம் வந்தாலும் நம்மால் சற்று சமாளிக்க முடியும்.

இப்போது நம்முள் நிலைநிறுத்த வேண்டிய செய்தி " ஆலயம் தொழுவது தான் "



ஆலயங்களுக்கு செல்வது அதுவும் புராதன ஆலயங்களுக்கு செல்வது என்பது நமக்கு கவசம் போன்றது. புராதன ஆலயங்களில் நம் முன்னோர் சென்று வழிபட்டு இருக்கின்றார்கள். அது போன்ற தலங்களில் சற்று உருகி வேண்டிட, நமக்கு சில செய்திகள் கண்கூடாக உணர்த்தப் படுவதுண்டு.இதே போல் தான் குலா தெய்வ வழிபாடும். குல தெய்வம் என்றால் என்ன? என்று தெரியாமல் வாழும் நிலைக்கு நாம் மெதுவாக தள்ளப்பட்டு வருகின்றோம். வாழ்வில் எப்பேர்ப்பட்ட துன்பம்,கஷ்டம் இருந்தாலும் குல தெய்வ வழிபாட்டை ஆத்மார்த்தமாக செய்து பாருங்கள். நிச்சயம் விடியல் உறுதி,

நம் நாக்கு எப்படி செயல்படுகின்றது ? 32 பற்களுக்கு இடையில் தான் நாக்கு உள்ளது. ஆனால் நாம் நம் நாக்கை கடிக்கின்றோமா? உண்ணும் போதும் நாம் நாக்கை கடிப்பதில்லை, அது போல் தான் இந்த வாழ்க்கையும், நாக்கு எப்படி லாவகமாக உள்ளதோ, அதே போல், பிரச்சினை,சிக்கல் என நம் வாழ்வு இருந்தாலும் இறைவனின் திருவருள் கொண்டு நாம் பிடிபடாமல் வாழ கற்றுக் கொள்ள வேண்டும். மனித வாழ்க்கை நிலையற்றது, இப்படித் தான் எனது வாழ்க்கை இருக்கும் என்று நாம் கனவு தான் காண முடியுமே தவிர, நடப்பதெல்லாம் அவனின் கையில் தான் உள்ளது. இந்த உண்மையை உணர, அன்றாடம் செய்தித்தாள் பாருங்கள். உண்மை புரியும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நமக்கும் நமது குடும்பத்தினருக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் எந்த வித துன்பங்களும் நேராது, நாமும் நமது லட்சியப் பயணத்தில் வெற்றி நடை போட்டு நிம்மதியுடனும் சந்தோஷமுடனும் வாழ ஆலய தரிசனம் என்னும் ஆன்ம தரிசனம்  முக்கியம் எனபது புரிகின்றதா?



கடவுள் எங்கும் இருக்கின்றார்.எதிலும் இருக்கின்றார் எனும் போது நாம் ஏன் ஆலயம் சென்று தொழ வேண்டும் என்று சிலர் கேட்கும் கேள்வி நமக்குக் கேட்கின்றது. பூமிக்கடியில் தண்ணீர் எங்கும் உள்ளது, நாம் ஏன் ஆழ்துளை இட்டு, குழாய் மூலம் ஏற்றி, TANKல் சேமிக்கின்றோம். நமக்கு அவசரத்திற்கு தேவைப்படும் போது, குழாயைத் திறந்தால், தண்ணீர் வர வேண்டும் என்ற நிலைக்குத் தான். அதே போல் தான் இறைவன் எங்கும் நிறைந்து இருந்தாலும், அவனின் இருப்பை TANK ல் சேமிப்பது போன்று, ஆலயங்களில் சேமித்து வைத்து உள்ளார்கள். நமக்கு எப்போது நீர் தேவையோ அப்போது குழாயைத் திறப்பது போல, நாமும் ஆலயம் என்று அவர் இருப்பிலிருந்து அவர் அருளை பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால் ஆலயம் சென்று நாம் என்ன கேட்க வேண்டும்? என்று நமக்குத் தெரிவதில்லை. அதற்கு முன்பாக, நாம் புராதன,தொன்மை வாய்ந்த ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்று சொன்னோம்,
இன்று எங்கு பார்த்தாலும் புதிது புதிதாக பல ஆலயங்கள் உருவாக்கி, ஆன்மிகத்தை விற்று வருகின்றார்கள். உதாரணமாக திருஅண்ணாமலையில் கிரிவலம் செல்லும் போது, எட்டு லிங்கங்கள், சில ஆசிரமங்கள் உண்டு. ஆனால் இவற்றை எல்லாம் தாண்டி, பல ஆலயங்கள் முளைவிட்டு வளர்ந்து வருகின்றது. மாணிக்கவாசகர் வந்து பாடிய கோயிலும் அங்கே தான் உள்ளது. ஆனால் யாரும் அங்கே செல்வது இல்லை, புதிதாக முளைத்துள்ள கோயில்களில் பார்த்தால்  கூட்டம் அலைமோதுகின்றது. இனிமேலாவது இது போன்று செய்யாதீர்கள், புராதன,தொன்மை வாய்ந்த ஆலயங்களுக்கு செல்லுங்கள். சரி ..மீண்டும் நாம் விசயத்திற்கு வருவோம்.

