Subscribe

BREAKING NEWS

22 May 2017

ஜாதகத்தையே மாற்றும் குழந்தைவேலர்...



சித்தர்களின் சமாதிகளில் இருந்து. அதுவும் குறிப்பாக ஜீவசமாதிகள் எனப்படும் உயிர்நிலை கோவில்களில் இருந்து நம்மால் கணக்கே செய்ய முடியாத அளவு அருட் பேராற்றல் வெளிப்பட்டு கொண்டே இருக்கும். காமா பிரைன் வேவ் போல் சித்தர் பீடங்களில் அறிவியலும் உண்டு. அறிவியல் கருவிகளால் அளந்து பார்க்க முடியாத பல அமானுஷ்யங்களும் உண்டு.

நவ கிரஹ தோஷம் நீங்க

நாம் பல பிறவிகளில் சேர்த்த பாவங்கள். சித்தர் வழிபாட்டால் அழிந்து விடும்.

சித்தர்கள் எனப்படுபவர்கள் கண்களை மூடி கொண்டிருக்கும் பொழுதும் சரி, திறந்து கொண்டிருக்கும் பொழுதும் சரி. சமாதியினில் இருக்கும் பொழுதும் சரி. எப்பொழுதும் அவர்களின் அந்தராத்மா தவத்திலேயே இருக்கும். அந்த தவத்தினால் அவர்களிடம் இருந்து எல்லையில்லா அருட் பேராற்றல் வெளிப்பட்டு கொண்டே இருக்கும். அதனால். நாம்.  பல ஆண்டுகள் சாதகம் செய்து பெற முடியாத பலனை. சித்தர் பீடங்களை தரிசிக்க என்றே  நமது வாழ்வின் ஒரு பகுதியை ஒதுக்குவதன் மூலம் பெற முடியும்.

அதீத வல்லமை, சக்தி வாய்ந்த ஏதேனும் ஒரு சித்தர் பீடத்தில் கூட்டம் இன்றி மிக அமைதியாக இருக்க. அப்பொழுது அந்த அமைதியில் அங்கு உள்ள அதீத தெய்வீக அதிர்வலையை நம்மால் நன்கு உணர முடியும். அத்தகைய ஒரு உணர்வை தான் நேற்று அடியேன் சென்னை மயிலாப்பூரில் உள்ள குழந்தைவேல் சித்தர் பீடத்தில்  உணர்ந்தேன்.

திருமயிலை குழந்தைவேல் சுவாமிகள் பல ஞானிகளுக்கு ஞான குருவாக இருந்தவர். இன்றும் இருந்து கொண்டிருக்கிறார். சித்தர்களுக்கு ஆதி என்று ஒன்று இருக்கும். ஆனால் அந்தம் அவர்களுக்கு கிடையவே கிடையாது.

இரண்டாம் பராந்தக சோழன் காலத்தில் சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட வேளச்சேரி தண்டீஸ்வரம் சிவன் கோவில். 19 ம் நூற்றாண்டில் கவனிப்பார் இன்றி பழுதடைந்து போய் இருந்தது. அப்பொழுது சிதம்பரத்தில் இருந்து வந்த பெரிய சுவாமிகள் தான் இந்த தண்டீஸ்வரம் கோவிலை புதிப்பித்து கட்டினார்.

முற்றும் துறந்த சிதம்பரம் பெரிய சுவாமிகள். தொழிலார்களுக்கு விபூதியை தான் கூலியாக கொடுத்தார். அந்த விபூதி. அவர், அவர் செய்த உழைப்பிற்கு ஏற்றவாறு பணமாக மாறியது.

பல அதிசயங்கள், அற்புதங்களை செய்த சிதம்பரம் பெரிய சுவாமிகளின் உயிர்நிலை கோவில். வேளச்சேரி குரு நானக் பஸ் ஸ்டாப் அருகில் இருக்கிறது.

பிறவியிலேயே ஞானியாக இருந்த அந்த சிதம்பரம்  பெரிய சுவாமிகளின் குரு தான் குழந்தைவேல் சுவாமிகள். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன். துறையூர் வீர சைவ மடத்தின் பீடாதிபதியாக இவர் இருந்தார்.