வேண்டும் போது நாம் குழாயைத் திறந்து நீரைப் பெறுவது போல, ஆலயங்களுக்கு சென்று நாம் வேண்டும் போது  திருவருள் பெற வேண்டும்.இறைவன் நிச்சயம் நாம கேட்கும்போது கேட்குறதை கொடுக்குறவன் தான். "வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்" என்று அதனால் தானே திருநாவுக்கரசர் பாடியிருக்கிறார். ஆனால் நாம் கேட்பது கிடைக்கவில்லை என்றால் ஒன்று நாம் தவறாக கேட்டிருக்கின்றோம் அல்லது நாம் கேட்பதற்கான தகுதியை இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை. இரண்டில் ஏதோ ஒன்று தான். இரண்டையும் நாம் சரி செய்ய வேண்டும் என்றால், தினந்தோறும் கோயிலுக்கு சென்று நம்மை நாம் சரி செய்ய வேண்டும். நிறையே பேருக்கு தங்களுக்கு ஒரு தேவை அல்லது பிரச்னைன்னு வரும்போது தான் கடவுளோட ஞாபகமே வருது. மனுஷங்ககிட்டே தான் தேவை அறிந்து பழகுகிறோம் என்றால் கடவுளிடமுமா?



இப்போது எல்லாம் ATM கார்டை உள்ளே சொருகி, பணம் எடுத்து வருகின்றோம். வங்கியில் பணம் இல்லை என்றால், எத்துனை முறை ATM கார்டை சொருகினாலும், பணம் வராது. ஒரு அவசரத் தேவை என்று வைத்துக் கொள்வோம். அக்கம் பக்கம் கடன் வாங்கி சமாளித்து விடலாம். ஆனால் திருவருள் அப்படி ATM கார்டுகளில் கிடைக்கின்ற விஷயமா? இல்லை வேறு யாரிடமாவது அக்கம் பக்கத்தில் கடன் வாங்கி தான் பெற இயலுமா? ஹ்ம்ம் ..முடியவே முடியாது. அவராக பார்த்துத் தந்தால்  தான் உண்டு. அவன் அருளை பெற, ஆலய தரிசனம் வேண்டாமா?

ஆலய தரிசனம் போன்று உழவாரம்,அன்னதானம் எனபது போன்ற புண்ணிய காரியங்களின் வாயிலாகவும்  இறைவனின் திருவருளை சேமித்து வர வேண்டும். அப்ப்போது தான் அதை தக்க சமயத்தில் உபயோகிக்க முடியும்.கோயிலுக்கு செல்ல வேண்டிய அவசியத்தை இங்கே பார்த்தோம். ஆனால் பலர் பாவ காரியங்களை செய்து கொண்டு கொஞ்சம் கூட அஞ்சாது கோயிலுக்கு வருகின்றார்கள். அதைப் பற்றி கவலைப்படுவதை விடுத்தது, நாம் என்ன செய்கின்றோம் என்று சிந்தியுங்கள், நீங்கள் ஒரு போதும், இது போன்ற பாவத்தை செய்ய வேண்டாம். செய்து விட்ட காரியங்களுக்கு ஆலயம் சென்று ஆன்ம லயம் கொண்டு மன்னிப்பு கோருங்கள். காலத்தால் தீமை மறையும்.


(பாப காரியங்கள் எவை எவை? கீழ்கண்ட பதிவை பார்க்க)

http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_17.html

சரி . கோவிலுக்கு செல்வது என்று முடிவு செய்து விட்டோம் . எந்த நாள் எப்போது செல்வது?



தினசரி கோவிலுக்கு செல்வது நன்று. அப்படி தினசரி முடியாதவர்கள் வாரம் ஒரு முறை செல்வது நல்லது. தங்கள் ராசி நட்சத்திர பலன்களுக்கு ஏற்ப வாரத்தின் ஏழு நாட்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து சென்று வருவது இன்னும்  சிறப்பு.

அல்லது தங்களுக்கு இயன்ற நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சென்று வருவது சிறப்பு. வாரம் ஒரு முறை தனியாகவும், மாதம் ஒரு முறை குடும்பத்துடனும் சென்று வருவதை வழக்கமாக கொள்ளலாம்.

சென்னையில் உள்ள நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள். சென்னை என்றாலே பரபரப்பு தான் நினைவிற்கு வரும். இந்த பரபரப்பையும் தாண்டி, சென்னை இன்னும் தன்னை புதுப்பித்து கொண்டு வருவது சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ஆலயங்கள் தான். கடந்த இரண்டு ஆண்டுகளிலும் நாம் இயற்கை சீற்றத்தை அனுபவித்தோம். ஆனால் நம்மால் உடனே உயிர்த்தெழ முடிகின்றது என்றால் அவற்றிக்கு காரணம் சென்னையில் உள்ள தொன்மை வாய்ந்த ஆலயங்களும்,சித்தர்களின் ஆசிகளும் அன்றி வேறில்லை. என்னப்பா?  அந்த தொன்மை, பழமை ஆலயம் என்று நினைக்கின்றீர்களா?