பல சித்த புருஷர்களின் பிறப்பு  பற்றிய குறிப்புகள் அகப்படுவது இல்லை. அதே போல் குழந்தைவேல் சுவாமிகள் பற்றிய முழுமையான குறிப்புகளும் கிடைக்கவில்லை.

பறவைகள் பறந்து சென்ற வானில் அவற்றின் தடயங்களைத் தேடுவது எத்தனை? அபத்தம். அந்தத்தை  (ஜீவசமாதி) மட்டும் மானுடர்க்கு அருள்பாலிக்க அடையாளமாய் விட்டுச் செல்கின்றனர் சித்தர்கள். அதை தான் நாம் பார்க்க வேண்டும்.

குழந்தைவேல் சுவாமிகளும் சரி. அவரது சீடரான முத்தையா சுவாமிகளும் சரி. அவர்களின் புகைப்படங்களை கூட விட்டு செல்லவில்லை. அந்தத்தை அவர்களின் ஜீவ சமாதியை மட்டுமே விட்டு சென்றுள்ளார்கள்.

குழந்தைவேல் சுவாமிகள், அவரது சீடரான முத்தையா சுவாமிகள் இருவருமே ஜீவ சமாதி அடைந்து 180 வருடங்களுக்கு மேல் ஆகி இருந்தாலும். இந்த கோவில் 116 ஆண்டுகளுக்கு முன் தான் துறையூர் வீர சைவ மடத்தால் கட்டப்பட்டது. குழந்தைவேல் சுவாமிகளின் வரலாறை சரியான ஆவணங்களுடன். துறையூர் வீர சைவ மடத்தினர் வெகு விரைவில் வெளியிட உள்ளார்கள்.

இந்த ஆண்டு மே மாதம் குழந்தைவேல் சுவாமிகள். மற்றும் அவரின் சீடரான முத்தையா சுவாமிகளின் குரு பூஜை துறையூர் வீர சைவ மடத்தின் 24 வது பீடாதிபதி கல்யாண சுந்தர சுவாமிகள் அவர்களால்  நடத்தப்பட்டது.

குழந்தைவேல் சித்தர்  வாழ்ந்த காலத்தில் அவர் செய்த அற்புதங்கள் பற்றி நமக்கு தெரியவில்லை. அதே சமயம் இவரின் உயிர்நிலை கோவிலை தரிசிக்கும் அடியார்களின் வாழ்க்கையில் பல அதிசயங்கள், அற்புதங்களை இவர் செய்து இருக்கிறார், செய்து  கொண்டு இருக்கிறார்.  நேற்று இவரை தரிசித்ததால் அடியேனுக்கு ஏற்பட்ட ஒரு அற்ப்புதம். பல நாட்கள் கழித்து என் ஆழ்மனம் அடைந்த அமைதி.

அடியேன் கேள்விப்பட்ட வரை ஜாதங்களில் மிகப்பெரிய அளவில் தோஷங்கள் இருந்த பலர். இவரை வழிபட்ட பின் அந்த தோஷங்கள் யாவும் நீங்கி இன்று மகிழ்ச்சியான வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.  தினமும் நவசிவாய மந்திரத்தை ஒரு 5 முறையேனும் சொல்லும் அடியார்கள். சித்தர்களையும் வழிபடுவார்களே ஆயின். அந்த அடியார்களின் ஜாதகம் மாறி விடும். நல்ல விதமாக.

பக்தியோடு சிவனின் திருவடிகளை தொழும் அடியார்கள் யார் எல்லாம் இந்த குழந்தைவேல் சித்தரை தொழுகிறார்களோ. அத்தகைய சிவனடியார்களுக்கு  கோள்களால் ஏற்படும் கோளாறுகள் அனைத்தையும் நீக்குவதில் இந்த சித்தர் வல்லவர்.

குழந்தைவேல் சுவாமிகள், சித்தரை மாதம் 13-ம் நாள் பூச நட்சத்திரத்தில் ஜீவ சமாதியடைந்தார். ஜீவசமாதியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. அவரது சீடரான முத்தையா சுவாமிகள், எப்பொதும் தமது குருவைத் தொழுதுகொண்டே இருக்கவேண்டுமென்று விரும்பியதால் அவரது சமாதி குழந்தைவேல் சுவாமிகள் சமாதியின் முன் அமையப் பெற்றிருக்கிறது. அவரது விருப்பப்படி அவரது சமாதியின் மீது நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கிறது.



நீங்கள் இதை படிப்பதோடு மட்டும் நிறுத்தி கொள்ளாமல் உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது இவரை நேரில் சென்று தரிசியுங்கள். மேலும் இந்த பதிவை படிக்கும் அனைவரும் இதை ஷேர் செய்யுங்கள். நல்ல விஷயங்களை நாம் பலருக்கு பகிர்வதன் மூலம் நமது புண்ணியம் பல மடங்காக பெருகும்.

எப்படி? செல்ல வேண்டும்.

சித்திரகுளம் பஸ் ஸ்டாப்பில் இருந்து இடது பக்கமாக திரும்ப வேண்டும். அதாவது. சித்திர குளத்தில் இருந்து. திருவான்மியூர், கிண்டி போன்ற ஏரியாக்களுக்கு செல்லும் பஸ் நிற்கும் அந்த இடத்திலிருந்து நீங்கள் First Left எடுக்க வேண்டும். எடுத்தால். அந்த தெருவின் இடது பக்கத்திலேயே ஹோட்டல் லக்ஷ்மி பவன் அண்ட் அகர்வால் ஸ்வீட்ஸ் இருக்கும். வேகமாக நடந்தால். சித்திர குளம் பஸ் நிலையத்தில் இருந்து லக்ஷ்மி பவன் ஹோட்டலுக்கு 3, 4 நிமிடங்களில் வந்து விடலாம். லக்ஷ்மி பவனுக்கு எதிரே ஒரு ஆர்ச் இருக்கும். அந்த ஆர்ச்சில் குழந்தைவேல் சித்தர் கோவில் செல்லும் வழி என்றல்லாம் எழுதி இருக்காது. கும்பகோணம் காபி, மற்றும்  Vaibhav Jewellery Mart என்று தான் அந்த ஆர்ச்சில் எழுதி இருக்கும். அந்த  ஆர்ச்சின் உள் நீங்கள் போனால். ஒரு சின்ன சந்து. அதன் உள். 4, 5 கடைகள் இருக்கும். அந்த சந்தை தாண்டியவுடன் உங்கள் கண் எதிரே சில குட்டி யானைகள். அதாவது டெம்போக்கள் தெரியும். 1, 2 கம்பெனிகள் தெரியும். அதை எல்லாம் தாண்டியவுடன் தான் உங்களுக்கு இந்த சித்தரின் கோவில் தெரியும்.

முதல் முறையாக நீங்கள் சித்திரகுளம் பஸ் ஸ்டாப்பில் இருந்து தேடி கொண்டு வரும் பொழுது அதிக பக்ஷம் 10 நிமிடங்கள் வரை ஆகலாம். அதன் பிறகு இரண்டாம் முறையாக வரும் பொழுது 5,6 நிமிடங்கள் தான் ஆகும்.

இவரை மட்டும் தரிசனம் செய்து விட்டு வராமல். மயிலாப்பூரில் உறையும் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் மற்றும் வெள்ளீஸ்வரர் உடனுறை காமாட்சி அம்மனையும் தரிசனம் செய்து விட்டு வரவும்.

குழந்தைவேல் சித்தர் பீடத்தில் 24 மணி நேரமும் விளக்குகள் எரிந்து கொண்டே இருக்கும். இவரை தரிசிக்க செல்பவர்கள்  நல்லெண்ணெயை சிறிது வாங்கி கொடுக்கலாம்.

எப்பொழுதுமே இவரின் கோவில் திறந்து தான் இருக்கும். நீங்கள் அங்கு தரிசனம் செய்ய வருவதற்கு முன். அந்த கோவில் குருக்கள் E ஷங்கர் அவர்களை தொடர்பு கொண்டால். நீங்கள் கோவிலுக்கு வரும் அந்த நேரத்தில் அவர் குழந்தைவேல் சுவாமிகளுக்கு தீபாராதனை காட்டுவார்.

தொடர்புக்கு E ஷங்கர்- 8056926699                      

No comments:

Post a Comment