இதோ திருவொற்றியூர் ஒற்றீஸ்வரர், மயிலை கபாலீஸ்வரர், திருவேற்காடு வேதபுரீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், திருநின்றவூர் இருதயாலீஸ்வரர், திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள்,  திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவில், என்று பல புராதன ஆலயங்கள் உண்டு. இது போல் நமக்கு காணக் கிடைக்காத ஆலயங்கள் நம் வீட்டின் அருகில் கூட இருக்கலாம். உதாரணத்திற்கு குன்றத்தூரில் சேக்கிழார் வழிபட்ட கந்தலீஸ்வரர் ஆலயம்.

சரி மேற்கண்ட ஆலயங்களுக்கு மாதம் ஒருமுறையாவது செல்லுங்கள், அந்த கருவறையின் வாசத்தில், தீப எண்ணையின் ஆற்றலில் ஆன்மாவை சுத்தி செய்யுங்கள்





- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.


முந்தைய பதிவுகளுக்கு :-

கிரிவலம் - திருஅண்ணாமலை சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/11/2.html

ஜீவனில் உள்ள சிவத்தை உணர - சிவவாக்கியம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_28.html

திருஅண்ணாமலையாருக்கு அரோகரா ! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_76.html

சுகம் தரும் சுருட்டப்பள்ளி ஈசனே போற்றி - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_24.html 

வேதநாராயணப் பெருமாள் பாதம் போற்றி! - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_23.html

தங்கச் சாலையில் மின்னிக் கொண்டிருக்கும் ஒரு வைரம் - http://tut-temple.blogspot.in/2017/11/blog-post_96.html

துர்குணங்கள் நீங்கி சற்குணங்கள் பெற - பனப்பாக்கம் வருக ! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_21.html

நாள்தோறும் ஓதுவோம்! ஓதியப்பரின் புகழை !! - https://tut-temple.blogspot.in/2017/11/blog-post_39.html

ஓதிமலை ஸ்ரீகுமார சுப்ரமண்யருக்கு அரோகரா! - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_18.html

பேசும் முருகன் தரிசனம் பெற - ஓதிமலைக்கு வாருங்கள் - https://tut-temple.blogspot.in/2017/10/blog-post_5.html

சித்த சுத்திக்குச் சில சின்ன விஷயங்கள் : TUT & AVM அன்னதான நிகழ்வின் துளிகள் - https://tut-temple.blogspot.in/2017/10/tut-avm.html

பெரியபுராணம் கூறும் பூரண தானம் & அன்ன தான அறிவிப்பு - https://tut-temple.blogspot.in/2017/09/blog-post_12.html

AVM & TUT இணைந்த அன்னதான நிகழ்வின் துளிகள் - யார்க்கும் இடுமின், அவர் இவர் என்னன்மின் - http://tut-temple.blogspot.in/2017/08/avm-tut.html

ஆடி அமாவாசை - பூரண தான நிகழ்வு - 22/07/2017 - http://tut-temple.blogspot.in/2017/07/22072017.html

உங்கள் உணவிலிருந்து ஒரு கவளம் கொடுங்கள் போதும் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_80.html

என் கடன் பணி செய்து கிடப்பதே - உழவாரப் பணி - https://tut-temple.blogspot.in/2017/08/blog-post_24.html

ஜாதகத்தை மாற்றி சாதகமாக்கும் குழந்தைவேலர் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_77.html

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்... - http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_22.html

ஆலயம் காப்போம்...ஆனந்தம் காண்போம் - உழவாரப்பணி அனுபவம் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_5.html

சங்கடங்கள் தீர்க்கும் சதானந்த ஸ்வாமிகள் ஆசிரமம் - உழவாரப் பணி அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_27.html

எங்களின் ஓராண்டு பயணம்..- http://tut-temple.blogspot.in/2017/05/blog-post_18.html

TUT நவராத்திரி 5 ம் நாள் தரிசனம் - https://tut-temple.blogspot.in/2017/09/tut-5.htmlநவராத்திரி - 4 ம் நாள் தரிசனம் - (5) - https://tut-temple.blogspot.in/2017/09/4-5.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு(3) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-3.html

TUT நவராத்திரி சிறப்புப் பதிவு (2) - http://tut-temple.blogspot.in/2017/09/tut-2.html

TUT தளத்தின் நவராத்திரி சிறப்பு பதிவு (1) - https://tut-temple.blogspot.in/2017/09/tut-1.html

TUT தளத்தின் நவராத்திரி பதிவுகள் - https://tut-temple.blogspot.in/2017/09/tut.html

TUT தளத்தின் விநாயகர் சதுர்த்தி - சிறப்புப் பதிவு - https://tut-temple.blogspot.in/2017/08/tut.html

விநாயகர் சதுர்த்தி செய்தி - மண(ன)ப் பொருத்தம் - http://tut-temple.blogspot.in/2017/08/blog-post_78.html

வாழ்வாங்கு வாழ - கேள்வி பதில் தொடர் - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_7.html


No comments:

Post a Comment